Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, May 19, 2024
Please specify the group
Home > Featured > கர்ணன் கேட்ட வரம்!

கர்ணன் கேட்ட வரம்!

print
மாசடைந்து கலங்கிய குட்டையாய் தவிக்கும் தமிழ் சினிமாவில் இன்று இரண்டு மிகப் பெரிய பொக்கிஷங்கள் ரிலீசாகியிருக்கின்றன.

ஒன்று பி.ஆர்.பந்துலு அவர்கள் இயக்கி, நடிகர் திலகம் வாழ்ந்த ‘கர்ணன்’ மற்றொன்று குழந்தைகளை குதூகலப்படுத்தும் ‘The Jungle book’.

நடிகர் திலகத்தின் காவியங்களில் ஒன்றான ‘கர்ணன்’ நவீன டிஜிட்டல் மெருகூட்டலுடன் இன்று வெளியாகியிருக்கிறது. பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் அவசியம் பார்க்கவேண்டிய படம் இது. நல்ல சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய படம்.

Karnan ad

கர்ணன் – கொடைக்கு மட்டுமா சொந்தக்காரன்?

‘கர்ணன்’ என்றால் ஏதோ கொடைக்கு மட்டுமே சொந்தக்காரன் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல… நன்றி மறவாமை, வாக்கு தவறாமை, வீரம், மானம், அறிவு, காதல் இப்படி பல குணங்களுக்கு சொந்தக்காரன் ‘கர்ணன்’.

கர்ணனுக்கு தேரோட்டிய சல்லியன் பள்ளத்தில் இறங்கிய தேரை நிலைநிறுத்த முயற்சிக்காமல் கர்ணனுடன் கருத்து வேறுபாடு காரணமாக அப்படியே நடுவழியில் விட்டுவிட்டு போய்விடுவான். அது சமயம் அர்ஜூனன் பாணங்களால் கர்ணனை துளைக்க துவங்குவான். ஓரிரண்டு அம்புகளுக்கு மேல், அவனை துளைக்காமல் வலுவிழந்து விழுந்துவிடும்.

‘தர்மம் தலை காக்கிறது’ என்பதை உணரும் கிருஷ்ண பரமாத்மா, ஒரு முதியவர் வேடம் பூண்டு சென்று கர்ணனிடம் சென்று அவனது புண்ணியப் பலன்கள் முழுவதையும் தானம் கேட்ப்பார். சிறிதும் தயங்காது, அந்த நிலையிலும் பெருகி வரும் குருதியை நீராக கொண்டு தத்தம் செய்து கொடுத்துவிடுவான் கர்ணன்.

Karnan 1

அதில் மகிழ்ந்து தனது மகாவிஷ்ணுவாக விஸ்வரூப தரிசனத்தை காட்டும் பரமாத்மா, ‘கர்ணா நீ வேண்டும் வரமென்ன?” என்று கேட்க, அதற்கு கர்ணன் கூறுவது என்ன தெரியுமா?

”ஐயனே! ஆண்டாண்டு காலம் தவமிருந்தளும் கிடைப்பதற்கரிய உன் அருட்காட்சி கிடைத்த பின்னர் இனி நான் அடைய வேண்டியதென்ன? எல்லாம் அடையப் பெற்றவனானேன். எந்தக் குறையும் இனி எனக்கு இல்லை. நான் வேண்டிப்பெறுவதற்கென்று ஏதுமில்லை. இருப்பினும், நான் செய்த பிழைகளால் பாபங்களால் எனக்கு இன்னும் பிறவிகள் உண்டாகுமானால், அந்தப் பிறவி தோறும், இல்லையென்று வந்தோர்க்கு இல்லையென்று உரைக்காமல் ஈயும் இயல்புடையவனாகவே என்னை நீ படைக்க வேண்டும் என்பதே உன்னிடம் நான் வேண்டும் வரம்” என்றான்.

”உன் மனோபீஷ்டம் பூர்த்தியாகட்டும்” என்று அந்த மாவீரனுக்கு வரமருளி, வற்றாத கருணையை அவன் மீது பொழிந்து, பின் மறைந்தருளினான் மகாவிஷ்ணு.

(கர்ணனே பின்னர் சிவபெருமானுக்கு பிள்ளைக்கறி படைத்த சிறுத்தொண்ட நாயனாராக அவதரித்தார் என்று கூறப்படுகிறது. ஆனால், அது குறித்து ஆதர்ப்போர்வமான தகவல் ஏதும் இல்லை!)

‘கர்ணன்’ திரைப்படத்தை பொறுத்தவரை பார்க்க, ரசிக்க, சிலாகிக்க, சிலிர்க்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. இந்த காவியத்தில் தோன்றும் ஒவ்வொருவரும் நமக்கு அள்ளித்தரும் விருந்து இருக்கிறதே… அந்த தேவலோகத்திலும் கிடைக்காத தீஞ்சுவை விருந்து.

முழு பகவத் கீதையையும் “மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா” என்னும் ஒரே பாடலில் கொண்டு வந்திருப்பார் கவியரசு கண்ணதாசன். காலத்தால் அழியாத இந்த காவியத்தை தற்போது டிஜிட்டல் வடிவத்தில் திரையரங்கில் பார்க்கும் பொன்னான வாய்ப்பு நமக்கு கிடைத்திருப்பது நாம் செய்த பாக்கியம். இந்த படத்தை பார்ப்பதன் மூலம் கர்ணன் என்கிற சரித்திரம் கடன் ஒப்பற்ற கொடையாளிக்கு மரியாதை செய்ய நமக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிட்டியுள்ளது என்பதே உண்மை!

தேர்வுகள் முடிந்து விடுமுறை தொடங்கிவிட்ட தருணம் இது. கர்ணனை உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் சென்று பார்ப்பதன் மூலம் விடுமுறைக்கு ஒரு அர்த்தம் கொடுங்கள்!

Don’t miss : நன்றி மறவா நல்லவர் ‘நடிகர் திலகம்’, மகா பெரியவாவை சந்தித்த அந்த தருணம்…!

=========================================================

Help us to run this website… 

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. 

==========================================================

Also check :

கொடையாளிகள் பலர் இருக்க கர்ணனுக்கு மட்டும் பெயரும் புகழும் கிடைப்பது ஏன்?

“ஒன்றென்றிரு.. தெய்வம் உண்டென்றிரு…” – ஏழிசை வேந்தர் திரு.டி.எம்.எஸ். அவர்களுடன் ஒரு பிரத்யேக சந்திப்பு!

மாளிகைகள் வரவேற்க தயாராக இருக்க, குடிசையை தேடி வந்த கண்ணன்

துன்பத்தில் இருந்து விடுபட கண்ணதாசன் காட்டும் வழி !

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் என்னும் இறைவன் வகுத்த நியதி!

கடவுளின் டிக்ஷனரியில் இரு வார்த்தைகள்

‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!

==========================================================

[END]

 

3 thoughts on “கர்ணன் கேட்ட வரம்!

  1. ஆம். காலத்தால் அழிக்க முடியாத திரை பொக்கிஷம் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. இது போன்று திரைக் காவியங்களை இன்றைய தலைமுறையினர் காணுமாறு நவீனப்படுத்தி வழங்குதல் மிக அருமை. இந்த தகவலை நமது தளம் மூலம் அளித்த திரு. சுந்தர் அவர்களுக்கு நன்றி.

  2. நல்ல தகவலுக்கு மிக்க நன்றி .இது வரை கர்ணன் படத்தை பார்க்காத அன்பர்கள் பார்த்து தம்மை செம்மை படுத்தி கொள்ள அருமையான தருணம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *