Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, September 14, 2024
Please specify the group
Home > Featured > அன்னபூரணிக்கு முதல் நைவேத்தியம்!

அன்னபூரணிக்கு முதல் நைவேத்தியம்!

print
குருவானவர் சொல்வதைவிட விட செய்வதையே அவரது சீடர்கள் பின்பற்றுவார்கள். எனவே மெய்ஞானிகள் தங்கள் ‘வாழ்க்கையே ஒரு உபதேசம் தான்’ என்பதில் கண்ணுங்கருத்துமாக் இருப்பார்கள். நாவைவிட செயலில் தான் அவர்கள் உபதேசம் பிரதானமாக இருக்கும். சொல்வதற்கும் செயலில் காட்டுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்கள் அறிவார்கள்.

Ramanarபகவான் ரமணரை பொறுத்தவரை அவர் எது செய்தாலும் அது உபதேசம் தான். ஒரு முறை மோன நிலையில் (தக்ஷிணாமூர்த்தி கோலத்தில்) பல மணிநேரங்கள் மெளனமாக இருந்து கூட உபதேசித்திருக்கிறார்.

ஆஸ்ரமத்தில் இட்லி வேகவைப்பது முதல் மனதை வேகவைப்பது வரை அவர் புரிந்த திருவிளையாடல்கள் தான் எத்தனை எத்தனை…! இத்தனை சுலபமாக, எளிமையாக, பாமரருக்கும் புரியும் வண்ணம் மிகப் பெரிய ஆன்ம ரகசியங்களை சூட்சுமங்களை உபதேசிப்பது ரமணரின் தனிதுவங்களுள் ஒன்று.

ரமண திருவிளையாடல் திரட்டிலிருந்து மூன்று முத்துக்களை இந்த வாரம் பார்ப்போம்….!

அன்னபூரணிக்கு முதல் நைவேத்தியம்

ராஜா அய்யரை சின்னசுவாமி ஆசிரமத்தில் தங்கியிருக்க வேண்டுமென்றால் ஏதாவது ஒரு சேவை வேண்டும் என்று கூறிவிட்டார் பகவான் ரமணர். ராஜா அய்யருக்கு எந்தப் பொறுப்பும் ஏற்றுக் கொள்ளாமல் பக்தியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவே மனநிலை இருந்தது.

idli panai

இருந்தாலும் பகவானின் உத்தரவுக்காக பகவானிடம் நடந்தவற்றை கூறினார். பகவான், ”காலையில் இட்லி வேக வையேன்!” என்றார். ‘பகவானே! எனக்கு இட்லி வேக வைக்கத் தெரியாதே?’ என்றார் ராஜா அய்யர். பகவான், ”நான் சொல்லித் தர்றேன்” என்று கூறிவிட்டு முதலில் இட்லிக்கு மாவரைப்பது எவ்வாறு என்று ஒருவாரம் கூடவே இருந்து கற்றுக் கொடுத்தார். ”நாளையிலே இருந்து நீயே செய்யணும்!” என்றார்.

மறுநாள் ராஜா அய்யர் பதட்டமாய் பகவானிடம் வந்து, இட்லியை முழுசா எடுக்க முடியலே. எல்லாம் பிஞ்சு பிஞ்சு வர்றது’ என்று கூறினார். பகவான் நிதானமாக ”முத ஏடு இட்லியை அக்னிக்கே கொடுக்கணும்னு சொன்னனே! அத மறந்துட்டியே! அதான் சரியா வரலே. போய் அக்னிக்கிட்டே சொல்லு! இனிமே முத ஏடு இட்லியை உனக்கே மறக்காம கொடுத்துடுவேன்னு. எல்லாம் சரியாவரும்” என்றார்.

ராஜா அய்யர் பகவான் கூறியதுபோல், அடுப்பில் இருந்த அக்னியிடம் வேண்டிக்கொண்டு அடுத்த ஏடு இட்லிகளை அருமையாக வேக வைத்து எடுத்தார். ராஜா அய்யர் அன்றிலிருந்து முதல் ஏடு இட்லியை அடுப்பில் போட்டுவிடுவார்.

=========================================================

Also check : யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?

=========================================================

‘நல்ல பூசாரியைப் பாத்தா ஆடுற பேய் ஓடும்’

ண்ணாமலை சுவாமியின் கட்டட பணியில் மிகப் பெரியது ஆசிரம டைனிங் ஹாலும், கிச்சனும் தான். அண்ணாமலை சுவாமி அப்பணியில் ஈடுபட்டபோது அவருக்கு சில நாட்களாக ஒரு மாறுதல் தெரிந்தது. அதாவது தன்னாலேயே தான் அனைத்தும் செய்யப்படுகிறது. மிகப்பெரிய பணியை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்ற எண்ணம் பலமாகத் தலைதூக்கியது. இவ்வாறான சிந்தனை வயப்பட்டபோது ஒருமுறை பகவான் கட்டட மேற்பார்வைக்காக வந்தார்.

பகவான் அருகில் வந்தவுடன் கருப்பான நிழல் போன்ற உருவம் தன்னை விட்டு நீங்குவதைக் கண்டார். அது நீங்கியதும் மனம் தன் யதார்த்த அமைதியுற்றதை உணர்ந்தார்.

இதை பகவானிடம் தெரிவித்தபோது அதை ஆமோதிப்பதுபோல் பகவான், ”நல்ல பூசாரியைப் பாத்தா ஆடுற பேய் ஓடும்” என்றார்.

Ramana_Maharshi

சர்வமும் அறிந்தோன்!

ருமுறை பகவானைத் தரிசிக்க வேலூர் கலெக்டர் ரங்கநாதன் வந்திருந்தார். காணிக்கையாக நிறைய இனிப்புகள் கொண்டு வந்திருந்தார். அண்ணாமலை சுவாமி, ஆசிரமத்தில் அப்போதுதான் பகவானின் சேவகராக பணியில் சேர்ந்திருந்தார். பகவான் எல்லோருக்கும் ஒரு துண்டு இனிப்பு வழங்கச் சொன்னார். ஹாலில் உள்ளவர்களுக்கு கொடுத்தபின் ஆசிரமத்தில் பிற வேளைகளில் இருப்பவர்களிடம் கொடுப்பதற்காக ஹாலை விட்டு வெளியே சென்றார்.

எல்லோருக்கும் கொடுத்து முடித்த பின் யாருக்கும் தெரியாமல் இரண்டு துண்டு இனிப்புகளைச் சாப்பிட்டார். தட்டைக் கொண்டு வந்து பகவான் முன்வைத்தவுடன் பகவான், அண்ணாமலை சுவாமியிடம், ”இரண்டு துண்டு சாப்பிட்டியோ?” என்றார்.

அண்ணாமலை சுவாமி தான் மறைவாக செய்தது பகவானுக்கு எப்படி தெரிந்தது என்று பகவானிடமே கேட்டு விட்டார். ‘யாருக்கும் தெரியாது நான் இரண்டு துண்டு சாப்பிட்டது. உங்களுக்கு எப்படித் தெரிஞ்சது?’ என்றார். பகவான் பதில் கூறவில்லை. ♦

=========================================================

Help us to run this website… 

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. 

==========================================================

For earlier episodes…

காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?

ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…

எந்த கண்களில் பார்வை இருக்கிறது? எதில் இல்லை?

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

==========================================================

Also Check :

ஆட்கொண்ட அருணாச்சலேஸ்வரர் – பள்ளி மாணவர்களுக்கு பாடமான நமது தளத்தின் நோட்டீஸ்!

“தன்னைப் போல பிறரை எண்ணும்  தன்மை வேண்டுமே!” .

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

மழை பொழியுது – பாத்திரத்தை முதல்ல நேரா வைங்க!

==========================================================

[END]

2 thoughts on “அன்னபூரணிக்கு முதல் நைவேத்தியம்!

  1. மகான் ரமண மகரிஷி பற்றிய பதிவுகள் அருமை .
    “குரு வழியே ஆதி ஆதி
    குரு மொழியே வேதம் வேதம்
    குரு விழியே தீபம் தீபம்
    குரு பதயே காப்பு காப்பு ”
    குருவடி சரணம் ! திருவடி சரணம் ! குருவருளே திருவருள் !!!

  2. குரு வாரத்தில் குரு மகிமை
    முத்தான மூன்று நிகழ்வுகள் படிக்க மிகவும் மனம் அமைதி அடைந்தது.
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *