ஸ்ரீமந் நாராயணனின் பஞ்ச ஆயுதங்கள் என்று அழைக்கப்படுபவை ஸ்ரீபாஞ்சஜன்யம், ஸ்ரீசுதர்சனம், ஸ்ரீகௌமோதகீ, ஸ்ரீநந்தகம், ஸ்ரீசார்ங்கம் (சங்கு, சக்கரம், கதை, வாள், வில்) ஆகியன.
இவை உணர்வற்ற வெறும் ஆயுதங்கள் அல்ல. ஜீவன் உள்ளவை. இந்த ஆயுதங்களாக இருந்து திருமாலுக்குப் பணிபுரியும் வைகுண்டத்திலிருக்கும் ‘நித்ய சூரிகள்’ என்ற தேவர்கள்.
ஆழ்வார்களில் பொய்கை ஆழ்வார் பாஞ்ச சன்னியம் என்ற சங்கின் அம்சமாகவும், பூதத்தாழ்வார் கதையின் அம்சமாகவும், பேயாழ்வார் நந்தகம் என்ற வாளின் அம்சமாகவும், திருமழிசை ஆழ்வார் சுதர்சன சக்கரத்தின் அம்சமாகவும் அவதரித்தனர் என்றும் கூறப்படுகிறது.
இந்த பஞ்சாயுதங்களில் முதன்மையானவர் சுதர்சனர். “சுடராழியான சுதர்சனனே இடர் களையும் மாலவனாகவும் விளங்குகிறான்’ என்பது வைணவர்களின் நம்பிக்கை.
முத்தொழிகளில் ‘காத்தல்’ தொழிலை மஹாவிஷ்ணு பார்த்துவருவதால் அவருக்கு மிகப் பெரிய கடமையும், பொறுப்பும் உண்டு. அந்தப் பணியைச் செய்ய திருமாலுக்குத் துணையாக நிற்கிறது சுதர்சனம் என்ற தெய்வீகச் சக்கரம். துஷ்டர்களிடம் மிகுந்த கோபமுள்ள இவரை சக்கரத்தாழ்வார், திருவாழியாழ்வான், ஹேதிராஜன் என்றும் அழைப்பதுண்டு.
திருமாலின் மற்ற ஆயுதங்கள் போன்றதல்ல சுதர்சனம். இவருக்கும், திருமாலுக்கும் எள்ளளவும் வித்தியாசமில்லை. இதை நாம் கூறவில்லை வைணவ குலத் திலகமான ஸ்வாமி தேசிகனே சொல்கிறார். தன்னுடைய ஷோடசாயுத ஸ்தோத்திரத்தில், “சக்ர ரூபஸ்ய சக்ரிண” என்கிறார் தேசிகர். அதாவது, “சக்கரத்தாழ்வான் உருக்கொண்ட சக்ரபாணி’ என்று பொருள்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு
அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே
பெரியாழ்வார், மேற்படி பாசுரத்தில், “வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு” என்று போற்றுகிறார். இறைவனை வாழ்த்தும்போது அவன் சுமக்கும் “ஆழி’யையும் வாழ்த்துவதிலிருந்தே புரியுமே அதன் பெருமை!
இவர் இப்படி என்றால் நம்மாழ்வாரோ “சுடராழி வெண்சங்கேந்தி வாராய்” (நீ வரும்போதே சுதர்சனம் என்ற ஆழியோடும், வெண்சங்கோடும் வர வேண்டும்) என்று சுவாமிக்கு கோரிக்கை வைக்கிறார்.
புராணங்களில் பல இடங்களில் சுதர்சன சக்கரத்தின் பெருமை பேசப்படுகிறது. அதில் மிகப் பிரசித்தமானது கஜேந்திர மோட்சம்.
கலியானது முற்ற முற்ற மக்கள் எண்ணற்ற கஷ்டங்களையும் மன வேதனைகளையும் அனுபவித்து வருகிறார்கள். பொறமை, திருஷ்டி, ஏவல் என பலவித இன்னல்களுக்கும் உள்ளாகிறார்கள். அத்தகையவர்களுக்கு ஒளியைக் தந்து, அவர்களைத் துன்பத்திலிருந்து விடுவித்துக் காக்கும் கடவுள்தான் சுதர்சனப் பெருமாள்.
சுதர்ஸன ஆழ்வாருக்குப் பதினாறு ஆயுதங்கள் உள்ளன. அவை: 1. சக்கரம் 2.மழு 3. ஈட்டி 4. தண்டு 5. அங்குசம் 6. அக்னி 7. கத்தி 8. வேல் 9. சங்கம் 10. வில் 11.பாசம் 12. கலப்பை 13. வஜ்ரம் 14. கதை 15. உலக்கை 16. சூலம். இந்தப் பதினாறு ஆயுதங்களில் முதல் எட்டை வலப்புறத்திலும் கடைசி எட்டை இடப்புறத்திலும் சுதர்ஸனர் ஏந்தியிருக்கிறார். சுதர்ஸனர், தம் ஈட்டியால் அசுரர்களை விரட்டி, அடியார்களைக் காக்கிறார். தவறு செய்பவர்களை, தம் தண்டத்தால் திருத்துகிறார்.
கைகொடுக்கும் சுதர்சனர்!
தீராப் பகையை அழித்து, போக்க முடியாத பயத்தை போக்க வல்லவர் சுதர்சனர். மனிதனுக்கு பெரும்பாலான பாதிப்புகளுக்கு மூலகாரணமாக இருப்பவை ருணம், ரோகம், சத்ரு எனப்படும் கடன், வியாதி, எதிரி ஆகியவைதான். அவற்றை அழித்து மன உளைச்சலை போக்கி சாந்தத்தை தருபவர் சுதர்சனர்.
மந்தப் புத்தி உடைய மாணவர்களுக்கு நல்லறிவை ஏற்படுத்தி கல்வி தொடர்பான தடைகளை நீக்கி சரளமான கல்வி, யோக ஞானத்தை அருள்வார். கெட்ட கனவுகள், மனசஞ்சலம், சித்த பிரமை, பேய், பிசாசு, பில்லி சூனியம், ஏவல் போன்ற மனம் தொடர்பான பாதிப்புகள், தொந்தரவுகளில் இருந்தும் விடுபடச் செய்வார்.
ஜாதகத்தில் 6, 8, 12&ம் அதிபதிகளின் திசைகள், நீச்ச கிரக திசைகள், புதன், சனி திசை நடப்பவர்கள் சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் கிரக தோஷத்தில் இருந்து விடுபடலாம். புதன், சனிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சாற்றி துளசியால் அர்ச்சனை செய்து 12, 24, 48 முறை வலம் வந்து வழிபட்டால் பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் நிறைவேறும். நம்மை சூழ்ந்திருக்கும் துன்பங்கள், தடை, தடங்கல்கள் எல்லாம் விலகி நல்வழி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பிரம்மோத்ஸவம் மற்றும் பெருமாள் கடலுக்குச் சென்று தீர்த்தவாரி மேற்கொள்ளும் சமயங்களிலும் ஸுதர்சனருக்கு முக்கியப் பங்கு உண்டு. ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீ கூர நாராயணர் வாழ்ந்த காலத்தில் கொள்ளிடத்தில் தெப்ப உற்சவம் நடந்த சமயம். (அப்போதெல்லாம் தெப்ப உற்சவம் கொள்ளிடத்தில் நடக்குமாம்.) ஒரு முறை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தெப்பத்தை அடித்துக் கொண்டு போக, கூர நாராயணர் சக்கரத்தாழ்வானை துதிக்க, அவர் நீர் பிரவாகத்தை எதிர்த்து, தெப்பம் கரை சேரும்படி செய்து, அரங்கனும் ‘ஆழியால்’ காக்கப்பட்டான். அதைத் தொடர்ந்து அவர் இயற்றியதே சுதர்ஸன சதகம். (சதகம்: நூறு துதிகள் கொண்ட தொகுப்பு, செய்யுள் வடிவம் உடையவை!)
இதைப் பாராயணம் செய்து, சுதர்சனர் சன்னதியில் நெய் விளக்கேற்றியும், பலமுறை வலம் வந்தும் சுதர்சனரின் அருளைப் பெறலாம். ஸுதர்ஸன உபாஸனை மிகவும் சக்தி வாய்ந்தது. இவரை எந்திர ரூபத்தில் வழிபடும் முறையும் உள்ளது. ஸுதர்ஸனரின் பின்புறம் யோக நரசிம்ம மூர்த்தியைக் காணலாம். இவரை ஸுதர்ஸன நரசிம்மம் என்பர்.
நமது ஒவ்வொரு உழவாரப்பணியின்போதும் வருகை தரும் அன்பர்களுக்கு ஒரு சிறு ஸ்லோக புஸ்தகம் பரிசளிப்பது வழக்கம். குன்றத்தூர் திருவூராகப் பெருமாள் கோவிலில் சென்ற ஜனவரி 7 அன்று நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி சிறப்பு உழவாரப்பணியின் போது அனைவருக்கும் ஸ்ரீ சுதர்சன சதகம் புஸ்தகம் பரிசளிக்கப்பட்டது குறிப்பிடக்கத்தது.
‘ஸ்ரீ சுதர்சன சதகம்’
ரங்கேச விஜ்ஞப்தி கராமயஸ்ய
சகார சக்ரேசநுதிம் நிவ்ருத்தயே
ஸமாச்ரயேஹம் வரபூரணீம்ய:
தம்கூர நாராயண நாமகம் முநிம்
சகல காரியசித்தி பெற
ஸமாரா ஸமாதேவி ச சமஸ்த ஸுரஸேவிதா!
ஸர்வ ஸம்பத்தி ஜநநீ ஸத்குணா ஸகலேஷ்டதா!!
ஸௌதர் சந்யுஜ்ஜி ஹாரா திசி விதிசி
திரஸ்க்ருத்ய ஸாவித்ரமாச்சி:
பாஹ்யா பாஹ்யாத் தகாரக்ஷத
ஜகதகதங்கார பூம்நா ஸ்வதாம்நா
தோ கர்ஜுதுர கர்ஜத்வீ புதரிவது
கண்ட வைகல்ய கல்யா
ஜ்வாலா ஜாஜ்வல்ய மாநர
விதரது பவதாம் வீப்ஸயா பீப்ஸிதாநி.
செல்வம் செழிக்க
வஸுப்ரதா வாஸுதேவி வாஸுதேவ மநோஹரி!
வாஸவார்சித பாதஸ்ரீ: வாஸவாரி விநாஸிநீ!!
ப்ரத்யுத்யாதம் மயூகை நபஸி நிருக்ருத
ப்ராப்தஸேவம் ப்ரபாபி:
பூமௌ ஸௌமேரவீபீ: திவி வரிவஸிதம்
தீப்திமிர் தேவதாம்நாம்
பூயஸ்யை பூதயேவ: ஸ்புர துஸகலதிக்
ப்ராந்த ஸாந்த ஸ்வரஸ்புலிங்கம்
சக்ரம் ஜாக்ரத் ப்ரதாபம் த்ரிபுவநவிஜய
வ்யக்ரமுக்ரம் மஹஸ்தத்
தரித்திரம் நீங்கி செல்வம் செழிக்க தினசரி இந்த சதகங்களை பாராயணம் செய்து ஸ்ரீசுதர்சன பகவானை வழிபட்டு வரவேண்டும்.
சர்வ சத்ரு நாசமடைய
ப்ரகாரரூபா ப்ராணேஸு பிராண ஸம்ரக்ஷணி பரா!
ப்ராஸஞ்ஜீவிநி ப்ராச்யா ப்ராணி: ப்ராணா ப்ரபோதிநீ!!
த்ருஷ்டேஜ் திவ்யோம சக்ரே விகசநவ
ஜபாஸந்நிகாசே ஸகாசம்
ஸவர்ப்பாநுர் பாநுரேஷ ஸ்புடமிதி
கலயந்நாகதோ வேகதோ ஜ்ஸ்ய
நிஷ்டப்தோ பைர் நிவ்ருத்தோ விலுமிவ
ஸஹஸா ஸ்ப்ரஷ்மு மத்யாபி நேஷ்டே
கர்மாம்சும் தே கடந்தாமஹித விஹதயே
பாநவோ பாஸ்வரா வ:
சர்வ ஜன வசியமாக
ஸப்தகோடி மஹாமந்த்ர மாதா ஸர்வ ப்ரதாயிநீ!
ஸகுணா ஸம்ப்ரமாஸாக்ஷீ ஸர்வ சைதன்ய ரூபிணி!
அம்ஹல் ஸ்ம்ஹத்ய தக்த்வா
ப்ரதிஜநி ஜநிதம் ப்ரெடஸம்சாரவந்யா
துராத் வந்யாநதன்யாத் மஹதி
விநதிபிர் தரமநி ஸ்தாபயந்தீ
விச்ராந்திம் சாச்வதீம் யாநயதி ரமயதாம்
சக்ர ராஜஸ்ய நாபி:
ஸம்யந்மோ முஹ்யாமா நத்ரிதசரிபுதசா
ஸாக்ஷிணீ ஸாக்ஷிணீ வ:
சர்வ ரோக நாசமடைய
ஸர்வ ரோக ப்ரஸமநீ ஸர்வபாப விமோசநீ!
ஸமத்ருஷ்டி: ஸமகுணா ஸாவகோபத்ரீ ஸஹாயிநீ!!
தம்ஷ்ட்ரா காந்த்யா கடாரே
கபட கிடிதரோ கைடபாரே ரதஸ்தாத்
ஊர்த்வம் ஹாஸேந வித்தே
நரஹரிவமஷோ மண்டலே வாஸவீயே:
ப்ராக் ப்ரத்யக் ஸாந்த்ரச் சவி பரபரிதே
வ்யோம்நி வித்யோத மாந:
தைதேயோத் பாதசம்ஸீ ரவிரிவ
ரஹமத்வ ஸத்ரோஜோ ருஜம் வ:
* நூறு ஸ்லோகங்கள் கொண்ட ‘ஸ்ரீ சுதர்சன சதகம்’ ஸ்லோக புஸ்தகம் கடைகளில் கிடைக்கிறது.
========================================================
இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.
Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!
Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215 | E-mail : editor@rightmantra.com
==========================================================
Also check :
‘ஆதித்ய ஹ்ருதயம்’ என்னும் ஆபத்பாந்தவன்!
திருமுருகாற்றுப்படையும் அறுபடைவீடுகளும்! ஒரு சுவாரஸ்யமான வரலாறு!!
முருகனை வசியம் செய்ய இந்த ‘பஞ்சாமிர்த வண்ணம்’ போதுமே!
பொன்மழையில் நனைந்த ஏழை பிரம்மச்சாரி – ஸ்ரீஸ்துதி புரிந்த மகிமை!
வழியாற் காண மெய்யாய் விளங்கும் கந்தசஷ்டி கவசம்!
அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!
தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!
பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!
சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!
‘ஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்’ – வரிகளின் பின்னே ஒரு உண்மை சம்பவம்!
மொதல்ல அவரை எழுப்பு… எழுப்புடா பழனியாண்டி!
துதிக்காதவரையும் தடுத்தாட்கொள்ளும் தண்டாயுதபாணி!
கந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே!
நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!
அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !
மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!
களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!
கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2
முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!
=======================================================
தேடும் செல்வம் ஓடிவிடும்; தெய்வம் விட்டுப் போவதில்லை! – யாமிருக்க பயமேன் ? (10)
தேர்வை புறக்கணித்த சிறுவன் சேதுராமன் அருட்கவி ஸாதுராம் ஆன கதை – யாமிருக்க பயமேன் ? (9)
நம் வாசகியின் மகனுக்கு வேல்மாறலால் கிடைத்த வேலை! – யாமிருக்க பயமேன் ? (Part 8)
‘வேல்மாறல் எனும் வரப்பிரசாதம்’ – உண்மை சம்பவம் – (Part 7)
‘வேல்மாறல்’ யந்திர தரிசனம் — யாமிருக்க பயமேன்? (Part 6)
நம் வாசகர் வீட்டில் ‘வேல்மாறல்’ செய்த அதிசயம் — யாமிருக்க பயமேன்? (Part 5)
கைமேல் பலனைத் தந்த ‘வேல்மாறல்’ பாராயணம் — யாமிருக்க பயமேன்? (Part 4)
இழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்? (Part 3)
வினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாமந்த்ரம் — யாமிருக்க பயமேன்? (Part 2)
வேல் தீர்க்காத வினை உண்டா? உண்மை சம்பவம்! — யாமிருக்க பயமேன்? (Part 1)
=======================================================
[END]