Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > ‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

print
ன்றைக்கு பெரும்பாலானோரிடம் உள்ள பிரச்சனை, கேள்வி, “வாழ்க்கையை எப்படி எடுத்துக்கொள்வது? எப்படி வாழ்வது?” என்பது தான். ஏனென்றால், தீவிர இறை நம்பிக்கை கொண்டு தெய்வத்துக்கு பிடித்தமான ஒரு வாழ்க்கையை வாழ்பவர்கள் கூட பல நேரங்களில் சோதனைகளை சந்திக்கிறார்கள். வெறுத்துப் போய்விடுகிறார்கள். ஒரு விஷயத்தை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். நாம் யாரும் கடவுள் அல்ல. மனிதர்கள். இறைவன் ஒருவனுக்கு தான் நினைப்பது நடக்கும். ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’ என்று கண்ணதாசன் கூறியதில் ஆழமான பொருள் ஒன்று உண்டு. அதாவது தெய்வத்துக்கு தான் நினைப்பதெல்லாம் நடக்கும். மனிதனுக்கல்ல.

“சரி… அப்போது எப்படித் தான் வாழ்வது?” என்ற கேள்வி கேட்பவர்களுக்கு தான் இந்த பதிவு.

ஆண்டவனிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு வாழ்வு!

ஆண்டவனிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை நாம் வாழ்வதன் மூலம் மனநிம்மதி பெறலாம். இலக்கையும் அடையலாம்.

“நாம ஒழுங்காத்தானே இருக்கோம். யாருக்கும் எந்த கெடுதலும் செஞ்சதில்லை. மனசறிஞ்சி ஒரு பாவமும் செய்யலே. அப்புறம் நமக்கு ஏன் இப்படி நடக்குது?” என்று கடந்த காலங்களில் சோதனையான நேரங்களில் நாம் குழம்பித் தவித்ததுண்டு. நடக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கும். சிலவற்றுக்கு காரணம் உடனே புரிந்துவிடும். சிலவற்றுக்கு என்ன யோசித்தாலும் புரியாது. சில சந்தேகங்களுக்கெல்லாம் பல ஆண்டுகள் கழித்து தான் நமக்கு விடை கிடைத்தது.

God Plan

இன்றைக்கு நீங்கள் பார்க்கும் ‘ரைட்மந்த்ரா.காம்’ என்கிற இந்த PRODUCT அந்த சோதனைகளின் முடிவில் கிடைத்த ஒரு பொருள். அந்த சோதனைகள் இல்லையேல் இன்று நாம் இல்லை. கடந்த காலங்களில் நாம் கேட்ட பல விஷயங்களை இறைவன் தர மறுத்துவிட்டான். ஒருவேளை அவன் தந்திருந்தால், ஐயோ இப்போது நம் நிலை எப்படி இருக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கமுடியாது. காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும்படியான ஒரு வாழ்க்கையை நாம் வாழ்ந்துகொண்டிருப்போமா என்பது சந்தேகமே.

அதேபோல, நாம் மிகவும் விரும்பிய ஒன்று நமக்கு கிடைக்கவில்லை. நாம் ஏமாற்றப்பட்டோம் என்று அறிந்தபோது, அந்த நேரம் நாம் நம் சோகத்தை இறக்கி வைத்த ஒருவருக்கு தான் தெரியும், எந்தளவு நாம் துடித்திருப்போம் என்று. ஆனால் இப்போது இன்று உணர்கிறோம்: “எல்லாம் நன்மைக்கே. மிக மிக நன்மைக்கே!”

அது ஒருவேளை நடந்திருந்தால், நம் நிலை இன்று….. ??

நல்லவேளை அந்த விபத்து நிகழவில்லை. (நல்லவேளை… நான் பிழைத்துக்கொண்டேன்!). கடவுள் தான் நம்மை காப்பாற்றினார் என்று சொல்லவேண்டும்.

நாம் சந்தித்த (சந்திக்கும்) ஏமாற்றங்களை, அவமதிப்புக்களை வேறு யாரேனும் சந்திக்க நேர்ந்தால் இந்நேரம் இருக்கும் இடம் தெரியாமல் போயிருப்பார்கள். ஆனால், JUST LIKE THAT எல்லாவற்றையும் ஆடையில் ஒட்டிய தூசியை போல தட்டிவிட்டு, இப்படி ஒரு பதிவு எழுதக் கூடிய நிலையில் இருக்கிறோம் என்றால் இறைவன் மீதுள்ள புரிதல் தான்.

இறைவன் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது.

நாம் கேட்பது, நாம் விரும்புவது, நமக்கு நல்லதைத் தான் தரும், நல்லதைத் தான் செய்யும் என்று நமக்கு எப்படி தெரியும்? இறைவன் ஒருவனுக்குத் தான் தெரியும். எனவே எது நடந்தாலும், “இது உன் விருப்பப்படி நடக்கிறது!” என்று பகவானிடம் பலாபலன்களை சமர்பித்துவிட்டு வாழ்ந்தால் நாம் மன அமைதி பெறலாம் என்பது மட்டுமில்லை… என்ன நடந்தாலும் அனைத்தும் நன்மையிலேயே முடியும்.

Choicxe

நாம் நேர்வழியில் சென்றுகொண்டிருக்கிறோம். இறைவனிடம் உன்னதமான பக்தி செலுத்திவருகிறோம். அப்படியிருந்தும் நாம் சோதனைகளை துன்பங்களை சந்திக்கிறோம் என்றால், இறைவனின் விருப்பம் அது தான் எனக்கருதி எதற்கும் அலட்டிக்கொள்ளாமல், “உன் விருப்பம் அதுவானால் ஏற்றுக்கொள்கிறேன் இறைவா!” என்று அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு நாம் பாட்டுக்கு போய்க் கொண்டேயிருக்கவேண்டும். இடையிடையே நாம் பாதை மாறினாலும், தடம் புரண்டாலும் மீண்டும் நேர்க்கொட்டுக்கு நம்மை கொண்டு வந்து நிறுத்திவிடுவான் இறைவன்.

இறைவனிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு எதற்கும் கலங்காமல் நேர்வழியில் தாங்கள் பாட்டுக்கு போய் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இறைவனை பற்றிய புரிதல் இல்லாமல், சோதனைகளால் மனம் வெறுத்து போய் மனசாட்சிக்கு விரோதமாக பாதை மாறுகிறவர்கள், திரும்பவும் நேர்கோட்டுக்கு வரவே முடியாது. அதலபாதளத்தில் பாயும் காட்டாறு மீது மரக்கலத்தில் பயணிப்பது போல பயணம் சுலபமாக வேகமாகத் தான் இருக்கும். ஆனால் பாதாளத்தில் போய்விழுந்து உதவிக்கு எவரும் இன்றி தவிக்கும்போது தான் நமது தவறு நமக்கு புரியும். ஆனால், THEN IT WILL BE TOO LATE.

tumblr_m2naiysNkq1r89fhko1_500கடவுளிடம் ஒப்படைத்த ஒரு வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு இந்த கவலையோ பயமோ தேவையில்லை. நீங்கள் விழுவதற்கு முன்பு இறைவன் உங்களை தூக்கி போட்டுவிடுவான். அதாவது காப்பாற்றப்பட்டுவிடுவீர்கள்.

உங்கள் விருப்பப்படி அனைத்தும் நடக்கவில்லையே என்ற ஏங்குவதற்கு பதில் கடவுளின் விருப்பப்படி அனைத்தும் நடக்கிறது என்று ஏற்றுக்கொள்ள உங்கள் மனதை பழக்கப்படுத்துங்கள்.

உங்களை முழுமையாக இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு சுறுசுறுப்புடன் உங்கள் கடமைகளை செய்துவாருங்கள். மிகச் சிறந்த எதிர்காலம் அமைவதோடு, மனநிம்மதியும் கிடைக்கும். இது சத்தியம்.

“பாவம் சாமிக்கு சித்தம் கலங்கிப் போச்சு போல…”

ந்த ஊரில் ஒரு வயது முதிர்ந்த சன்னியாசி வாழ்ந்து வந்தார். பன்னெடுங்காலமாக அந்த ஊரிலேயே அவர் வசித்து வந்ததால் மூன்று நான்கு தலைமுறைகளாக அவரை அவ்வூர் மக்களுக்கு தெரியும். தம்மை நாடிவரும் மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்வது, அருளாசி வழங்குவது, குழந்தைகளுக்கு நீதிக் கதைகள் மற்றும் பக்தி கதைகள் சொல்வது, நோய்களுக்கு இலவசமாக மருந்து கொடுப்பது என அளப்பரிய சேவைகளை அவர் செய்து வந்தார். காலப்போக்கில் முதுமை காரணமாக அவரால் சுயமாக எதுவும் செய்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. குளிப்பது, சாப்பிடுவது என அன்றாட பணிகளை செய்ய சன்னியாசி சிரமப்பட்டார். இந்நிலையில் ஊர் பஞ்சாயத்தார் ஒன்று கூடி ‘காலங்காலமாக நம் ஊருக்கு நன்மைகளை செய்து வந்த சன்னியாசியை முதுமையில் நாம் தவிக்கவிடக்கூடாது. வீட்டுக்கொருவர் தினமும் சென்று கவனித்துகொள்ளவேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றினர். அனைவரும் அதற்கு ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து வீட்டுக்கொருவர் தினமும் சென்று அந்த முதிர்ந்த சன்னியாசிக்கு மகிழ்ச்சியோடு பணிவிடைகள் செய்துவந்தனர்.

ஒரு நாள் திடீரென்று ஒருவித நோய் பரவி, கால்நடைகள் எல்லாம் மடிந்துவிட்டன. அம்மக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஊரில் வசித்த சன்னியாசியிடம் சென்று அழுது புலம்பினர். “இது கடவுளின் விருப்பம் போல… கவலைப்படாதீர்கள்!” என்றார்.

“என்ன இது…. ஆடு மாடுகள் எல்லாம் செத்துப் போச்சி… இவர் கடவுளின் விருப்பம்!” என்கிறாரே என்று குமைந்தனர் மக்கள்.

அடுத்து கடுமையான பஞ்சம் பீடித்தது. மாதக்கணக்கில் நீடித்து வந்த பஞ்சத்தால் பலர் வீட்டில் அடுப்பெறிந்தே பல வாரங்களானது. எங்கெங்கோ வெளியூர்களுக்கு என்று சமைத்த உணவை யாசகம் பெற்று வந்தனர் மக்கள்.

சன்னியாசியிடம் சென்று முறையிட்டனர்.

“இது கடவுளின் விருப்பம் போல… கவலைப்படாதீர்கள்!” என்றார் இம்முறையும்.

“பாவம் சாமிக்கு சித்தம் கலங்கிப் போச்சு போல…” என்று பரிதாபபட்டுக்கொண்டே சென்றனர் மக்கள்.

ஒரு கட்டத்தில் வீட்டில் மாலையானால் விளக்கெரிக்க கூட பலர் வீட்டில் எண்ணைக்கு வழியில்லாது இருளிலேயே காலம் கழித்தனர்.

Lucky vs very lucky

ஒரு நாள் இரவு, நூற்றுக்கணக்கான கொள்ளையர்களை கொண்ட ஒரு பெரும் கொள்ளையர் கூட்டம் கிராமத்தை சூழ்ந்தது. துப்பாக்கிகளுடன் குதிரைகளில் வரும் அவர்கள் தாங்கள் டார்கெட் செய்யும் ஊர்களுக்குள் சூரியன் மறைந்தவுடன் புகுந்து பொருட்களை சூறையாடி, கால்நடைகளையும் இளம்பெண்களையும் தூக்கிக்கொண்டு சென்றுவிடுவது வழக்கம்.

ஆனால், வழக்கத்திற்கு மாறாக அந்த கிராமத்தில் ஒரு நாயின் குரைப்பு சத்தமோ, ஆடு மாடுகளின் ‘ம்மே’ சத்த உட்பட எதுவுமே கேட்காதது கண்டு குழம்பினர். ஆங்காங்கே கிடந்த கால்நடைகளின் எலும்புக்கூடுகளை வைத்து பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட கிராமம் என்பதை புரிந்துகொண்டனர். மேலும் கிராமமே இருள் சூழ்ந்து காணப்பட்டமையால், மக்கள் விட்டு ஓடிப்போய்விட்ட இந்த கிராமத்தில் என்ன கிடைக்கப்போகிறது பேசாமல் வேறு இடத்தை தேடிச் செல்லலாம் என்று அந்த ஊருக்குள் நுழையாமல் அப்படியே திரும்ப சென்றுவிட்டனர்.

மறுநாள் இதை தெரிந்துகொண்ட கிராம மக்கள் தாங்கள் குரூரமான ஒரு கொள்ளைகூட்டத்திடமிருந்து தப்பியதை எண்ணி வியந்தனர். ஒருவேளை, கிராமம் செல்வச் செழிப்போடு முன்புபோல இருந்திருந்தால் அனைத்தும் கள்வர்களிடம் பறிபோய், தங்கள் வீட்டுப் பெண்களையும் இழந்திருக்க வேண்டியிருந்திருக்கும் என்பது அவர்களுக்கு உறைத்தது.

நேரே சன்னியாசியிடம் சென்று அவர் கால்களில் வீழ்ந்து, “சாமி… இது கடவுளின் விருப்பம் போலன்னு நீங்க சொல்லும்போது நாங்க கோவப்பட்டோம். ஆனா இன்னைக்கு தான் புரியுது. எங்களை மன்னிச்சிடுங்க…” என்றனர்.

“இதுவும் கடவுளின் விருப்பம் போல… கவலைப்படாதீர்கள்!” என்றார் இம்முறையும்.

விரைவில் மழை பொழிந்து பஞ்சம் நீங்கி இயல்பு நிலைக்கு திரும்பியது கிராமம்.

நடப்பது எல்லாம் இறைவன் விருப்பமே என்று நினைத்தால் துன்பம் தரக்கூடிய செயல் எதுவும் இல்லை.

=====================================================================

இந்த பதிவில் காணப்படும் ‘இறைவனிடம் ஒப்படைக்கப்பட்ட வாழ்க்கை’ தத்துவத்தை வேறொரு கோணத்தில் விளக்கும் பதிவு ஒன்று ஏற்கனவே நமது தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதையும் ஒரு முறை படியுங்கள். (சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம் – MONDAY MORNING SPL 34)

நமது தளத்தில் வெளியாகும் MONDAY MORNING SPL பகுதி சில பல காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் அந்த பகுதி துவங்கும். அதுவரை இது போன்ற சுயமுன்னேற்ற பதிவுகள் அடிக்கடி வெளிவரும்.

சுயமுன்னேற்றக் கருத்துக்களை அடிக்கடி படித்து மனதை ஃப்ரெஷ்ஷாக வைத்துக்கொள்ளவேண்டும். தினமும் உடலில் அழுக்கு சேர்வதால் எப்படி தினசரி குளிக்கிறோமோ அதே போன்று நல்ல கருத்துக்களை படித்து மனதை அடிக்கடி சார்ஜ் ஏற்றிக்கொள்ளவேண்டும். ஏனெனில் எல்லாருக்கும் வாழ்க்கையில் நினைத்தவாறு அனுபவங்கள் கிடைப்பதில்லை. ஏற்கனவே பல நீதிக்கதைகளை நம் தளத்தில் படித்திருந்தாலும், தொடர்ந்து கிடைக்கும் அனுபவங்கள் அதன் தன்மைக்கேற்ற பாதிப்பை உங்கள் மனதில் ஏற்படுத்தும். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. எனவே , நல்ல கருத்துக்களை நீதிகளை அடிக்கடி படித்து மனதை ஃபுல் சார்ஜ்ஜுடன் வைத்துக்கொள்ளவேண்டும். எனவே MONDAY MORNING SPL பதிவுகளை மீண்டும் ஒரு முறை ஒவ்வொன்றாக படிக்கவும்.

=====================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா??
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=====================================================================

Also  check for more motivational stories :

சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?

நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?

நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?

=====================================================================

[END]

7 thoughts on “‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

  1. வணக்கம் சுந்தர் சார்

    நிதரசன்மான உண்மை சார்..

    Monday Morning ஸ்பெஷல் விரைவில் நூல் வடிவில் எதிர்பார்கரன் சார்

    நன்றி

  2. இன்றைய பதிவு என்ன … தாறுமாறாக அட்டகாசமாக எல்லோரையும் சிந்திக்க வைக்கும் மனப் பக்குவம் உள்ள பதிவாக இருக்கிறது. தங்களின் கடந்த கால நிகழ்வு தான் இது போன்று தங்களை எழுதத் தூண்டியிருக்கிறது.

    தாங்கள் தோல்வியின் விளிம்பிற்கு செல்லாமல் இருந்து இருந்தால் எங்களுக்கு அழகிய ஆன்மிக கோவில் கிடைத்து இருக்காது. அதற்காக இறைவனுக்கு நன்றியை காணிக்கையாக்குகிறோம் .

    நான் எவ்வளவோ முறை நினைத்து இருக்கிறேன் …கடவுள் ஏன் நம்மை இவ்வளவு சோதிக்கிறார் என்று. இந்த பதிவை படித்தவுடன் ஒரு தெளிவு பிறந்து உள்ளது.

    monday மோர்னிங் ஸ்பெஷல் புத்தக வடிவில் வர இருப்பதை நினைத்து மிக்க மகிழ்ச்சி. தங்களின் எல்லா பதிவுகளும் புத்தக வடிவில் வர வாழ்த்துகிறேன்.

    கடைசியில் தாங்கள் கூறிய கதை அருமை…..

    நன்றி
    உமா வெங்கட்

  3. 100% True. I Thank to God for an excellent article by an confident man. May God Bless You sundarji.

    Narayanan.

  4. Excellent.
    One of the best edition of this month.
    All of us must have undergone the feelings narrated in the edition and we should pray for maturity in understanding god’s blessings and his refusal as it invariably leads to better as explained in the story.

    Thanks

  5. வணக்கம் சுந்தர். அருமையான தன்னபிக்கை பதிவு,அழகான கதையோடு . ஆனால் காத்து இருக்கும் நாட்களில் மனதை அலையவிடாமல் ,தளரவிடாமல் நம்பிக்கையோடு இருபதுதான் சவால். காத்து இருப்பவர்கள் உணர்கிறாகள் இல்லையென்றால் இல்லை . பொருத்தமான வாசங்களோடு உள்ள அருமையான பதிவுக்கு நன்றி.

  6. ஒவ்வொரு வாக்கியமும் அனுபவ முத்துக்கள். ஒவ்வொரு வாக்கியமும் உண்மையின் உரைகல் என்று தான் சொல்ல வேண்டும்.

    “monday morning spl ” பதிவுகள் அனைத்தும் நூல் வடிவில் எதிர்பார்கிறேன் அண்ணா..கண்டிப்பாக இந்த பதிவு போன்ற தன்னம்பிக்கை பதிவுகள் அடிக்கடி நம் தளத்தில் வெளியிட வேண்டும் ஏனென்றால் நாங்கள் எல்லாரும், கண்டிப்பாக தடம் புரண்டிட வாய்ப்பு உள்ளது..அந்த நேரம் பார்த்து எங்களை மறுபடியும் கரை சேர்க்கும் தோணியாக இந்த பதிவுகள் உதவும் என்பது நிதர்சனமான உண்மை..

    ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல முடியாத தகவல்களை தாங்கள் இணைத்திருக்கும் படங்கள் உணர்த்துகிறது. அவை வெறும் படங்கள் அல்ல..அவை “பாடங்கள் ” தான்.

    இந்த பதிவின் மூலம் வாழ்வின் தத்துவம் புரிகின்றது. வாழும் நெறி பற்றியும் தெரிந்து கொண்டேன்

    மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *