Saturday, February 23, 2019
நமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.
Home > Featured > நமது உரையின் முதல் வரி @ பாலம் கலியாணசுந்தரம் ஐயா பிறந்த நாள் விழா ! Quick Update!!

நமது உரையின் முதல் வரி @ பாலம் கலியாணசுந்தரம் ஐயா பிறந்த நாள் விழா ! Quick Update!!

print

மேற்கு மாம்பலத்தில் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் வெள்ளி மாலை நடைபெற்ற பாலம் கலியாணசுந்தரம் ஐயாவின் பிறந்த நாள் விழா இறைவனின் கருணையினால் இனிதே நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் வந்திருந்து சிறப்பாக பேசி விழாவை சிறப்பித்தார்கள்.

ஒவ்வொரு கணமும் என்னை காத்துக் கொண்டிருக்கும் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த அருணாச்சலேஸ்வரர் திருக்கருணையின் காரணமாகவும் நம்மை என்றும் வழி நடத்தி வரும் மகாபெரியவாவின் கருணையின் காரணமாகவும் நமது உரை இனிதே நடைபெற்றது.

“அவனின்றி ஒரு அணுவும் அசையாது. எல்லாப் புகழும் அவன் ஒருவனுக்கே!” இது தான் நமது உரையின் முதல் வரி.
உங்கள் பிரார்த்தனை மற்றும் நல்லாசி மற்றும் நல்லெண்ணங்கள் எனக்கு உறுதுணையாக இருந்ததை என்னால் உணர முடிந்தது. விழாவில் நமது உரை மிகச் சிறப்பாக அமையவேண்டும் என்பதில் என்னை விட நம் வாசகர்கள் பலர் பதட்டமாக இருந்ததையும் எனக்காக பிரார்த்தனை செய்ததையும் நானறிவேன். இந்த அன்பு வெள்ளம் எனக்கு புதிது. உங்களுக்காக இறைவனிடம் நித்தம் பிரார்த்திப்பதும் தன்னலமற்ற சேவையை உங்களுக்கு தொடர்ந்து வழங்குவதுமே நாம் இதற்க்கு செய்யக்கூடிய கைம்மாறு!

நிகழ்ச்சிக்கு நம் நண்பர்கள் மற்றும் வாசகர்கள் பலர் திரளாக தங்கள் குடும்பத்தோடு வந்திருந்தனர். நம் தளம் சார்பாக புகைப்படங்கள் எடுக்க நண்பர் பிரவீன் என்பவர் வந்திருந்தார். அனைவருக்கும் நன்றி. இறுதி வரை நண்பர்கள் பலர் உடனிருந்தனர். (வந்தவர்கள் பெயர் விபரம் மற்றும் விழாவின் முழு புகைப்படங்கள் விரைவில் வெளியிடப்படும்.)

இந்த விழாவில் எனக்கு உறுதுணையாக இருந்து தனது பிரதிநிதியையும் அனுப்பி எனக்கு ஆசி அளித்தது யார் தெரியுமா? நான் நித்தம் வணங்கும் தனது குறள் வரிகள் மூலம் எனக்கு வழிகாட்டும் அய்யன் திருவள்ளுவர் தான். நம்பமுடியவில்லையா? அடுத்த பதிவில் அது பற்றி விரிவாக சொல்கிறேன். அங்கு இருந்தவர்கள் கண்ணார கண்டனர் இதை!

மற்றபடி விழா மிக மிக சிறப்பாக நடைபெற்றது. பாலம் ஐயா வந்தவர்களின் அன்பு வெள்ளத்தில் திக்குமுக்காடி போனார். விழாவில் நாம் பேசிய விபரம், சிறப்பு விருந்தினர்கள் பேசிய விபரம் மற்றும் ஹைலைட்டாக அமைந்த விஷயங்கள் விரைவில் ஒரு தனி பதிவாக வரும்.

ஆர்வமுடன் காத்திருக்கும் உங்களுக்காக இப்போதைக்கு ஓரிரு படங்கள்…! விரைவில் முழு பதிவு!!

நன்றி!!!

6 thoughts on “நமது உரையின் முதல் வரி @ பாலம் கலியாணசுந்தரம் ஐயா பிறந்த நாள் விழா ! Quick Update!!

 1. “அவனின்றி ஒரு அணுவும் அசையாது. எல்லாப் புகழும் அவன் ஒருவனுக்கே!”

  விரைவில் முழு பதிவையும் ஆவலோடு எதிர்பார்கிறேன்.

 2. ரொம்ப சந்தோஷமா இருக்கு சுந்தர். அய்யாவின் பிறந்த நாள் விழாவும், திரு. லியோ அவர்களை கௌரவிக்கும் விழாவும் நல்ல முறையில் வெற்றிகரமாக நடந்ததற்கு நாம் அந்த ஆண்டவனுக்கு நன்றி சொல்லுவோம். சுந்தர் வரவேற்புரை சொன்னது, எங்க வீட்டு பசங்க கலந்துட்டு பேசினது போல மனசுக்கு ரொம்பவே சந்தோஷா இருக்கு. உங்க நல்ல மனசுக்கு தான், கடவுள் இவ்வளவு பெரியவங்க, நல்லவங்க நட்பு உங்களுக்கு கிடைச்சிருக்கு. உங்க விரிவான பதிவுக்கு காத்திருக்கோம்.

 3. மிக பயனுள்ள நிகழ்ச்சி அதுவும் அய்யாவுக்கு ஒரு சால்வை மட்டும் போர்த்திவிட்டாலே போதும் என்று காத்து கொண்டு இருந்த பல பேர் இருந்தும் எந்த வித பந்தாவும் இல்லாமல் எப்போதும் போலவே அமைதியாக புண் சிரிப்போடு இருந்தார்

  அவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

 4. விழா சிரப்பாக நடைபெற்றதுக்கு வாழ்துக்கல் சுந்தர் சார் ..

 5. வாழ்த்துக்கள் !!!
  எல்லாவற்றையும் நல்லபடியாக நடத்தி கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி !!!

  அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம் !!!

 6. இந்த பதிவை படித்த பிறகு நாம் கலந்து கொள்ளவில்லை என்று வருத்தமாக உள்ளது. போட்டோகளைப் பார்க்கும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இதே போல் பல விழாக்களுக்கு உரை நிகழ்த்த வாழ்த்துகிறோம். இந்த பதிவின் continuity எங்கு வருகிறது ? that is under which header

  நன்றி
  உமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *