Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, May 20, 2024
Please specify the group
Home > Featured > ஆன்லைனிலும் அமேசானிலும் ‘கிடைக்காத’ ஒன்று !

ஆன்லைனிலும் அமேசானிலும் ‘கிடைக்காத’ ஒன்று !

print
ன்று எல்லாம் ஆன்லைன் மயமாகிவிட்டது. ரயில் ரிசர்வேஷன் முதல் ஃபோன் பில், கரண்ட் பில் கட்டுவது வரை எல்லாமே ஆன்லைன் தான். மருந்து, மளிகை சாமான்கள், ஏன் காய்கறிகளை கூட தற்போது ஆன்லைனில் வாங்க ஆரம்பித்திருக்கின்றனர் பலர்.

இப்படி எதற்க்கெடுத்தாலும் ஆன்லைனே தீர்வு என்று கணினிக்கும் ஸ்மார்ட் ஃபோனுக்கும் அடிமையாவது எந்தளவு சரி? இந்த சமூகம் எதை நோக்கிச் செல்கிறது? WIFI இல்லையென்றால் சிலருக்கு பைத்தியமே பிடித்துவிடுகிறது. இன்னும் பத்து வருடங்கள் கழித்து ஒரு நகர்ப்புற குடும்பம் எப்படி இருக்கும்? நினைத்துப் பார்க்கவே பயமாயிருக்கிறது.

இந்த பதிவு சரியான நேரத்தில் அடிக்கப்பட்டுள்ள அலாரம் என்றே வைத்துக்கொள்ளலாம். இந்த பதிவு உணர்த்தும் கருத்து மிக மிக முக்கியமானது.

ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் படிக்க நேர்ந்த ஒரு துணுக்குச் செய்தியே இந்தப் பதிவுக்கு இன்ஸ்பிரேஷன். சற்று மெருகூட்டி, விபரங்கள் சேர்த்து நமது பாணியில் தந்திருக்கிறோம்.

old age

மனுஷங்களுக்கு பதிலா ஏன் கம்ப்யூட்டர் கிட்டே பேசிகிட்டிருக்கனும்?

ன் மாமாவுடன் சுமார் ஒரு மணி நேரம் வங்கியில் இருந்தேன். அவருக்கு யாருடைய அக்கவுண்ட்டிலோ பணம் கட்டவேண்டியிருந்தது. அது அந்த நகரத்தில் சற்று ஒடுக்கமாயிருக்கும் தெருவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை.

அவர் பிள்ளைகள் எல்லாரும் அப்ராடில் இருக்கிறார்கள். இந்த வயதில் ஒரு சிறு தொகை கட்ட வீட்டிலிருந்து இத்தனை பிரயத்தனப்பட்டு அவர் வந்திருக்கவேண்டியதில்லை என்று தோன்றியது. இப்போது தான் எல்லாமே ஆன்லைனிலேயே செலுத்தும் வழக்கம் வந்துவிட்டதே.

“ஏன் மாமா நீங்க ஏன் இன்டர்நெட் பேங்கிங் ஆக்டிவேட் பண்ணிக்க கூடாது??” என்றேன் அவரைப் பார்த்து.

“ஏன் பண்ணனும்?”

“ஏன்னா நீங்க இந்த சின்ன TRANSACTION க்கு அவ்ளோ தூரம் வந்து இங்கே மணிக்கணக்கா நேரம் செலவு பண்ண வேண்டியதில்லை. எல்லாம் நெட் பேங்கிங்லேயே முடிச்சிடலாம். இப்போல்லாம் மளிகை சாமான் கூட ஆன்லைன்லேயே வாங்கிக்கிலாம். எதுக்கும் வெளியே போகவேண்டியதில்லை…”

இன்டர்நெட் பாங்கிங் பற்றி தெரியாத என் மாமாவைப் போன்ற அந்தக் காலத்து ஆசாமிகளுக்கு அது பற்றிய ஒரு அறிமுகத்தை கொடுத்தமைக்கு என் காலரை தூக்கிவிட்டுக்கொண்டேன்.

“ஓ… நான் இன்டர்நெட் பேங்கிங் யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டா எதுக்குமே வெளியே வர வேண்டியதில்லை… பேங்குக்கு எல்லாம் போக வேண்டிய அவசியமே இல்லை இல்லியா?”

“ஆமா அங்கிள்….”

அடுத்து செல்போன் முதல் பிரிட்ஜ் வாஷிங் மெஷின் வரை எப்படி ஆன்லைனில் வாங்கலாம் ட்ரெயின் டிக்கெட் ரிசர்வ் செய்யலாம் என்றெல்லாம் ‘ஆன்லைன் ஷாப்பிங்’ குறித்து லெக்சர் அடிக்க ஆரம்பித்தேன். அமேஸான் எப்படி புத்தகங்கள் முதல் பீரோ வரை டோர் டெலிவரி செய்கிறது என்று அவருக்கு விளக்கினேன்.

“கண்ணா… இந்த பேங்குக்கு இன்னைக்கு வந்ததுலே இருந்து என்னோட ஃப்ரெண்ட்ஸ் நாலு பேரை பார்த்து பேச சந்தர்ப்பம் கிடைச்சது. அந்த பேங்க் கிளார்க் கிட்டே நான் கொஞ்ச நேரம் பேசமுடிஞ்சது. அடிக்கடி இங்கே வர்றதால அவர் எனக்கு நல்லா பழக்கமாயிட்டாரு…”

நேத்து கரண்ட் பில் கட்டப்போனப்போ அங்கே கவுண்டர்ல இருக்குற பொண்ணு, தன்னோட கல்யாண பத்திரிக்கையை எனக்கு கொடுத்து ‘அவசியம் வந்திருந்து ஆசீர்வதிக்கனும்ப்பா’ன்னு கேட்டுக்கிட்டா. பக்கத்து ஊர்ல இருக்குற சொந்தக்காரங்களே அவங்கவங்க வீட்டு விஷேஷங்களுக்கு நேர்ல வந்து கூப்பிடாம வாட்ஸ்ஆப்ல மெசேஜ் அனுப்பி கூப்பிடுற இந்தக் காலத்துல இது எனக்கு எத்தனை சந்தோஷம் தெரியுமா?

என் பொண்ணோ பையனோ இப்போ என் கூட இல்லே. ஆளாளுக்கு ஒரு இடத்துல இருக்காங்க. அவங்க எப்போவாச்சும் ஒரு தரம் வந்துட்டு போறாங்க. ஆனா, எனக்கு இன்னைக்கு தேவை இவங்க கொடுக்குற இந்த ‘கம்பெனி’ தான்.

பேங்க்குக்கு வர்றதுக்காக வீட்லே இருந்து ரெடியாகி கிளம்பி வர்றது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த (PHYSICAL TOUCH) நேரடி தொடர்புக்காகத் தான் நான் ஏங்குறேன். அது இங்கே எனக்கு கிடைக்குது.

பரபரப்பான ஒரு மார்க்கெட் !
பரபரப்பான ஒரு மார்க்கெட் !

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி எனக்கு திடீர்னு உடம்பு முடியாம படுக்கையில கிடந்தேன். நான் டெய்லி மார்கெட் போய் காய்கறி வாங்குற காய்கறி கடைக்காரர் ஏன் சார் ரெண்டு நாளா வரலை தெரியலியேன்னு விசாரிக்க வீட்டுக்கே தேடி வந்துட்டார். என் கூட பத்து நிமிஷம் இருந்துட்டு போனார். எனக்கு அது எவ்ளோ ஆறுதலா இருந்துச்சு தெரியுமா?

வாரத்துக்கு ரெண்டு தடவை வீட்டுக்கு வந்து அயர்ன் பண்ண துணிகள் எடுத்துட்டு போற தெருமுனைக் இஸ்திரி கடைக்காரர்கிட்டே ஒரு அஞ்சு நிமிஷம் பேசுறதிலேயே பல உலக விஷயம் தெரிஞ்சிக்குவேன். நான் வீட்லேயே துணிகளை அயர்ன் பண்ணமுடியும். இருந்தாலும் நம்ம மூலமா அவருக்கு மாசம் ஏதோ ஒரு வருமானம் வருது.

ரெண்டு நாள் முன்னே உன் அத்தை காலைல கோவிலுக்கு போகும்போது அவளுக்கு திடீர்னு தலைசுத்தல் வந்திருக்கு. செல்போனை வேற மறந்து வீட்டுல வெச்சிட்டு போய்ட்டா. நல்லவேளையா நாங்க ப்ரொவிஷன் வாங்குற மளிகைக்கடை பாய் அந்தப் பக்கம் வர அவர் உடனே ஒரு ஆட்டோவுல அத்தையை ஏத்தி வீட்டுல வந்து விட்டுட்டு போனார்.

இந்த HUMAN TOUCH எனக்கு ஆன்லைன்ல கிடைக்குமா?

இதையெல்லாம் புறக்கணிச்சுட்டு ஏன் எல்லாத்தையும் நான் வீட்டுக்கு வரவழைக்கணும்? மனுஷங்களுக்கு பதிலா ஏன் கம்ப்யூட்டர் கிட்டே பேசிகிட்டிருக்கனும்??

நான் யார்கிட்டே டீல் பண்றேனோ அவங்களை தெரிஞ்சிக்க விரும்புறேன். புரிஞ்சிக்க ஆசைப்படுறேன்.

இது பிணைப்புக்களை உருவாக்கும்.

உறவுகளை வளர்க்கும்.

ஆன்லைனும் அமேசானும் இதெல்லாம் தருமா?

மாமா சொல்லிமுடிக்கும்போது யாரை என்ன எதாலோ அடிப்பது போலிருந்தது.

நம் பெற்றோர்கள் சரியான ஒரு BALANCED வாழ்க்கையைத் தான் வாழ்ந்திருக்கிறார்கள். நாம் தான் நாகரீகக் கோமாளிகள் போல தடம் மாறி அந்த வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.

நவீன தொழில்நுட்பத்தில் வாட்ஸ்ஆப்பில் நாம் அனுப்பும் புகைப்படங்களை நம் பெற்றோர்கள் ரசிக்கிறார்கள். அதே சமயம் மனிதர்களுடான தொடர்புகளை அவர்கள் விட்டுவதில்லை. அவர்கள் ஒருபோதும் தங்களது உணர்வுகளை இயந்திரங்களுடன் பரிமாறிக்கொள்வதில்லை.

நாம் ?

(வயதானவர்களுக்கு சௌகரியங்கள் மிக முக்கியம். அதே நேரம் MOBILITY அதைவிட முக்கியம். அந்த பெரியவரின் வார்த்தை யாருக்கு புரிகிறதோ இல்லையோ… பிள்ளைகளை பிரிந்து தனியாக வசித்துவரும் முதியவர்களுக்கு நன்கு புரியும். சௌகரியங்களை அதிகரித்து தருவதாக கூறி அவர்களை ஒரு இடத்தில் முடக்கக்கூடாது. அவர்கள் பழகக்கூடிய தாமாக போய்வரக்கூடிய இடங்களுக்கு போய்வரவேண்டும். இது அவர்கள் கவலையின்றி வைத்திருப்பதுடன் ஆயுளையும் நீட்டிக்கும்! உங்கள் பெற்றோருக்கு நீங்கள் ஏதேனும் தர விரும்பினால் உங்கள் நேரத்தைக் கொடுங்கள். வறுமையைவிட செழுமையும் தனிமையும் தான் பல முதியவர்களை வதைத்து வருகிறது என்பதே உண்மை!!)

========================================================

சில நாட்களுக்கு நாம் வெளியிட்ட ‘ஆட்டுக்குட்டிகளும் மன அமைதியும்’ கதையை யாரோ அப்படியே வரிக்கு வரி எடுத்து வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். நம் வாசகர்களுக்காக உயிரினும் மேலான உழைப்பில் விளைந்த பதிவு நம் தளத்தின் பெயரின்றி சுற்றிக்கொண்டிருக்கிறது. நிச்சயம் இங்கு வரும் யாரோ ஒருவர் தான் அதை செய்திருக்கவேண்டும். நம் தளத்தின் பதிவுகள் நம் தளத்தின் பெயர் இல்லாமல் பகிரப்படுவது சட்டப்படி குற்றம். சம்பந்தப்பட்டவர்கள் இத்தோடு இந்த வழக்கத்தை நிறுத்திக்கொள்ளவேண்டும். மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு நம்மை ஆளாக்கவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

========================================================

Help us to run this website… 

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. 

==========================================================

Also check :

“தயவுசெய்து மனைவியிடம் பேசுங்கள்!”- ஒரு கணவனின் வாக்குமூலம்!

“உறவுகளை மதிப்போம், அவர்கள் உணர்வையும் மதிப்போம்” 

நாலு பேருக்கு நல்லது செய்வதால் நமக்கு என்ன கிடைக்கப்போகிறது?

துன்பத்தில் இருந்து விடுபட கண்ணதாசன் காட்டும் வழி !

மறுப்பதும் ஒரு கலை, அதை அழகாக செய்வோமே!

நெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட பயன்படுத்தவேண்டாமே – MUST READ

ஆயிரங்காலத்து பயிர் படும் பாடு!

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? 

தவளையை கொன்றது எது?

==========================================================

[END]

4 thoughts on “ஆன்லைனிலும் அமேசானிலும் ‘கிடைக்காத’ ஒன்று !

 1. Excellent JI,

  Agree with you and the points mentioned here 100%.

  But, it is inevitable to share the other side of the coin.

  The way the employees of the leading bank and its services (!?) are troublesome as well as pathetic. In a way net banking saves time of the earning members of a family. For senior citizens they can go and spend time. Also I personally would advice them that they should go out carefully at convenient time.

  regards,
  Nagarajan Ekambaram

  1. வங்கிச் சேவைகளை பொருத்த வரை நீங்கள் கூறும் விஷயம் உண்மை. எல்லாவற்றிலுமே ஒரு ‘OTHER SIDE’ உண்டு. ஆனால், பெரியவர் உதாரணமாக கூறும் காய்கறிக் கடை, மளிகைக்கடை உதாரணங்களை நாம் மறுக்க முடியாதே? மெஷினிடம் பேசுவதைவிட மனிதர்களிடம் பேசுவதே சிறந்தது.

 2. ON LINE ல் உள்ள பாதிப்புகளை அறிந்தும் மக்கள் அந்த வழியை தான் நாடி செல்கின்றனர் .கையை சுட்டு கொண்டால் மட்டமே அவர்கள் மனம் மாறி நேரடியாக வங்கிக்கு செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வார்கள் . வங்கிக்கு நேரடியாக செல்வதால் நடப்பு விசயங்களை அறிந்து கொள்ளமுடியும் .

 3. நல்லதொரு அருமையான பதிவு.
  இன்றைய தலைமுறை வர்க்கம் இப்படித்தான் இருக்கிறது.
  அவர்களுக்கு நெத்தியடியாக ஒரு பதில் தான் இந்த பதிவு.
  எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் பார்ப்போம்.
  பேங்க்-ல் கூட கூட்டத்தை குறைக்க என்று சொல்லிக்கொண்டு அக்கௌன்ட் ஓபன் பண்ணும்போது எல்லா facility நாம் வேண்டாம் என்றல் கூட sms online tramsaction எல்லாம் தராங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *