Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?

காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?

print
சிலரது பெயரைக் கேட்டாலே மனசுக்கு இதமாக இருக்கும் ஏதோ பாரம் குறைந்தது போல இருக்கும். நம்பிக்கை பீறிடும். அப்படிப்பட்ட அருளாளர்களுள் ஒரு தான் பகவான் ரமண மகரிஷி. தமது சாந்நித்தியத்தாலும் சொல்லாலும் நோக்காலும், ஒவ்வோர் அசைவாலும் அடுத்தோர் துன்பத்தையகற்றி, அமைதியையும் மெய்யுணர்வையும் அருளிவந்த அண்ணல் ஸ்ரீ ரமணர்.

ramana maharishi

ரமணரை பற்றி நமது தளத்தில் பல பதிவுகள் வெளிவந்துள்ளன. இன்று குருவாரம் என்பதால் ரமணரின் திருவிளையாடல்கள் சிலவற்றை பார்ப்போம்.

திருவண்ணாமலைக்கு வந்தது முதல் பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய ரமணர் 1922 இல் அவரது தாயின் மறைவிற்குப் பிறகு மலையின் அடிவாரத்தில் குடிபுகுந்தார். அங்கு அவரது சீடர்களால் ஆசிரமம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவே ரமண ஆசிரமமாகும். இதன் பின்னர் பகவான் சமாதியடையும் வரை அந்த ஆசிரமத்தை விட்டு எங்கும் செல்லவில்லை.

ரமணரின் முக்கியமான உபதேசம் ‘நான் யார்’ என்னும் ஆன்ம விசாரம். ஞான மார்க்கத்தில் தன்னை அறிதல் அல்லது முக்தி பெறுதலே இவ்வழியின் நோக்கம். உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம்.

ஆன்ம விசாரமே இவர் நிகழ்த்திய அற்புதங்களில் பிரதானமாக இருந்தாலும், சில அனுபவங்களில் மறைமுகமாக இவரது சித்துக்கள் வெளிப்படுவதுண்டு. அவை இவர் நிகழ்த்தியவை அல்ல. அந்த அண்ணாமலையான் நிகழ்த்தியவை.

இன்று குருவாரம் என்பதால் குருவைப் பற்றிய இரண்டு அனுபவங்களை ரமண திருவிளையாடல் திரட்டிலிருந்து பார்ப்போம்.

அடுத்த வாரம் ரமணரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்காற்றிய இடமொன்றை பார்ப்போம்.

=========================================================

Also check : யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?

=========================================================

கல்லை கனிவிக்கும் சுத்தன்

விளாச்சேரி ரங்கய்யரின் சகோதரர் மணி ஐயர். முரட்டுப் பேர்வழி. மணிஐயர் பள்ளியில் பகவானுக்கு சீனியர். பலசாலி. எந்த கோவிலுக்கும் போக மாட்டார். யாரையும் நமஸ்கரிக்கவும் மாட்டார். எல்லோரும் ‘போக்கிரி மணி’ என்றே கூப்பிடுவார்கள்.

பகவான் திருவண்ணாமலை வந்து சில வருடங்களுக்குப் பின் தன் தாயாருக்கு துணையாக திருப்பதி சென்றார் போக்கிரி மணி. ரங்கய்யரின் தாயார் பகவானைப் பார்த்துவிட்டு செல்லலாம் என்றார். போக்கிரி மணி ஒத்துக்கொள்ளவில்லை. ஊர் திரும்பும் வழியில் தாயார் மீண்டும் தன் ஆசையைக் கூறினார்.

போக்கிரி மணி ‘நான் அந்த போலிச் சாமியாரையெல்லாம் பார்க்க வரமாட்டேன். நான் வந்தா, காதை திருக்கி அவனை ஊருக்கு கூட்டிண்டு போயிடுவேன். அவா அம்மா, அண்ணா, சித்தப்பா மாதிரி எங்கிட்டே பாச்சா பலிக்காது. தூக்கிண்டே போயிடுவேன்’ என்றார்.

‘சரி! என்னமோ செய்!’ என்றார் அன்னை. இருவரும் திருவண்ணாமலையில் இறங்கி விருபாக்ஷ குகைக்கு சென்றனர். அம்மா போக்கிரி மணியின் குணம் தெரிந்ததால் பயந்தபடி வந்தாள். பகவான் குகையில் வீற்றிருந்தார். அம்மா, பார்த்தவுடன் நமஸ்கரித்துவிட்டு அமர்ந்தாள். போக்கிரி மணி பகவானை எடை போடுவதுபோல் பார்த்தார். பகவானும் பார்த்தார்.

போக்கிரி மணி பார்த்தார்… பார்த்தார் …பார்த்துக்கொண்டே இருந்தார். கண்களில் நீர் அவரையும் மீறி வழியத் துவங்கியது. வாழ்க்கையில் எந்த தெய்வத்துக்கும், மனிதனுக்கும் வணங்காத போக்கிரி மணி, முதல் முறையாக மனித தெய்வத்துக்கு வணங்கி சாஷ்டாங்கமாய் கும்பிட்டார். பகவானுக்கு அடிமை பூண்டார். அடிக்கடி வரலானார்.

Ramanar having foodஏன் தொன்னை?

ருமுறை ஆசிரமத்தில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு செய்வதறியாது, தங்கியிருந்த பக்தர்களிடம், ‘இன்று இரவு உணவோடு உக்கிராணம் காலி. நாளைக் காலை உணவு நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று நிர்வாகத்தால் பணிவோடு வேண்டுகோள் விடப்பட்டது. சிலர் ஊருக்குக் கிளம்ப விழைந்து பகவானிடம் உத்தரவுக்கு வந்தபோது பகவான் காதுக்கு விஷயம் சென்றது. ( * உக்கிராணம் = ஸ்டோர் ரூம்)

பகவான் நிமிர்ந்து உட்கார்ந்தார். ”காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்? இந்த மலை இருக்கு. பேசாம எல்லாம் போய்த் தூங்குங்கோ” என்று கூறி மௌனமானார். வழக்கம் போல அதிகாலை பகவான் கிச்சனுக்குள் நுழைந்தார். ”என்ன இருக்கு?” என்று கேட்டார்.

‘கொஞ்சம் நொய்க் குருணை தான் இருக்கு’ என்றனர். ”சரி எடுத்துக்கொண்டு வா!” என்று கூறிவிட்டு அடுப்பைப் பற்ற வைத்தார். காலை 5. 30 மணி. கைப்பிடி குருணையை சுத்தம் செய்ய ஆரம்பித்தார். ஒரு பாத்திரத்தில் போட்டுக் கழுவினார். உலை கொதித்ததும் அரிசியைப் போட்டார். அருகில் இருந்த அண்ணாமலை சுவாமி, ‘என் ஒருவனுக்கே இது பத்தாது. எப்படி இத்தனை பேர் சாப்பிடறது இதை!’ என்று வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

அரிசி பொங்கி வந்தபோது ஒரு பக்தர் தரிசனத்திற்கு 2 லிட்டர் பாலுடன் வந்தார். பகவான் பெரிய பாத்திரத்தை வைத்து அதில் பாலையும், அரிசியையும் சேர்த்து வேகவைத்தார். சில நிமிடங்களில் ஒரு பக்தர் கற்கண்டு, உலர் திராட்சையுடன் தரிசிக்க வந்தார். பகவான் அதையும் சுத்தம் செய்து பாத்திரத்தில் போட்டார்.

ஆறரை மணி அளவில் அது முடிவுக்கு வந்தபோது கும்பகோணத்தில் இருந்து பக்தர்கள் சிலர் வந்தனர். அவர்கள் பெரிய பானையில் இட்லி, வடை, சட்னி, மலைவாழைப்பழம், தொன்னை முதலியன கொண்டு வந்திருந்தார்கள்.

வழக்கமாக காலை 7 மணிக்கு பகவான் குளித்துவிட்டு வந்து, அனைவரும் அமர்ந்து அருமையான உணவு உண்டனர். பகவான் தயாரித்த பாயாசம் அந்தத் தொன்னையில் எல்லோருக்கும் பரிமாறப்பட்டது. அவர்கள் ஏன் தொன்னை கொண்டுவந்தார்கள் என்று அவர்களுக்கே அப்போதுதான் தெரிந்தது.

மறுபடியும் இந்த வரிகளை படியுங்கள்… கண்களில் நீர் தளும்பும் என்பது உறுதி…. //”காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்? இந்த மலை இருக்கு. பேசாம எல்லாம் போய்த் தூங்குங்கோ” என்று கூறி மௌனமானார்.//

=========================================================

Help us to run this website… 

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. 

==========================================================

For earlier episodes…

ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…

எந்த கண்களில் பார்வை இருக்கிறது? எதில் இல்லை?

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

==========================================================

Also Check :

ஆட்கொண்ட அருணாச்சலேஸ்வரர் – பள்ளி மாணவர்களுக்கு பாடமான நமது தளத்தின் நோட்டீஸ்!

“தன்னைப் போல பிறரை எண்ணும்  தன்மை வேண்டுமே!” .

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

மழை பொழியுது – பாத்திரத்தை முதல்ல நேரா வைங்க!

==========================================================

[END]

One thought on “காக்கா குருவிக்கு ஏது ஓய் உக்கிராணம்?

  1. அருமை!!
    நாளை பொழுதை இறைவனுக்களித்து சரணமடைந்தால், நடக்கும் வாழ்வில் அமைதி தானே வரும்!!
    குரு சரணம் சரணம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *