Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > வேண்டத்தக்கது அறிவோனும் வேண்டமுழுவதும் தருபவனும் – அன்னாபிஷேக அனுபவம் – 2

வேண்டத்தக்கது அறிவோனும் வேண்டமுழுவதும் தருபவனும் – அன்னாபிஷேக அனுபவம் – 2

print
டந்த மாத இறுதியில் நடைபெற்ற அன்னாபிஷேக தரிசன அனுபவங்கள் பற்றிய பதிவு இது. சிவதரிசனம் என்பது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் அன்னாபிஷேக தரிசனம் என்பது அரிதினும் அரிய ஒரு பேறு.

சிவ அபச்சாரம் செய்த தட்சன் நடத்திய யாகத்தில் கலந்துகொண்ட பாவத்தினாலும், சிவ நிந்தனையை காதால் கேட்ட பாவத்தினாலும் தேவர்கள் அனைவரும் சூரபன்மனிடம் சிக்கி சிறைபட்டு அவனுக்கு மீன் முதலானவற்றை சுமந்து பல விதமான ஏவல்கள் செய்து துன்பத்தில் உழன்றுகொண்டிருந்தனர்.

Thalaivar 1

இந்நிலையில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நான்கு ரிஷிகளும் (பிரம்மதேவரின் புதல்வர்கள்) ஒருமுறை சிவபெருமானை பணிந்து, “வேதம் நான்கையும் தங்களின் அருளால் கற்று உணர்ந்தோம். இருப்பினும் மனச்சாந்தி கிடைக்கவில்லை. அதற்குரிய கல்வியை தாங்களே போதிக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர்.

சிவபெருமானும் “அவ்வாறே அருள்வோம்” என்று அவர்களிடம் திருவாய் மலர்ந்தருளி, நந்திதேவரை அழைத்து “மன்மதனை தவிர வேறு யாரையும் உள்ளே விடவேண்டாம்” என்று கட்டளையிட்டுவிட்டு சனகாதி முனிவர்களுக்கு ஞானக்கல்வியை போதிக்க அமர்ந்தார். அவர்களுக்கு சிவாகமங்களில் உள்ள சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்று பாதங்களையும்  உபதேசித்தார்.

மகிழ்ந்த முனிவர்கள் “ஐயனே எங்களுக்கு ஞானோபதேசம் வழங்கவேண்டும்” என்று கேட்க, தக்ஷிணாமூர்த்தி கோலத்தில் அமர்ந்த சிவபெருமான், “இதோ இங்கே பாருங்கள்” என்று கூறி சின்முத்திரையை காட்டியருளினார்.

இவ்வாறு அவர்களுக்கு ஞானோபதேசம் வழங்கிய அந்த கணநேரத்தில் பிரம்மன் முதலிய தேவர்களுக்கு பலப் பல யுகங்கள் கழிந்தன. பிரம்மனுக்கே அப்படியென்றால் மற்றவர்களின் நிலையை பற்றி எண்ணிப் பாருங்கள்!

ஏற்கனவே சூரபன்மன் கொடுமையால் தவித்துக்கொண்டிருந்த தேவர்கள் ஒன்று கூடி என்ன செய்வதென்று ஆலோசித்தார்கள். சிவ-பார்வதி திருமணம் நடந்து பல நாட்களாகி விட்டன. குமரன் அவதாரம் நிகழவில்லை. குமரன் அவதாரம் நிகழ்ந்தால் தான் சூரபன்மன் அழிவான். சிவபெருமானது திருவடிகளைப் போற்றி அடைந்தோமானால் தீமைகள் அனைத்தும் நீங்குவது திண்ணம். எனவே அப்பெருமானிடம் விண்ணப்பிக்க நாமனைவரும் திருக்கயிலை செல்வது என அனைவரும் முடிவு செய்தனர். அப்பொழுது பிரம்மதேவன் அங்குச் சிவனாரது செயலை அறிந்துக் கொண்டே செல்லவேண்டுமாகையால் ஒரு தூதுவனை அனுப்பி அறிவோம் என்று வாயுவை அழைத்து “நீ கைலாயத்திற்குச் சென்று, அங்குள்ள நிலைமை பற்றி அறிந்துக்கொண்டு வருவாயாக” என்று அனுப்பினான். வாயு முதலில் மறுத்தும் பிரம்மதேவன் தேற்றியனுப்பினான்.

கைலாயத்திற்கு சென்ற வாயுவை அங்கு இருந்த நந்திதேவர் பார்த்து ஒரு ஊங்காரம் செய்தார். அவ்வளவுதான் வாயு மயங்கி விழுந்தான். நினைவு தெளிந்து நந்தியெம்பெருமானை பார்த்து “ஐயனே! என்னை மன்னிக்க வேண்டும். பிரம்மதேவன், திருமால், இந்திரன் முதலிய தேவர்களே என்னை அனுப்பினார்கள்’ என்று சொன்னான்.

நந்தியெம்பெருமான், வாயுவைப் பார்த்து ”உனக்கு உயிர்பிச்சை தந்தேன். இனியும் நிற்காது ஓடிப்போய்விடு” என்று விரட்டினார்.

வாயு திரும்பி வந்து நிகழ்ந்தவற்றை உரைக்க தேவர்கள் அனைவரும் “நாம் அனைவரும் சேர்ந்து சிவபெருமானை துதித்து வழிபட்டால் அவர் நமக்கு இரங்குவார். நாம் அனைவரும் கைலாயத்திற்குப் போவோம்” என்று புறப்பட்டார்கள்.

கைலாயத்தில் நந்தியெம்பெருமானிடம் அனுமதி பெற்று, தேவர்கள் உள்ளே சென்று சிவபெருமானைத் தோத்திரம் செய்தார்கள்.

“ஐயனே! உன்னை பார்க்க நினைத்தாலும் நீ பார்வையில் அடங்குவதில்லை; உன்னை தோத்திரம் செய்ய எண்ணினாலும் நீ வாக்கில் அமைவதில்லை. நீ மனதிற்கும் அப்பாற்பட்டவன். ஆதலால் உன்னை நினைக்கவும் முடியவில்லை”.

நோக்கினும் நுழைகிலை நுவலு கின்றதோர்
வாக்கினும் அமைகிலை மதிப்ப ஒண்கிலை
நீக்கரும் நிலைமையின் நிற்றி எந்தைநீ
ஆக்கிய மாயமீ தறிகி லேமரோ

தேவர்களின் துதிக்கு இரங்கிய சிவபெருமான் ”உங்களுக்கு என்னவேண்டும்?” என்று கேட்டார்.

”ஐயனே! சூரபன்மாதியர் இழைக்கும் கொடுமைகள் எங்களால் பொறுக்க முடியவில்லை. தேவரீர் யோகமுறையை காட்டியருளிய ஒரு கணத்தில் எங்களுக்கு பல யுகங்கள் கழிந்தன. இன்னமும் எங்களை புறக்கணித்தால் நாங்கள் எங்கே செல்வது?” என்று பிரார்த்தித்தார்கள் தேவர்கள்.

இதன் பிறகு சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பொறியை உருவாக்கி அதில் நிகழ்ந்தது தான் முருகன் திருவவதாரம்.

இந்த சம்பவத்தை எதற்கு இந்தப் பதிவில் குறிப்பிடுகிறோம் தெரியுமா?

தேவாதி தேவர்களுக்கே கூட சிவதரிசனம் என்பது எளிதல்ல. ஆனால் மானுடர்களான நமக்கு எத்தனை எத்தனை பெரிய வாய்ப்புக்கள் கிடைக்கின்றன! சிவ சிந்தனை வாய்க்கப்பெற்ற பிறவி அமைவதே ஒரு பெரிய வரம் தான். அதை பயன்படுத்திக்கொள்கிறோமா?

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும் (குறள் 335)

========================================================

எளியோர்க்கு எளியோன்!

ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சிவாலயங்களில் நடைபெறும் அன்னாபிஷேகம் பற்றியும் அதன் மகத்துவம் பற்றியும்  நம் தளத்தில் பதிவிட்டு நாமும் அன்று சிவாலயங்கள் சென்று தரிசித்து அன்னாபிஷேக தரிசன அனுபவத்தையும் பதிவளித்து வருவது அனைவரும் அறிந்ததே.

முந்தைய ஆண்டுகள் போலவே கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் மற்றும் மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவிலில் நம் தளம் சார்பாக தலா பத்து கிலோ அரிசி வாங்கிக் கொடுக்க முடிவு செய்தோம்.

Kurungaleeswarar 1

இறைவனருளால் நமக்கும் நமது உழவாரப்பணி நண்பர்களுக்கும் பிற நண்பர்களுக்கும் தனிப்பட்ட முறையில் இது போன்ற கைங்கரியங்களில் ஈடுபட்டு புண்ணியம் சேர்க்க பல சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. ஆனால் எங்கோ ஏதோ ஒரு தூரதேசத்தில் (வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும்) பல வித சிரமங்களுக்கும் தியாகங்களுக்கிடையே வாழ்ந்து வரும் நம் வாசகர்கள் பலருக்கு அத்தகு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் நம் தளம் ஒன்று தான். நம் தளம் தான் அவர்களுக்கு ஆலயம், கலங்கரை விளக்கம் எல்லாமே. அவர்கள் அனைவரும் நம்மிடம் தொடர்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்காக இந்த முறை நிச்சயம் ஏதேனும் செய்யவேண்டும் என்று தீர்மானித்தோம். அவர்களில் சிலரது பெயர்களில் அரிசி வாங்கி அன்னாபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும் என்று கருதினோம். நமது பணிகளில் துணை நிற்பவர், துணை நிற்காதவர் என்ற பேதமெல்லாம் நாம் பார்க்கவில்லை.

“அன்னாபிஷேகத்திற்கு அரிசி வாங்கித்தர முடியவில்லையே… இறைவா எனக்கு ஆசையிருக்கிறது. ஆனால் வாய்ப்பில்லையே” என்று எந்த ஆன்மா அலறுகிறதோ அவர்களுக்கு இந்த தொண்டு போய் சேரட்டும் என்று சங்கல்பம் செய்து நாமாக சிலரது பெயர்களை தேர்வு செய்தோம்.

எறும்பின் காலடி ஓசையையும் அறிபவனல்லவா நம் தலைவன்… சில ஆன்மாக்களின் அழுகை அவன் காதில் விழுந்திருக்கவேண்டும். சரியாக நமது கைங்கரியம் அத்தகையோர்களுக்கு போய் சேர்ந்தது. (விபரங்கள் இறுதியில்!)

==========================================================

Also check…

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!

எத்தகைய பூஜையை சிவபெருமான் ஏற்றுக்கொள்கிறார்?

==========================================================

அன்னாபிஷேக தரிசன அனுபவத்திற்கு வருவோம்…

அக்டோபர் 27, 2015 அன்னாபிஷேகத்தன்று முதலில் காலை நாம் புறப்பட்டது கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவிலுக்கு. அங்கு ஒரு கடையில் அரிசியை மொத்தமாக சலுகை விலையில் வாங்கிக்கொண்டோம். ஆலய மடப்பள்ளியில் ஒப்படைத்துவிட்டு அப்படியே திரும்பி வரும் வழியில் திடீரெனெ வடபழனி சென்று வேங்கீஸ்வரரையும் சாந்த நாயகியையும் தரிசித்துவிட்டு மேற்கு மாம்பலம் புறப்பட்டோம்.

Vengeeswarar

Annabishekam 11

Annabishekam 10

கோவிந்தன் சாலையில் உள்ள பலசரக்கு கடை ஒன்றில் மறுபடியும் அரிசி வாங்கிக்கொண்டோம். (சென்ற ஆண்டு இங்கு தான் வாங்கினோம்).

காசி விஸ்வநாதர் கோவிலை அடையும்போது மணி எப்படியும் 12.00 அல்லது 12.30 இருக்கும். கோவில் அடைக்கப்பட்டுவிட்டது. பாலாஜி அவர்களை அலைபேசியில் அழைத்து அரிசி கொண்டு வந்திருக்கும் விபரத்தை சொன்னோம். பக்கவாட்டு கேட் பக்கம் வரும்படியும் தான் கேட்டை திறப்பதாகவும் சொன்னார். அங்கு சென்று உள்ளே சென்று குவித்து வைக்கப்பட்டிருந்த அரிசியுடன் நமது பையையும் வைத்துவிட்டு வந்தோம்.

Kasi Viswanadhr

புறப்படும் முன்னர் பாலாஜி அவர்களிடம், “போன வருஷம் போலவே சாயந்திரம் மைலாப்பூரை சுத்தி இருக்குற நாலஞ்சு கோவிலுக்கு போறேன் பாலாஜி. அங்கெல்லாம் தரிசனம் முடிச்சிட்டுஇங்கே வர்றதுக்கு எப்படியும் 9.00 PM ஆயிடும். நான் வர்ற லேட்டாயிடுச்சுன்னா அன்னாபிஷேக அன்னத்தை மட்டும் கொஞ்சம் எடுத்து வைங்க!” என்றோம்.

“நீங்க வாங்க சார் பார்த்துக்கலாம்” என்றார்.

Annabishekam 12
காசி விஸ்வநாதர் கோவிலில் அன்னாபிஷேகத்திற்கு குவித்து வைக்கப்பட்டிருந்த அரிசி

அலுவலகம் வந்து, மதிய உணவை முடித்துவிட்டு கணினியில் அமர்ந்தோம். மணி அப்படி இப்படி என்று 2.30 ஆகிவிட்டது.

மாலை 6.00 மணியளவில் மயிலையில் இருக்கவேண்டும். இங்கே 5.00 மணிக்கு கிளம்பினால் தான் சரியாக இருக்கும்.

பொதுவாக அடுத்தடுத்து இது போல கமிட்மெண்ட்டுகள் இருந்தால் வேலை ஓடாது. அதுவும் எழுத்துப் பணி கேட்கவே வேண்டாம்.

ஒரு சில வேலைகளை முடித்துவிட்டு 5.00 மணிக்கு மயிலை புறப்பட்டோம். முதலில் நேரே மயிலை திருவள்ளுவர் திருக்கோவில் பயணம். கடந்த சில ஆண்டுகளாக இங்கு அன்னாபிஷேக தரிசனம் செய்து வருகிறோம்.

Thiruvalluvar temple

திருவள்ளுவர் கோவிலில் காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் சன்னதி உண்டு.

சென்ற ஆண்டு அங்கு அன்னத்தால் காலபைரவர் அலங்காரம், அதற்கு முந்தைய ஆண்டு அர்த்த நாரீஸ்வரர் அலங்காரம். இந்த ஆண்டு என்ன அலங்காரம் இருக்கும் என்று சஸ்பென்சாக இருந்தது. கோவிலில் அர்ச்சகராக் ஐருக்கும் திரு.ஆறுமுக குருக்களின் மகன் பாலா, அலங்காரம் செய்வதில் எக்ஸ்பெர்ட். மயிலையின் சுற்றுப் பகுதிகளில் பல கோவில்களில் பண்டிகை நாட்களில் அலங்காரம் செய்வது அவர் தான்.

இந்த முறை என்ன அலங்காரம் தெரியுமா? அன்னத்தால் நடராஜர் அலங்காரம்.

Thiruvalluvar temple2

Thiruvalluvar temple 3எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை விசேஷ லைட்டிங் செட் செய்திருந்தார்கள்.  நடராஜர் வண்ண வண்ண ஒளிவெள்ளத்தில் ஜொலித்தார். கண்ணை பறிக்கும் ஒளி என்பார்களே அதன் அர்த்தம் இது தான்.

சுவாமிக்கு அர்ச்சனை செய்துவிட்டு அங்கிருந்து மயிலை பஜார் வீதியில் உள்ள விருபாக்ஷீஸ்வரர் கோவிலுக்கு சென்றோம்.

Virubaaksheeswarar

Virubaaksheeswarar 2விருபாக்ஷீஸ்வரர் என்றால் பக்தர்களது விருப்பங்களைத் தன் கண் பார்வையாலேயே தீர்த்து வைப்பவர் என்று பொருள். தாயார் விசாலாக்ஷி. மிகப் பெரிய லிங்கம் இங்கு. லிங்கம் முழுவதும் அன்னத்தால் மூடி, பார்ப்பதற்கே பரவசமாக இருந்தது. இங்கும் நம் நண்பர்களின் பெயருக்கு அர்ச்சனை செய்தோம். சென்ற முறை போல இந்த முறை கூட்டம் அதிகம் இல்லை. காரணம் தெரியவில்லை.

அடுத்து நேரே காரணீஸ்வரர். சென்ற பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை ஏற்ற திருமதி.கற்பகம் ஆறுமுகம் அவர்கள் இங்கு வந்து தான் திருமுறை பாடி நமக்காக பிரார்த்தனை செய்தார்.

Karaneeswarar 1

‘கயிலையே மயிலை’ என்று அழைக்கப்படும் மயிலாப்பூரில் உள்ள புராதன ஏழு சிவாலயங்களில் (சப்த ஸ்தான தலங்கள் என்று இவற்றுக்கு பெயர்) தனிப்பெருமை பெற்றதும் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டதும், கடலருகே அமைந்த புண்ணியத் தலங்களுள் மிகவும் சிறப்பு வாய்ந்தது இத்திருமயிலை காரணீச்சரம் எனும் இத்திருக்கோயில் ஆகும்.

இங்கு சிவலிங்கம் சற்று பெரிதாக பிரம்மாண்டமாக  இருக்கும். அன்னத்தால் முழு அலங்காரம் செய்து பிரமாதப்படுத்தியிருந்தார்கள். சுவாமியை கண்குளிர தரிசித்துவிட்டு வாசகர்கள் மற்றும் நண்பர்கள் சிலரது பெயருக்கு அர்ச்சனை செய்துவிட்டு அம்பாளையும் சேவித்துவிட்டு வெளியே பிரதட்சிணம் வந்தோம்.

மண்டபத்தில் சுவாமி அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்தார். சென்ற ஆண்டு இங்கு நாம் தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட அனுபவம் பற்றி குறிப்பிட்டிருப்போம் நினைவிருக்கிறதா?

karaneeswara Porkodi 21

இந்த ஆண்டும் எடுத்துக்கொள்ள ஆசை. ஆனால், சுவாமி புறப்பாடுக்கு நேரம் ஆகும் என்று சொன்னார்கள். சென்ற ஆண்டு பார்த்த மங்கள வாத்தியக்காரர்கள் இரண்டு பேர் இருந்தார்கள். அவர்களுக்கு வணக்கம் கூறி அவர்களுக்கு சன்மானமாக ஒரு சிறு தொகை கொடுத்தோம். அவர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவும் இல்லை. (ஒரு முறை இது போல அவர்களுக்கு கொடுத்துப் பாருங்கள்! புரியும் அந்த உணர்வு!!)

சென்ற அன்னாபிஷேகதிற்கு நாம் வந்ததும் இதே மாதிரி இவர்களுக்கு சன்மானம் அளித்ததையும் சுவாமியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதையும் நினைவில் வைத்திருந்தார்கள்.

இந்த ஆண்டும் தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள நமக்கு ஆசை.

மங்கள வாத்தியக்கார்களை சுவாமி முன்பு நிற்க வைத்து புகைப்படம் எடுத்து, பின்னர் அவர்களில் ஒருவரை கொண்டு நம்மையும் எடுக்கச் சொன்னோம்.

karaneeswara Porkodi 3

தலைவருடன் எத்தனை முறை வேண்டுமானாலும் நாம் எடுத்துக்கொள்ளலாம். அதைவிட பெருமை இந்த எளியோனுக்கு கிடைக்குமா ?

அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு பின்னர் மும்முறை பிரதட்சிணம் வந்து, கொடிமரத்தின் கீழ் விழுந்து நமஸ்கரித்துவிட்டு, அன்னாபிஷேக அலங்காரத்தின் தரிசனம் தந்தமைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டோம்.

Malleeswarar

அடுத்து நாம் சென்றது மல்லீஸ்வரர்.  முற்காலத்தில் மல்லிகை வனமாக இருந்த இடத்தில் அமையப்பெற்றதால் மல்லீஸ்வரர் என்பது அர்ச்சகர் சொன்ன செய்தி. மரகதாம்பிகை சமேதராக அழகிய சிறிய கோவிலில் காட்சியளிக்கிறார் மல்லீஸ்வரர்.

கோவிலில் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. சரியான கூட்டம். சுவாமியை தரிசித்துவிட்டு மூலவர் சன்னதிக்கு வலதுபுறம் திரும்பினால் மரகதாம்பிகை தெற்கு திசை நோக்கி காட்சி தருகிறார். அயோத்தி மாநகரை சேர்ந்த பிரார்த்தன் என்ற பக்தன் சிவபெருமானுக்கு வேள்வி செய்வதற்காக இடம் தேடி திரிந்துள்ளான்.

Malleeswarar 2

அப்போது மயிலையில் மல்லிகை வனத்தில் சிவலிங்க திருமேனி ஒன்று இருப்பதை கண்டு இறங்கினான். பின்னர் இந்த இடத்தில் சிவபெருமானை வேண்டி அதிருத்ர ஹோமத்தை செய்தான். வேள்வியின் முடிவில் ஈசன் பிரார்த்தனின் கண்முன் தோன்றி வரம் அருளினார். மேலும் மல்லிகை நிறைந்த இந்த  தோட்டத்தில் தலத்தை அமைக்க ஆணையிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த இடத்தில் வீற்றிருக்கும் சிவனுக்கு ‘மல்லீஸ்வரர்’ என பெயர் வந்ததாக  புராணங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்து வாலீஸ்வரர். பெரிய நாயகி அம்மன் உடனுறை வாலீஸ்வரர் திருக்கோவில் அமைவிடம் தெரியாத படி அக்கிரமிப்பாளர்களால் மறைக்கப்பட்டிருக்கும் முக்கியமான திருத்தலம். புராண கதைகளின் படி வாலி மிகவும் பலம் வாய்ந்த வானரன். தன்னை எதிர்ப்பவர்களின் பலத்தின் பாதியை தனக்கிகொள்ள வரம் பெற்றவன், அத்தகைய வாலி தனது ஆன்ம பலத்திற்காக இறைவனை வழிபட்ட தலம் இது.

Vaaleeswarar 3

இங்கு தடபுடலாக அன்னதானம் நடந்துகொண்டிருந்தது. கூட்டத்தால் கோவில் திமிலோகப்பட்டது.

வாலீஸ்வரரை தரிசித்துவிட்டு மீண்டும் வள்ளுவர் கோவில் வந்து பிரசாதத்தை எடுத்துக்கொண்டு ஆறுமுக குருக்களிடம் விடைபெற்றுக்கொண்டு மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் விரைந்தோம்.

Kasi Viswanadhar temple gopuram_1

சரியான கூட்டம். அன்னத்தை களைத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்கள். அபிஷேகத்தை சிறிது நேரம் பார்த்துவிட்டு ஒரு ஓரமாக அமர்ந்தோம். அபிஷேகம் முழுவதும் முடிந்து அலங்காரம் செய்து தீபாராதனை காண்பித்த பின்னர் தான் அன்னாபிஷேக பிரசாதத்தை அனைவருக்கும் கொடுப்பார்கள்.

அதுவரை ஏதாவது செய்வோம் என்று கருதி சுற்று முற்றும் பார்த்தோம். கோவில் கோபுரத்தின் மீது முழுமதி ஒரு போட்டு போல தோன்றிய அந்த அழகிய காட்சியை படமெடுத்து முகநூளில் அப்டேட் செய்தோம்.

Kasi Viswanadhar temple gopuram_2
காசி விஸ்வநாதர் கோவிலில் மஹா பெரியவாவின் படம் !

இன்னும் எப்படியும் குறைந்தது இருபது நிமிடம் இருக்கிறது. நேராக கோ-சாலைக்கு சென்று யசோதாவுடன் விளையாடிக்கொண்டிருந்தோம். நேரம் போனதே தெரியவில்லை. பாலாஜி நம்மிடம் விரைந்து வந்து “சார் பிரசாதம் கொடுக்குறாங்க வாங்க” என்று கூப்பிட்டார். உடனே சன்னதி நோக்கி விரைந்து சென்று ஈசன் மீது சில மணிநேரங்கள் இருந்த பாக்கியத்தை பெற்ற அன்னத்தை கண்களால் ஒற்றி பெற்றுக்கொண்டு, நாம் அங்கே கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு ஒரு தொன்னையில் வாங்கி வீட்டுக்கு கொஞ்சம் பத்திரப்படுத்திக்கொண்டோம்.

கோவிலை மும்முறை வலம் வந்து நமஸ்கரித்துவிட்டு பாலாஜி அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம்.

மறுநாள் அலுவலகம் வந்தவுடன் அடுத்தடுத்த பணிகள் மலைப்பை ஏற்படுத்தின. அன்னாபிஷேகத்திற்கு அரிசி வாங்கிக் கொடுத்தோம் என்று கூறியிருந்தோம் அல்லவா? அவர்களில் சிலருக்கு மட்டும் நாம் அது குறித்த தகவல் அனுப்பி அது குறித்த படங்களையும் அனுப்பினோம். சிலருக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பினோம். சுமார் 12 பேருக்கு நாம் அரிசி வாங்கி தந்திருப்போம். ஆனால் அவர்களில் பாதி பேருக்கு பேருக்கு தான் அதை தெரியப்படுத்த முடிந்தது. மற்றவர்களுக்கு இதுவரையில் தெரியாது.

நாம் வாங்கிய அரிசி + வெல்லம்

“எந்த வித எதிர்பார்ப்புமின்றி நம் தளத்தின் பணிகளில் உறுதுணையாகவும் இருந்து வருவதற்கு நன்றிக்கடனாக உங்கள் பெயரில் இப்படி ஒரு கைங்கரியத்தை செய்திருக்கிறேன். உங்கள் அன்பைத் தவிர வேறு எதையும் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை!” என்று குறிப்பிட்டு அரிசி வாங்கிய ரசீதும், சம்பந்தப்பட்ட ஆலயத்தின் கோபுரத்தின் படமும், அரிசியின் புகைப்படத்தையும் அனுப்பினோம்.

(நமது ஒவ்வொரு எளிய கைங்கரியத்திலும் ஏதாவது ஒரு வகையில் நம் நண்பர்கள் மற்றும் பிரார்த்தனைக்கு கோரிக்கை சமர்பித்துள்ள வாசகர்களின் பெயர்கள் சுழற்சி முறையில் இடம் பெற்றுவருகின்றன. இதை பலர் அறிவார்கள். நவராத்திரியின் போது சிலர் பெயர்களில் ஒரு கைங்கரியம் செய்தோம். தற்போது வேறு சிலருக்கு செய்துள்ளோம். அடுத்த முறை வேறு சிலருக்கு. ஆக, நமது வட்டத்தில் இருக்கும் நண்பர்கள் யாவருக்கும் இத்தகு வாய்ப்புக்கள் அவர்கள் எதிர்பார்க்காமலே கிடைக்கும்! கவலை வேண்டாம்!!)

நமது மின்னஞ்சலை பார்த்து அன்னாபிஷேகதிற்கு அரிசி வாங்கித் தர நினைத்து அது நிறைவேறாமல் போய் கடைசியில் குங்குமத்தால் ஈசனை அர்ச்சித்த ஒரு அயல் நாட்டு வாசகிக்கு இன்ப அதிர்ச்சி. அழுதே விட்டார்.

“அண்ணா… உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. இன்று சிவனுக்கு அன்னாபிஷேகம், செய்ய நினைத்தேன். நான் இருக்கும் இந்த நாட்டில் அதற்கு வாய்ப்பில்லை. வேறு வழியின்றி குங்குமத்தை அரிசியாக பாவித்து முருகனுக்கு அர்ச்சனை செய்தேன். நீங்களோ என் சார்பாக அன்னாபிஷேகத்திற்கு அரிசி கொடுத்ததாக மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறீர்கள்!” என்று பதில் அனுப்பியிருந்தார்.

Nayapakkam masilmaneeswarar

வேறு ஒரு நண்பரின் பெயரை கடைசியில் சேர்த்தோம். சில பிரச்னைகளில் இருப்பவர் அவர் என்பது மட்டும் தெரியும். சென்னையில் இருப்பவர். ஏனோ தோன்றியது.

அவர் சொன்னார்… “சுந்தர், உங்கள் அன்னாபிஷேக பதிவை பார்த்துவிட்டு ஏதாவது கோவிலுக்கு போய் அரிசி வாங்கிக் கொடுத்து நானும் சாயந்திரம் போய் தரிசனம் செய்ய நினைச்சிக்கிட்டுருந்தேன். ஆனா, எதிர்பாராத விதமாக மனைவிக்கும் குழந்தைக்கும் ரெண்டு பேருக்குமே உடல்நிலை சரியில்லாமல் போய் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலையும்படி ஆயிடுச்சு. எதுலயுமே கவனம் செலுத்த முடியலே. என்னடா இப்படி ஆயிடுச்சேன்னு வருத்தப்பட்டேன். உங்ககிட்டே சொல்லி அரிசி வாங்கித் தர முடியுமா என்று கேட்க நினைச்சேன். ஆனால், சென்னையில் இருந்துகிட்டு இதை செய்யும்படி கேட்க சங்கடமாக இருந்தது. அதுக்கு வாய்ப்பில்லாதவங்களுக்கு தான் நீங்க செய்வீங்கன்னு தெரியும். என் ஆபீஸ்ல கூட வொர்க் பண்ற நண்பர் ஒருத்தர் கிட்டே இது பத்தி சொல்லி என்னோட வருத்தத்தை பகிர்ந்துகிட்டேன். அப்போ அவர்  சொன்னார், “கவலைப்படாதீங்க. நீங்க அரிசி வாங்கி கொடுக்கணும்னு மனசார நினைச்சதும், அது முடியாம போனதும் அதுனால உங்களுக்கு ஏற்பட்ட தவிப்பும் உண்மைன்னா ஆண்டவன் ஏதாவது ஒரு வழி பண்ணுவான். அன்னாபிஷேகம் பண்ண பலன் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்னு” சொன்னார். மறுநாள் ஆபீஸ் வந்தா நீங்க எனக்கு என் பேர்ல அரிசி வாங்கிக் கொடுத்திருக்குறதா சொல்லி படங்கள் அனுப்பி வெச்சிருந்தீங்க. எனக்கு சிலிர்த்துப் போச்சு. மானசீகமா வேண்டினா கூட சில சமயம் பலன் இருக்கும்கிறதை புரிஞ்சிகிட்டேன்!” என்றார்.

“சிவ… சிவ… எல்லாப் புகழும் எந்தை ஈசனுக்கே! எளியோர்க்கு எளியோன் அல்லவா அவன்!!” என்றோம்.

வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்டமுழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணி கொணடாய்
வேண்டி நீயாது அருள் செய்தாய் …யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில் அதுவும் உன்தன் விருப்பன்றே.
– “திருவாசகம்”

பொருள் : என் சிவபெருமானே, நான் வேண்டியதை தருபவன் நீ. எனக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு தெரியாவிட்டாலும் உனக்கு தெரியும். எனக்கு எதனை அருள வேண்டுமென்பதை நீயே அறிய வல்லவன். எனக்கு நல்லது எதுவோ அதனை வழங்கும் பொறுப்பு உன்னுடையது.

==========================================================

2014 ஆம் ஆண்டு அன்னாபிஷேக தரிசன அனுபவம் + புகைப்படங்கள் 

தலைவருடன் ஒரு சந்திப்பு!

2013 ஆம் ஆண்டு அன்னாபிஷேக தரிசன அனுபவம் + புகைப்படங்கள் 

கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=========================================================

அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவின்றி வாழ விருப்பமா?

அன்னாபிஷேகத் திருநாள் — இன்று சிவனை தரிசித்தால் கோடி சிவதரிசனத்துக்கு சமம்!

அள்ளித் தரும் அன்னாபிஷேகம் & அன்னாபிஷேக அன்னத்தை புசிப்பதால் கிட்டும் பலன்கள்!!

==========================================================

Also check…

அன்னதானம் என்கிற அருந்தவம்!

வயிற்றுக்கு சோறிட வேண்டும், இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம்!

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

இளநீர் வியாபாரி செய்த தானம்!

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

Also check…

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்?

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

இளநீர் வியாபாரி செய்த தானம்!

எது உண்மையான தர்மம்?

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

மனமிருந்தால் மார்க்கமுண்டு!

“எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்?- MUST READ

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….

இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

“எல்லாம் அவ பாத்துப்பா!”

==========================================================

[END]

5 thoughts on “வேண்டத்தக்கது அறிவோனும் வேண்டமுழுவதும் தருபவனும் – அன்னாபிஷேக அனுபவம் – 2

  1. அத்தனை கோயில்களையும் நேரில் பார்த்த உணர்வு. அதைவிட sirupu நீங்கள் அளித்த நடைமுறை.

    நன்றி சுந்தர்ஜி,

    நாராயணன்.

  2. சுந்தர்ஜி
    படங்களும் பதிவும் எங்களை மீண்டும் கார்த்திகையில் ஒரு அன்னாபிசேகம் காண வைத்துள்ளன. சிவ தரிசனத்தின் அருமையினையும், அன்னாஅபிசேகத்தின் பெருமையினையும் ஒரு சேர இவ்வளவு தெளிவாக இரு நீண்ட பதிவுகளில் விளக்கி இருப்பது எப்போதும் போல் தங்களது தனித்தன்மையினை காட்டுகிறது! அவன் அவருள் கண்டிப்பாக தங்களுக்கு இருக்கிறது என நீங்கள் செய்த, செய்யும் புண்ணிய காரியங்கள் காட்டிக் கொண்டுள்ளன !! வளர்க உங்கள் பணி !!

  3. வணக்கம்.அன்னாபிஷேகம் பற்றிய பதிவு அருமை. அன்னாபிஷேகம் பற்றி முன்னரே தெரிந்து இருந்தாலும் நம் தளத்திற்கு வந்த பின்தான் இரண்டு வருடங்களாக கோவிலுக்கு அரிசி வாங்கிக் கொடுக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வருடம் தேங்காயும் சேர்த்துக் கொடுத்தோம். நன்றி.

    உள்ளன்போடு கூடிய வேண்டுதலுக்கு இறைவன் செவி சாய்ப்பார் என்பதற்கு தாங்கள் மேற்கூறிய இரண்டு சம்பவங்களே சாட்சி. படித்ததும் இறைவனின் கருணையை எண்ணிக் கண்ணீர் வந்தது. நன்றிகள் பல.

  4. அன்னாபிஷேக பதிவு அருமையோ அருமை. அனைத்து கோவில்களையும் தரிசித்த உணர்வு ஏற்படுகிறது. ஒவ்வொரு போடோகளும் கண்ணை கவர்கிறது.

    இன்று தான் ஒவ்வொரு பதிவாக படிக்கிறேன்.

    வாழ்க வளமுடன்
    நன்றி
    உமா வெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *