Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!

தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!

print
சிறுநீரகத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அந்த எழுபது வயது முதியவர் மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.

மருத்துவர்கள் அவரை பரிசோதித்துவிட்டு, “உடனடியாக உங்களுக்கு சிறுநீரகத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டும். அப்போது தான் இந்த பிரச்சனை சரியாகும்” என்றனர்.

ஏற்கனவே வலியில் துடித்துக்கொண்டிருந்ததால் வலியிலிருந்து விடுபட்டால் போதும் என்று கருதி, இவரும் உடனே ஒப்புக்கொண்டார்.

Struggle

குறித்த நாளில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. மருத்துவமனை நிர்வாகம் இவரிடம் அறுவை சிகிச்சைக்கான பில்லை கொடுத்தது.

பில்லைப் பார்த்ததும் இவர் ஓவென அழ ஆரம்பித்தார்.

“உங்களால் இந்த தொகையை கட்டுவதற்கு சிரமமாக இருக்கும் பட்சத்தில் தலைமை மருத்துவரிடம் பேசி, சலுகை பெற்றுத் தருகிறோம். கவலை வேண்டாம்” என்றனர் மருத்துவர்கள்.

“நான் என்னிடம் பணம் இல்லையே என்று அழவில்லை. கடந்த 70 வருடமாக நான் எந்தப் பிரச்சனையுமின்றி சிறுநீர் கழித்துவந்தேன். ஆனால், அதற்காக ஆண்டவன் எனக்கு எந்த பில்லையும் அனுப்பியதில்லை. நானும் அவனுக்கு நன்றி கூறியதில்லை. அவனுடைய கருணையை நினைத்து தான் அழுகிறேன்” என்றார்.

இது ஏதோ சாதாரண கதை என்று நினைக்கவேண்டாம். நித்தம் நித்தம் நம்மை சுற்றி நடந்துகொண்டிருக்கும் விஷயம் தான். சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனைகளில் அட்மிட் ஆகியிருப்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள் புரியும்.

நாம் கொஞ்சம் கூட நன்றியுணர்ச்சியே இன்றி அனுபவித்து வரும் பல சௌகரியங்களுக்கு ஆண்டவன் என்கிற டாக்டர் நமக்கு பில் அனுப்ப ஆரம்பித்தால் அதை நம்மால் தாங்க முடியுமா??

நாம் சர்வசாதரணமாக தினசரி சுவாசிக்கும் பிராண வாயுவின் விலை மருத்துவமனைகளில் அட்மிட் ஆனால் எவ்வளவு தெரியுமா? பிறந்ததிலிருந்து நாம் பிராணவாயுவை சுவாசித்து வருகிறோம். என்றாவது அதற்கு இறைவனுக்கு நன்றி கூறியிருக்கிறோமா? குறைந்த பட்சம் பிராண வாயுவை உற்பத்தி செய்யும் ஒரு மரத்தையாவது நட்டிருப்போமா?

சற்று மெயினான இடத்தில் இருப்பவர்கள், அவர்கள் வீட்டு முன் மரம் நடுவதற்கு பதில் கடையை அல்லவா கட்டிவிடுகிறார்கள்… இயற்கையின் கடனை தீர்க்காமல் செல்கிறவர்களுக்கு அடுத்த பிறவியில் அவற்றை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்காது.

(இன்றைக்கு வெளியே புறப்படும்போது நாம் கையில் வாட்டர் பாட்டில் கொண்டு செல்வதைப் போல வருங்காலத்தில் ஆக்ஸிஜன் குடுவையை நமது தலைமுறையினர் எடுத்துச் செல்வார்கள் என்பது உறுதி!)

எந்தக் கட்டணத்தை நாம் செலுத்த காலம் தாழ்த்தினாலும் மின்கட்டணத்தை செலுத்த மட்டும் நாம் தாமதிப்பதில்லை. சாக்கு போக்குகள் சொல்வதில்லை. காரணம், மின்கட்டணம் குறித்த நேரத்தில் கட்ட தவறினால், மின்சார வாரியத்தினர் ப்யூஸை பிடுங்கிவிட்டு போய்விடுவார்கள் என்கிற பயம் தான்.

இறைவன் ‘சூரியன்’ என்கிற மிகப் பெரிய லைட் மூலம் நமக்கு எவ்வளவு வெளிச்சத்தை தருகிறான்? வெயில் வருத்தும்போது கதிரவனை கடுகடுக்கும் நாம் என்றைக்காவது அவன் பாரபட்சமின்றி தங்கு தடையின்றி வாரி வழங்கி வரும் வெளிச்சத்துக்காக நன்றி கூறியிருப்போமா?

(சூரிய நமஸ்காரம் போன்ற சடங்குகளின் மூலம் இயற்கையை வணங்கவேண்டும் என்கிற நடைமுறையை நமது சாஸ்திரத்தில் கூறியிருப்பதன் காரணம் ‘நன்றியுணர்ச்சி’ மனிதற்கு வேண்டும் என்பதற்காகத் தான்.)

அடுத்த முறை “எனக்கு அது இல்லை, இது இல்லை” என்று இறைவனிடம் புலம்புவதற்கு முன்பு, இருப்பவற்றுக்கு முதலில் நாம் நன்றி சொன்னோமா என்று முதலில் யோசித்துப்பாருங்கள்.

நாம் அனுபவித்து வரும் சௌகரியங்களின் அருமை, ஆரோக்கியத்தின் அருமை, அவை இருக்கும்போது தெரியாது. எனவே என்றும் எப்போதும் நன்றியுடன் இருப்போம்.

நன்றியுடையவர்களே பாக்கியசாலிகள்! அவர்களுக்கு தான் மேலும் மேலும் கிடைக்கும்!!

இறைவா என்றும் நீ அளித்தவற்றுக்கும் இனி அளிக்கவிருப்பவற்றுக்கும் நன்றியுடையவர்களாக இருப்போம்.

நீ எங்களுக்கு வழங்கி வரும் அருட்கொடைகள் யாவும் விலைமதிப்பற்றவை என்பதை நாங்கள் நம்புகிறோம்.

‘அருமை’ உணராமல் நாங்கள் சர்வசாதாரணமாக அனுபவித்து வரும் சௌகரியங்களுக்காக பலர் தவமிருக்கிறார்கள் என்பதை உணர்ந்திருக்கிறோம்.

எனக்கும் என் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் நோயற்ற வாழ்வையும் மனநிறைவையும் நன்றியுணர்ச்சியையும் தருவாயாக.

நீங்கள் தினசரி காலை எழுந்தவுடன் எதை செய்கிறீர்களோ இல்லையோ இதை தயவு செய்து சொல்லிப் பழகுங்கள்! அது போதும்!!

=========================================================

* வழக்குகளில் இருந்து நிவாரணம் வேண்டி வழக்கறுத்தீஸ்வரருக்கு நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருந்த வெங்கடாசலம் என்னும் வாசகருக்கு வழக்கில் அவர் பக்கம் சாதகமாக தீர்ப்பு வந்திருக்கிறது. பிறர் செய்த தவறுக்கு தான் சிக்கிக்கொண்டு துறைரீதியான நடவடிக்கைக்கு ஆளாகி ஆண்டுக்கணக்கில் பாதிக்கப்பட்டிருந்தவருக்கு மிகப் பெரிய நிவாரணம் இது. விபரங்கள் பின்னர். பிரார்த்தனை சமர்பித்த மற்றவர்களுக்கும் வெற்றிச் செய்தி ஒன்றன் பின் ஒன்றாக வரும். நம்பிக்கையை மட்டும் இழக்கவேண்டாம். பிரார்த்தனைக்கு தலைமையேற்ற திரு.நாகராஜ குருக்கள் அவர்களுக்கும் கோரிக்கையை நிறைவேற்றிய தலைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி. “உன் கடன் எங்களை தாங்குதல். எங்கள் கடன் பணி செய்து கிடப்பதே!”

=========================================================

Help us to sustain! 

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

=========================================================

Also check :

ஒவ்வொரு மனிதனும் அவசியம் தீர்க்கவேண்டிய ஒரு முக்கியக் கடன்!

“எல்லாம் அவ பாத்துப்பா!”

அதிசயத்தை எதிர்பார்க்கிறது தப்பில்லீங்க…. ஆனா….

கொடுத்ததற்கு ஒரு முறை… கொடுக்காததற்கு 100 முறை! 

உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான, அவசரமான கேள்வி!

கொடுத்துக் கெட்டவர் குவலயத்தில் உண்டோ ?

இளநீர் வியாபாரி செய்த தானம்!

நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

வெற்றிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி!

=========================================================

[END]

6 thoughts on “தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!

  1. சுந்தர் சார்,

    கடவுளுக்கு நன்றி சொல்வது எவ்வளவு முக்கியம் என்பதை அருமையாக சொல்லி இருக்கிறிர்கள். அருமையான பதிவு.

    நன்றி.

  2. உண்ணும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம், கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே – இந்த பாடல் வரிகளின் உண்மையான அர்த்தம் இந்த பதிவில் உள்ளது. அருமையான பதிவுக்கு நன்றி சுந்தர்.

  3. அற்புதமான கதை. அருமையான நீதி. இந்தக் காலத்துக்கு தேவையான ஒன்று. உண்மையில் கடவுள் நமக்கு தந்திருக்கும் ஆசீர்வாதங்களுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும்.

    சூரியன் தரும் ஒளியோடு கரெண்ட் பிள்ளை முடிச்சு போட்டிருக்கும் விதம் அருமை. உண்மையில் சூரியன் என்கிற ஒன்று இல்லாவிட்டால் நம் நிலை என்ன?

    அதே போல, கடை கட்டி விடுவதற்கு பதில் மரம் நடுவோம் என்று கூறியிருப்பது நச். யோதை படிக்கும் ஒருவர் மாறினால் கூட அது உங்களுக்கு மட்டுமல்ல எங்கள் எல்லாருக்கும் கிடைத்த வெற்றி.

    மரம் நடுவோம். மழை பெறுவோம்.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *