‘நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்’ என்பதற்கு இந்த சம்பவத்தில் வரும் முஸ்லீம் பெரியவரே சாட்சி. படிக்கும்போதே கண்கள் பனிக்கின்றன. இதயம் நெகிழ்கிறது.
மனிதம் மறைந்து மதத்தின் பெயரால் வன்முறைகள் அரங்கேற்றப்படும் இன்றைய சூழலில், இது போன்ற நிகழ்வுகள் நிச்சயம் அனைவரிடமும் சென்று சேரவேண்டும்.
தங்கள் மதம் பற்றி பிறரின் புரிதலுக்காக லட்சக்கணக்கானோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு சாதிக்க விரும்பவதை அந்த கிராமத்து முஸ்லீம் பெரியவர் தனது பெருந்தன்மையால் அன்பால் அனாயசமாக சாதிக்கிறார். வாழ்த்துக்களும் நன்றிகளும் உங்களுக்கு உரித்தாகுக ஐயா. படிக்கும்போதே உள்ளம் நெகிழ்ச்சியில் விம்முகிறது.
(DOUBLE CLICK THE IMAGE TO ZOOM & READ)
உண்மையான ஆன்மீக அன்பர்கள் – அவர்கள் எந்த மதத்தில் இருந்தாலும் – இப்படித் தான் இருப்பார்கள் என்பதை இந்த சம்பவம் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.
இத்துனை பெருந்தன்மையோடு தமது பரம்பரை நிலத்தையே சிவன் கோவிலுக்காக விட்டுத் தரும் அந்த முஸ்லீம் பெரியவருக்கு மகா பெரியவா செய்த பிரதி உபகாரம் என்ன தெரியுமா?
படியுங்கள்… நெகிழ்ச்சியில் மூழ்குவீர்கள்!
ஹர ஹர சங்கர… ஜெய ஜெய சங்கர!
இந்த வார சக்தி விகடனில் வெளியாகியிருக்கும் திரு.சாருகேசி அவர்கள் எழுதியிருக்கும் ‘குருவே சரணம்… திருவே சரணம்’ தொடரை இத்துடன் ஸ்கேன் செய்து இணைத்திருக்கிறேன். சக்தி விகடனுக்கு எங்கள் நன்றி!
[END]
இத்துனை பெருந்தன்மையோடு தமது பரம்பரை நிலத்தையே சிவன் கோவிலுக்காக விட்டுத் தரும் அந்த முஸ்லீம் பெரியாருக்கு அவர் வம்சம் சீரோடும் சிறப்போடும் தழைத்தோங்க இறைவனை வேண்டுகிறேன் …..
நன்றி சுந்தர்ஜி.
மனோகரன் .
அற்புதம்… நன்றி சுந்தர்.
கடவுளுக்கு ஜாதி மதம் இல்லை ,அவர் என்றுமே தன்னை அன்போடு பார்க்கிறவர்களை ஏற்றுகொள்வான் என்பதற்கு இந்த நிகழ்ச்சி மிக பெரிய உதாரணம்
மக்கள் தான் ஜாதி மதம் என்ற பெயரால் கடவுள்களை பிரித்து வைத்துள்ளோம் ,கடவுள் அனைவரும்மே சமம் அவர்களுக்கு அணைத்து மக்களுமே சமம் அவ்வளவுதான்
மிகவும் அருமை சார் . மக்கள் எலோற்கும் இதை பற்றி தெரிய வேண்டும் .
ஆன்மிக நண்பனின் வாழ்த்துக்கள் .