எப்போதும் போல அந்த திங்கட்கிழமை காலை எனக்கு அருமையாகவே இருந்தது. அந்த செய்தியை என் கணினித் திரையில் பார்க்கும் வரை. “உங்கள் பாஸ்வேர்ட் காலாவதியாகிவிட்டது” – இப்படி ஒரு சர்வர் மெசேஜ் என்னுடைய கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் மின்னியது. பாஸ்வேர்டை நாமே உருவாக்குவது என்பது ஒன்றும் பெரிய கஷ்டமான காரியம் அல்ல. ஆனால் எங்கள் நிறுவனத்தில் அது ஒரு மகா டார்ச்சர்.
ஒவ்வொரு மாதமும் பாஸ்வேர்டை மாற்றச் சொல்லும் ஒரே நிறுவனம் எங்கள் நிறுவனமாகத்தான் இருக்கும். அதுவும் அதில் ஒரு கேப்பிடல் லெட்டர் இருக்கவேண்டும். ஒரு ஸ்மால் லெட்டர் இருக்கவேண்டும். ஒரு சிம்பல் இருக்கவேண்டும். ஒரு நம்பரும் இருக்கவேண்டும். அதுமட்டுமில்லை… பாஸ்வேர்ட் குறைந்தது எட்டு கேரக்டர்கள் இருக்கவேண்டும். அதுவும் அதை மாதாமாதம் மாற்றவேண்டும். முன்பு உபயோகித்த பாஸ்வேர்டை திரும்பவும் உபயோகிக்க முடியாது. அடபோங்கப்பா… சட்டை கசங்காம தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னே ரங்கநாதன் தெருவுக்குள்ளே கூட போயிட்டு வெளியே வந்துடலாம். ஆனா, இது மட்டும் பயங்கர கடுப்பான விஷயம். இது மாதிரி பாஸ்வேர்ட் சித்ரவதை அனுபவிக்கிறவங்களுக்கு தான் அந்த கஷ்டம் தெரியும். புரியும்.
திரையை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு பயங்கர கோபம். ஏற்கனவே என் சமீபத்திய விவாகரத்து எனக்கு ஏகப்பட்ட மன அழுத்தத்தை தந்துவிட்டிருந்தது. எனக்கு அவள் செய்த துரோகம் வேறு என் மனதில் அடிக்கடி தோன்றி என்னை வாட்டிக்கொண்டிருந்தது.
ஆனால் பாஸ்வேர்ட் கேட்டுக்கொண்டு மின்னிகொண்டிருந்த கம்ப்யூட்டருக்கு இதெல்லாம் தெரியுமா? அடுத்த 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் நான் ஒரு புது கடவுச் சொல்லை உருவாக்கி லாக் இன் செய்யவேண்டும்.
அப்போது தான் என் முன்னாள் பாஸ் ஒருவர் எனக்கு கொடுத்த டிப்ஸ்கள் நினைவுக்கு வந்தது. “என் வாழ்க்கையையே மாற்றக் கூடிய ஒரு பாஸ்வேர்டை நான் உபயோகிக்கப் போகிறேன்!” – இது தான் அவர் சொன்னது. அது என் நினைவுக்கு வந்தது.
நான் இப்போது இருக்கும் மூடில் என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. நிச்சயம் நான் வாழ்க்கையை எனது கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும். ஆனால் என்னால் முடியவில்லை. ஆனால், என் பாஸ்வேர்ட் அதை சாதித்தது. எனது சமீபத்திய திருமண முறிவு பிரச்னையில் நான் பலிகடாவாகிவிடக்கூடாது. என் வாழ்க்கை இத்தோடு முடிந்துவிடவில்லை. என்னால் இனி நிச்சயம் சாதிக்கமுடியும். இதை எனது பாஸ்வேர்ட் உணர்த்தியது.
நான் இப்போது இருக்கும் மூடில் என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. நிச்சயம் நான் வாழ்க்கையை எனது கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும். ஆனால் என்னால் முடியவில்லை. ஆனால், என் பாஸ்வேர்ட் அதை சாதித்தது. எனது சமீபத்திய திருமண முறிவு பிரச்னையில் நான் பலிகடாவாகிவிடக்கூடாது. என் வாழ்க்கை இத்தோடு முடிந்துவிடவில்லை. என்னால் இனி நிச்சயம் சாதிக்கமுடியும். இதை எனது பாஸ்வேர்ட் உணர்த்தியது.
நான் செட் செய்த பாஸ்வேர்ட் என்ன தெரியுமா?
4give@her.
மேற்கூறிய இந்த பாஸ்வேர்டை நான் என் கம்ப்யூட்டர் லாக் ஆகும்போதெல்லாம் ஒரு நாளைக்கு பல முறை டைப் செய்யவேண்டியிருந்தது. ஒவ்வொரு முறையும் நான் மதிய உணவு முடித்துவிட்டு வரும்போது ‘4give@her – அவளை மன்னித்துவிடு’ என்று டைப் செய்யவேண்டியிருந்தது.
இந்த ஒரு சின்ன செயல், என் முன்னாள் மனைவியை நான் பார்க்கும் விதத்தை மாற்றியமைத்தது. மேலும் தொடர்ந்து செய்து வந்த இந்த இணக்கமான செயல், நடந்ததை ஏற்றுகொள்ள மனதை பழக்கப்படுத்தியது மாத்திரமல்லாது, என் மன அழுத்தத்திலிருந்து நான் மீண்டு வர எனக்கு பெரிதும் உதவியது.
அடுத்த மாதம் நான் செட் செய்த பாஸ்வேர்ட் அடுத்து நான் செய்யவேண்டிய மிகப் பெரிய பணியை அடிக்கடி நினைவூட்டும் விதமாக அமைத்துக்கொண்டேன்.
‘Quit@smoking4ever’
ஒரு நாளைக்கு பல முறை மேற்படி பாஸ்வேர்டை உபயோகிக்க நேர்ந்ததால், புகைப்பிடிப்பதை நிறுத்தவேண்டும் என்கிற எனது லட்சியத்துக்கு உறுதுணையாக இருந்து நான் நிரந்தரமாக புகைப்பிடிப்பதை நிறுத்த வழி செய்தது.
அடுத்த மாதம் என் பாஸ்வேர்ட் என்ன தெரியுமா?
‘Save4trip@europe’
பாஸ்வேர்ட் கூறிய படி மூன்று மாதத்தில் என்னால் ஐரோப்பா செல்ல முடிந்தது.
என்னுடைய வாழ்க்கையை நான் உபயோகிக்கும் ஒரு சாதாரண ‘கடவுச்சொல்’ (பாஸ்வேர்ட்) எப்படி மாற்றியிருக்கிறது பார்த்தீர்களா?
சிலநேரங்களில் நமது லட்சியங்களை நாம் அடைய கடுமையாக போராடவேண்டிய சூழ்நிலை வந்தால், இது போன்ற ஒரு எளிய அணுகுமுறை மிகப் பெரிய பலனை – கற்பனைக்கும் எட்டாத பலனை கொடுக்கும்.
சிலநேரங்களில் நமது லட்சியங்களை நாம் அடைய கடுமையாக போராடவேண்டிய சூழ்நிலை வந்தால், இது போன்ற ஒரு எளிய அணுகுமுறை மிகப் பெரிய பலனை – கற்பனைக்கும் எட்டாத பலனை கொடுக்கும்.
சில மாதங்கள் கழித்து நான் தேர்வு செய்த பாஸ்வேர்ட் என்ன தெரியுமா?
‘lifeis#beauTiful’
நிச்சயம் மறுபடியும் என் வாழ்க்கை ஒரு நல்ல மாற்றத்தை சந்திக்கும் என்பதை நான் சொல்லவேண்டுமா என்ன?
(நமது நண்பர் ஒருவர் வாட்ஸ்ஆப்பில் ஆங்கிலத்தில் அனுப்பிய கட்டுரையை தமிழில் நமது பாணியில் மொழி பெயர்த்து தந்திருக்கிறோம்.ஒரிஜினல் ஆங்கில எழுத்துரு இறுதியில் அளிக்கப்பட்டுள்ளது.)
===============================================================================
அடா..அடா… என்ன ஒரு அருமையான பகிர்வு பார்த்தீர்களா நண்பர்களே? இந்த ஒரு பகிர்வுக்குள் தான் எத்தனை எத்தனை பாடங்கள்… திரும்ப திரும்ப திரும்ப திரும்ப படித்துக்கொண்டே இருந்தோம். முடிக்கும்போது அவர் சொல்லியிருக்கும் ‘lifeis#beauTiful’ என்ற வார்த்தையில் தான் எத்தனை ஆழம்… !
விவேகானந்தர் 39 ஆண்டுகள் வாழ்ந்து சொன்னதையும் திருவள்ளுவர் 1330 குறட்பாக்கள் மூலம் சொன்னதையும் இந்த ஒரு சின்ன கடிதத்தில் மேற்படி முகம் தெரியாத நண்பர் சொல்லிவிட்டாரே…! அவருக்கு நம் இதயங்கனிந்த நன்றிகள். பாராட்டுக்கள்.
இந்த உலகம் செல்வந்தர்களுக்கோ பன்னாட்டு நிறுவனத்தில் பல லட்சம் சம்பளம் பெற்று கொண்டிருப்பவர்களுக்கோ சொந்தம் அல்ல. நம்பிக்கையும் நேர்மறையான சிந்தனையும் கொண்டவர்களுக்கே இந்த உலகம் சொந்தம்.
இந்த உலகம் செல்வந்தர்களுக்கோ பன்னாட்டு நிறுவனத்தில் பல லட்சம் சம்பளம் பெற்றுகொண்டிருப்பவர்களுக்கோ சொந்தம் அல்ல. நம்பிக்கையும் நேர்மறையான சிந்தனையும் கொண்டவர்களுக்கே இந்த உலகம் சொந்தம்.
அதை மெய்பிக்கிறது இந்த பகிர்வு.
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின். (குறள் 96)
நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும்!!
===============================================================================
Original English transcript of the same I got…
Must read
How a Password Changed my Life …
(A true story from the Reader’s Digest )
I was having a great morning until I sat down in front of my office computer. “your password has expired”, a server message flashed on my screen, with instructions for changing it. Coming up with a new code doesn’t seem like a big deal, unless you work at my company, where we have to change it monthly, using at least one uppercase character, one lower case character, one symbol and one number. Oh and the password can’t be fewer than eight characters. And I can’t use any of the same passwords I’ve used in the past three months.
Suddenly I was furious. What didn’t make it any better was that I was deeply depressed after my recent divorce. Disbelief over what she had done to me was what I thought all day.
That didn’t mean anything to the empty field with the pulsating cursor, waiting for me to type a password that I have to re-enter many times – for the next 30 days. I remembered a tip I’d heard from my former boss. He’d said, “I’m going to use a password that is going to change my life”. I couldn’t focus on getting things done in my current mood. There was clear indication that I needed to regain control over my life, but I couldn’t heed them. My password became the indicator. My password reminded me that I shouldn’t let myself be a victim of my recent breakup and that I was strong enough to do something about it.
I made my password – 4give@her. I had to type this password several times every day, each time my computer would lock. Each time I came back from lunch I wrote forgive her. The simple action changed the way I looked at my ex-wife. That constant reminder of reconciliation led me to accept the way things happened and helped me deal with my depression. As one month wore on, I felt a slow healing began to take place. By the time the server prompted me to change my password following month, I felt free.
The next time I had to change my password I thought about the next thing that I had to get done. My password became Quit@smoking4ever .
It motivated me to follow my goal and I was able to quit smoking.
One month later, my password became Save4trip@europe, and in three months I was able to visit Europe.
Seeing how reminders helped me materialize my goals kept me motivated and excited. While its sometimes difficult to come up with your next goal, keeping at it brings great results.
After a few months my password was
lifeis#beauTiful !!!
Life is going to change again
===============================================================================
வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு !
கடந்த இரண்டு மாதங்களாக VOLUNTARY SUBSCRIPTION எதிர்பார்த்த அளவு வரவில்லை என்பதை இங்கே வருத்தத்துடன் பதிவு செய்கிறோம். இதே நிலை நீடித்தால் தளத்தை தொடர்ந்து நடத்துவது என்பது சிரமமே. இந்த தளத்தால் உங்களுக்கு ஏதேனும் பயனோ நன்மையோ இருப்பதாக கருதினால் வாசக அன்பர்கள் அவர்களால் இயன்ற தொகையை மனமுவந்து விருப்ப சந்தாவாக அளித்து தளம் தொய்வின்றி தொடர உதவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். தினசரி குறைந்தது 5000 பேர் நம் தளத்தை பார்த்து வருகிறார்கள். ஆனால விருப்ப சந்தா செலுத்துபவர்கள் 22 – 25 பேர் தான். நமக்கு விருப்ப சந்தாவானது அதிகரித்தால் அது அலுவலக வாடகை, கரெண்ட் பில், உள்ளிட்ட நமது செலவினங்களுக்கு உபயோகமாய் இருப்பது மட்டுமல்லாமல் அது மேலும் மேலும் நமது சேவையை செம்மைப்படுத்தி பதிவுகளின் தரத்தை, வகையை உயர்த்த, நமது பணியை விரிவுபடுத்த உறுதுணையாய் இருக்கும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறோம். பிரதிமாதமோ அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது LIFE TIME சந்தாவோ அவரவர் சௌகரியத்திற்கேற்ப உதவிக்கரம் நீட்டி சேவை சிறக்க உதவுங்கள். நன்றி!!
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
===============================================================================
Also check for more motivational stories :
விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?
நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?
‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’
எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –
வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?
பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?
சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?
இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?
நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!
அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?
நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!
மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?
===============================================================================
[END]
ஆம்! மிகச் சிறந்த உண்மை. நம் வாழ்க்கை நம் கையில்தான் இருக்கிறது. அதனை விட்டு பிறரை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை.
மிகவும் அருமையான பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல
‘ONCE U REPLACE NEGATIVE THOUGHTS WITH POSITIVE ONES , U WILL START HAVING POSITIVE RESULTS’- BY WILLIE NELSON
மாத நாளிதழும், வார நாளிதழும் வாங்கினாலே மாதம் 300 ரூபாய் ஆகிறது. இந்த தளத்தின் மூலம் நாம் பல அறிய விசயங்களை தெரிந்து கொள்கிறேம். நமக்கு இந்த தளம் ஒரு ready reckoner .
நம் தளம் தொய்வின்றி செயல் பட அனைவரும் தோள் கொடுப்போம்.
நன்றி
உமா வெங்கட்
வாழ்க ….வளமுடன்
உமா வெங்கட்
வணக்கம் சுந்தர் சார்
மிகவும் அருமையான பதிவு சார்
நன்றி
Nice one..
நம் வாழ்க்கை நம் கையில்… சிறு சிறு விஷயங்களையும் நேர்மறையாக அணுகினால் போதுமே…