நமக்கு முன்பை விட பதிவுகள் எழுத, தயாரிக்க தற்போது நிறைய நேரம் பிடிக்கிறது. காரணம் நம் தளத்தின் பதிவுகளின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது. எனவே நமது பொறுப்பும் கூடிவிட்டது. அதற்கேற்ப உழைக்கவேண்டும் அல்லவா?
சென்ற வாரம் ‘தெய்வங்களாலும் முடியாததை யார் சாதிப்பார்கள்?’ என்று ஒரு பதிவு அளித்திருந்தோம். ‘மகான்கள் பாதம் பட்டால் வறண்ட பூமி கூட செழிக்கும். பஞ்சம் நீங்கி பசுமை தழைக்கும்’ என்று அந்த பதிவில் குறிப்பிட்டு, ஸ்ரீரங்க ராமானுஜ மஹாதேசிகன் என்கிற வைணவ ஆச்சார்யாளின் மகிமை பற்றி குறிப்பிட்டிருந்தோம்.
மகா பெரியவாவின் வாழ்க்கையில் அது போல பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
ஸ்ரீமடம் பாலு அவர்கள் தொகுத்த ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’லிருந்து அத்தகைய அற்புத சம்பவம் ஒன்றை அளிக்கிறோம்.
வாரத்தின் முதல் நாளை குருவின் மகிமையுடன் துவக்குவோம். மற்ற பதிவுகள் அடுத்தடுத்து அணிவகுக்கவிருக்கின்றன! நன்றி!!
========================================================
காற்றை நிறுத்திய காத்தவராயன்!
காட்டுப்பாதை வழியாக ஸ்ரீ சைலம் போய்க்கொண்டிருந்தார்கள், பெரியவா. உடன் வந்த அணுக்கத் தொண்டர்களை, விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்து கொண்டே நடந்து வரச் சொன்னார்கள். எவ்வளவு மெதுவாக சொன்னாலும் அரைமணி நேரத்தில் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் முடிந்து விடும். ஆனால், அன்றைய தினம்- என்னவோ தெரியவில்லை! எல்லா சிஷ்யர்களுக்கும் சரியானபடி சொல்ல வரவில்லை. ஒரே மாதிரி வார்த்தை வரக்கூடிய இடங்களில் தவறு ஏற்பட்டு, சொன்ன பகுதியையே சொல்லிக் கொண்டிருந்தார்கள். அடுத்ததாக முகாம் செய்ய வேண்டிய இடமும் வந்தபாடில்லை.
நடுவில் பெரியவா சொன்னார்கள், ‘ஸஹஸ்ர நாமம் முடிவதாக இல்லை, நாம் போக வேண்டிய கிராமமும் வருவதாக இல்லை!”
ஒருவழியாக ஊர் வந்து சேர்ந்தது. “நீங்கள் எல்லாரும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லவில்லை, விஷ்ணுவுக்கு லக்ஷார்ச்னையே செய்துவிட்டீர்களா!” என்றார்கள் பெரியவா, நகைச்சுவையுடன்.
அந்த ஊரில் பெருமாள் கோவிலில் இரவு தங்கல். அந்தப் பகுதியிலிருந்த குடியானவர்கள் ஒரு கூட்டமாகக் காத்துக் கொண்டிருந்தார்கள். கிராம தேவதையான காத்தவராயன் கோவிலுக்குப் பெரியவா விஜயம் செய்யவேண்டும், என்று பிரார்த்தித்தார்கள். பெரியவாளுக்கு ரொம்ப அசதி என்றாலும், கிராம மக்களின் சந்தோஷத்துக்காக கோவிலுக்குப் போனார்கள். கோவிலுக்குள் நுழைந்தவுடன் கொட்டோ கொட்டென்று மழைக் கொட்டித் தீர்த்துவிட்டது ஒரு மணி நேரத்துக்கு.
மக்களுக்கு மகிழ்ச்சி வெள்ளம். மேகம் சூழ்ந்து மலை பெய்யும் நிலை ஏற்பட்டால், எங்கிருந்தோ பெருங்காற்று வீசி மேகக் கூட்டத்தைக் கலைத்துவிடுமாம், அந்த ஊரில். ‘பெரியவா வந்ததால் காற்று அடிக்கவில்லை’ என்று, மனங்குளிர்ந்து சொன்னார்கள், ஊர்மக்கள். பெரியவா, அதை ஏற்கவில்லை. தான் காத்தவராயன் கோவிலுக்கு வந்ததால், காத்தவராயன் காற்றை நிறுத்தி விட்டார். அதனால் மழை பெய்தது! என்று சொல்லி அந்தப் பெருமையை அந்த ஊர் தேவதைக்கே அளித்தார்கள்.
‘ஆமாம், எங்க காத்தவராயன் தான், உங்களைப் பார்த்த சந்தோஷத்தில், மழையைக் கொட்டிவிட்டார்’ என்றார், ஒரு முதியவர்.
Also check : நம்முடைய மதிப்பை உயர்த்துவது எது? – பெரியவா சொன்ன பால் கதை!
==========================================================
Don’t miss Maha Periyava’s miracle @ Kanchi Lingappan street
சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!
பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு
==========================================================
Also check our earlier articles on Ramana Maharishi
ஒன்றுக்கும் உதவாதது அனைவரும் மெச்சும்படி உயர்ந்தது எப்படி?
“நான் யாருக்கும் நமஸ்காரம் பண்ணமாட்டேன். என்னை கட்டாயப்படுத்தக்கூடாது”
ரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்?
ரமணர் விளக்கிய கிரி பிரதட்சண மாண்பு!
ரமணர் ஏன் ஆஸ்ரம கோ-சாலையை பெரிதாக கட்டச் செய்தார்?
அன்னபூரணிக்கு முதல் நைவேத்தியம்!
காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?
ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…
எந்த கண்களில் பார்வை இருக்கிறது? எதில் இல்லை?
பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!
ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!
பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!
==========================================================
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர்ந்திட உதவிடுங்கள்…!
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
==========================================================
Also check our earlier articles on Maha Periyava…
”வா சங்கரா, இப்படி வந்து உட்கார்” – திருவாய் மலர்ந்த தெய்வம்!
தன் புண்ணியத்தை ஈந்து நம் பாவத்தை கரைக்கும் கருணைக்கடல்!
சேற்றுக்குள் மறைந்திருந்த ஸ்ரீ அனந்த பத்மநாப ஈஸ்வரர்! விசேஷ புகைப்படங்கள்!!
பெரியவா மீட்ட பரமேஸ்வரனும் பரந்தாமனும் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு
திகிலூட்டிய மழை வெள்ளம் – கைகொடுத்த ‘கோளறு பதிகம்’!
ஏமாற நாங்களில்லை என் பெரியவாளே – மஹா பெரியவா லீலாம்ருதம்!
மானுடம் உய்ய பொழிந்த அமிர்த தாரை – அதிதி தேவோ பவ – (1)
அபலையின் கண்ணீரை துடைத்த ஆபத்பாந்தவன்!
நவராத்திரி & கொலு – ஏழ்மையில் வாடிய குடும்பத்தில் பெரியவா போட்ட ‘ஆனந்த’ குண்டுகள்!
நடமாடும் தெய்வத்தின் மாசற்ற மகிமை!
குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….
http://rightmantra.com/?cat=126
==========================================================
[END]
மஹா பெரியவா பற்றிய பதிவுகள் வரும் என்றதும் நமக்கு மிகப் பெரிய வரப்ரசாதம் கிடைக்கும் என மிகவும் மகிழ்கிறோம்! மகா சுவாமிகளை பற்றி எத்தனை படித்தாலும் போதும் என்று நினைக்க முடியவில்லை. தேவர்களும் அடி முடி காண முடியாத இறைவனின் அவதாரத்தை(மகா சுவாமிகளை ) , அவர்களின் மஹிமைகள் வரும் நமது தளத்தின் மூலம் அறியமுடியும் என்பது அவரின் எளிவந்த கருணையினாலும் சுந்தர் அவர்களின் நல்முயற்சியினாலும் மட்டுமே சாத்தியமாகி வருகிறது ! தென்னாடு உடைய பெரியவா போற்றி ! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி !