Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

print
துவரை நாம் எத்தனையோ தன்னம்பிக்கை அளிக்கும் குட்டிக் கதைகளை படித்திருக்கிறோம். கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இது அவற்றுள் ஒரு மிகச் சிறந்த கதை என்று கூறலாம். இந்தக் கதையை நீங்கள் முகநூலிலோ அல்லது வேறு எங்கோ படித்திருக்கலாம். படித்தவுடன் மறந்தும் இருக்கலாம். இந்த கதை மறக்கக்கூடிய கதை அல்ல. அடிக்கடி நாம் நமக்குள் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டிய ஒரு கதை. (முகநூலில் நல்லது நான்கை ஃபாலோ செய்தால், அல்லது நானூறு அல்லவா பலர் ஃபாலோ செய்கிறார்கள்? நல்லது எப்படி மனதில் தங்கும்? தேவையற்ற, மலிவான உணர்ச்சியை தூண்டக்கூடிய, உங்கள் நேரத்தை விரயமாக்கூடியவற்றை இன்றே UNFOLLOW செய்யுங்கள்.)

சரி… தொடங்கிய விஷயத்திற்கு வருகிறோம்.

வாய்ப்புகள் விலகினால் கவலை வேண்டாம்…

வெங்காய வியாபாரி

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் பணியாளராக ஒருவர் பணியாற்றிக்கொண்டிருந்தார். அந்த நிறுவனத்துக்கு, புதிதாக நியமிக்கப்பட்ட மேலாளர், அங்கு பணிபுரியும் அனைவரின் இ–மெயில் முகவரியையும், கேட்டார். கம்ப்யூட்டர் பற்றி ஏதும் தெரியாத அந்த தரை துடைக்கும் பணியாளருக்கு இ–மெயில் முகவரி கிடையாது. எனவே, தனக்கு, இ–மெயில் முகவரி இல்லை என்று மேலாளரிடம் அவர் தெரிவித்துவிட்டார்.

Floor Cleaning‘‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவருக்கு இ–மெயில் இல்லை என்றால், எப்படி?’’ என்று கூறி, அந்த பணியாளரை வேலையிலிருந்து நீக்கிவிட்டார். வேலை இல்லை என்றதும், அந்த மனிதருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தனது சேமிப்பில் இருந்த ஆயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு, சந்தைக்கு சென்று வெங்காயம் வாங்கினார். அதனை குடியிருப்பு பகுதிகளுக்குஎடுத்துச்சென்று, கூவிக்கூவி விற்றார்.

இ–மெயில் முகவரி

சில ஆண்டுகளில், பெரிய வெங்காய வியாபாரியாக ஆகிவிட்டார். இந்த சூழ்நிலையில், ஒரு வங்கியில் கணக்கு துவக்குவது தொடர்பாக வங்கி ஊழியர் அந்த வெங்காய வியாபாரியை சந்தித்தார். கணக்கு துவங்குவதற்கான விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்துவிட்டு, இ–மெயில் முகவரியை எழுதுவதற்காக முகவரியை கேட்டார். அதற்கு அந்த மனிதர், தனக்கு கம்ப்யூட்டர் பற்றி ஏதும் தெரியாது என்றும், எனவே இ–மெயில் முகவரி இல்லை என்றும் பதில் அளித்தார்.

உடனே அந்த வங்கி ஊழியர், ‘‘இ–மெயில் இல்லாமலேயே இந்தக்காலத்தில் இவ்வளவு முன்னேறி இருக்கிறீர்களே? உங்களுக்கு கம்ப்யூட்டர், இ–மெயில், இன்டர்நெட் ஆகியவை தெரிந்திருந்தால், எந்த அளவுக்கு முன்னேறி இருப்பீர்களோ!’’ என்று ஆச்சரியமாக கேட்டார். உடனே, அந்த வெங்காய வியாபாரி, ‘‘அது தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக்கொண்டிருப்பேன்” என்றார்.

வருத்தப்படாதீர்கள்

எனவே, வாய்ப்புகள் உங்களை விட்டு விலகிச்செல்லும் போது வருத்தப்படாதீர்கள். முயற்சி செய்யுங்கள். அதைவிட பெரிய வாய்ப்பு உங்களை தேடி வரும்.

நாமறிந்தவரையில் வாழ்வில் அசாத்திய வெற்றி பெற்றோர் பலர் இந்த கதையில் வரும் வியாபாரியை போலத் தான். நாமெல்லாம் மிக மிக முக்கியம் என்று கருதும் ஒரு தகுதி இவர்களுக்கு கிடைக்காமலே போயிருக்கும். “சரி என்ன செய்றது அதுக்கு இப்போ? அதுனால உலகம் இருண்டுடுமா என்ன? எனக்குன்னு உரியது எனக்கு எப்போவும் உண்டு. அதுக்காக உழைப்பேன்” என்பதே இவர்களின் கருத்து. அதுவே ஏன் நம் கருத்தாகவும் இருக்கக்கூடாது?

அடுத்த முறை மிகப் பெரிய வாய்ப்பு ஒன்று உங்களைவிட்டு நழுவி அதனால் நீங்கள் ஏமாற்றமடைந்தால், இந்தக் கதை உங்கள் நினைவுக்கு வரவேண்டும்…. ஒ.கே.?

[END]

10 thoughts on “நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

  1. உண்மையில் இந்த கதையை எங்கோ படித்திருக்கின்றேன் …மீண்டும் மீண்டும் படித்தாலும் சிந்தனைக்குரியது …நினைவுபடுத்தியதற்கு நன்றிகள்..

  2. அன்பு சகோதரா
    தன்னம்பிக்கைக்கும் தளரா மனதிற்கும் அவமானங்களை அஸ்திவாரமாய் எடுத்துக் கொள்வதற்கும் இதை விட ஒரு சிறந்த உதாரணம் தேவை இல்லை….மிக நல்ல பதிவு ..வாழ்க வளமுடன்…_/|\_

  3. Good moral story. தங்களுடைய புத்தாண்டு பதிவுகளை எதிர் பார்த்து காத்து கொண்டிருக்கிறோம்.

    1. இப்போது தான் எழுத ஆரம்பித்திருக்கிறேன். இரண்டொரு நாளில் முடித்துவிடுவேன். உங்களுக்கே தெரியும்… புத்தாண்டு பதிவை பொருத்தவரை நிறைய விஷயங்களை எழுதவேண்டும். அதற்க்கு ஏற்றார்போல DISTURBANCE இல்லாத ஒருங்கிணைந்த நேரம் கிடைப்பது கஷ்டமாயிருக்கிறது. எப்படியோ விரைவில் அளிக்க முயற்சிக்கிறேன்.

      – சுந்தர்

  4. தன்னம்பிக்கை தரும் நல்லதொரு பதிவு.
    நானும் இந்த கதையை படித்துள்ளேன். மீண்டும் படிக்க செய்ததற்கு நன்றி.

  5. சுந்தர்ஜி
    நமக்கு இப்போதைக்கு மிக முக்கியமான பொருத்தமான கதை இது தான். நாம் வாழ்வில் சந்தித்த இழப்புகள் யாவும் மிக ஒரு நல்ல நிலையினை பெறத்தான் என்று நினைக்கும் போது இழப்புகளை நல்லதாகவே எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் வரும். ஆனால் இந்த மனப்பக்குவம் நம் தளத்தை படித்துதான் எமக்கு கொஞ்சம் வந்திருக்கிறது என்றால் மிகையில்லை.

    இன்றைய நிலையில் இந்த பதிவு எமக்கு மிகவும் ஆறுதல் தருகிறது. கடந்த மூன்று நாட்களாக குரு சரித்திரம், குரு மகிமை , குரு கட்டளைகள் என முத்துக்களாக அள்ளி தந்த உங்களுக்கு அந்த குரு மூலமே குரு வாரமான இன்று என் மனமார்ந்த நன்றி. வாழ்க வளமுடன்!

  6. Dear Sundarji
    I have already read this story. Anyhow, its look like a new story while reading in this site. Today morning also, I told my son that he has lost a good opportunity during last year. He told me that ma, don’t think about the past.
    After reading this, I have changed my mind that he will get the best one. Thank u for encouraging us to put such a wonderful article.
    Regards
    Uma

  7. அன்பு சார்,

    இந்த கதை நன்கு உள்ளது. பாராட்டுக்கள்.

    அன்புடன்,
    ஜீவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *