மயிலை கற்பகாம்பாள் உடனுறை அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவிலின் பங்குனிப் பெருவிழாவின் உச்சகட்டமாக, 8-வது நாளான கடந்த (21/03/2016) திங்களன்று அறுபத்து மூவர் விழா நடைபெற்றது. இதில், அறுபத்துமூன்று நாயன்மார்களும் சப்பரங்களில் மைலாப்பூர் மாடவீதிகளில் உலா வந்தனர். முன்னதாக காலை பூம்பாவையை எலும்பிலிருந்து சம்பந்தர் உயிர்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன் நேரடி அனுபவத்தை இந்த பதிவில் பார்ப்போம்…!
அதற்கு முன்னர், பூம்பாவையை சம்பந்தர் உயிர்பித்த அந்த அற்புத நிகழ்வின் சரித்திர சுருக்கத்தை பார்ப்போம்.
* இது போன்ற பதிவுகள் அளிக்க அதீத சிரத்தை எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஒரு ஆலயத்தை ஒற்றை ஆளாய் கட்டிமுடிப்பது போன்றதொரு அனுபவம். இது போன்ற ஈசனின் பெருமையை பறைசாற்றும் நல்ல பதிவை தயாரிப்பதில் நேரம் செலவாவது மகிழ்ச்சி தான். ஆனால், நமக்கு கிடைத்த மகிழ்ச்சி அனைவருக்கும் கிடைக்கிறதா என்கிற ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. காரணம் பிரசாதத்தை தொன்னையில் தந்தால் பரவாயில்லை. அண்டாவில் அல்லவா உங்களுக்கு தர நேரிடுகிறது. எடுக்கும் நூற்றுக்கணக்கான புகைப்படங்களில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து அளிப்பது சாதாரண விஷயம் அல்ல. எதை எடுப்பது எதை விடுப்பது என்று நமக்கு திண்டாட்டமாக இருக்கும். இது போன்ற பதிவுகளை பொருத்தவரை ஒவ்வொரு புகைப்படமும் ஒரு கல்வெட்டு போல. புகைப்படங்கள் அதிகமாக இடம்பெறும் காரணத்தால் யாரும் இவற்றின் அருமை உணராமல் அலட்சியப்படுத்திவிடக்கூடாதே என்கிற கவலை இருந்துகொண்டே இருக்கும். எனவே இது போன்ற பதிவுகளை யாரும் தப்பித் தவறி கூட தவறவிட்டுவிடக்கூடாது என்பதே இறைவனிடம் நாம் வைக்கும் பிரார்த்தனை.
சம்பந்தர் வரலாற்றுக்கு வருவோம்…
பெரிய புராணத்தில் சம்பந்தரின் வரலாறு தொடங்கும் இடத்தில் தெய்வத்திரு சேக்கிழார் அவரை எப்படி அறிமுகப்படுத்துகிறார் தெரியுமா?
வேதநெறி தழைத் தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம்ப ரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்
எத்தனை பாசிடிவிட்டி இந்த பாடலை படிக்கும்போது தோன்றுகிறது பார்த்தீர்களா?
சம்பந்தப் பெருமானைப் பற்றிய ஒரு அறிமுகப் பாடலிலேயே நமக்கு வாழ்க்கையின் மேல் நம்பிக்கை அளித்து சைவத்தின்மீதும் பற்று ஏற்படுத்த முடியும் என்றால் அவர் வரலற்றையும் அவர் செய்த அற்புதங்களையும் படித்தால் எப்படி இருக்கும்?
படிப்போம் வாருங்கள்…!
என்ன சொல்லி சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்தார்?
மயிலாப்பூரில் சிவநேசர் என்பவர் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தார். இவர் சிவபக்கதாரக இருந்தார். இவருக்கு பூம்பாவை என்ற மகளொருத்தி இருந்தாள். சைவ சமயத் தொண்டினைச் செய்யும் திருஞானசம்பந்தருக்கு தன்னுடைய மகளான பூம்பாவையை திருமணம் செய்து வைக்க சிவநேசர் எண்ணியிருந்தார்.
தன்னுடைய ஏழாம் வயதில் ஒரு நாள் பூம்பாவை தன்னுடைய தோழிகளுடன் மலர் பறித்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது, பாம்பொன்று தீண்டி இறந்து விட்டாள். திருஞான சம்பந்தருக்கு திருமணம் செய்து வைக்க எண்ணியிருந்தமையால், தன்னுடைய மகளை எரித்த பின்னும் அவளுடைய எலும்பு மற்றும் சாம்பலினை நீர் நிலைகளில் கரைக்காது பாதுகாத்து வந்தார் சிவநேசர்.
திருவொற்றியூருக்கு திருஞான சம்பந்தர் வருவதை அறிந்த சிவநேசர், திருஞான சம்பந்தரை சந்தித்தார். சிவநேசர் தன்னுடைய மகள் பூம்பாவையை திருஞான சம்பந்தருக்கு திருமணம் செய்து வைக்க எண்ணியதையும், ஆனால் அவள் சிறுவயதில் பாம்பு தீண்டி இறந்து விட்டதையும், தற்போது அவளுடைய சாம்பல் மற்றும் எலும்பினை பாதுகாத்து வைத்திருப்பதைப் பற்றிக் கூறினார்.
திருஞான சம்பந்தர் மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை எனும் பதிகத்தை பாடினார். இந்த பதிகத்தின் உட்பொருளை மிக அழகாக சேக்கிழார் பெரியபுராணத்தில் இடம்பெற்றுள்ள சம்பந்தர் வரலாற்றில் சொல்கிறார்.
மண்ணி னில்பிறந் தார்பெறும் பயன்மதி சூடும்
அண்ண லார்அடி யார்தமை அமுதுசெய் வித்தல்
கண்ணி னால்அவர் நல்விழாப் பொலிவுகண்டு ஆர்தல்
உண்மை யாம்எனில் உலகர்முன் வருகஎன வுரைப்பார்
அதாவது… சம்பந்தர் கூற்றின்படி இந்த புவியில் பிறந்தவர்கள் பெறும் பயன் ஈசனின் அடியார்களுக்கு அமுது செய்வித்தலும் அவனுக்குரிய விழாக்களை கண்டு களித்தலுமே ஆகும் என்பது உண்மையானால் பூம்பாவையே நீ உயிர்பெற்று எழுந்து வருவாயாக என்பது தான்.
சம்பந்தர் இதைக் கூறியது தான் தாமதம், வானோர் பூமாரி பொழிய பூம்பாவை அந்த குடத்திலிருந்து உயிர் பெற்று எழுந்து வந்தாள்.
ஏழு வயதில் இறந்த பூம்பாவை, பன்னிரெண்டு வயதான பெண்ணாக உயிர் பெற்றார். இருப்பினும் தானே உயிர் கொடுத்தமையால் தனக்கு அவர் மகள் போல என்பதால் பூம்பாவையை திருமணம் செய்து கொள்ள இயலாது என திருஞான சம்பந்தர் மறுத்துவிட்டார்.
அதன் பின் பூம்பாவை இறைத் தொண்டை செய்து வாழ்ந்து வந்தார்.
பூம்பாவைக்கு மயிலாப்பூர் கபாலிசுவரர் கோயிலில் சந்நிதி அமைந்துள்ளது. மயிலாப்பூர் கபாலிசுவரர் கோயிலின் வெளிப்புற பிரகாரத்தில் பூம்பாவைக்கு சந்நிதி அமைந்துள்ளது. இந்த சன்னிதியின் கோபுரத்தில் பூம்பாவை உயிர்ப்பெற்று எழும் நிகழ்வு சுதை சிற்பமாக உள்ளது. இதில் திருஞான சம்பந்தர், உயிர்ப்பெற்று எழும் பூம்பாவை, பூம்பாவையின் பெற்றோர்கள் உள்ளார்கள்.
(மயிலாப்பூர் ராமகிருஷ்ண மட சாலையில் ராமகிருஷ்ண மடம் சார்பாக இலவசமருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையை ‘அத்திக்குட்டை ஆஸ்பத்திரி’ என்று தான் முதலில் மயிலைவாசிகள் அழைத்து வந்தனர். காரணம் தெரியுமா ? அங்கு தான் பூம்பாவையின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த கன்னிமாடம் இருந்தது. அஸ்திக்குட்டை என்பதே அத்திக்குட்டை என்று மருவியது.)
திருஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சியை மயிலாப்பூர் தலத்தில் விழாவாக கொண்டாடுகிறார்கள். மயிலாப்பூர் கபாலிசுவரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தின் 8ம் நாளின் காலையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக சம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் உற்வச சிலைகளை தீர்த்தத்தில் நீராட்டிய பிறகு, குடத்தில் நாட்டுச்சர்க்கையை இட்டு பூம்பாவையின் சாம்பலாக கொண்டுவருகிறார்கள்.
அதன்பிறகு திருஞானசம்பந்தரின் பதிகம் ஓதப்படுகிறது. இதன் பிறகு பூம்பாவை உயிருடன் எழுந்ததாக பாவனை செய்து நிகழ்வினை முடிக்கின்றார்கள். இந்நிகழ்வினை பார்த்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
இவ்வாறு பூம்பாவையை தைப்பூசநாளில் திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்தாக கூறப்படுகிறது.
========================================================
Also check :
லட்சக்கணக்கானோர் திரண்ட மயிலை அறுபத்து மூவர் திருவிழா 2015 – ஒரு புகைப்பட தொகுப்பு!
மயிலையை அதிரவைத்த அறுபத்து மூவர் திருவிழா 2014 – ஒரு புகைப்பட தொகுப்பு!
========================================================
பூக்கள் தூவிய பவானி !
படத்தில் ட்ரை சைக்கிள் அருகே காணப்படுபவர் பெயர் திருமதி.பவானி. மயிலையில் பிள்ளையார் தோட்டம் என்கிற குடிசைப் பகுதியில் வசிக்கிறார்.
ஆறாம் நூற்றாண்டில் பூம்பாவையை உயிர்பித்த சம்பவம் நடைபெற்ற காலத்தில் திருவொற்றியூரிலிருந்து மயிலை வந்த திருஞானசம்பந்தரை சிவநேசச் செட்டியார் வரவேற்று அழைத்து வந்தபோது, வழி நெடுகிலும் மலர்த் தூவி மேள தாளம் முழங்க தான் அழைத்து வந்தார். அதை நினைவுகூறும் வகையில், இன்றும் சம்பந்தப் பெருமான் பல்லக்கில் எழுந்தருளி வரும்போது, சிவநேசச் செட்டியார் எதிர்கொண்டு மலர் தூவி வரவேற்பது போன்று ஏற்பாடு செய்வார்கள்.
இந்த ஆண்டு உற்சவத்தின் போது அப்படி மலர் தூவும் பொன்னான வாய்ப்பை தனது கணவருடன் சேர்ந்து செய்தவர் தான் இந்த பவானி. நமக்கும் கொஞ்சம் பூக்கள் அள்ளி, சம்பந்தர் வரும் பாதையில் போடும் பாக்கியம் கிடைத்தது.
(பொதுவாக பூமியில் வெறுந்தரையில் பூக்கள் போடக்கூடாது என்பார்கள். பூமாதேவி பூ பாரம் தாங்கமாட்டாள். ஆனால், இங்கே பூக்கள் போடப்படுவது யாருக்காக? வேத நெறி தழைக்கத் தோன்றிய சம்பந்த பெருமானுக்காயிற்றே. தவம் செய்தல்லவா பூக்கள் இங்கே வந்து விழுந்துகிடக்கின்றன…!)
பவானியும் அவர் கணவரும் ட்ரை சைக்கிளில் மலர்க் கூடையோடு முன்னே மலர் தூவிக்கொண்டே வர, பின்னால் ஆளுடையப் பிள்ளை வந்துகொண்டிருந்தார். நாம் புகைப்படமெடுத்துகொண்டிருந்ததைப் பார்த்து, தம்மை கணவருடன் ஒரு புகைப்படமெடுக்கச் சொன்னவர், “அண்ணா… எனக்கு இந்த ஃபோட்டோவை அனுப்புறீங்களாண்ணா…” என்று கேட்டார்.
நமது விசிட்டிங் கார்டை கொடுத்து மறுநாள் தொடர்புகொள்ளுமாறு கூறி, “நிச்சயம் அனுப்புறேன்மா… ஆனா எனக்கு ஃபோட்டோ பிரிண்டெல்லாம் போட்டு அனுப்ப நேரமில்லை. அதுக்கு பதிலா ஃபோட்டோஸை சி.டி.ல காப்பி பண்ணி கூரியர் அனுப்புறேன். நீ வேணுங்கிற ஃபோட்டோவை லேப்ல கொடுத்து பிரிண்ட் போட்டுக்கலாம்” என்றோம்.
சொன்னது போலவே மறுநாள் தொடர்புகொண்டவரிடம், விலாசம் பெற்று அவர் இடம் பெற்றிருந்த புகைப்படங்கள் + சம்பந்தப் பெருமானின் புகைப்படங்கள் என சுமார் 15 க்கும் மேற்பட்ட படங்களை சி.டி.யில் காப்பி செய்து அனுப்பிவிட்டோம். இதுவும் சிவத்தொண்டு தான் என்பதால் தவறாமல் செய்தோம். பொதுவாக இது போன்ற விழாக்களில் இப்படி யாரையேனும் புகைப்படம் எடுத்தால் அவர்கள் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் இருந்தால் அவர்களுக்கு மின்னஞ்சலிலேயே அனுப்பிவிடுவோம். இல்லையெனில் சி.டி. அனுப்பிவிடுவோம். இந்த தொண்டுக்கு பணம் பெற்றுக்கொள்ளும் வழக்கம் நம்மிடம் இல்லை.
இதை ஏன் சொல்கிறோம் என்றால், சிவதொண்டு செய்ய கிடைக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நழுவ விடக்கூடாது என்பதற்காகவே. உங்களுக்கும் நாளை இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் தயங்காது செய்யவும்.
- சம்பந்தப் பெருமான் பூம்பாவையை உயிர்பித்த சம்பவம் + சம்பந்தப் பெருமானுக்கு மயிலை குளக்கரையில் நடைபெற்ற திருமஞ்சனம் + இதர புகைப்படங்கள் தகவல்கள் அடுத்த பதிவில்.
==========================================================
Help us to run this website…
We need your SUPPORT. Help Rightmantra in its functioning.
==========================================================
Also check :
‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!
பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?
சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5
சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!
சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!
ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!
தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!
மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!
கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!
மனதில் ஏற்பட்ட திடீர் குழப்பம் – கற்பகாம்பாளுடன் தோன்றி விடை சொன்ன கபாலீஸ்வரர்!
தண்டியடிகளுக்கு தியாகராஜர் காட்சி கொடுத்த இடம் – ஒரு நேரடி ரிப்போர்ட்!
பதிகங்கள் புரியாத அதிசயம் உண்டா?
நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம் ஆலயத்திற்கு செல்லவேண்டும்?
கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது?
==========================================================
[END]
Dear SundarJi,
Excellent photo coverage and new interesting facts learned about the festival.,
Thanks,
Rgds,
Ramesh
அருமையான பதிவு!! விழாவை நேரில் கண்டது போல் இருக்கிறது!! நன்றி.
அருமையான பதிவு. படங்கள் அனைத்தும் அருமை.சமயம் வாய்க்கும் போதல்லாம் சிவா கைங்கர்யம் செய்ய அருள் புரிய வேண்டும்.
வணக்கம் இது போன்ற விழாக்களை நேரில் தரிசிக்க முடியவில்லையே என்ற வருத்தம் தீர்ந்தது
பூம்பாவை உயிர்பெற்ற நிகழ்ச்சியை மானசீக தரிசனம் செய்து கொண்டோம்
பூம்பாவையின் அஸ்தி இருந்த இடமெல்லாம இன்று எத்தனை பேருக்குத் தெரியும்
எங்களுக்கு அதைக் கண்ணுறும் பேறு கிடைத்திருக்கிறது
நன்றி என்ற வாா்த்தை போதுமா தெரியவில்லை
நன்றி
சென்னையில் வசிப்பதற்காக குறைப்பட்டுக்கொல்பவர்கள் நிச்சயம் இப்பதிவை படித்தால் பெருமகிழ்ச்சி அடைவார்கள் என்பது உறுதி. சென்னையில் இத்தனை தலங்கள் இருக்கின்றனவா என்று ஆச்சரியம் ஏற்படுகிறது.
இது போன்ற பதிவுகளையும் புகைப்படங்களையும் நம் தளத்தை தவிர வேறு எங்கே பார்க்க முடியும்?
சம்பந்தப் பெருமானின் அறிமுகம் மிக மிக அருமை. மண்ணினில் பிறந்தார் பயன் பற்றி சேக்கிழார் பெருமான் கூறியிருப்பது மிகப் பெரிய உண்மை.
நீங்கள் கூறுவது போல ஒவ்வொரு புகைப்படமும் ஒரு கல்வெட்டு. அத்தனை அழகு.
பூக்களை தூவிய பவானி தனது கணவருடன் இருக்கும் அந்த புகைப்படம் அருமை.
பூம்பாவை அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடத்தை காட்டியமைக்கும் புகைப்படம் வெளியிட்டமைக்கும் மிக்க நன்றி.
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்