கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்க ளாற்பயனென்.
“அவன் குடியிருக்கும் கோவிலை வலம் வராமல் இருக்கும் கால்களால் என்ன பயன்?” என்று கேட்கிறார் அப்பர் பெருமான்.
இன்று பங்குனி உத்திரம். முருகனுக்கு உகந்த நாள்.
இந்த பிறவியின் பயனை அந்த பாலசுப்ரமணியனின் புகழை பரப்புவதற்கே நாம் ஒப்படைத்திருக்கிறோம் என்பதை வாசகர்கள் அறிவீர்கள். அந்த நெடும்பயணத்தின் தொடக்கமாக ஒரு சில தலங்களை (வள்ளிமலை, வயலூர், பழனி, சிறுவாபுரி) மட்டுமே நாம் தரிசித்திருக்கிறோம். மேலும் சில தலங்களை நாம் தரிசித்திருந்தாலும் நாம் புதிய பிறவி எடுத்த பிறகு (நம் தளம் துவங்கிய பிறகு) தரிசித்தவற்றை மட்டுமே பட்டியலிட்டுள்ளோம். இனி ஏனைய தலங்களையும் தரிசிக்கவேண்டும்.
‘வள்ளிமலை’ குறித்த தொடர் துவங்கி ஒரு சில அத்தியாயங்களோடு நின்றுகொண்டிருக்கிறது. இனி அது விரைவில் முழு வேகம் பெறும். காலடி, மதுரை பயணமும் அப்படியே. சற்று பொறுத்திருங்கள்.
=======================================================
‘வள்ளிமலை அற்புதங்கள்’ தொடருக்கு….
சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)
புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)
=======================================================
என்ன செய்ய? கையிலிருக்கும் நேரமோ கடுகளவு. முன் நிற்கும் கடமையோ மலையளவு. முருகா நீ தான் பயணம் சிறக்க அருள்புரிய வேண்டும்!
முருகனுக்கு மிகவும் உகந்த நாளான இன்று ஒரு அற்புதமான தகவலுடன் உங்களை சந்திக்க விரும்பி இந்த பதிவை அளிக்கிறோம்.
அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியவை மொத்தம் 16,000 க்கும் மேற்ப்பட்ட பாடல்கள். ஆனால் நமக்கு இன்று கிடைத்துள்ளவை 1334 பாடல்கள் தான். அதன் மூலம் நமக்கு கிடைத்துள்ள திருப்புகழ் தலங்கள் மொத்தம் 198. இதில் 100 தேவாரத் தலங்களும், 2 திருவாசகத் தலங்களும், 2 திருவிசைப்பா தலங்களும் அடங்கும். திருப்புகழில் குறிப்பிடப்பட்டுள்ள சில தலங்கள் எவை என்றே தெரியவில்லை. எனவே பல தலங்கள் கண்டுபிடிக்கப்படவேயில்லை.
முருகனின் தலங்களுள் மிக மிக முக்கியமானது திருச்செந்தூர். மதுரையை மையமாக வைத்து சிவபெருமான் எப்படி பல திருவிளையாடல்களை நிகழ்த்தினாரோ அதே போல திருச்செந்தூரை மையமாக வைத்து முருகப் பெருமான் பல திருவிளையாடல்களை நிகழ்த்தியிருக்கிறார்.
அவற்றுள் ஒன்றை பாப்போம். அந்த திருவிளையாடல் நமக்கு வழங்கப்போகும் கனியையும் இனி ருசிப்போம்.
பஞ்சாமிர்தம்னா அவ்ளோ பிரியமா?
அப்பனும் சுப்பனும் பொதுவாகவே அபிஷேகப் பிரியர்கள். அதுவும் முருகன், பஞ்சாமிர்த அபிஷேகப் பிரியன். பஞ்சாமிர்த அபிஷேகம் எல்லாராலும் செய்யமுடியுமா என்ன? எனவே அதற்கு வசதியோ வாய்ப்போ அற்றவர்களும் அந்த பலனை பெறவேண்டும் என்ற பெருங்கருணையின் காரணமாக ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் ‘பரிபூஜண பஞ்சாமிர்த வண்ணம்’ என்ற பாடலை இயற்றினார்.
முருகப் பெருமானுக்கு இந்த பாடல்கள் என்றால் கொள்ளை பிரியம். இதை பாடி பலனடைந்தவர்கள் பல்லாயிரம் பேர்.
யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் |
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||
என்று ஒரு ஸ்லோகம் இருக்கிறது. அதாவது எங்கெல்லாம் ராமநாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அனுமன் அழைக்காமலே பிரசன்னமாகிவிடுவார் என்பது இதன் பொருள்.
அது போல, இந்த ‘பஞ்சாமிர்த வண்ணம்’ பாடலில் மயங்கி எங்கெல்லாம் இது பாடப்படுகிறதோ அங்கெல்லாம் நான் நிச்சயம் வருவேன் என்று உறுதியளித்திருக்கிறான் முருகன்.
அது குறித்த உண்மையான நிகழ்வு ஒன்றை பார்ப்போம்.
சுமார் 70 அல்லது 80 வருடங்களுக்கு அங்கு நாள்தோறும் ஆலய அர்ச்சகரான அனந்த சுப்பையர் ஒரு முறை இந்த பாடலை மெய்மறந்து பாடிக்கொண்டிருக்க, அது சமயம் அங்கு வந்த அவர் நண்பர் திரு.வி.என். சுப்பிரமணிய அய்யரும் இதில் கலந்துகொள்ள, இருவரும் இப்படியே தினமும் திருச்செந்தூரில் உள்ள ‘கவுண்டர் மண்டபம்’ என்னுமிடத்தில் சேர்ந்து பாடி வந்தனர்.
ஒரு முறை அந்தப் பக்கம் சென்ற, முத்தம்மை என்கிற மூதாட்டி இந்த பாடலை கேட்டு உருகி மயங்கி தானும் அவர்களுடன் தினமும் வந்து இந்த ‘பஞ்சாமிர்த வண்ணம்’ பாடலை கேட்க ஆரம்பித்தார். இப்படியே நாட்கள் சென்றது.
அது 1918 ஆம் ஆண்டு. சித்திரை மாதம், வியாழக்கிழமை. வழக்கம்போல அனந்த சுப்பையரும், சுப்ரமணிய ஐயரும் இருவரும் பஞ்சாமிர்த வண்ணம் பாடலை பாட, முத்தம்மை கேட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது, தூணுக்கு மறைவாக நின்றுகொண்டு யாரோ ஒரு இளைஞனும் இவர்கள் பாடுவதை கேட்டுக்கொண்டிருப்பதை முத்தம்மை கவனித்துவிட்டார். “ஏனப்பா…மறைந்திருந்து கேட்பானேன், அருகில் வரலாமே” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் பார்த்தாள் முத்தம்மை. இம்முறை இளைஞனை காணவில்லை.
பாராயணம் முடிந்ததும் அவர்களிடம் அது குறித்து சொன்னார் முத்தம்மை. அவர்களும் யாராக இருக்கும் என்று பலவாறு சிந்தித்தபடி போய்விட்டார்கள்.
மறுநாளும் பாராயணம் துவங்கி நடந்தது. அன்று விஷேட நாள் என்பதால் இந்த முறை அகண்ட பாராயணம். விடிய விடிய நடந்தது. விடியற்காலை சுமார் 4.00 மணிக்கு அதே இளைஞன் மண்டபத்துக்குள் நின்றுகொண்டிருப்பதை பார்த்துவிட்டாள் முத்தம்மை.
இந்த முறை அவனை விட்டுவிடக்கூடாது வேகமாகச் சென்று, “நீ யாரப்பா? நேற்று கூட வந்தாயே…” என்று கேட்டார்.
அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே, “நான் இந்த ஊர்தானம்மா. என்னைப் பின் தொடர்ந்து வந்தால் நான் இருக்கும் இடத்தை காட்டுவேன்..” என்றான்.
முத்தம்மையும் சம்மதித்து அவன் பின்னே செல்ல, வீதியில் இறங்கி நடந்த அந்த இளைஞனோடு சற்று நேரத்தில் ஒரு அழகிய இளம்பெண் ஒருத்தியும் சேர்ந்து கை கோர்த்துக் கொண்டு நடந்தாள். இருவரும் நடக்க முத்தம்மை தொடர கடைசியில் திருச்செந்தூர் கோயில் வந்தது.
இளைஞன் திரும்பி முத்தம்மையைப் பார்த்து, “அந்த அந்தணர்கள் இருவரும் தினசரி பாடிக்கொண்டிருக்கும் பஞ்சாமிர்த வண்ணப் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் இசையை சேர்த்து ராகத்துடன் பாடச் சொன்னால் இன்னும் மகிழ்ச்சியடைவேன்”என அவர்களிடம் சொல்லு. தவிர இதை எங்கெல்லாம் இசையுடன் பாடுகின்றார்களோ, அங்கெல்லாம் நான் நிச்சயம் வருவேன். நான் இருக்குமிடம் இந்த கோவில் தானம்மா” என்று கூறிவிட்டு அந்த இளைஞன் தன்னுடன் வந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு கோயிலுள்ளே சென்று மறைந்தான். முத்தமைக்கு அப்படியே ஆடிப்போய்விட்டார்.
தன்னுடன் பேசியது சாக்ஷாத் அந்த முருகப் பெருமானே என்பதை உணர்ந்தவர் “வள்ளியுடன் அந்த வள்ளி மணாளனை தரிசிக்க என்ன தவம் செய்தேன்!” என்று மனம் உருகிப் போனார்.
அதற்கு பிறகு நடந்ததை அனந்த சுப்பையரிடமும் சுப்ரமணிய ஐயரிடமும் கூறி, முருகன் விருப்பபப்டி அதற்கு இசை சேர்த்து பாடும்படி கேட்டுக்கொண்டாள்.
இந்த சம்பவத்தை ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் தனது ‘பெரு வேண்டுகோள்’ என்னும் பதிகத்தில் தெரிவித்திருக்கிறார்.
பஞ்சாமிர்த வண்ணம் – Youtube video
To download the pdf :
http://rightmantra.com/wp-content/uploads/2016/03/Panjamirdha-Vannam.pdf
=========================================================
Help us to sustain!
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
=========================================================
Also check :
வழியாற் காண மெய்யாய் விளங்கும் கந்தசஷ்டி கவசம்!
செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!
சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!
‘ஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்’ – வரிகளின் பின்னே ஒரு உண்மை சம்பவம்!
மொதல்ல அவரை எழுப்பு… எழுப்புடா பழனியாண்டி!
துதிக்காதவரையும் தடுத்தாட்கொள்ளும் தண்டாயுதபாணி!
கந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே!
நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!
அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !
மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!
களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!
கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2
முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!
=======================================================
தேடும் செல்வம் ஓடிவிடும்; தெய்வம் விட்டுப் போவதில்லை! – யாமிருக்க பயமேன் ? (10)
தேர்வை புறக்கணித்த சிறுவன் சேதுராமன் அருட்கவி ஸாதுராம் ஆன கதை – யாமிருக்க பயமேன் ? (9)
நம் வாசகியின் மகனுக்கு வேல்மாறலால் கிடைத்த வேலை! – யாமிருக்க பயமேன் ? (Part 8)
‘வேல்மாறல் எனும் வரப்பிரசாதம்’ – உண்மை சம்பவம் – (Part 7)
‘வேல்மாறல்’ யந்திர தரிசனம் — யாமிருக்க பயமேன்? (Part 6)
நம் வாசகர் வீட்டில் ‘வேல்மாறல்’ செய்த அதிசயம் — யாமிருக்க பயமேன்? (Part 5)
கைமேல் பலனைத் தந்த ‘வேல்மாறல்’ பாராயணம் — யாமிருக்க பயமேன்? (Part 4)
இழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்? (Part 3)
வினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாமந்த்ரம் — யாமிருக்க பயமேன்? (Part 2)
வேல் தீர்க்காத வினை உண்டா? உண்மை சம்பவம்! — யாமிருக்க பயமேன்? (Part 1)
=======================================================
[END]
‘பஞ்சாமிர்த வண்ணம்’ என்கிற இதுவரை கேள்விப்படாத ஒரு அரிய பொக்கிஷத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
பஞ்சாமிர்த அபிஷேகத்தில் முருகனும் வள்ளியம்மையும் அழகோ அழகு.
திருச்செந்தூர் முகப்பு படமும் முருகன் படமும் அதைவிட அழகு.
பாடலின் காணொளியோடு பாடல் வரிகளையும் தனியே டவுன்லோட் செய்துகொள்ளும் வண்ணம் அளித்தமைக்கு மிக்க நன்றி.
பாடல் வரிகள் உண்மையில் இசையோடு கேட்கும்போது அத்தனை அருமை. முருகனுக்கு ஏன் இந்தப் பாடல் பிரியமான ஒன்றாக மாறியது என்று இப்போது தான் புரிகிறது.
பங்குனி உத்திரத்தன்று இதைவிட சிறந்த பதிவை அளிக்கமுடியாது. எங்கள் எதிர்பார்ப்பை ஈடு செய்தது மட்டுமல்ல அதற்கு மேலும் ஒரு நல்ல பதிவை அளித்து திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள்.
நன்றியோ நன்றி
– பிரேமலதா மணிகண்டன்,
மேட்டூர்