அவர்களை தவிர, மற்றவர்களும் இது போன்ற ஆலய தரிசன / அனுபவ பதிவுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றை தவறாமல் படிக்கவேண்டும். (அடுத்தடுத்து பல முக்கிய பதிவுகள் வரவிருக்கிறது).
சிரவணம் சர்வார்த்த சாதகம்!
13 ஆம் நூற்றாண்டு. கருவூரை (இன்றைய கரூர்) வீர சோழ கலிமூர்க்கன் என்ற மன்னன் ஆண்ட சமயம். கருவூர் நகரத்தில் அம்பலவாணன் என்னும் தச்சுத் தொழிலாளி ஒருவன் வாழ்ந்து வந்தான். தேர்களில் காணப்படும் மரச்சிற்பங்கள் மற்றும் திருக்கோவில் தொடர்பான தச்சு வேலை செய்வதில் அவன் கைதேர்ந்த நிபுணன்.
ஒரு முறை கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பிரமோற்சவ திருவிழா ஏற்பாடாகி கோலாகலமாக துவங்கியது. ஆலயம் நன்கு அலங்கரிக்கப்பட்டு விழாவுக்கான பல்வேறு ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடந்துகொண்டிருந்தன. ஆலயத்திற்கு புதிதாக தேர், அலங்கார வளைவுகள், கதவுகள் இவற்றை செய்யும் பணிகள் நடைபெற்றுகொண்டிருந்தன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட பல தச்சர்கள், சிற்பிகள் இரவு பகலாக பணி செய்துகொண்டிருந்தனர். ஒரு பக்கம் மண்டபம் கட்டும் பணி, ஒரு பக்கம் குளம் வெட்டுவது, அன்ன சத்திரம் கட்டுவது என கரூரே பரபரப்பாக இருந்தது.
பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக தொடர் சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சொற்பொழிவாளர் தினசரி பிரவசனம் நிகழ்த்தி வந்தார். அதில் ஒரு பகுதியாக பஞ்சபூதத் தலங்களின் மகத்துவத்தை பற்றி ஒரு நாள் கூறலானார்.
சற்று தூரம் தள்ளி தேருக்கான தச்சு வேலை செய்துகொண்டிருந்த அம்பலவாணன், வேலையின் பளு தெரியக்கூடாது என்பதற்காக சொற்பொழிவாளர் கூறியதை கேட்டபடி தனது பணியை செய்துகொண்டிருந்தான். அம்பலவாணன் மிகப் பெரிய பக்திமான் இல்லை என்றாலும் கடவுள் மறுப்பாளனும் அல்ல. அதே நேரம் கோவில்களுக்கெல்லாம் அவன் சென்றதில்லை.
ஒரு கட்டத்தில் சொற்பொழிவாளர் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தபோது இவன் ரசித்து கேட்க ஆரம்பித்தான். இப்படியாக ஒவ்வொரு நாட்களும் அவனுக்கு சிரவணத்திலே நாட்கள் கழிந்தது. பிரம்மோற்சவமும் இனிதே நிறைவு பெற்றது. அம்பலவாணன் தனது கூலியை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு வீடு திரும்பினான். தனது வயதான தாயிடம் அனைத்தையும் கூறியவன் பஞ்சபூத தலங்கள் பற்றி தான் சொற்பொழிவில் கேட்ட சில சுவையான தகவல்களை மிகவும் சிலாகித்து கூறினான்.
இதற்கிடையே சோழநாட்டில் மழை பொய்த்து பயிர்கள் அனைத்தும் நீரின்றி வாடின. இது கண்டு மிகவும் வருத்தமுற்ற கலிமூர்க்கன் தில்லையிலிருந்து சாஸ்திரம் அறிந்த பண்டிதர்களையும் ஜோதிடர்களையும் அழைத்து ஆலோசித்தான்.
“பிரம்மோற்சவ நிறைவில் நீ சோமயாகம் செய்திருக்கவேண்டும். செய்யவில்லை. எனவே விரைவில் ஒரு சோமயாகம் ஏற்பாடு செய்து தவசீலர்களுக்கும் சிவனடியார்களுக்கும் உணவிடவேண்டும். மேலும் கோவில் திருப்பணிகளில் பங்கேற்றவர்கள் மற்றும் உறுதுணையாக இருந்தவர்களை கௌரவித்து வஸ்திர தானமும் ஸ்வர்ண தானம் செய்யவேண்டும். நீ அவர்களுக்கு விதிக்கவேண்டிய ஒரே நிபந்தனை – அவர்கள் பஞ்சபூத தலங்களுள் ஏதாவது ஒன்றையாவது தரிசித்திருக்கவேண்டும். அப்படி செய்தால் பஞ்சபூதங்களும் சாந்தி அடையும்!” என்றார்கள்.
இதையடுத்து நாடு முழுதும் மேற்படி அறிவிப்பு தண்டோரா போடப்பட்டது. அம்பலவாணன் அது சமயம் வெளியூர் சென்றிருந்தபடியால் அவனுக்கு இது பற்றி எதுவும் தெரியாது. அவனோ கட்டை பிரம்மச்சாரி. தனியே தன் வயதான தாயாருடன் வசித்து வருபவன்.
இதனிடையே, அரசல் புரசலாக மன்னனின் பரிசறிவிப்பு செய்தி அவன் காதுகளுக்கு விழுந்தது. அவன் குறிப்பிட்ட நாளில் பரிசு பெற தலைநகரம் புறப்பட தயாரானபோது, சக தச்சர்கள் அவனிடம் “நீ எங்கே வருகிறாய்? மன்னன் கூறிய நிபந்தனையை அறியமாட்டாயோ? பஞ்சபூதத் தலங்களுள் ஒன்றையேனும் தரிசித்திருக்க வேண்டுமாம். நீயோ ஒரு கிணற்று தவளை. பஞ்சப் பரதேசி. உனக்கு பரிசு பெற தகுதி கிடையாது… நீ வீட்டிலேயே கிட…. ” என்றார்கள்.
அதைக் கேட்ட அம்பலவாணன் மிகவும் துயரத்துடன் பாதி வழியில் வீடு திரும்பினான். தனது விதியை நினைத்தபடி அழுதுகொண்டே உறங்கிவிட்டான்.
அன்றிரவு சோழ மன்னன் கனவில் தோன்றிய பசுபதீஸ்வரர், “மன்னா, உமது சோம யாகத்தால் நாம் மனம் குளிர்ந்தோம். எமது பஞ்சபூத தலங்களை தரிசிக்காவிட்டாலும் தேர் செய்யும் பணியில் இருந்தபோது பஞ்சபூத தலங்களை பற்றிய சொற்பொழிவை கேட்டபடி பணி செய்தான் அம்பலவாணன் என்னும் தச்சன். அதை தினசரி சிரவணம் செய்ததுடன் தனது தாயிடமும் அது பற்றி கூறினான். எனவே அவர்கள் இருவருக்கும் பஞ்சபூத தலங்களையும் தரிசித்த பூரண பலனை தந்தோம். மற்ற அனைவரையும் விட பரிசைப் பெற அவனுக்கே முழுமுதற் தகுதியுண்டு. எனவே அவனை அரண்மனைக்கு சகல மரியாதையுடன் அழைத்து கௌரவித்து பரிசைத் தருவாயாக!” என்று கூறி மறைந்தார்.
பஞ்ச பூதத் தலங்கள்
நிலம் – காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில
நீர் – திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்
காற்று – காளஹஸ்தி காளஹஸ்தீஸ்வரர்
ஆகாயம் – சிதம்பரம் நடராஜர் கோவில்
நெருப்பு – திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்
மன்னனும் மிகவும் மகிழ்ச்சியடைந்து மறுநாள் பல்லக்கை அனுப்பி அம்பலவாணனை அரண்மனைக்கு வரவழைத்து கனவில் ஈசன் தமக்கு இட்ட கட்டளையை கூறி அவனுக்கு பன்மடங்கு பொன்னையும் பொருளையும் தந்து கௌரவித்தான். தலைமைக் காவலரும் தனது பெண்ணை அவனுக்கு தரவிருப்பம் தெரிவித்து அவனுக்கு மணமுடித்து வைத்தார்.
ஈசனின் கருணையை எண்ணி மனம் நெகிழ்ந்த அம்பலவாணன் ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.
ஈசனின் திருத்தல புராணத்தை சிரவணம் செய்ததன் பலன் – நண்பர்களால் அவமானப்படுத்தப்பட்டவன் பல்லக்கில் ஏறி ராஜ மரியாதையுடன் செல்லும் பாக்கியம் கிடைத்தது.
சிரவணமும் (கேட்பது) பதனமும் (படிப்பது) கலியுகத்தில் மிகவும் சிறந்தவை. திருவருளை எளிதில் பெற்றுதரக்கூடியவை. திருத்தல வரலாறு மற்றும் திருக்கோவில் உற்சவங்கள் குறித்த தகவல்களை சிரவணம் செய்வது, பதனம் செய்வது, பிறரிடம் பகிர்வது இவைகூட மிகப் பெரிய பேறு தான். சம்பந்தப்பட்ட தலங்களுக்கு சென்ற பலனை அளிப்பது மட்டுமல்ல, வேறு நற்பலன்களையும் அளிக்கவல்லவை.
– திருநாவுக்கரசர்
* இந்த பதிவில் காணும் கரூர் பசுபதீஸ்வரர் திருக்கோவில் கொங்கு நாட்டு பாடல்பெற்ற தலங்களுள் ஒன்று. சென்ற ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. மிக மிக அற்புதமாக தூய்மையாக பராமரிக்கப்பட்டுவரும் வெகு சில கோவில்களுள் ஒன்று இது. கரூர் செல்பவர்கள் அவசியம் தரிசிக்கவேண்டிய ஒரு தலம். இவ்வாலயம் பற்றி விரைவில் ஈசனருளால் நம் ஆலய தரிசன பகுதியில் விரிவான பதிவை அளிக்கிறோம்.
========================================================
Help us to run this website…
We need your SUPPORT. Help Rightmantra in its functioning.
==========================================================
Also check :
‘நின்றும் இருந்தும் கிடந்தும்’ செய்த ஒரு சிவபக்தி!
பசுவுக்குப் புல்லும், சமைப்பதற்கு விறகும், ஸ்நானத்திற்குத் தீர்த்தமும் இருந்தால் வேறு என்ன வேண்டும்?
சிவராத்திரியன்று பிரசாதத்தை திருடிக்கொண்டு ஓடிய திருடனுக்கு என்ன ஆனது? – சிவராத்திரி SPL 5
சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!
சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!
திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!
ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!
தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!
மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!
கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!
==========================================================
[END]
அருமையான பதிவு …. என்னை போல் மலேசியர்களுக்கு ஏற்ற பதிவு. மிக்க நன்றி. சகோதரரே…