திரு.செந்தில் அவர்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக நமக்கு தெரியும். பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராக பணி புரிகிறார். நம்முடன் பல ஆலயங்களுக்கு வந்திருக்கிறார். தன்னால் இயன்ற உதவிகளை தளத்திற்கு அவ்வப்போது செய்து வருகிறார். இரண்டு ஆண்டுகளாக சிவராத்திரிக்கு நம்முடன் பூண்டி ஊன்றீஸ்வரர் கோவிலுக்கு வந்திருக்கிறார்.
இவருடைய உடன் பிறந்த அக்கா திருமதி.காந்திமதி. அவருடைய கணவர் திரு.சின்னையா. திரு.சின்னையா திருச்சியில் ஒப்பந்த காண்டிராக்டராக தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவர் கல்லூரியிலும் ஒருவர் பள்ளி இறுதியாண்டும் படித்துவருகிறார்கள்.
திரு.சின்னையாவுக்கு அவரது காண்ட்ராக்ட் தொழிலில் சிறு தொய்வு. ஒப்பந்ததாரர்கள் பலர் சொன்னபடி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தவே இவர் நிலைமையை சமாளிக்க, தனது சொத்துக்கள் சிலவற்றை அடமானம் வைக்கவேண்டிய ஒரு நிலை. குடும்பத்தில் பொருளாதார பிரச்சனைகள் உள்ளிட்ட வேறு பிரச்சனைகள் தலைதூக்கியது.
‘வேல்மாறல்’ பற்றிய நமது தளத்தின் பதிவுகளை பார்த்து, சென்ற டிசம்பரில் நமது தளத்தின் ஆண்டுவிழா நடைபெற்றபோது ‘வேல்மாறல்’ புத்தகத்தை வாங்கி திருச்சியில் வசிக்கும் தனது சகோதரிக்கு படிக்க கொடுத்திருந்தார் செந்தில்.
அவரும் அதை கடந்த இரண்டு வாரங்களாக தனது குடும்பத்தின் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் திரு.செந்தில் அவர்களின் திருமணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முருகனிடம் வைத்து படித்து வருகிறார்.
இது ஒரு புறமிருக்க, நண்பர் செந்தில், நம்முடன் ஆலய தரிசனம், உழவாரப்பணி ஆகியவற்றுக்கு இயன்றபோதெல்லாம் வரும் வழக்கமுடையவர்.
நேற்று முன்தினம் நாம் ஆலய தரிசனத்தின் அவசியத்தை வலியுறுத்தும் பதிவை அலுவலகத்தில் அமர்ந்து தட்டச்சு செய்துகொண்டிருந்தபோது, திரு.செந்தில் நமது அலைபேசியில் அழைத்தார். (Check : பிள்ளைகளுக்கு நீங்கள் மறக்காமல் சேர்க்க வேண்டிய ‘சொத்து’ என்ன தெரியுமா?)
குரல் சற்று பதட்டமாகவே இருந்தது.
“மாமா பைக்ல போகும்போது ஆக்ஸிடென்ட் ஆயிருச்சு. கீழே விழுந்துட்டாரு…” என்று சொன்னவர் பதட்டத்தில் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு மேற்கொண்டு தொடரும் முன், நமக்கு அந்த பதட்டம் தொற்றிக்கொண்டது.
“மாமாவுக்கு ஒன்னும் ஆகலே இல்லே…”
“ஒன்னும் ஆகலை… சின்ன சிராய்ப்பு தான்”
“இதை முதல்ல சொல்லக்கூடாதா? நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன் செந்தில்” என்று கடிந்துகொண்டோம்.
அவரது அக்காளின் கணவர் திரு.சின்னையா, திருச்சி அருகே உள்ள முக்கொம்பில் பாலத்தில் செல்லும்போது பைக்கின் டயர் வெடித்து, பைக் நிலை தடுமாறி பாலத்தின் சுவற்றில் மோதி, மோதிய வேகத்தில் பைக்குடன் சேர்ந்து பல அடி உயரத்திலிருந்து பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு, முக்கொம்பு ஆற்றுக்குள் விழுந்திருக்கிறார். விழுந்த இடம் தண்ணீர் இருந்த பகுதி. தெய்வாதீனமாக அடி எதுவும் படவில்லை. சிறு சிராய்ப்பு தான். தண்ணீருக்குள் விழுந்தவர், சில நிமிடங்கள் அதிர்ச்சியிலிருந்து மீளவேயில்லை.
இதற்கிடையே பைக் ஒட்டி வந்தவர் யாரோ பாலத்தின் சுவற்றில் மோதி வண்டியோடு ஆற்றுக்குள் விழுந்துவிட்டதை பார்த்த அந்த பகுதியிலிருந்தவர்கள், அருகே வேலை செய்துகொண்டிருந்த பொதுப்பணித் துறை ஊழியர்களுக்கு தகவல் கொடுக்க, அவர்கள் தங்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க, பொதுப்பணித்துறை மூலம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி திரு.சின்னையாவை பத்திரமாக மீட்டிருக்கின்றனர்.
மிகவும் உயரமான பகுதியிலிருந்து விழுந்துவிட்டார் என்பதால், தீயணைப்பு துறையினர் மிகவும் சிரமப்பட்டு மீட்டிருக்கின்றனர். முக்கொம்பு ஆறு சற்று வித்தியாசமானது. ஆற்றுக்குள்ளிருந்து அப்படியே எழுந்து கரையேறி எல்லாம் வர முடியாது. இரண்டு பக்கமும் பாறைகள் இருக்கும்.
சுமார் 30 அடி உயரத்தில் இருந்து விழுந்தவர் ஒரு சிறு காயம் கூட படாமல் தப்பியது அனைவரையும் வியப்பிலாழ்த்தியது. இதே போன்று அந்த பாலத்தில் இதற்கு முன்பு விபத்துக்கள் ஏற்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் யாரும் பிழைக்கவில்லையாம். போலீசார் சொன்ன தகவல் இது.
இவர் விழுந்த இடத்தில சரியாக இடுப்பளவு தண்ணீர் இருந்துள்ளது. நல்லவேளை பாறைகள் எதுவும் இல்லை. மேலும் இவர் விழுந்த இடத்திற்கு வெகு சமீபமாக ஆபத்தான சுழல் இருக்கும் பகுதியாம். (முக்கொம்பு சுழலுக்கு பெயர் பெற்றது). “உன் நல்ல நேரம்பா… சுழல் இருக்குற ஏரியாவுல விழுந்திருந்தா உன்னை காப்பாத்திருக்க முடியாது. அதுவும் பைக்கோட விழுந்திருக்கே!” என்றாராம் அந்த பகுதிவாசி ஒருவர்.
நண்பர் செந்தில் நேற்று அலுவலகத்தில் இருந்தபோது அவரது சகோதரி ஃபோன் செய்து நடந்ததை விவரித்திருக்கிறார்.
இதில் என்ன கவனிக்கவேண்டிய ஒன்று என்றால் அவர் ‘வேல்மாறல்’ படிக்க துவங்கி இரண்டு வாரங்கள் தான் ஆகிறதாம்.
திரு.சின்னையா அடிக்கடி சமயபுரம் செல்லும் வழக்கமுடையவர் என்பதால் விழும் அந்த தருணம், சமயபுரத்தாள் நினைவுக்கு வந்திருக்கிறாள். “அம்மா… மாரியம்மா…. என்னைக் காப்பாத்து” என்று வேண்டிக்கொண்டே தான் விழுந்திருக்கிறார். தன்னை காப்பாற்றியது சமயபுரம் மாரியம்மன் தான் என்று அவர் நம்புகிறாராம்.
“எங்கள் அக்காவின் குடும்பம் தற்போது இருக்கும் நிலைக்கு மாமாவுக்கு அடி கிடி ஏதாவது பட்டு ஹாஸ்பிடல் அது இதுன்னா செலவு செய்ய அவர்களின் பொருளாதார நிலை இப்போ இடம் கொடுக்காது. அந்தளவு அவங்க பிரச்சனையில இருக்காங்க சுந்தர்” என்றார் செந்தில்.
தனது அக்காவின் மாங்கல்யத்தை காப்பாற்றியதோடல்லாமல் மாமாவுக்கு அப்படி ஒரு படுபயங்கர விபத்தில் ஒரு சிறு காயம் கூட ஏற்படாமல் அவர் தப்பித்தமைக்கு காரணம் அவர் அக்கா படிக்க துவங்கிய ‘வேல்மாறல்’ தான் என்று தாம் உறுதியாக நம்புவதாக செந்தில் நம்மிடம் தெரிவித்தார்.
“உங்க மாமாவை காப்பாத்தினது அவர் அடிக்கடி செல்லும் சமயபுரம் மாரியம்மன், உங்க அக்கா படிக்கும் வேல்மாறல் மட்டுமில்லே. நீங்க செய்ற புண்ணியமும் தான். இது எல்லாம் சேர்ந்து தான் அவரை அவ்ளோ பெரிய விபத்துல இருந்து ஒரு சின்ன காயம் கூட படாம காப்பாத்தியிருக்கு.”
“ஆமாம் சுந்தர்… கொஞ்சம் ஒரு சில செகண்டுகள் இந்த விபத்து இடம் மாறி நடந்திருந்தால் மாமாவுக்கு என்ன ஆகியிருக்கும் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியாது” என்றார்.
ஆம் நண்பர்களே… அவரது சகோதரி கணவரை இந்த விபத்தில் காப்பாற்றியது ‘வேல்மாறல்’ மட்டுமல்ல நண்பர் செந்தில் ஆலய தரிசனம் மூலம் குவித்து வைத்த புண்ணியம் தான். அதுமட்டுமல்ல, அவர் அனுஷ்டித்த சிவராத்திரி விரதம் + செய்து வரும் உழவாரப்பணி இவை அனைத்தும் தான்.
சமீபத்தில் நாம் கரூர், திருச்சி சென்றிருந்தது நினைவிருக்கலாம். அப்போது நம்முடன் வந்திருந்து கரூர் பசுபதீஸ்வரர் திருக்கோவில், திருச்சி திருவெறும்பூர், திருநெடுங்குளம் மற்றும் வயலூர் ஆகிய திருத்தலங்களை தரிசித்தார்.
அது மட்டுமல்ல. சென்ற வாரம் கூட ‘இராமநாம மகிமை’ தொடருக்காக ‘மதுராந்தகம்’ ஏரி காத்த ராமர் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தோம். ட்ரெயினிலோ பஸ்ஸிலோ போவதென்றால் பயணத்திலேயே பாதி நாள் போய்விடும் என்பதால் “மதுராந்தகம் ராமர் கோவிலுக்கு செல்லவிருக்கிறேன். கார் எடுத்துக்கொண்டு வரமுடியுமா?” என்று கேட்டோம். சிறிதும் தயக்கமின்றி தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு நம் வீட்டிற்கே வந்து நம்மை பிக்கப் செய்துகொண்டார்.
ரைட்மந்த்ராவின் வாசகராக மாறிய பின்னர் தனது நேரம் பயனுள்ள படி செலவழிந்து வருவதாக குறிப்பிட்டவர், “நீங்க எந்த கோவிலுக்கு, சந்திப்புக்கு போனாலும் சொல்லுங்க. என்னால் எப்பெப்போ முடியுமோ அப்போல்லாம் நிச்சயம் வர்றேன்” என்று நமக்கு உறுதியளித்திருந்தார். சொன்னபடியே இன்றுவரை இயன்ற போதெல்லாம் வருகிறார். நமது உழவாரப்பணிகளிலும் கலந்துகொள்கிறார். இந்த புண்ணியமெல்லாம் வீணாக போகுமா என்ன?
* (இன்னொரு விஷயத்தை மறந்துவிட்டோம். மன்னிக்க. செந்தில் மஹா பெரியவாவின் தீவிர பக்தர். சிவராத்திரி அன்று கோவிலில் ‘தெய்வத்தின் குரல்’ படித்துக்கொண்டிருந்தார்.)
நாம் செய்யும் புண்ணியமெல்லாம் நமக்கு மட்டுமல்ல நமது குடும்பத்தினருக்கு கூட என்றென்றும் கவசம் போல விளங்கும், வரவிருக்கும் ஆபத்துக்களை தடுத்து நிறுத்தும் என்பது இதன் மூலம் புலனாகிறதல்லவா?
பணம், வேலை, சம்பளம் என்று சதாசர்வ காலமும் பொருளுக்காக ஓடுவதை (இதை சிலர் பெருமையா வேற நினைக்கிறாங்க)
அவ்வப்போது நிறுத்தி புண்ணியம் சேர்க்கவும் இடையிடையே கொஞ்சம் நேரத்தை செலவு செய்யுங்கள்.
ஏனெனில்… தேடும் செல்வம் ஓடிவிடும். தெய்வம் விட்டுப்போவதில்லை!
======================================================================
நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?
======================================================================
‘யாமிருக்க பயமேன்’ தொடருக்கு….
தேர்வை புறக்கணித்த சிறுவன் சேதுராமன் அருட்கவி ஸாதுராம் ஆன கதை – யாமிருக்க பயமேன் ? (9)
நம் வாசகியின் மகனுக்கு வேல்மாறலால் கிடைத்த வேலை! – யாமிருக்க பயமேன் ? (Part 8)
‘வேல்மாறல் எனும் வரப்பிரசாதம்’ – உண்மை சம்பவம் – (Part 7)
‘வேல்மாறல்’ யந்திர தரிசனம் — யாமிருக்க பயமேன்? (Part 6)
நம் வாசகர் வீட்டில் ‘வேல்மாறல்’ செய்த அதிசயம் — யாமிருக்க பயமேன்? (Part 5)
கைமேல் பலனைத் தந்த ‘வேல்மாறல்’ பாராயணம் — யாமிருக்க பயமேன்? (Part 4)
இழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்? (Part 3)
வினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாமந்த்ரம் — யாமிருக்க பயமேன்? (Part 2)
வேல் தீர்க்காத வினை உண்டா? உண்மை சம்பவம்! — யாமிருக்க பயமேன்? (Part 1)
======================================================================
Related articles….
உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!
முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!
சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!
முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2
ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?
கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2
நல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்!
கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1
தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!
காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!
ஏழை திருமணத்துக்கு உதவிய வள்ளல் & வாரியாரின் வாழ்வும் வாக்கும் – தமிழ் புத்தாண்டு SPL & வீடியோ!
காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!
=============================================================
[END]
திரு.செந்தில் அவர்களின் மாமாவிற்கு என்ன ஆச்சோ என்று பதிவை படிக்கும் பொழுதே திக் திக் என்று இருந்தது. நல்ல நேரம் அவர் தெய்வாதீனமாக காப்பாற்ற பட்டு இருப்பது அவர்கள் வணங்கும் தெய்வமும் , வேல் மாறலும் தான் . திரு செந்தில் தங்களுடன் சேர்ந்து ஆலய தரிசனமும், சிவராத்திரி விரதமும் இருந்ததன் பலன் அவர் அக்காவின் மாங்கல்யம் காப்பாற்றப் பட்டு இருக்கிறது. இதிலிருந்து நாம் செய்யும் புண்ணியம் காரியம் நம் ஆபத்து காலத்துக்கு நமக்கு நல்லது செய்யும் என்பதை ஆனித் தரமாக பதிய வைத்து இருக்கிறீர்கள்.
உங்களுக்கும் இதன் மூலம் புண்ணியம் கிடைக்கும்.
திரு செந்தில் அவர்களின் அக்கா குடும்பம் எந்த வித பிரச்சனைகளும் இல்லாமல் மேலும் மேலும் முன்னேற அந்த முருகன் துணை புரிய வேண்டும். திரு செந்தில் அவர்களுக்கும் விரைவில் நல்லது நடக்க வேண்டும்
திருச்செந்தூர் முருகன் துணை
நன்றி
உமா வெங்கட்
உங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும். உங்களோட வழிகாட்டுதலால் தான் நாங்கள் ஏதோ கொஞ்சம் புண்ணியம் சேத்துகிட்டு இருக்கோம். இப்போ நினைத்தாலும் உடம்பு சிலிர்க்கிறது சுந்தர். இதை கடவுளின் அனுக்கிரகம்னு என்னால உறுதியா சொல்ல முடியும். அக்காவை விடாம வேல்மாரல் படிக்க சொல்லி இருக்கேன்.
எல்லாம் கடவுளின் அருள். பெரியவா என்றும் துணை இருப்பார்.
நன்றி சுந்தர்.
செந்தில் சார் , சுந்தர் அவர்களின் நட்பினால் பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல். எல்லோருக்கும் நல்லது நடந்து கொண்டு இருக்கிறது. நம் வாசகர்களுக்கு இன்னும் பல அறிய நன்மைகள் நம் தளம் மூலம் கண்டிப்பாக நடக்கும்.
நன்றி
உமா வெங்கட்
உமா மேடம்.
நீங்கள் சொல்வது நூத்துக்கு நூறு உண்மை தான் மேடம்.
நன்றி.
திரு செந்தில் அவர்களின் அக்கா குடும்பம் அந்த சமயபுரம் அம்மன் கருணையால் மிக நன்றாக இருக்கும். திரு செந்தில் மற்றும் நம் சுந்தர் அவர்கள் நல் இல் துணை அமைந்து தங்களின் சேவை தொடர எங்கள் நல் வாழ்த்துகள்.
சமய புரம் அம்மன், வேல் மாறல், மஹா சுவாமிகள் துணை இருக்க இனி எல்லாம் சுகமே.
வாழ்த்துகள்.
கே. சிவசுப்ரமணியன்
தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது.
தங்களது வழிகாட்டுதலின் படி திரு செந்தில் சேர்த்த புண்ணியம்தான் அவர் சகோதரியின் மாங்கல்யத்தை காப்பாற்றியுள்ளது.
ஆலயம் தொழுதல் சாலவும் நன்று, என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்.
.
தேடும் செல்வம் ஓடிவிடும். தெய்வம் விட்டுப்போவதில்லை!
Sathiyamana vaarthaigal ..
திரு.செந்தில் அவர்களின் மாமாவைக் காத்த தெய்வத்திற்கு நன்றி…… ஆலய தரிசனமும், அறச் செயல்களில் ஈடுபடுதலும் எவ்வளவு இன்றியமையாதது என்று இந்த சம்பவத்தின் மூலம் உணர்ந்து கொண்டோம்……
வணக்கம் சுந்தர்.ஆச்சர்யமான நிகழ்வு . நம்பிக்கை உள்ளவர்களுக்கு எதாவது ஒரு வகையில் உதவி கிடைக்கும் என்று மீண்டும் நிருபிகபட்டு உள்ளது .குமரன் மற்றும் அன்னையின் பாதங்களுக்கு சரணம்.