மற்றவர் மிக தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்ததால் அவரால் எழுந்து உட்கார முடியாது. இருவரும் ஒருவருக்கொருவர் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். அவர்கள் குடும்பம், நண்பர்கள், அரசியல், கிரிக்கெட் என அவர்கள் பேசாத சப்ஜெக்டே இருக்காது.
ஒவ்வொரு மதியமும் சிகிச்சைக்காக ஜன்னலுக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவர் இவ்வாறு அவர் உட்கார வைக்கப்படும்போது தனது பக்கத்து பெட்டில் நகர முடியாது தவிக்கும் அவருக்கு, ஜன்னல் வழியே தான் காணும் இயற்கை காட்சிகளை மக்கள் நடமாட்டத்தை சாலையில் செல்லும் வாகனங்களை பற்றி விவரிப்பார்.
தினமும் இவர் இப்படி செய்து வர, படுக்கையில் நகரமுடியாது கிடக்கும் அந்த பக்கத்து பெட் நபருக்கு அது கொள்ளை இன்பத்தை ஏற்படுத்தியது. எனவே தினமும் எப்போது வரும் வரும் என்று அந்த ஒரு மணி நேரத்துக்காகவே இவர் ஏங்க ஆரம்பித்தார். ஏனெனில் அந்த ஒரு மணிநேரத்தில் தான் இவர் உலகை பார்க்க முடிந்தது.
அந்த ஜன்னலுக்கு வெளியே சாலையையொட்டி ஒரு அழகிய ஏரி இருந்தது. அதில் படகுச் சவாரியும் நடைபெற்றது. பறவைகள் அங்கும் இங்கும் பறந்தன. ஏரிக்கரைக்கு முன்பாக போடப்பட்ட பெஞ்ச்களில் காதலர்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இது போன்று தான் பார்க்கும் காட்சிகளையெல்லாம் அவர் பக்கத்து பெட்டில் நபருக்கு விளக்க அவர் ஒரு சில நிமிடங்கள் கண்ணை மூடி அதை விஷூவல் செய்வார். அதில் ஆனந்தப்படுவார்.
நாட்கள் ஓடின. வாரங்கள் கழிந்தன. மாதங்கள் உருண்டன.
ஒரு நாள் நர்ஸ் வழக்கம்போல ஜன்னல் அருகே படுக்கையில் இருந்தவரை எழும்பி உட்காரவைக்க வந்தபோது தான் கவனித்தார்… ஏற்கனவே அவர் உயிர் பிரிந்திருந்தது.
அருகே இருந்த மற்றவருக்கு அது கடும் சோகத்தை ஏற்படுத்தியது. அவருக்காக சில வினாடிகள் கண்ணீர் சிந்திய அவர், இனி தனக்கு யார் ஜன்னலுக்கு வெளியே நடப்பவற்றை சொல்லப் போகிறார்கள் என்று ஏங்கினார்.
அந்த ஜன்னல் அருகே இருக்கும் பெட்டுக்கு தம்மை மாற்றும்படியும் இனி அந்த இடத்திலேயே தாம் சிகிச்சை பெற விரும்புவதாகவும் மருத்துவமனை ஊழியர்களை அவர் கேட்டுகொண்டார். இதையடுத்து அவர் அந்த இடத்திற்கு மாற்றப்பட்டார்.
தாம் இது வரை கேட்டு மகிழ்ந்த காட்சிகளை ஒரு நாளாவது நேரில் பார்த்துவிடலாம் என்று எண்ணிய அவர் ஒரு நாள் கஷ்டப்பட்டு நிமிர்ந்து ஜன்னலுக்கு வெளியே எட்டி பார்க்கிறார். பார்ப்பவர் திடுக்கிடுகிறார். ஏனெனில் அங்கு ஏரியும் இல்லை. சாலையுமில்லை. இருந்ததெல்லாம் ஒரு பெரிய காம்பவுண்டு சுவர் தான்.
அதிர்ச்சியடையும் இவர் நர்சை கூப்பிட்டு தன்னிடம் ஏன் இதற்கு முன் இந்த பெட்டில் இருப்பவர் அவ்வாறு இல்லாத ஒன்றை பற்றி கூறவேண்டும் என்று கேட்டார்.
அதற்கு நர்ஸ், “அவருக்கு இரண்டு கண்ணிலும் பார்வையே கிடையாது…..”
“அப்படியிருக்க ஏன் அவர் இப்படி காணாத காட்சிகளை பற்றி எனக்கு விவரிக்கவேண்டும்?”
“காரணம் அவர் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினார். நீங்கள் இருந்த நிலையில் அவர் கூறுவது உங்களை சந்தோஷப்படுத்தும் என்பது அவருக்கு தெரியும்!”
இவர் ஒரு கணம் கண் கலங்கிவிட்டார்.
* நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் பிறரின் மகிழ்ச்சியை நினைப்போம். அதற்காக உழைப்போம்.
பணம் சம்பாதிப்பதோ சொத்துக்களை குவிப்பதோ வீடு கட்டுவதோ வாழ்க்கை அல்ல. தனது துன்பத்தை மறந்து பிறரின் துன்பத்தை போக்க முற்படுவதே வாழ்க்கை. இத்தகைய வாழ்க்கை வாழ்பவரே இறைவனின் அன்புக்கு பாத்திரமானவர் ஆவர். மற்றவர்கள் வாழ்வது வாழ்க்கை அல்ல. அது நாள் கடத்துவது.
* பகிர்ந்துகொள்ளப்படும் துன்பம் பாதியாகிறது. இன்பம் இரட்டிப்பாகிறது.
* நீங்கள் மிகப் பெரிய செல்வந்தரை போல உணரவேண்டுமா? சிம்பிள்…. இந்த உலகில் பணத்தை கொண்டு வாங்க முடியாத உன்னத விஷயங்களை எண்ணிப்பாருங்கள்.
———————————————————————————————-
இந்த வாரம் பிரார்த்தனைக்கான கோரிக்கையை பார்ப்போமா?
கழுத்தின் நெரிக்கும் கடன் பிரச்னை பிள்ளைகளின் கல்வியையும் பாதித்துவிட்டது
சுந்தர் சார் அவர்களுக்கும், நம் வாசகர்களுக்கும் வணக்கம்.
நல்ல எண்ணத்தில் மற்றவர்களுக்கு கடன் வாங்கி கொடுத்து நான் தற்போது தீரா நெருக்கடியில் உள்ளேன். கடனால் எங்கள் குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட அனைத்தையும் இழந்துவிட்டோம். வெளியே தலைக்காட்ட முடியவில்லை. நிம்மதியாக எதையும் செய்ய முடியவில்லை.
எங்கள் கடன் பிரச்னை தீரவும், மழை பொழிந்து பசுமை செழிக்கவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
அப்புறம் எனது தோழி விஜயலட்சுமி என்பவர் திருமணமாகி கடந்த 16 வருடங்களாக பிள்ளைப் பேறு இல்லாமல் கஷ்டப்படுகிறார். அவளுக்கு புத்திரப் பேறு கிட்ட உங்களை நம் வாசகர்களை பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
– மகேஸ்வரி, ஜெயப்ரகாஷ், திருச்சி
———————————————————————————————-
திருமதி. மகேஸ்வரி அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கடன் பிரச்னை தீர்ந்து அவருக்கு சௌக்கியமான சந்தோஷமான ஒரு எதிர்காலம் அமையவும், அவரது தோழி திருமதி.விஜயலட்சுமி என்பவருக்கு சந்தான பாக்கியம் கிட்டவும். பிரார்த்திப்போம்.
எல்லாரும் தங்கள் பிரச்னைகளை சொல்ல, சில வாரங்களுக்கு முன்பே மழை வேண்டி இந்த பகுதிக்கு விண்ணப்பித்தார் மகேஸ்வரி. அவருக்கு இருக்கும் பிரச்னையை நானறிவேன். தான் துன்பத்தில் சிக்கி தவிக்கும் சூழலிலும் லோகத்தின் நன்மைக்காக உருகும் அவருக்கு இறைவன் எல்லா வளங்களையும் தரவேண்டுகிறேன்.
தன்னைப் போல பிறரை எண்ணும்
தன்மை வேண்டுமே
அந்த தன்மை வர உள்ளத்திலே
கருணை வேண்டுமே
பொன்னைப் போல மனம் படைத்தால்
செல்வம் வேறில்லை
இதை புரிந்து கொண்ட ஒருவனை போல்
மனிதன் வேறில்லை
================================================================
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
================================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
பிரார்த்தனை நாள் : மே 12, 2013 ஞாயிறு
நேரம் : மாலை 5.30 – 5.45
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E-mail : simplesundar@gmail.com Mobile : 9840169215
=============================================================
* நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் பிறரின் மகிழ்ச்சியை நினைப்போம். அதற்காக உழைப்போம்.
* பகிர்ந்துகொள்ளப்படும் துன்பம் பாதியாகிறது. இன்பம் இரட்டிப்பாகிறது. —- உண்மை தான்.
திருமதி. மகேஸ்வரி அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கடன் பிரச்னை தீர்ந்து அவருக்கு சௌக்கியமான சந்தோஷமான ஒரு எதிர்காலம் அமையவும், அவரது தோழி திருமதி.விஜயலட்சுமி என்பவருக்கு குழந்தை பாக்கியம் கிட்டவும் நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.
வணக்கம் சார்,
உங்களின் இந்த பதிவை பார்த்த உடனே எனது பிரச்னை தீர்ந்துத் விட்டதை போல் உணர்தேன் . மிகவும் நன்றி சார் . மேலும் இந்த கதை மிகவும் அருமை சார்.
எனக்காக பிரார்த்தனை செய்வதற்கு மிகவும் உங்கள் அனைவர்க்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பில் நன்றி .
சகோதரி மகேஸ்வரி, ஜெயப்ரகாஷ்,உங்களின் கடன் பிரச்சினை தீர
பிரார்த்திக்கின்றேன், உங்களுக்கு என் தனிப்பட்ட கருத்து ஒன்று ,கடன் வாங்கும் அந்த நபர்களுக்கு தக்க நேறத்தில் அதை திருப்பி தர வேண்டும் என்று அவர்கள் கவலைப்படுவதில்லை,கொடுக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தால் கண்டிப்பாக திருப்பித்தரமுடியும் ஆனால் அவர்கள் அப்படி நினைப்பதில்லை “கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கின என் நெஞ்சம் “என்ற வாசகத்தை கேல்விபட்டிருப்பீர்கள் ஆனால் இந்தகாலத்தில் அது நேர்மாராக “கடன் கொடுத்தார் நெஞ்சம்போல “என மாறிவிட்டது ,பணம் வருமா வராத வராமலே போய்விடுமா ?என்ற கவலை.இந்த சோதனைக்குபிறகு கண்டிப்பாக எவருக்கும் கடன் என்ற பேச்சிக்கே இடமில்லை என்று சொல்வீர்கள் எனக்கு புரிகிறது,ஆனால் ஒரு வேண்டுகோள்,உங்களால் முடிஞ்சதை உதவியாக கொடுங்கள் கடனாக அல்ல.
இந்த கருத்தை சொல்ல எனக்கு தகுதி இருக்கிறது என்று நான் நினைக்கின்றேன் ஏன் என்றால் நாநும் உங்களைப்போல பதிக்கப்பட்டவந்தான் ..
இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளவேண்டியது :
நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை; மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன் …. குறள்
நட்பிற்கு அங்கமாவன நண்பர்கள் உரிமையோடு செய்வனவாகும். அதனால் அவ்வுரிமையோடு செய்வனவற்றிற்கு இனியராய் உடன்படுதல் அறிவுடையோருக்கு நீதியாகும்.
நாம் எல்லோரும் இன்றைய பிரார்த்தனையில் கலந்து கொள்வோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
நெகிழ்ச்சியான சம்பவம் !!!
வாழ்க்கையில் அதிக சந்தோஷம் ஒருவருக்கு எப்போது கிடைக்கும் என்றால் அது மற்றவரை சந்தோசப்படுத்தி பார்க்கும் போது தான் என்ற அறிய தத்துவத்தை மிக எளிமையாகவும் சிந்திக்க தூண்டும் வகையிலும் எடுத்துரைத்த சுந்தர் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி !!!
இவ்வார பிரார்த்தனைகள் செய்வனே நிறைவேறவும்
பிரார்த்தனை கோரியவர்கள் அவர் தம் பிரார்த்தனைகள் நிறைவேறி எல்லா வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்திடவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் !!!