Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > பாண்டுரங்கன் சுமந்த மூட்டை!

பாண்டுரங்கன் சுமந்த மூட்டை!

print
காராஷ்டிர மாநிலத்தில் உள்ள பண்டரிபுரம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தலமாகும். மதுரையில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரப் பெருமான் எப்படி எண்ணற்ற திருவிளையாடல்களை நிகழ்தியுள்ளாரோ அதே போன்று பண்டரிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பாண்டுரங்கன் எண்ணற்ற லீலைகள் நிகழ்த்தியுள்ளார். சோமசுந்தரக் கடவுள் நிகழ்த்திய லீலைகள் யாவும் 1100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. ஆனால் பண்டரிபுரத்தில் பாண்டுரங்கன் நிகழ்த்தியுள்ள லீலைகள் யாவும் வெகு சமீபத்தில் அதாவது 14 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையில் நடைபெற்றவை என்பது தான் பண்டரிபுரத்தின் சிறப்பு.

Pandurangan-Rukminiபண்டரிபுரத்தில் பாண்டுரங்கன் பக்தர்கள் வாழ்வில் லீலைகள் நிகழ்த்தாத நாளே இல்லை எனலாம். ஒவ்வொன்றும் ஒருவிதம். நமெக்கெல்லாம் ஒரு ஒரு பாடம். இவை யாவும் “ஸ்ரீ மஹா பக்தவிஜயம்” என்னும் நூலில் தொகுக்க்கப்பட்டுள்ளது. இந்நூலைப் பற்றி ஏற்கனவே நாம் பலமுறை கூறியிருக்கிறோம். அவசியம் வாங்கி படியுங்கள்.

சமீபத்தில் நம் முகநூல் நண்பர் பந்தார்விரலி என்பவர் அளித்திட்ட பக்த துக்காராம் அவர்கள் தொடர்புடைய ஒரு பதிவு நம்மை மிகவும் கவர்ந்தது. இங்கே உங்கள் கவனத்திற்கு அதை பகிர்கிறோம.

பாண்டுரங்கன் சுமந்த மூட்டை!

துக்காராம் என்னும் பக்தர் பண்டரிபுரத்தில் வாழ்ந்து வந்தார். பக்தியிற் அவரது பஜனையை கேட்க, அதில் பங்கேற்க நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே வந்தது. துக்காராமின் அபங்க பஜனையில் தனை மறந்து ஆனந்த கண்ணீர் பெருக பக்தியில் மூழ்காதவர்களே கிடையாது.சாதுக்களும் பாகவதர்களும் கூட அவரிட மிருந்து அபங்கம் பாட கற்றுக் கொள்ள பெருகி விட்டனர் இது தேஹு என்கிற அந்த ஊரில் வாழ்ந்த ராமேஸ்வர பட் என்கிறபிராமணருக்கு பிடிக்க வில்லை. தன்னுடைய பிரசங்கங்களுக்கு ஆளே வருவதில்லை, துக்காராமின்

பஜனைக்கு எத்தனையோ பேர் வருவது அவருக்கு பொறுக்க வில்லை. படிக்காதவர், வைஸ்யர், ஸம்ஸ்க்ரிதமே தெரியாதவர், மராத்தியில் தானாகவே இட்டு கட்டி பாடுபவர், தன்னுடைய அபங்கத்தால் ஊரையே கெடுக்கிறாரே! என்று புலம்பினார். இது பரவலாக துக்கா ராமின் காதிலும் விழ, அவர் ஓடி சென்று ராமேஸ்வர் பட் காலில் விழுந்து வணங்கினார்

Tukaram“நான் ஏதாவது தப்பு செய்து விட்டேனா சுவாமி?”

“தப்பை தவிர வேறொன்றுமே செய்ய வில்லையே நீங்கள். சாஸ்திரம் தெரியுமாபுராணம் தெரியுமா?, சொந்தமாக ஏதாவது கற்பனையாக மற்றவர்க்கு பிரசங்கம் செய்வது பெரும் பாபம். இதை கேட்பவர்க்கும் அந்த பாபம் போய்ச் சேருகிறதே?”

“அப்படியா. இது எனக்கு தெரியவில்லையே. நான் அறிவிலி, நீங்கள் நன்றாக படித்த மகான். தயவு செய்து என் தவறுகளை மன்னித்து நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள்” என்று கண்ணீர் மல்க கேட்டார் துக்காராம்.

“இனிமேல் ஒரு அபங்கமும் எழுதவோ பாடவோ வேண்டாம். இதுவரை எழுதியதை எல்லாம் தூக்கி எறியுங்கள்”

“விட்டலா, பாண்டுரங்கா, நான் அறியாமல்செய்த பிழையை பொறுத்துக் கொண்டு என்னை க்ஷமிப்பாயா? .இனி ராமேஸ்வர் சொன்னது போலவே நடக்கிறேன். எனக்கு

உன் நாமத்தை தவிர வேறு எதுவும் தெரியாதே அதைத் தானே எனக்கு தெரிந்த மராத்தியில் மனம் போன போக்கில் பாடிக்கொண்டு எனை மறந்திருந்தேன். அந்த பெரியவர் எப்போது நான் செய்வது பாபம் என்று உணர்த்தி விட்டாரோ இனி அதை பண்ண மாட்டேன்” என்று அழுது கொண்டே தன்னுடைய ஒரே செல்வமான, கண்ணின் மணியான, அபங்கங்களை எல்லாம் எடுத்து மூட்டை கட்டி இந்த்ராயணி ஆற்றில் எறிந்துவிட்டார். ஆற்றங்கரையில் சோகமாக அமர்ந்தார்.

“வெகுநேரமாக உங்களை காணோமே, இங்கே அழுதுகொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள். வாருங்கள், வீட்டுக்கு” என்று மனைவி அழைத்து போனாள். சிறகொடிந்த பறவையாக வாய் மட்டும் “பாண்டுரங்கா, விட்டலா” என்று ஸ்மரணை செய்து கொண்டே தூங்கி போனார் துக்காராம். இரவு கழிந்தது. பொழுது விடிந்தது. யாரோ கதவை தட்டினார்கள்.

“யார்?

“துக்காராம், துக்காராம், இங்கே வாருங்கள்” என்று உணர்ச்சி வசத்தோடு பாண்டுரங்கன் ஆலய

பிரதம அர்ச்சகர் வாசலில் நின்றார். ஒரு கையில் துக்காராம் ஆற்றில் எறிந்த அபங்க மூட்டை!

“இது என்ன? ஏன், நான் செய்த பாபங்களை ஆற்றிலிருந்து எடுத்து கொண்டுவந்தீர்கள்?என்று அதிர்ச்சியோடு கேட்டார் துக்காராம்.

“சுவாமி, நாம் யாருமே ஆற்றிலிருந்து இதை எடுத்து வரவில்லை. பாண்டுரங்கன் தானே போய் ஆற்றில் இறங்கி இந்த மூட்டையை எடுத்து வந்து தன் தலையில் சுமந்து ஈரம் சொட்ட சொட்ட நின்று கொண்டிருந்தார். இன்று காலை வழக்கம்போல் கதவை திறந்து சுப்ரபாதம் சேவை செய்ய நுழைந்த போது இதை பார்த்து திகைத்தேன். என்ன மூட்டை என்று பாண்டுரங்கன் தலையிலிருந்து அதை எடுத்து பார்த்த போது தான் தெரிந்தது நீங்கள் எழுதிய அபங்கங்கள் என்று. ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று எடுத்துக்கொண்டு ஓடோடி வந்தேன்.

“விட்டலா, எனை மன்னித்து விட்டாயா. உன் கருணையே கருணை!!”.

ஊர் முழுதும் இந்த அதிசயம் காட்டுத் தீ போல் பரவி ராமேஸ்வர் பட் காதிலும் விழ அடித்து பிடித்து கொண்டு அவர் துக்காராமிடம் வந்து கண்ணீர் பெருக “நீங்கள் எவ்வளவுபெரிய மகாத்மா, பாண்டு ரங்கனின் அபிமானம் நிறைந்த பக்தர் அவரே உங்கள் அபங்கங்களை ஆற்றி லிருந்து மீட்டு தன் தலையில் சுமந்து நின்றார் என்ற போது என் அறியாமையை உணர்ந்தேன். நானே மகா பாபி. என்னை மன்னிக்க வேண்டும்” என்று கதறினார்

“நீங்கள் சாஸ்த்ரங்கள் உணர்ந்த ச்ரேஷ்டர், பிராமணர் என் காலில் விழுவது அபசாரம். பாண்டுரங்கா, விட்டலா” என்று கண்களில் நீர் பெருக அவனை நன்றியோடு வணங்கினார் துக்காராம்.

=====================================================================

“ஸ்ரீ மஹா பக்தவிஜயம்” நூலுக்கு கீழ்கண்ட இணைய முகவரியை செக் செய்யவும். விலை ரூ.70/-

http://lifcobooks.com/booktitles/details/138/6/devotional/sri-mahabaktha-vijayam.html

=====================================================================

Also check :

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!

“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்! 

ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)

அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)

ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)

கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)

உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )

=====================================================================

[END]

4 thoughts on “பாண்டுரங்கன் சுமந்த மூட்டை!

  1. துக்காராமின் கதையை படித்து பரவசமானேன். உச்சரிப்பை விட உன்னத பக்தியே உயர்ந்தது என்பதை பாண்டுரங்கன் உணர்த்தி விட்டார். உன்னத பக்திக்காக தனது பக்தனை தடுத்தாட்கொண்டு விட்டார்

    இதே போல் குரு ராகவேந்திரரும் தனது பக்தனை தடுத்தாட்கொண்டு இருக்கிறார். நம் தளத்தில் தாங்கள் பதிவு செய்து இருக்கிறீர்கள். இந்த கதையை படிக்கும் பொழுது எனக்கு ” உச்சரிப்பை விட உன்னத பக்தியே உயர்ந்தது ‘ என்ற பதிவு நினைவுக்கு வருகிறது

    நானும் ஸ்ரீ மகா பக்த விஜயம் படிக்க ஆவலாக உள்ளேன்

    அழகிய பதிவிற்கு நன்றி

    உமா வெங்கட்

  2. துக்காராம் என்ற பக்தர் வாயிலாக “பாண்டுரங்கன் சுமந்த மூட்டை” என்ற பதிவு மிகவும் அருமை. இப்படி எல்லாம் நடக்குமா? என்று சிந்திக்க தூண்டினாலும், கடவுள் நினைத்தால் “எதுவும் நடக்கும்” என்ற உண்மை புலப்படுகிறது.

    வண்ணப்படங்களை பார்த்த பிறகு,பாண்டுரங்கா..விட்டலா..என்ற நாமத்தை நம் உதடுகள் உச்சரித்தது என்பதே உண்மை.

    பாண்டுரங்கா..விட்டலா.. பாண்டுரங்கா..விட்டலா..பாண்டுரங்கா..விட்டலா..

    இந்த நிகழ்வுகளை படித்த பிறகு, மதுரையில் சோமசுந்தர கடவுள் நடத்திய நிகழ்வுகளை பற்றியும் அறிய என் மனம் துடிக்கிறது. கண்டிப்பாக நம் தளத்தில் எதிர்பார்கிறேன் அண்ணா.

    மிக்க நன்றி அண்ணா..

  3. Dear Sundarji,
    We have one old temple for Lord Pandurang Vittala near kalpakkam called Vittalapuram it is one of the very few temple located in South India.Beautiful temple to visit

    .

  4. வணக்கம் சுந்தர். ஆத்மார்த்தமான பக்திக்கு முதல் இடம். இது கடவுள் பல நிகழ்சிகளின் மூலம் உணர்த்துவது உணர்த்திக்கொண்டு இருப்பது. எதையும் ஆத்மார்த்தமாக செய்யும் போது அதற்கு எற்படும் வலிமை அளவிடமுடியததுதான் .நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *