Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, December 7, 2024
Please specify the group
Home > Featured > மயிலையை அதிரவைத்த அறுபத்து மூவர் திருவிழா – ஒரு புகைப்பட தொகுப்பு!

மயிலையை அதிரவைத்த அறுபத்து மூவர் திருவிழா – ஒரு புகைப்பட தொகுப்பு!

print
சென்னையில் நடைபெறும் மிக முக்கிய திருவிழாக்களுள் மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவும் ஒன்று. லட்சக்கணக்கான மக்கள் திரளும் இந்த விழாவில், தன்னலமற்ற பக்தியால் சைவத் தொண்டு செய்து சிவபெருமானின் அருளைபெற்று அவரை தரிசித்த 63 நாயன்மார்கள் பல்லக்குகளில் ஊர்வலமாக எடுத்து வரப்படுவார்கள்.

DSC01097

DSC01116வெற்று ஆடம்பரம், பொறாமை, கொலை, களவு, மது, ஒழுங்கீனம், சுயநலம், பெரியோரை அவமதித்தல் ஆகியவற்றை சுமந்து நிற்கும் நமது காலச் சூழலை அறுபத்து மூவரைக் கொண்டுதான் ஒழுங்குபடுத்த முடியும். எனவே முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு அறுபத்து மூவரின் அறிமுகமும் வழிபாடும் தற்போது மிகவும் அவசியமாகும்.

DSC01090

இந்த ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா கடந்த 6ம் தேதி, கிராம தேவதை பூஜை கோலவிழியம்மன் சிறப்பு வழிபாடுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 7ம் தேதி கொடியேற்றமும், 8ம் தேதி சூரிய வட்டம், சந்திரவட்டமும், 9ம் தேதி அதிகார நந்தி காட்சியளித்தலும், 10ம் தேதி புருஷாமிருகம், சிங்கம், புலி வாகனமும், 11ம் தேதி சவுடல் விமானமும், 12ம் தேதி பல்லக்கு விழாவும் நடந்தது.

DSC01092

DSC01123ஒவ்வொரு நாளும் ஐந்திருமேனிகள் திருவீதி உலா நடந்தது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடந்தது. கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தேர் வடம் பிடித்தல் நடந்தது.

DSC01093

DSC01113இந்த நிலையில், விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் திருவிழா 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) 2.55 மணியளவில் நடந்தது. அறுபத்து மூவர் திருவீதியுலா மேள தாளம் முழங்க, மங்கல இசை ஒலிக்க, வேத மந்திரங்கள் ஒலிக்க ஆரவாரத்தோடு புறப்பட்டது. முன்னதாக விநாயகர் செல்ல, கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் அடுத்து வர தொடர்ந்து இதர தெய்வங்கள் வலம் வந்தன. இதையடுத்து சமயக்குரவர்கள் பல்லக்கும், அதையடுத்து ஒரு பல்லக்கில் 4 நாயன்மார்கள் என்ற கணக்கில் நாயன்மார்களும் அணிவகுத்து மாட வீதிகளில் வந்தனர்.

DSC01105

திருவள்ளுவரும் இந்த அறுபத்துமூவர் ஊர்வலத்தில் இடம்பெறுவார் என்பது கூடுதல் சிறப்பு. (நம் திருவள்ளுவர் கோவிலில் உள்ள அதே திருவள்ளுவர் தான்!)

DSC01107

முன்னதாக திருஞானசம்பந்தர், பூம்பாவை, சிவநேசச் செட்டியாரின் உற்சவ மூர்த்திகள், தெப்பக் குளத்திற்கு எழுந்தருளினர். அங்கு, சம்பந்தர், சிவநேசச் செட்டியாருக்கு அபிஷேகம் நடந்தது.

சிவநேசச் செட்டியார் - பூம்பாவை!
சிவநேசச் செட்டியார் – பூம்பாவை!

எலும்பை பெண்ணாக்கி அருளல் நிகழ்ச்சியில், சம்பந்தரின், ‘மட்டிட்ட புன்னையங் கானல்’ பதிகத்தை ஓதுவார், பண்ணோடு பாட, பக்தர்கள் சம்பந்தரை வழிபட்டனர். பின் சம்பந்தர் உள்ளிட்ட மூவரும், கோவிலுக்கு எழுந்தருளினர். அங்கு, பிற்பகல் 3:00 மணிக்கு, அறுபத்து மூன்று நாயன்மார்களுடன், வெள்ளிவிமானத்தில் கபாலீசுவரர், கற்பகாம்பாம்பாள், சிங்காரவேலருடன் வீதி உலா புறப்பட்டது.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
பூம்பாவை வரலாறு

ஒரு காலத்தில் செட்டியார் ஒருவர் வசித்து வந்தார். அவருக்குப் பூம்பாவை என்று அழகான பெண் குழந்தை இருந்தாள். திருஞான சம்பந்தரின் புகழைக் கேள்விப்பட்ட செட்டியார், தன் மகளை அவருக்கு மணம் முடிக்க விரும்பினார். அதன்படியே மகளை வளர்த்தும் வந்தார். பூம்பாவைக்கு ஐந்து வயதானபோது அவள் பாம்பு தீண்டி இறந்துவிடுகிறாள்.

அவளுடைய பூத உடலை எரித்துச் சாம்பலாக்கி, அந்த அஸ்தியை ஒரு குடத்தில் இட்ட செட்டியார், அதைக் கன்னி மாடத்தில் வைத்துவிடுகிறார். இருந்தாலும் தன் மகள் உயிருடன் இருப்பதாக நினைத்து அனைத்து வேலைகளையும் செய்கிறார்.

இது நடந்து சில வருடங்கள் கழித்து திருஞான சம்பந்தர் அந்த ஊருக்கு வருகிறார். அவரைப் பார்த்த ஊர் மக்கள் பூம்பாவையைப் பற்றிச் சொல்கிறார்கள். சம்பந்தர், ஆலயத்துக்குள் நுழையாமல் செட்டியாரைச் சந்திக்கிறார். அவருடைய மகளின் அஸ்தி இருக்கும் குடத்தை எடுத்துவரச் சொல்கிறார். அந்த அஸ்தியின் முன்னால் அமர்ந்து ஒவ்வொரு விழாவாகச் சொல்லி ஒவ்வொரு பதிகம் பாடுகிறார்.

“இந்த ஊரில் கார்த்திகை தீபம் நடக்கும், பெண்கள் எல்லாம் வீட்டில் விளக்கேற்றுவார்கள். அதைப் பார்க்காமல் மாண்டு போனாயே. இந்த ஊரில் தைப்பூசம் நடக்கும். பெண்கள் எல்லாம் பொங்கல் வைத்துக் கொண்டாடுவார்கள். அதை எல்லாம் பார்க்காமல் மாண்டு போனாயே” என்று பாடுகிறார்.

சம்பந்தர் பாடி முடித்ததும் அப்போது பூம்பாவை உயிரோடு இருந்திருந்தால் என்ன வயது இருக்குமோ அந்த வயதோடு குடத்தை உடைத்துக்கொண்டு வெளியே வந்தாள். அங்கம் என்றால் எலும்பு. எலும்பு உயிர்ப்பெற்று வந்ததால் அங்கம் பூம்பாவை என்று அழைக்கப்பட்டாள். இந்தச் சம்பவம் பெரிய புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பூம்பாவை, அவளுடைய அப்பா சிலைகளை வைத்து இந்த நிகழ்வு கதையாகச் சொல்லப்படும்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

DSC01112

நிகழ்ச்சியில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். அறுபத்து மூவர் விழாவை முன்னிட்டு மயிலாப்பூர் களைகட்டியிருந்தது. மாட வீதிகள், அறுபத்துமூவர் பல்லக்குகள், இறைவனின் பல்லக்குகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

DSC01115

DSC01125DSC01126அறுபத்து மூவர் விழாவை முன்னிட்டு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தார், தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சியினர் போன்றோர் மக்கள் கூடும் இடங்களில் சிறப்பு பந்தல்களை அமைத்து அன்னதானம், நீர் மோர், பானகம், இனிப்புகள், ரோஸ்மில்க், சாக்லேட், போன்ற பொருட்களை வழங்கினர். அறுபத்து மூவர் விழாவையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

DSC01129

பங்குனிப்பெருவிழாவின் மற்றொரு முக்கிய அம்சமான திருக்கல்யாணம் மறுநாள் மாலை 7 மணிக்கு நடைபெற்றது. ஐந்திருமேனிகள் விழாவும் நடைபெற்றது.

அறுபத்து மூவர் விழா நடைபெற்ற வெள்ளியன்று மாலை அலுவலகம் முடிந்தவுடன் வழக்கம்போல நாம் வீட்டுக்கு கிளம்பிவிட்டோம். மறுநாள் முற்றோதலில் கலந்துகொள்ள செல்லவேண்டும் என்பதால் அதற்கு வேறு ஆயத்தமாக வேண்டும். இந்நிலையில் நண்பர் சிவா விஜய் பெரியசுவாமி நம்மை அலைபேசியில் அழைத்து அறுபத்து மூவர் விழா பற்றி நினைவூட்டினார்.

DSC01134

அவ்வளவு பெரிய ஜனத்திரளுக்குள் சென்று என்ன கவர் செய்வது என்று தயக்கம்… இருப்பினும் நாயன்மார்களையாவது தரிசிப்போம் என்று தான் மயிலை விரைந்தோம்.

மயிலைக்கு நுழையும் அனைத்து வழிகளும் போலீசாரால் அடைக்கப்பட்டு லஸ் கார்னர் முதல் மக்கள் கால்நடையாகவே அனுமதிக்கப்பட்டனர். இப்படி ஒருக்கூட்டத்தை இது வரை கண்டதில்லை என்பது போல, எங்கு பார்த்தாலும் ஜன சமுத்திரம் தான்.

DSC01135

சென்னையில் இருந்தும் இப்படி ஒரு விழாவை இத்தனை நாள் தரிசிக்காமல் விட்டுவிட்டோமே என்று மிகவும் ஃபீல் செய்தோம். ஜனத்திரளுக்குள் ஒரு அடியை எடுத்து வைப்பது கூட கஷ்டமாகத் தான் இருந்தது. நம்மை கசக்கி பிழிந்துவிட்டார்கள். கையில் காமிரா வேறு.

பொதுவாகவே கூட்டம் என்றாலே நமக்கு சற்று அலர்ஜி தான். ஆனால், இந்த கூட்டம் ஏனோ மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது.

அறுபத்துமூவர் விழாவில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் திரும்பும் பக்கமெல்லாம் அன்னதானம் நடந்துகொண்டிருக்கும் காட்சி தான். சென்னை போன்ற ஒரு எக்ஸ்பிரஸ் வேக நகரில், நமது பாரம்பரியமான் அன்னம்பாளித்தல் நடந்தது கண்டு உள்ளம் குளிர்ந்தது. அவரவர் அவரவர் சக்திக்கேற்ப, சாதம், பிஸ்கட், சாக்லேட், மோர், என்று ஆங்காங்கே அன்னதானம் செய்து கொண்டிருந்தனர். நாம் இப்படி செய்யவேண்டும் என்ற எண்ணம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றும் என்பது திண்ணம்.

ஒரு சிவனடியாரை தரிசிப்பதே புண்ணியம். சிவனடியார்களுக்கேல்லாம் சிகரம் போல விளங்கும் 63 நாயன்மார்களையும் ஒரே நேரத்தில் தரிசிப்பது  பாக்கியம். அதே போல விபூதி தரித்தவர்களை தரிசிப்பதே மிகவும் புண்ணியம் தரக்கூடியது எனும்போது எண்ணற்ற சிவ பக்தர்களையும் வேறு அல்லவா அன்று தரிசித்தோம்?

DSC01137

பக்தியோடு காண வந்த மக்கள் ஒரு புறம், விளையாட்டுக்கு வந்த விடலைச் சிறுவர்கள் & வாலிபர்கள் ஒருபுறம், கூட்டத்தை சாக்காக வைத்து கொள்ளையடிக்க வந்த ஜேப்படி திருடர்கள் ஒரு புறம் என இது வித்தியாசமான அனுபவம் தான்.

ஆனால் கைக்குழந்தைகளையும் சிறிய குழந்தைகளையும் அழைத்துச் செல்வது உசிதமல்ல. பல குழந்தைகள் பெற்றோரை விட்டு பிரிந்து போக, அது பற்றி மைக்கில் அறிவித்தவண்ணமிருந்தார்கள். அக்குழந்தைகள் அனைவரும் மீண்டும் பெற்றோரிடம் சேரவேண்டும் என்பதே நமது பிரதான பிரார்த்தனையாக இருந்தது.

அடுத்த வருடம் சற்று முன்கூட்டிய நன்கு திட்டமிட்டு இந்த விழாவை அருகில் இருந்து கவர் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம். சிவனருள் இருப்பின் சாத்தியப்படும்.

(ஆக்கத்தில் உதவி : தினத்தந்தி, தினமலர் & தி ஹிந்து)

[END]

12 thoughts on “மயிலையை அதிரவைத்த அறுபத்து மூவர் திருவிழா – ஒரு புகைப்பட தொகுப்பு!

  1. டியர் சுந்தர்ஜி

    அறுபத்து மூவர் பற்றிய போட்டோ coverage மிகவும் நன்றாக உள்ளது. நேரில் விழாவை பார்த்த ஒரு feeling. இந்த பதிவை பார்த்ததும் நாமும் கலந்து கொள்ளவில்லையே என்று நினைக்கத் தோன்றுகிறது, அறுபத்து மூவர் விழா என்று தெரிந்தும் கூட்டத்திற்கு பயந்து செல்லவில்லை. இறை அருள் இருந்தால் அடுத்த வருடம் கண்டிப்பாக செல்வோம்.

    திருத்தொண்டத் தொகை by சுந்தரர்

    தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
    திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
    இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
    இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
    வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
    விரிபொழில் சூழ் nfhன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
    அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே.

    தங்கள் பதிவிற்கு நன்றி

    உமா

  2. அறுபத்து மூவர் திருவிழா
    12 வருடங்களுக்கு முன் மயிலாப்பூரில் பணிபுரியும் போது காண கிடைத்த பாக்கியம். அதன்பின் தற்போது உங்கள் பதிவு மூலம் நேரில் காணும் காட்சி போல அமைந்தது.
    எல்லா புகைப்படமும் நன்றாக வந்துள்ளது.
    தெப்பகுளமும் கோபுரமும் மின்விளக்கு அலங்காரமும் மற்றும் கோலவிழி அம்மனுமாக கண்கள் கொள்ளை போகிறது.
    கோவில் வாசல், தேர் கூட்டங்கள் மனித தலைகளாக காட்சி கொடுக்கிறது.
    திருவள்ளுவரும் இந்த அறுபத்துமூவர் ஊர்வலத்தில் இடம்பெறுவார் என்பது கூடுதல் சிறப்பு அது நம் தமிழுக்கு பெருமை.
    பூம்பாவை கதை ஒரு சொற்பொழிவாளர் வாயால் கேட்டு இருந்தாலும் நம் தளத்தில் படிக்கும் போது இன்னும் விசேஷமாக உள்ளது.
    அறுபத்து மூவர் தேர் காண கிடைக்காத காட்சி உங்கள் கேமிரா கண் மூலம் பார்க்க வைத்ததற்கு நன்றிகள் பல.
    கூட்டம் என்றாலே வீட்டில் அனுமதி கிடைக்காது. ஆனால் இவ்வளவு சிவ பக்தர்களை பார்த்ததும் மிகவும் ஏக்கமாக உள்ளது.
    ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளமுடியாவிட்டால் அதை நினைத்து கொண்டு இருந்தாலே அதன் பலன் நமக்கு கிடைக்கும் என்று கேள்விபட்டுளேன். அது நிஜமானால் இந்த மார்ச் மாதம் பிறந்த முதல் எனக்கு அறுபத்து மூவர் விழா நினைப்பு தான்.
    எனக்கும் அந்த சிவனருள் கிடைக்க வேண்டிகொள்கிறேன்.
    பல குழந்தைகள் பெற்றோரை விட்டு பிரிந்து போக, அது பற்றி மைக்கில் அறிவித்தவண்ணமிருந்தார்கள். அக்குழந்தைகள் அனைவரும் மீண்டும் பெற்றோரிடம் சேரவேண்டும் என்பதே நமது பிரதான பிரார்த்தனையாக இருந்தது. கண்டிப்பாக எல்லோரும் தன பெற்றோர்களுடன் சேர்த்து இருப்பார்கள்
    ஒரு அருமையான பதிவிற்கு நன்றி.

  3. சகோதரர் திரு . சுந்தர் வணக்கம் .

    எல்லா பதிவுகளும் நல்லா த்தான் இருக்கு . ஆனா எங்க இசுலாத்த பத்தியும் எப்பவாச்சும் எழுதுங்களேன் . இசுலாமியர்கள் னாலே தப்பா
    பேசுறவங்களுக்கு நீங்கல்லாம் சொல்லலாமில்லையா . உண்மைய சொன்னா எங்கலுக்கு எதுவும் செய்யாமலே சும்மா எங்கள வச்சு வோட்டு மட்டும் வாங்குற அரசியல் வாதிகள் தாங்கள் மட்டும் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ சம்பாதிச்சுட்டு கடைசீலே எட்டி உதைக்க வும் தயங்கறதே இல்லே . மீடியா வும் அவர்களுக்குத்தான் சாதகமா இருக்கு . பல விஷயங்க எங்களுக்கு கெட்ட பெயரைத்தான் ஏற்படுத்துது . பாபர் மசூதி இடுசாங்க அத செஞ்சது காங்கிரஸ் நரசிம்மராவ் கவர்மெண்டு … அத இடுசுட்டா பீ ஜே பீ வராதுன்னு கணக்கு போட்டாங்க என்னாச்சு அப்பவே பீ ஜெ பீ வந்துச்சு . இவங்க பண்ணுற வூழல் லாம் பண்ணுவானுங்க எங்க பெயரை சொல்லி மத சார்பின்மை ன்னும் சொல்லிக்குவாங்க . எத்தனை பொண்ணுங்க பசங்க கஷ்ட படுறாங்க தெரியுமா ஏஹழையா இருந்தா சர்ச்சுக்கு கூட்டிகிட்டு போயி மதம் மாதிற்றாங்க .எத்தந சர்ச் வந்துடுச்சு தெரியுமா போன பத்து வருஷத்துல . 5 மசூதிஞா இருந்த எடத்ஹை சர்ச்சுங்க வாங்கிட்டக . முஸ்லிம் இல்ஹைங்கர்களை மட்டும் ஏதாவது சொல்லி கைது பண்ணிட றாங்க . கேட்டஆ தீவிரவாதி ன்னு சொல்லிடறாங்க. சேலம் ல 2500 கோடிபணம் புடிசான்களே என்னாச்சு .2 G அவ்லொஆதான் மக்கள் எல்லோரும் ஒத்துமையா வாளர மாதிரி எதனாச்சும் செயுங்க . பீ ஜே பீ வர்ந்ந்தா நல்லது ன்னு ரொம்ப முஸ்லிம்கள் கூட நிநேக்கிறாங்க ஆனா நல்லது பண்ணுவாங்களா ன்னு ஒரு சந்தேக ம் சிலருக்கு இருக்கு . ஆம் ஆத்மி காங்கிரசுக்கு த்தான் சாதகமா இருக்கு . அதுவும் உஊலஹல ஆதரிக்கற மாதிரிதான் போகுது … முஸ்லிம் , இந்து எல்லாம் ஒத்துமையா இருக்க கொஞ்சம் எழுதுங்க ப்லீசு

    1. சகோதரர் இம்தியாஸ் அவர்களுக்கு வணக்கம்.

      முதற்கண் இந்த தளத்திற்கு வந்து பின்னூட்டமளித்தமைக்கு நன்றி.

      அரசியல் மற்றும் சினிமா வாடையின்றி இந்த தளத்தை நான் நடத்திட விரும்புகிறேன். அதே சமயம் நல்லது எங்கே இருந்தாலும் அதை இங்கே பகிர்ந்திடவோ சுட்டிக்காட்டவோ தயங்கமாட்டேன்.

      ஏற்கனவே இஸ்லாமியத்தை பற்றியும் மதநல்லிணக்கத்தை பற்றியும் இங்கு பதிவுகள் அளித்துள்ளோம்.

      பார்க்க :

      சிவன் கோவில் கட்ட இலவச நிலம் தந்த முஸ்லீம் பெரியவர் – மகா பெரியவா செய்த பிரதி உபகாரம் என்ன? MUST READ

      தேவை இன்று ஒரு கபீர்தாசர் – ரம்ஜான் சிறப்பு பதிவு !

      திருமலையில் அனைவரையும் வியக்க வைத்த திரு.அப்துல் கலாம்! ரம்ஜான் ஸ்பெஷல் 2

      இந்தியாவில் தற்போது நிலவும் அரசியல் சூழல் குறித்த உங்கள் ஆதங்கத்தை புரிந்துகொள்ள முடிகிறது. விரைவில் மேற்படி குறைகள், எல்லாம் வல்ல இறைவனின் அருளால் களையப்படும். கவலை வேண்டாம்.

      அனைத்து சமயத்தவரும் ஒற்றுமையாய் சகோதரத்துடன் வாழும் காலம் நெருங்கிவிட்டது. பிரித்தாளும் தந்திரம் செய்பவர்களை இறைவன் பார்த்துக்கொள்வான்.

      நன்றி.

      – சுந்தர்

      1. நன்றி சகோதரரே .

        எம்மதமும் சம்மதம் என்று நாம் சிலர் சொன்னாலும் எங்கள் மக்கள் மற்றும் கிறித்தவர்கள் அதை ஏற்க மட்ட்டேன்க்ர்ரார்களே ..

        1. ஒரு பறவை நம் தலைக்கு மேல் கூடு கட்டுவதை நம்மால் தடுக்க முடியும். ஆனால் தலைக்கு மேல் பறப்பதை தடுக்க முடியுமா? அது போலத்தான் இது.

          மருத்துவமனையில் உயிருக்கு போராடும்போது எவரும் தங்கள் மதத்தவர்/இனத்தவர் தான் இரத்தம் தரவேண்டும் என்று கூறுவதில்லையே ஏன்?

          அங்கு மட்டும் சமத்துவம் எப்படி வருகிறது என்று புரியவில்லை.

          – சுந்தர்

  4. சகோதரர் இம்தியாஸ் அவர்களுக்கு
    உங்கள் பெயரை கமெண்ட் பகுதியில் பார்த்ததும் ஒரு கணம் அசந்து விட்டேன்.
    அதுவும் அறுபத்து மூவர் பதிவு படித்து நல்லாத்தான் இருக்கு என்று கமெண்ட் போட்டதற்கு எங்கள் நன்றி.
    இதுவும் ஒரு வகையில் எங்கள் சார் அவர்களுக்கு வெற்றி தான்.
    சுந்தர் சார் பதில் கொடுத்தபடிமேற்படி குறைகள், எல்லாம் வல்ல இறைவனின் அருளால் களையப்படும். கவலை வேண்டாம்.

    அனைத்து சமயத்தவரும் ஒற்றுமையாய் சகோதரத்துடன் வாழும் காலம் நெருங்கிவிட்டது. பிரித்தாளும் தந்திரம் செய்பவர்களை இறைவன் பார்த்துக்கொள்வான்.
    மிகவும் நன்றி சார்.

  5. பிரிதாள்பவர்களை ஒன்றாகச்சேர்த்து, ஒரே சமயம் அழிப்பார் இறைவன். எல்லா மதமும் வாழும் கோயில்………அன்பே!

  6. மிக அருமையான புகைப்பட தொகுப்பு மற்றும் பதிவு ….நேரில் பார்த்த ஒரு உணர்வு….சுந்தரின் புகைப்படம் அபாரம்

  7. கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்ப ராகில்
    அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவு ளாரே. …..எம் மதத்தவர் ஆனாலும் எங்கள் கபாலியின் அருள் என்றும் உண்டு …அடியவர் இம்தியாஸ் வாழ்க பல்லாண்டு …………தங்கள் பதமலர் பாக்கியம் ,,,,,திருச்சிற்றம்பலம்[ஒருகுலமுஞ் சுற்றமும் ஓரூ ரும்நீ]
    அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
    அன்புடைய மாமனும் மாமி யும்நீ
    ஒப்புடைய மாதரு மொண்பொரு ளும்நீ
    ஒருகுலமுஞ் சுற்றமும் ஓரூ ரும்நீ
    துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
    துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
    இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ
    இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே………..

    சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தத்து
    தரணியொடு வானாளத் தருவ ரேனும்
    மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
    மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
    அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
    ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங்
    கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
    அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவு ளாரே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *