Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, July 19, 2024
Please specify the group
Home > Featured > அள்ளித் தரும் அன்னாபிஷேகம் & அன்னாபிஷேக அன்னத்தை புசிப்பதால் கிட்டும் பலன்கள்!!

அள்ளித் தரும் அன்னாபிஷேகம் & அன்னாபிஷேக அன்னத்தை புசிப்பதால் கிட்டும் பலன்கள்!!

print
நாளை மறுநாள் செவ்வாய்கிழமை ஐப்பசி பௌர்ணமி, அஸ்வினி நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகத் திருநாள். அன்னாபிஷேகம் குறித்து இது வரை நம் தளத்தில் பல பதிவுகள் வெளியாகியிருந்தாலும் மேலும் சில தகவல்களை திரட்டி இந்த பதிவை அளிக்கிறோம். பதிவு உங்களை கவரும் என்று நம்புகிறோம்.

மகாவிஷ்ணு அலங்காரப் பிரியர் என்றால் சிவபெருமான் அபிஷேகப் பிரியர். சிவபெருமானுக்கு அடிக்கடி அபிஷேகம் செய்து வருவது சகலவிதங்களிலும் நன்மை தரக்கூடியது. தூய நீர், பசும்பால், இளநீர், கரும்புச் சாறு, சந்தனம், விபூதி, பசுந்தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள் தூள், அன்னம் ஆகியவை சிவபெருமானின் அபிஷேகத்துக்கு உரியவை.

Annabishekam 1

இவற்றில் அன்னம் மட்டும் ஐப்பசி மாதம் வரும் பௌர்ணமியன்று அபிஷேகம் செய்யப்படும். அந்த வைபவத்திற்கு அன்னாபிஷேகம் என்றே பெயர். சிவபெருமானுக்கு செய்யப்படும் பல்வேறு அபிஷேகங்களில் மிக மிக உயர்வானது அன்னாபிஷேகமே.

நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அது தான் உங்கள் உடல். எனவே என்றும் நல்ல, சுத்தமான உணவையே உண்ணவேண்டும். ஆச்சாரம், சுத்தம் குறைவான இடங்களில் உண்பதை தவிர்க்க வேண்டும். “கூழானாலும் குளித்துக்குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு” என்று ஆன்றோர் சொன்ன வாக்கில் தான் எத்தனை பொருள்.

அன்னம் என்பது பிராணன் என்றும், அஹமன்னம் எனவும் வேதங்கள் போற்றுகின்றன. ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதைப் பொறுத்தே அவனது மனம் இருக்கும் என்கின்றன நமது உபநிடதங்கள். சாத்வீகமான உணவுகளையே என்றும் உண்ணவேண்டும்.

மேலும் அற்றார் அழிப்பசி தீர்க்கும் அன்னத்தை சிறிதும் வீணாக்ககூடாது என்பதற்காகவும், அது கடவுளுக்கு ஒப்பானது என்பதை நம் அனைவருக்கும் உணர்த்தவே சர்வேஸ்வரனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

பஞ்ச பூதங்களையும் படைத்து அவற்றை கட்டுப்படுத்துபவன் சிவபெருமான். அன்னம் கூட பஞ்சபூதங்களின் சேர்க்கையால் நமக்கு கிடைக்கும் ஒன்று. நிலத்தில் விதைத்து வானிலிருந்து பொழியும் மழையால் விளைந்து, காற்றினால் கதிர்பிடித்து, சூரியனின் ஒளியால் வளர்ச்சி பெற்று அறுவடையை தருகிறது. பஞ்சபூதங்களின் சேர்க்கை இல்லாவிட்டால் அரிசியானது விளையாது. எனவே எந்த அபிஷேகத்தைவிட அன்னாபிஷேகத்தை சிவபெருமான் மிகவும் விரும்பி ஏற்றுக்கொள்கிறான்.

அன்னாபிஷேகம் எப்படி செய்யப்படுகிறது?

அன்னாபிஷேகத் திருநாளில் முதலில் சிவபெருமானுக்கு ஐந்து விதமான பொருட்களால் அர்ச்சனை செய்து, பின்னர் நன்கு வடித்து ஆறவைத்த பச்சரிசி அன்னத்தை கொண்டு காப்பு போல அப்பி பூசுவார்கள்.

அன்னமானது மேலேயிருந்து வைத்துக்கொண்டு வருவார்கள். பிரம்மபாகம் விஷ்ணுபாகம் சிவபாகம் என்று சிவலிங்கத்தை மூன்றாக பிரிப்பார்கள். முழு லிங்கத்தையும் மூடுவிதமாக அபிஷேகம் செய்வார்கள்.

பின்னர் இரண்டு நாழிகை நேரம் (90 நிமிடங்கள்) அப்படியே வைத்திருப்பார்கள்.

அந்த நேரத்தில் சிவபெருமான் மிகவும் ஆனந்தமாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது. எனவே உலக நன்மைக்காக வேத பாராயணமும், ருத்ர பாராயணமும் அந்த நேரம் செய்வார்கள். பின்னர் அன்னத்தை கலைத்துவிடுவார்.

பின்னர் மறுபடியும் அபிஷேகம் நடைபெறும். ஆவுடை மீதும் பானத்தின் மீதும் சாத்தப்பட்டிருக்கும் அன்னம், மிக மிக வீரியமிக்கது. அதை நாம் உண்ணக்கூடாது. அதை நீர்நிலைகளிலும் குளங்களிலும் சமுத்திரங்களிலும் கரைப்பார்கள். நீர் வாழ் உயிரினங்கள் சிவப்பிரசாதமான அதை உண்டு அரனருள் பெறுவார்கள்.

பிரம்ம பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம், மனிதர்களுக்கு வழங்கப்படும். இது ஏகப்பட்ட அருட்சக்திகளை, அதிர்வுகளை லிங்கத்திலிருந்து ஈர்த்து தன்னகத்தே கொண்டிருக்கும். இதை மனிதர்கள் மட்டுமே சாப்பிடமுடியும். சாப்பிடவேண்டும். அப்படி சாப்பிடுவது மிகவும் சிறப்பு.

அப்படி நமக்கு அன்னம் வழங்கப்படும்போது, அதில் தயிர் சேர்க்கப்பட்டு வழங்கப்படும். இதை புசிப்பதால், நோய்நொடிகள் அண்டாது. கருப்பையில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் நீங்கிவிடும். புத்திரப்பாக்கியம் வேண்டுவோர் அவசியம் சிவாலயம் சென்று இந்த பிரசாதத்தை வாங்கி சாப்பிடவேண்டும்.

Annabishekam 3

தமிழகத்தை பொறுத்தவரை தஞ்சை பெரிய கோவிலின் மறுபதிப்பாக விளங்கும் கங்கை கொண்ட சோழபுரத்தில், எழுந்தருளிருக்கும் பிரகதீஸ்வரருக்கு காஞ்சி பெரியவரின் அறிவுறுத்தலின் பேரில் அன்னாபிஷேகம் பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது. (இடையே இது பல நூற்றாண்டுகள் நின்றுபோயிருந்தது.) சுமார் பதின்மூன்றரை அடி உயரமும் அறுபது அடி சுற்றளவும் கொண்ட இந்த சிவலிங்கத் திருமேனிக்கு, 108 மூட்டை அரிசி அன்னமாக சமைக்கப்பட்டு அன்னா பிஷேகம் நடைபெறுகிறது. இறைவனுக்குப் படைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கங்கை கொண்ட சோழபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் கூடி அன்னாபிஷேகத்தை தரிசித்து மகிழ்கின்றனர். 

நாளை வரக்கூடிய அன்னாபிஷேக திருநாளில் அருகே உள்ள சிவாலயத்திற்கு தேவையான காணிக்கைகளை கொடுத்து அன்னாபிஷேகம் சிறக்க உதவிடுங்கள். அன்னாபிஷேகத்தையும் தரிசியுங்கள். இகபர சுகங்களை சிவனருளால் பெறலாம்.

அன்னாபிஷேக தரிசன நேரத்தை பற்றி பல நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள்…

அன்னாபிஷேகம் மாலை தான் நடைபெறும். நாளை (27/10) செவ்வாய் மாலை 6.00 pm மணியளவில் சென்றால் அனைத்துக் கோவில்களிலும் நீங்கள் அன்னாபிஷேகம் செய்யப்பட்ட லிங்கத்தை தரிசிக்கலாம்.

சாத்தப்பட்ட அன்னத்தை களைத்து பிரசாதமாக தரும் நேரம் கோவிலுக்கு கோவில் மாறுபடும்.

பெரும்பாலான கோவில்களில் இரவு 8.30 அளவில் களைத்து பிரசாதம் தருவார்கள்.

===================================================

ஒரு வேண்டுகோள்!

அடுத்தடுத்த அறப்பணிகள் மற்றும் செலவினங்களால் தளம் தற்போது கடும் நிதிச்சுமையில் இருக்கிறது. ஊருக்கு நடுவே இருக்கும் குளத்து நீர் எப்படி அனைவரின் தாகம் தீர்க்கவும் பயன்படுகிறதோ அது போன்றது தான் ரைட்மந்த்ரா கணக்கில் இருக்கும் பணமும் தகுதியுடைய பல விஷயங்களுக்கு தவறாமல் செல்லும். வாசகர்கள் மனமுவந்து நன்கொடை அளித்து, தளம் தொய்வின்றி தொடரவும் நம் பணி சிறக்கவும் உதவ வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். சில வாசகர்கள் நமக்கு உதவ விருப்பம் தெரிவித்திருந்தும் அதை செய்ய அவர்களுக்கு சந்தர்ப்பம் அமையவில்லை. அப்படிப்பட்டவர்கள் இப்போது செய்தால் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

உங்கள் உதவிக்கரத்தை எதிர்நோக்கும்…

அன்பன்,
ரைட்மந்த்ரா சுந்தர்

===================================================

அன்னாபிஷேகத்தின் பலன்கள் என்ன என்று பார்ப்போமா?

* வியாபாரத்தில் அபிவிருத்தியும் லாபமும் வேண்டுவோர் அவசியம் அன்னாபிஷேகத்தன்று அன்னலிங்கத்தை தரிசித்து பிரசாதத்தை சாப்பிடவேண்டும்.

* படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு அன்னாபிஷேக பிரசாதத்தை சாப்பிட கொடுத்தால் அவர்கள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது நிற்கும்.

* மந்தபுத்தி மற்றும் கற்றலில் குறைபாடு (DYSLEXIA) உள்ள குழந்தைகள் அன்னாபிஷேக அன்னத்தை சாப்பிட்டால் புத்திக் கூர்மை பெறுவார்கள்.

Annabishekam 2

* வீட்டில் சிவலிங்கம் வைத்திருந்தால் அவசியம் நித்ய பூஜை செய்யவேண்டும். அவ்வாறு செய்ய தவறியவர்களுக்கு அன்னாபிஷேகம் ஒரு அருமையான வாய்ப்பாகும். அவர்கள் அன்னலிங்கத்தை தரிசிப்பதன் மூலம் அந்த தோஷத்தை போக்கிக் கொள்ளலாம்.

* அன்னாபிஷேக பிரசாதத்தை உண்டால், அடுத்த அன்னாபிஷேகம் வரை உணவு தட்டுப்பாடு என்பதே இருக்காது. வீட்டிலும் தானிய தட்டுப்பாடு வராது.

* அது மட்டுமல்ல தோற்றப் பொலிவு, தன்னம்பிக்கை இவை யாவும் அன்னாபிஷேக பிரசாதத்தை உண்டால் கிடைக்கும்.

* தொன்மையான சிவாலயம் ஏதாவது ஒன்றுக்கு அபிஷேகம் செய்து அன்னாபிஷேகம் செய்தால் ஊர் செழிக்கும், மழை பொழியும், பசுமை பொங்கும். செய்பவர் வியாபாரம் உத்தியோகம் மேன்மையடையும்.

===================================================

நமது அன்னாபிஷேக தரிசனம்!

நம்மை பொருத்தவரை மகா சிவராத்திரியை போன்றே அன்னாபிஷேகமும் விசேஷம் தான். இது வரை கடந்த மூன்று ஆண்டுகளாக நமது அன்னாபிஷேக தரிசன அனுபவங்களை பற்றி பதிவளித்திருக்கிறோம்.

இந்த ஆண்டும் சென்னை மயிலையில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் அன்னாபிஷேக தரிசனம் செய்துவிட்டு அதன் அருகே உள்ள வாலீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களை தரிசிக்கவிருக்கிறோம். சென்ற ஆண்டை போலவே கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் மற்றும் மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய ஆலயங்களில் அன்னாபிஷேகத்திற்கு அரிசி நம் தளம் சார்பாக வழங்கப்படவிருக்கிறது. நாமும் மேலே குறிப்பிட்ட ஆலயங்கள் சென்று தரிசிக்கவிருக்கிறோம். நன்றி!

===================================================

Also check :

தலைவருடன் ஒரு சந்திப்பு!

அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவின்றி வாழ விருப்பமா?

அன்னாபிஷேகத் திருநாள் — இன்று சிவனை தரிசித்தால் கோடி சிவதரிசனத்துக்கு சமம்!

கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?

===================================================

[END]

6 thoughts on “அள்ளித் தரும் அன்னாபிஷேகம் & அன்னாபிஷேக அன்னத்தை புசிப்பதால் கிட்டும் பலன்கள்!!

 1. Rightmantra மூலம் தான் அன்னாபிஷேகம் பற்றி அறிந்தேன். நம் தலைவருக்குண்டான மிக பெரும் விழா நாளை என்பது பதிவை படித்த பின்பே தெரிந்தது. அன்னாபிஷேகம் பற்றி A டு Z தெளிவாக அறிந்து கொண்டோம். ஏன் அன்னாபிஷேகம் கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரசித்தம்? நம் கலியுக கண்கண்ட தெய்வம் மகா பெரியவாவின் அறிவுறுத்தலின் பேரில் நடக்கிறது என்ற செய்தி..காண கிடைக்காத முத்து.. அன்னாபிஷேகம் எப்படி செய்யபடுகிறது மற்றும் அன்னாபிஷேகம் பலன்கள் என்று தொகுத்து இருப்பது மிக மிக சிறப்பே.

  மீள்பதிவாய் 4 பதிவுகள் -> கண்டிப்பாக படித்து பகிர வேண்டியவை.

  ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம் பதிவு …

  நன்றி அண்ணா..

 2. அன்னாபிஷேகத்தை பற்றி இத்தனை விலா வாரியாக எடுத்து சொன்னதற்கு மிக மிக நன்றி சார்.

  மயிலை, மற்றும் உள்ள சிவாலைய தரிசனத்துக்கு ஆவலுடன் காத்திருக்கும்

  தங்களின்

  சோ ரவிச்சந்திரன்

  சார்,
  ஒரு விளக்கம் தேவை//.
  எங்கள் வீட்டில் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாரும் விருந்து சாப்பிட்டால் அடுத்த கொஞ்ச நாட்களில் அவர்கள் எங்களை விரோதிகளாக அல்லது பகைவர்களாக பார்கிறார்கள்///. இது ஒருமுறை அல்ல பல முறை பலர் மாறிவிட்டார்கள் .இப்போது பேசுவதை நிறுத்திவிட்டார்கள் ///.

  அதுமட்டும்மல்ல சார் . அவர்கள் தரவேண்டிய/வாங்கிய பணம் லச்சகணக்கில் நாமம் போட்டுவிட்டார்கள்.. இதுக்கு என்ன காரணம்?. இப்போ எந்த நபரையும் சாப்பிட கூப்பிடவே பயமாக இருக்குது சார் . என்னவாக இருக்கும் சார்?.

  தங்களின்

  ரவிச்சந்திரன்

  1. Dear Ravi Sir,

   My humble greetings to you and your family members.

   The almighty says, “The reason some people have turned against you and walked away from you without reason, has nothing to do with you.It is because HE has removed them from your life and the reason for this is, God has decided to take you to the next level and your relatives cannot travel with you in this journey.They will only hinder you in your next level because they have already served their purpose in your life.Let them go and keep moving. Greater is coming…

   And for the Money, Just see if the below helps

   Step 1: On an Auspicious day early in the morning take a clean shower and sit in your pooja room with your body straight , eyes closed, take a deep breath 3 times.(upto 9 times in case if your mind is not silent)

   Step 2: Assume your beloved Lord is appearing in front of you. There is a connection from your third eye area and your Lord’s feet.

   Step 3: Bring up all your worries (money issues, etc etc) and imagine all your worries are moving one by one towards the Lords feet..meaning you have given up all your worries to the Lord of the universe.

   Step 4: Very important step Never ever think about that money(and your worries) again in your life.This is the only way your beloved Lord can play with you to test your devotion.Initially it will be difficult but later it will be fine.

   Now it’s your Lords duty to return back the favor to you…and that depends on the level of your surrender to HIM.

   May the Lord bring Love and Light to one and All.

   Kind Regards,
   Sai Ram.

   1. நன்றி சாய் ராம் சார்,

    மனதுக்கு ரொம்ப லேசா இருக்குது இப்போ//. நீங்கள் சொன்னபடி நான் செய்து பார்கிறேன் //

    நல்லதே நடக்கும் என நினைக்கிறன் //.

    தங்களின் பதிலுக்கு மிக மிக நன்றி.

    சோ RAVICHANDRAN

 3. சற்று இடைவெளிக்கு பிறகு வருகிறேன். இடையே சில பதிவுகளை மட்டும் படிக்கவில்லை. அனைத்தையும் சேர்த்து வைத்து படித்து வருகிறேன்.

  தளத்தின் புதிய தோற்றம் அருமை. பல பழைய பதிவுகளை சுலபமாக படிக்க முடிகிறது. மொபைலில் கூட நன்றாக தெரிகிறது. வாழ்த்துக்கள்.

  அன்னாபிஷேகம் பற்றி நம் தளத்தில் படித்தால் தான் படித்தது போல உள்ளது.

  பல புதிய தகவல்களை பார்த்து பிரமித்தேன். நம் தளம் அறிமுகனானது முதல் முக்கிய நாள் கிழமை விஷேசங்களன்று கோவிலுக்கு செல்ல தவறுவதில்லை. சென்ற வருடம் அன்னாபிஷேகம் தங்கள் புண்ணியத்தால் தரிசித்தேன். அவருக்கு உத்தியோகத்தில் இருந்த பல பிரச்சனைகள் தீர்ந்தன. என் மகளுக்கு அடிக்கடி ஏதேனும் உடம்புக்கு வந்துகொண்டே இருக்கும். அதுவும் முடிவுக்கு வந்தது.

  இந்த வருடம் எனக்கு தெரிந்த பலரிடம் அன்னாபிஷேக தரிசனம் பற்றி சொல்லியிருக்கிறேன். நம் தளத்தின் பதிவு பற்றியும் கூறி படிக்கச் சொல்லியிருக்கிறேன்.

  தங்கள் பணி தொடரட்டும். என்னால் இயன்ற உதவிகள் தளத்திற்கு எப்போதும் உண்டு.

  நல்லதொரு பதிவுக்கு நன்றி.

  – பிரேமலதா மணிகண்டன்,
  மேட்டூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *