Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, April 16, 2024
Please specify the group
Home > Featured > ‘வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை!’ – Rightmantra Prayer Club

‘வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை!’ – Rightmantra Prayer Club

print
‘திக்கற்றோருக்கு தெய்வமே துணை!’ என்பதை மெய்ப்பிக்கும் வரலாற்று நிகழ்வு இது. குன்றத்தூரை சேர்ந்த தலைசிறந்த தொண்டர் ஒருவர் இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குவதால், முருகப்பெருமான் தொடர்புடைய கதை ஒன்றை பிரார்த்தனை பதிவில் அளிக்க விரும்பினோம். (குன்றத்தூர் முருகப்பெருமானின் ஊராயிற்றே!) அதற்கு  ஏற்றார்போல, பதிவுக்கு நெஞ்சை நெகிழ வைக்கும் முருக பக்தர் ஒருவரின் கதை அமைந்தது அந்த கந்தசாமியின் கருணையே அன்றி வேறில்லை. (வியாழன் மாலை பாரிமுனையில் உள்ள கந்தகோட்டம் கந்தசாமியை நாம் தரிசித்தது தனிக்கதை!)

முருகன் தமிழ்க் கடவுள். தமிழர் வாழும் இடமெல்லாம் முருக வழிபாடு உண்டு. தமிழகத்தின் வடபகுதி தொண்டை நாடு எனப் பட்டது. அந்த பகுதியை கடைச்சங்க காலத்தில் ஒரு குறுநில மன்னன் ஆண்டு வந்தான். அவன் பெயர் நல்லியக் கோடன்.

தொண்டை நாட்டிலுள்ள எயிற்பட்டினம், ஆமூர், வேலூர், மூதூர் ஆகிய நகரங்களை நல்லியக்கோடன் கைப்பற்றினான். அங்கு கோட்டைகள் அமைத்து அரசு புரிந்தான். இவனது குலதெய்வம் குமரக் கடவுள்.

murugan thiruthani

தமிழகத்தில் இவன் ஆண்ட பகுதி ஓய்மா நாடு என வழங்கியது. இவனும் ஓய்மா நாட்டு நல்லியக்கோடன் எனப்பட்டான். இன்றைய திண்டிவனம் (திண்டிருணிவனம்- புளியங்காடு) கூட ஓய்மாநாட்டின் ஒரு பகுதிதான்! திண்டிவனத்தில் இப்பொழுது கிடங்கில் எனப்படும் பகுதியில் நல்லியக்கோடனின் கோட்டை இருந்துள்ளது. கிடங்கில் என்பது கோட்டையைக் குறிக்கும்.

திண்டிவனத்திற்கு அருகேயுள்ள மரக்காணம் பகுதியைச் சேர்ந்தது இடைக்கழிநாட்டு நல்லூர். இடைக்கழிநாடு என்பது மரக்காணம் அருகே இன்றும் உள்ளது. இந்த நல்லூரைச் சேர்ந்த புலவர் நந்தத்தனார். இவர் நல்லியக்கோடன்மீது பாடியது தான் சிறுபாணாற்றுப்படை என்னும் நூல்.     இது சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டில் ஒன்றாகும். நல்லியக்கோடன் புலவர்க்குப் பரிசிலாக யானைக் குட்டியும் வளநாடும் பொற்குவியலும் வழங்கிப் போற்றியுள்ளான்.

நல்லியக்கோடன் புகழ் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றதை அறிந்தனர் மூவேந்தர். அவர்கள் உள்ளத்தில் பொறாமைத் தீ மூண்டது. மூவேந்தரும் நல்லியக்கோடன்மீது திடீர் படையெடுப்பு நடத்தினர்.

“முருகனை நம்பினோர் முழு வெற்றி பெறுவர்’ எனும் கொள்கையுடையவன்  நல்லியக்கோடன். அந்த நம்பிக்கையோடு  தன் படைகளுடன் மூவேந்தரை எதிர் கொண்டான்.

நல்லியக்கோடனின் அமைச்சன் ஒருவன் கெடுமதியாளன். அவன் பகைவருக்கு உளவு சொல்லித் தந்தான். அதனால் நல்லியக் கோடனின் படைகள் மூவேந்தர் படைகளின் தாக்குதலை சமாளிக்க  முடியாமல் சிதறின. தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்தான் நல்லியக்கோடன். இரவோடு இரவாக மனைவியுடன் வேலூர் சென்றுவிட்டான்.

இந்த வேலூர் இன்று மாவட்டத் தலைநகராயுள்ள வேலூர் அல்ல. இது மரக்காணத்திற்கு அருகேயுள்ளது. இப்பொழுது “உப்பு வேலூர்’ என வழங்கி வருகிறது.

நல்லியக்கோடன் வேலூரிலுள்ள முருகப் பெருமானின் திருவடிகளைச் சரணடைந்தான். “”ஐயனே, தோல்வியால் மானமழிந்தபின் இனி உயிர் வாழேன்” என்று கூறிவிட்டு அயர்ந்து உறங்கி விட்டான். கனவில் கந்தவேள் கைவேலுடனும் மயிலுடனும் காட்சி தந்தான். “நல்லியக்கோடனே, யாமிருக்க பயமேன்? வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை. நீ நீராடும் கேணி (கிணறு) நீரில் பூக்கும் ஒற்றைத் தாமரை மலரைப் பறித்து எமது ஆறெழுத்து மந்திரத்தை (ஓம் சரவணபவ) சொல்லி பகைவர்மீது வீசி எறிவாயாக” என்று திருவருளாணையிட்டு  மறைந்தார்.

விழித்தெழுந்த நல்லியக்கோடன் புத்துணர்ச்சி பெற்றான். போர்க்களம் சென்றான்.

வள்ளிமணாளன் முருகன் சொன்னபடி கேணியில் பறித்த தாமரை மலரை பகைவர்மீது வீசினான். மலரின் இதழ்கள் ஒவ்வொன்றும் ஒரு வேலாக மாறியது. பகைவர் தலைகளைச் சாய்த்தது. அவனது போர்ப்படைகள் செய்ய முடியாததை முருகனின் வேற்படை செய்து முடித்தது.

“அம்மலர் அயிலென அணுகி ஆங்குள
வெம்மைசேர் படைகளை வீட்டி தெவ்வர்கள்
தம்முழி அமைச்சன் தன் தலையைக் கொய்து உயர்
செம்மனக் கோடன்தன் திருக்கை சேர்ந்ததே’

என்கிறது பாடல்.

(அயில்- வேல்; வீட்டி- அழித்து; தெவ்வர்கள்- பகைவர்கள்; கொய்து- பறித்து.)

A pink lotus flower and lily pads with saturated colorவேலாக மாறிய தாமரை மலர் பகைவர்களை அழித்து, கொடிய அமைச்சன் தலையை வெட்டி நல்லியக்கோடன் கையில் சேர்த்தது! நல்லியக்கோடனைக் காக்கும் வேல் கொடிய    அமைச்சனைத் தாக்கும் வேலாகியது. கடவுள் கை ஆயுதங்கள் என்றுமே நல்லோருக்குத் தீங்கு செய்யாது. எனவே அவற்றிற்கு கொடியோர்தான் அஞ்ச வேண்டும். அதிலும் மனந்திருந்திவிட்டால் அவர்களையும் வாழ வைக்கும் வேலாயுதம் என்பதற்கு மயிலாக வாழ்ந்து கொண்டிருக்கும் சூரபத்மனே சான்று!

பொறாமைத் தீ மூவேந்தர்க்கு தோல்வியைத் தந்தது. குறுநில மன்னன் நல்லியக்கோடனிடம் பணிந்தனர் மூவேந்தர்.

தனக்கு வெற்றி தந்த வேலவனுக்கு நல்லியக்கோடன் ஓர் ஆலயம் எடுத்தான். அந்த ஊர் பெயரும் அன்று முதல் வேலூரானது.

ஓம் சரவண பவ!

(நன்றி : திரு.எம்.எஸ். சுப்பிரமணியம் | வாரியார் சுவாமிகள் கூறியதை ஆதாரமாய்க் கொண்டு எழுதப்பட்டது).

================================================================

முருகப் பெருமானின் சடாக்ஷர மந்திரத்துடன் நல்லியக்கோடன், கந்தன் காலடியை பணிந்து பகைவரை வெற்றி கொண்ட இந்த சரிதத்தை படித்தீர்கள் அல்லவா? இதுவே ஆயிரம் பொன்னுக்கு சமம். பகைவர்களால் இதுவரை உங்களுக்கு ஏற்பட்டு வந்த தொல்லை நீங்குவது உறுதி. அப்படி நீங்கியதை நீங்கள் உணர்ந்துகொண்டால், உங்கள் பகுதிக்கு அருகேயுள்ள தொன்மை வாய்ந்த முருகப் பெருமானின் தலத்திற்கு சென்று அவனுக்கு அர்ச்சனை செய்து, அன்னதானமும் செய்யுங்கள். முருகன் அருள் என்றும் நிலைத்திருக்கும்.

‘வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை!’

================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர்: குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபத்தின் பொறுப்பாளர் திரு.பாலு அவர்கள்

பாலு அவர்களை பற்றி சொல்வதானால், மிக பெரிய கொடைவள்ளல். தனக்கு சொந்தமாக INDUSTRIAL WORKSHOP வைத்திருக்கும் பாலு அவர்கள், நல்ல விஷயங்களிலும் தனது நேரம் செலவாகவேண்டுமே என்று குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபத்தை நிர்வகிக்கும் பெரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

படிக்க வழியில்லாத ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவி வரும் இவர் செய்து வரும் அறச் செயல்கள் பலப்பல. அதில் நமக்கு தெரிந்த சிலவற்றை சொல்கிறோம்.

அண்மையில் சேக்கிழார் மணிமண்டபத்தில் நடைபெற்ற உழவாரப்பணியின்போது திரு.பாலு (இடது) அவர்களுக்கு நம் தளம் சார்பாக நண்பர் ராஜா 'தினசரி பிரார்த்தனை' படத்தை பரிசளித்தபோது....
அண்மையில் சேக்கிழார் மணிமண்டபத்தில் நடைபெற்ற உழவாரப்பணியின்போது திரு.பாலு (இடது) அவர்களுக்கு நம் தளம் சார்பாக நண்பர் ராஜா ‘தினசரி பிரார்த்தனை’ படத்தை பரிசளித்தபோது….

இன்றும் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், குன்றத்தூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள முதியவர்களுக்கும் சாலையில்  மனநோயாளிகளுக்கும் தன் கைப்பட உணவுப்பொட்டலங்களை (சுமார் 40)​ வழங்கி வருகிறார். தவிர, குளிர் காலம் வந்தால், வீடின்றி சாலையில் உறங்கும் மக்களுக்காக போர்வைகளை வழங்குகிறார்.

பணம் பணம் என்று பேயாய் அலையும் மனிதர்களுக்கு நடுவே, தனக்கென்று கவனம் செலுத்த ஒரு மிகப் பெரிய தொழிற்கூடம் இருந்தும், வறியவர்கள் பக்கமும் கொஞ்சம் பார்வையை திருப்பி சேவையை செய்யும் இவர் சேக்கிழார் மணிமண்டபத்தை நிர்வகிப்பது பொருத்தமே.

இந்த வார பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கூறியபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். சேக்கிழார் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முன்பாகவே பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார். அவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.

================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா ?

கடன் பிரச்னை தீரவேண்டும்; வியாபாரம் பெருகவேண்டும்!

சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் வளசரவாக்கம் அர்கே உள்ள லக்ஷ்மி நகரில் அமைந்துள்ளது நாயுடு ஹால். அதன் எதிரே டூ-வீலர் மற்றும் ஃபோர்-வீலர் பஞ்சர் கடை வைத்திருக்கிறார் திரு.முருகன். இவரின் கடை பெயர் கண்பதி டயர்ஸ்.

ஒரு முறை நமது பைக்கை இவரிடம் பஞ்சர் ஒட்டச் சென்றபோது, இவருக்கு அறிமுகமானோம். பொதுவாக பஞ்சர் கடைகளில் நமது அவசரத்தை புரிந்துகொள்ளாத ஒருவித அலட்சியப் போக்கும், விட்டேத்தியான மனோபாவத்தையுமே பார்த்து வந்த நமக்கு இவரின் சிரித்த முகவும் கனிவான உபசரிப்பும் மிகவும் கவர்ந்தன. அது முதல் நமது பைக்கில் பஞ்சர் என்றாலோ காற்று நிரப்பவேண்டும் என்றாலோ இவர் கடைக்கு தான் செல்வது வழக்கம்.

சென்ற வாரம் ஒரு நாள், நீண்ட இடைவெளிக்கு பிறகு இவரது கடைக்கு சென்றபோது, முருகனை பார்த்து அதிர்ச்சியடைந்தோம். காரணம், உடல் மிகவும் இளைத்திருந்தது. எப்போதும் இவர் முகத்தில் தவழும் புன்னகை மிஸ்ஸிங்.

“என்ன சார்… ஆளே இளைச்சுபோயிட்டீங்க… அடையாளமே தெரியலே? உடம்பு எதாச்சும் சரியில்லையா??

“WORK LOAD ரொம்ப ஜாஸ்தி சார். எல்லா வேலையையும் நானே செய்யவேண்டியிருக்கு. வேலைக்கு யாரும் ஆள் கிடைக்கலே. ரெஸ்ட்டே கிடையாது. அதுவும் இந்த வெயில்ல அலைஞ்சி திரிஞ்சி  வேலை பார்த்தது உடம்புக்கு ஒத்துக்கலே சார்!”

“ஏன் சார்…? வாரம் ஒரு நாலாவது ரெஸ்ட் எடுத்துக்க கூடாதா? எதுக்கு இப்படி  கஷ்டப்படனும்?”

“இல்லே… சார்… தலையை சுத்தி இருக்குற கடனை நினைக்கும்போது ரெஸ்ட் எடுக்க மனசு வரமாட்டேங்குது. கடனை அடைக்க இப்படி ஒய்வு ஒழிச்சல் இல்லாம ஓடிக்க்கிட்டுருக்கேன். தவிர ஏகப்பட்ட பிரச்னைகள். பிஸ்னஸ் சரியில்லே…. அது மொத்தமா உடம்புல காட்டிடிச்சு” என்றார்.

அவரின் நிலை கண்டு பரிதாபம் ஏற்பட்டது.

“சார் உங்க பிரச்னைக்கு எனக்கு தெரிஞ்ச தீர்வு ஒன்னை சொல்றேன். செய்வீங்களா?”

“என்ன சொல்லுங்க சார்…!”

“ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விடியற்காலைல காலைல குன்றத்தூர் போய் முருகனை விஸ்வரூப தரிசனம் பண்ணிட்டு, அவனுக்கு அர்ச்சனை பண்ணுங்க. உங்க பேர்ல அர்ச்சனை பண்ணுங்க. ஒரு நாலஞ்சு வாரம் போங்க… மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். உங்களுக்கு திருப்தி ஏற்பட்டவுடனே, கோவில்ல பணத்தை கட்டி ஒரு அன்னதானம் பண்ணுங்க. அடுத்து, நான் ஒரு பிரிண்ட் அவுட் (அகத்தியரின் திருமகள் துதி!) கொண்டு வந்து தர்றேன். அதை எக்ஸ்ட்ரா ஒரு காப்பி ஜெராக்ஸ் எடுத்து லேமினேட் செஞ்சி, மஞ்சள் குங்குமம் வெச்சி வெட்டு பூஜை ரூம்ல ஒன்னும், உங்க கடைல ஒன்னும்  வெச்சிக்கோங்க. தினமும் படிச்சிட்டு வாங்க… உங்க பொருளாதார பிரச்சனைகள் எல்லாம் இருந்த சுவடு தெரியாம போய்டும்!” என்றோம்.

(விஸ்வரூப தரிசனத்தின் முக்கியத்துவத்தையும் விஸ்வரூப தரிசனம் என்றால் என்ன என்பது குறித்தும் அவருக்கு விளக்கினோம்!).

இந்த பரிகாரம் இவருக்கு மட்டுமல்ல. இவரை போன்ற கடன் பிரச்சனை, பொருளாதார பிரச்னை, வியாபாரத்தில் மந்தம் இவைகளை சந்தித்து வரும் அனைவருக்கும் தான்.

================================================================

நமது வாசகர் திரு.ராஜன் கணேஷ் என்பவர் கீழ்கண்ட இந்த பிரார்த்தனையை அனுப்பியிருக்கிறார்.

சமூக விரோதிகள் நசுக்கப்பட்டு நாடு அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும்

திரு.சுந்தர் அவர்களுக்கு,

தமிழகத்தில் இந்து தலைவர்கள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள் என்பது நீங்கள் அறிந்திருப்பீர்கள்.  சமீபத்தில் அப்படி படுகொலை செய்யப்பட்டவர் சுரேஷ் ஜி.

Sureshji copyசுரேஷ் ஜி நமக்காக போராடிய ஒரு மாவீரன். தன் குடும்பத்தைவிட தேசத்தை நேசித்தவர். தனக்கு மனைவி என்று ஒருவர் இருப்பதை பற்றியோ அவருக்கு பெண் குழந்தைகள் இருப்பதை பற்றியோ கவலைப்படாதவர். தனது இயக்க பணிகளால் தனது உயிருக்கு எந்நேரமும் என்று தெரிந்தும் அதை பற்றி கவலைப்படாதவர்.

பாடி சுரேஷ் நல்ல மனிதர், எல்லோருக்கும் உதவும் பண்பாளர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சமுதாயப்பணியில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு பெரும்பங்காற்றியவர். அவரது இழப்பு சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார், உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லோரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சுரேஷ் ஜி அவர்களை படுகொலை செய்தவர்கள் விரைவில் பிடிபடவேண்டும். மேலும் இந்த நாட்டின் அமைதிக்கு ஊரு விளைவிக்கும் சமூக விரோதிகள் நசுக்கப்பட்டு நாடு அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும் என்றும் பிரார்த்திப்போம்.

நன்றியுடன்,
டி.எஸ். ராஜன் கணேஷ்

================================================================

பொது பிரார்த்தனை

தமிழ்நாடு அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும்!

அமைதிப் பூங்கா என்று பெயர் பெற்ற நம் தமிழ்நாட்டில் மதத்தின் பெயரால் காழ்புணர்ச்சி கொண்டு பிற மதத்தினர் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் படுகொலைகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. மாநில அரசு இது குறித்து கவனம் செலுத்துவதாக தெரியவில்லை.

எந்த மதமும் உயிர்க்கொலையை ஆதரிப்பதில்லை என்பதை உணர்ந்து, அமைதி வழிக்கு அனைவரும் திரும்பவேண்டும்.

பிற மதத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அனைவரும் கண்ணியத்தோடு நடந்துகொள்ளவேண்டும்.

பொறைகளில் மிகப் பெரிய பொறை சமயப் பொறையே என்பதை எவரும் மறக்கக் கூடாது.

சமூக விரோதிகள் அவர்கள் யாராக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும்
நசுக்கப்பட்டு, நாடு அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும்.

================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgபோரூர் லக்ஷ்மி நகரை சேர்ந்த கணபதி டயர்ஸ் உரிமையாளர் திரு. முருகன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கடன் பிரச்னை தீர்ந்து, அவரது வியாபாரம் பெருகவும் அவரும் அவர் தம் குடும்பத்தினரும் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும், மறைந்த சுரேஷ் ஜி அவர்களின் ஆன்மா சாந்தியடைந்து, இந்த தேசத்தின் அமைதிக்கு அச்சுறத்தலாக விளங்கிவரும் சமூக விரோதிகள் நசுக்கப்பட்டு நாடு அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும் என்றும் பிரார்த்திப்போம். இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் சேக்கிழார் மணிமண்டபத்தின் பொறுப்பாளர் திரு.பாலு அவர்கள் நோய்நொடியின்றி ஆரோக்கியத்துடனும் சந்தோஷமாக தம் குடும்பத்தினருடன் வாழவும், அவரது தொண்டு மேலும் மேலும் சிறக்கவும் இறைவனை பிரார்த்திப்போம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஜூன் 29,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் :  உழைப்பால் உயர்ந்த உத்தமர் மதுரா ட்ராவல்ஸ் திரு.வி.கே.டி. பாலன் அவர்கள்

7 thoughts on “‘வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை!’ – Rightmantra Prayer Club

 1. உழவார பணியின் போது திரு. பாலு அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பழகுவதற்கு ஒரு நல்ல மனிதர். அவரை பற்றி சுந்தர் சார் அவர்கள் சொல்லிய வார்த்தை எல்லாமே அவருக்கு பொருந்தும்.
  பணம் பணம் என்று பேயாய் அலையும் மனிதர்களுக்கு நடுவே, தனக்கென்று கவனம் செலுத்த ஒரு மிகப் பெரிய தொழிற்கூடம் இருந்தும், வறியவர்கள் பக்கமும் கொஞ்சம் பார்வையை திருப்பி சேவையை செய்யும் இவர் சேக்கிழார் மணிமண்டபத்தை நிர்வகிப்பது பொருத்தமே. ரொம்ப பொருத்தமான வார்த்தைகள்.
  போரூர் லக்ஷ்மி நகரை சேர்ந்த கணபதி டயர்ஸ் உரிமையாளர் திரு. முருகன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கடன் பிரச்னை தீர்ந்து, அவரது வியாபாரம் பெருகவும் அவரும் அவர் தம் குடும்பத்தினரும் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும், மறைந்த சுரேஷ் ஜி அவர்களின் ஆன்மா சாந்தியடைந்து, இந்த தேசத்தின் அமைதிக்கு அச்சுறத்தலாக விளங்கிவரும் சமூக விரோதிகள் நசுக்கப்பட்டு நாடு அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும் என்றும் பிரார்த்திப்போம். இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் சேக்கிழார் மணிமண்டபத்தின் பொறுப்பாளர் திரு.பாலு அவர்கள் நோய்நொடியின்றி ஆரோக்கியத்துடனும் சந்தோஷமாக தம் குடும்பத்தினருடன் வாழவும், அவரது தொண்டு மேலும் மேலும் சிறக்கவும் இறைவனை பிரார்த்திப்போம்.

 2. நல்லியக்கோடனின் கதையை நம் தளம் மூலமாக இபொழுது தான் தெரிந்து கொண்டோம். கந்தனை நம்பினோர் கை விட படார்.

  இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு பாலு அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்

  இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் வாசகர்களுக்ககவும் மற்றும் அனைவருக்காகவும் பிரார்த்திப்போம்

  லோக சமஸ்த சுகினோ பவந்து

  ராம் ராம் ராம்

  நன்றி
  உமா

 3. நல்லியக்கோடன் கதை அருமை. இதுவரை கேள்விப்பட்டதில்லை. படிக்கும்போதே மனம் உருகி கண்ணீர் வருகிறது. எங்கள் மாவட்டத்தில் ஊத்துமலை என்னும் ஊரில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. அகத்தியர் அகத்தியம் என்னும் நூலை எழுதியது இங்கு தான்.

  இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.பாலு அவர்களை வணங்குகிறேன். நிச்சயம் இந்த பிரார்த்தனை பலித்து அனைவரது கோரிக்கைகளும் குன்றத்தூர் முருகன் அருளாலும் சேக்கிழார் அருளாலும் நிறைவேறும் என்பது உறுதி.

  நானும் என் குடும்பத்தாரும் நிச்சயம் வரும் ஞாயிறு வீட்டில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்கிறோம்.

  – பிரேமலதா மணிகண்டன்,
  மேட்டூர், சேலம் மாவட்டம்.

 4. அறியாத தகவல்களை அறியத் தந்தமைக்கு நன்றிகள். இவ்வார பிரார்த்தனை கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற மகாப்பெரியவா அவர்களின் திருவடியைத் தொழுகிறேன்!.

 5. sir
  இவ்வார பிரார்த்தனை கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற மகாப்பெரியவா அவர்களின் திருவடியைத் தொழுகிறேன்!. –
  இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் சேக்கிழார் மணிமண்டபத்தின் பொறுப்பாளர் திரு.பாலு அவர்கள் நோய்நொடியின்றி ஆரோக்கியத்துடனும் சந்தோஷமாக தம் குடும்பத்தினருடன் வாழவும், அவரது தொண்டு மேலும் மேலும் சிறக்கவும் இறைவனை பிரார்த்திப்போம் –

 6. இந்த வார பிரார்த்தனை அனைத்தும் நிறை வேற இறைவனை பிரார்திக்கிறேன்.

 7. திருசேறை ஸ்ரீஞானாம்பிகா சமேத ஸ்ரீசாரபரமேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள ரிணவிமோசன லிங்கேஸ்வரருக்கு [கடன் நிவர்த்தி ஈஸ்வரர்] வழிபாடு செய்யவும் . பதினொரு திங்கட்கிழமைகள் இவருக்கு அர்ச்சனை செய்தால், கடன்கள் எல்லாம் நிவர்த்தியாகும். 11 வாரம் செல்ல முடியாதவர்கள் திருகோயில் அலுவலகத்தில் முதல் திங்கள் அன்று செல்லும் போதே 250 ரூபாய் செலுத்தி விட்டால் 9 வார திங்கள்கிழமைகலில் அர்ச்சனை பிரசாதம் வீடு தேடி வரும். கடைசி 11 வது வார திங்கள் அன்று மீண்டும் திருகோயில் வந்து அபிஷேகம் செய்து பிரார்த்தனையை நிறைவு செய்ய வேண்டும் .தேவார பாடல் பெற்ற காலபைரவரும் இக்கோயிலில் எழுந்தருளியுள்ளார்.

  “விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
  தரித்ததோர் கோல கால வைரவனாகி வேழம்
  உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச்
  சிரித்து அருள் செய்தார் சேறை செந்நெறிச் செல்வனாரே!”…
  – திருநாவுக்கரசர்.
  வீட்டில் தினமும் பின்வரும் பாடலை எப்போதும் படித்து வரவும் .

  விச்வேச்வராய நரகார்ணவ தாரணாய
  கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
  கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
  தாரித்ரிய துக்க தஹணாய நமசிவாய

  கௌரீ ப்ரியாய ரஜனீச கலாதராய
  காலாந்தகாய புஜகாதிப கங்கணாய
  கங்காதராய கஜராஜ விமர்தனாய
  தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

  பக்தி ப்ரியாய பவரோக பயாபஹாய
  உக்ரராய துர்க பவஸாகர தாரணாய
  ஜ்யோதிர்மயாய குணநாம ஸீந்ருத்யகாய
  தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

  சர்மாம்பராய ஸவபஸ்ம விலேபனாய
  பாலேக்ஷனாய பணிகுண்டல மண்டிதாய
  மஞ்சீர பாத யுகளாய ஜடாதராய
  தாரித்ரிய துர்க்க தஹனாய நமச்சிவாய

  பஞ்சானனாய பணிராஜ விபூஷணாய
  ஹேமாம் சுகாய புவனத்ரய மண்டிதாய
  ஆனந்த பூமிவரதாய தமோமயாய
  தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

  பானுப்ரியாய பவஸாகர தாரணாய
  காலாந்தகாய கமலாஸன பூஜிதாய
  நேத்ர த்ரயாய சுபலக்ஷண லக்ஷிதாய
  தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

  ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய
  நாகப்ரியாய நரகார்ணவ தாரணாய
  புண்யேஷு புண்யபரிதாய ஸுரார்ச்சிதாய
  தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய

  முக்தேச்வராய பலதாய கணேச்வராய
  கீதப்ரியாய வ்ருஷபேச்வர வாஹனாய
  மாதங்க சர்மவஸனாய மஹேச்வராய
  தாரித்ரிய துக்க தஹனாய நமசிவாய
  ……………………………………………………………………………….

  திருச்சிற்றம்பலம்

  நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்
  நான்மறைக்கிட மாயவேள்வியுள்
  செம்பொ னேர்மட வாரணி
  பெற்ற திருமிழலை
  உம்ப ரார்தொழு தேத்த மாமலை
  யாளடும் முடனே உறைவிடம்
  அம்பொன் வீழிகொண் டீர்அடி
  யேற்கும் அருளுதிரே.

  விடங்கொள் மாமிடற் றீர்வெள்ளைச் சுருள்ஒன்
  றிட்டுவிட்ட காதினீர் என்று
  திடங்கொள் சிந்தையி னார்கலி
  காக்குந் திருமிழலை
  மடங்கல் பூண்ட விமானம் மண்மிசை
  வந்திழிச்சிய வான நாட்டையும்
  அடங்கல் வீழி கொண் டீர்அடி
  யேற்கும் அருளுதிரே.

  ஊனை உற்றுயிர் ஆயிர் ஒளிமூன்று
  மாய்த்தெளி நீரோ டானஞ்சின்
  தேனை ஆட்டுகந்தீர்செழு
  மாடத் திருமிழலை
  மானை மேவிய கையினீர்மழுஏந்தினீர்
  மங்கை பாகத் தீர்விண்ணில்
  ஆன வீழிகொண்டீர்அடி
  யேற்கும் அருளுதிரே.

  பந்தம் வீடிவை பண்ணினீர் படிறீர்
  மதிப்பிதிர்க் கண்ணி யீரென்று
  சிந்தைசெய் திருக்குஞ்செங்கை
  யாளர் திருமிழலை
  வந்துநாடகம் வான நாடியர்
  ஆட மாலயன் ஏத்த நாடொறும்
  அந்தண் வீழிகொண்டீர்அடி
  யேற்கும் அருளுதிரே.

  புரிசை மூன்றையும் பொன்றக் குன்றவில்
  ஏந்தி வேதப் புரவித் தேர்மிசைத்
  திரிசெய் நான்மறை யோர்சிறந்
  தேத்துந் திருமிழலைப்
  பரிசி னாலடி போற்றும் பத்தர்கள்
  பாடி ஆடப் பரிந்து நல்கினீர்
  அரிய வீழிகொண் டீர்அடி
  யேற்கும் அருளுதிரே.

  எறிந்தசண்டி இடந்த கண்ணப்பன்
  ஏத்து பத்தர்கட் கேற்றம் நல்கினீர்
  செறிந்த பூம்பொழில் தேன்துளி
  வீசுந் திருமிழலை
  நிறைந்த அந்தணர் நித்தம் நாடொறும்
  நேசத் தாலுமைப் பூசிக் கும்மிடம்
  அறிந்து வீழிகொண் டீர்அடி
  யேற்கும் அருளுதிரே.

  பணிந்த பார்த்தன் பகீரதன்பல பத்தர்
  சித்தர்க்குப் பண்டு நல்கினீர்
  திணிந்த மாடந்தொறுஞ் செல்வம்
  மல்கு திருமிழலை
  தணிந்த அந்தணர் சந்தி நாடொறும்
  அந்தி வானிடு பூச்சிறப்பவை
  அணிந்து வீழிகொண் டீர்அடி
  யேற்கும் அருளுதிரே.

  பரந்தபாரிடம் ஊரிடைப்பலி பற்றிப்
  பார்த்துணுஞ் சுற்ற மாயினீர்
  தெரிந்த நான்மறை யோர்க்கிடம்
  ஆகிய திருமிழலை
  இருந்து நீர்தமிழோ டிசைகேட்கும் மிச்சையாற்
  காசு நித்தல்நல்கினீர்
  அருந்தண் வீழிகொண் டீர்அடி
  யேற்கும் அருளுதிரே.

  தூய நீரமு தாய வாறது சொல்லு
  கென்றுமைக் கேட்கச் சொல்லினீர்
  தீய ராக் குலை யாளர்
  செழுமாடத் திருமிழலை
  மேய நீர்பலி ஏற்றதென் னென்றுவிண்
  ணப்பஞ் செய்பவர்க்கு மெய்ப்பொருள்
  ஆய வீழிகொண்டீர் அடி
  யேற்கும் அருளுதிரே.

  வேத வேதியர் வேத நீதியர்
  ஓது வார்விரி நீர்மிழலையுள்
  ஆதி வீழிகொண்டீர்அடி
  யேற்கும் அருளுகென்று
  நாத கீதம்வண் டோதுவார்பொழில்
  நாவலூரன்வன் றொண்டன் நற்றமிழ்
  பாதம் ஓதவல் லார்பர
  னோடு கூடுவரே.

  திருச்சிற்றம்பலம் [சுந்தரர்]

  “நம்பினார்க்கருள் செய்யுமந்தணர்……சிவனார்” …..நம்புங்கள் நல்லதே நடக்கும் …….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *