Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, July 16, 2024
Please specify the group
Home > Featured > பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்

பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்

print
ரு மனித மிருகத்தால் ஆசிட் வீசப்பட்டு முகம் சிதைந்து விழிகளை இழந்து தவிக்கும் வினோதினியின் மருத்துவ செலவுக்கு உதவுவதும் அவர்களின் குடும்பத்தினரின் கண்ணீரை ஓரளவாவது துடைப்பதுமே இந்த புத்தாண்டில் நாங்கள் செய்யவிருக்கும் முதல் கடமையாக கொண்டோம்.

நமது RIGHTMANTRA.COM சார்பாக CORE TEAM நண்பர்கள்  அனைவரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு சிறிய தொகை சேர்த்து, ப்ளஸ் என் நண்பர் ஒருவர் இதற்கென்றே யூ.எஸ்.ஸிலிருந்து  எனக்கு அனுப்பிய தொகையையும் சேர்த்தது DD எடுத்து அதை சமூக சேவகர் ஐயா.திரு.பாலம் கலியாணசுந்தரம் அவர்கள் முன்னிலையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட வினோதினியின் தந்தையிடம் அளித்தோம்.

பிற நண்பர்கள் செய்த உதவி (Direct transfer to his bank account) பற்றியும் அவருக்கு எடுத்து சொன்னோம்.

திரு.ஜெயபாலன் அவர்கள் நம்மிடம் கூறியதிலிருந்து வினோதினியின் மீது வீசப்பட்ட ஆசிட் மட்டும் ஒரு லிட்டருக்கும் மேல் இருக்கும் என்று தெரிகிறது. ஐயோ… வினோதினிக்கு முகம் மட்டுமல்ல… உடலில் பல இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 • பாலம் திரு.கலியாணசுந்தரம் அவர்கள் மூலம் நாம் இதை செய்தது ஏன்?
 • பாலம் ஐயா அவர்களுக்கு கூறியது என்ன?
 • எங்களிடம் வினோதினியின் தந்தை கூறியது என்ன ?
 • அவர்களின் பொருளாதார நிலை தற்போது எப்படி இருக்கிறது ?
 • வினோதினி எப்படி இருக்கிறார்?
 • மருத்துவர்கள் என்ன கூறுகின்றனர்?
 • வினோதினியின் மறுவாழ்வுக்கு நம் தளம் செய்யப்போகும் உதவிகள் என்ன?

விரிவான பதிவாக எழுதிக்கொண்டிருக்கிறேன். சற்று பொறுத்திருக்கவும்.

இதைக் கூட நான் ஏன் ஒரு புகைப்படம் போட்டு ஒரு சின்ன பதிவா சொல்றேன்னா… “சுந்தர் வினோதினி அப்பாவை நேர்ல்ல போய் பார்க்கப்போறேன்னு சொன்னாரே? போனாரா? வினோதினி எப்படி இருக்காங்க?” என்று தெரிந்துகொள்ளும் ஒரு அன்பான ஏக்கம் உங்களில் பலருக்கும் இருக்கும். நேற்று என்னிடம் பேசிய அனைவரும் இது பற்றியே கேட்டனர். எனவே அதற்காகவே இந்த அப்டேட்.

ஒரே ஒரு விஷயம் :

வினோதினியை சந்தித்தபோது அவர் இருந்த நிலை… ரோஜாப் பூ ஒன்றை கசக்கி தீயில் வாட்டியது போன்று இருந்தது.  அவர் தலைக்கு அருகில் கட்டிலில், கண்ட கந்த சஷ்டி கவசம் புத்தகம் என்னை ஏதோ செய்தது.  தன் தாயாரிடம் அடிக்கடி அதை படிக்கச் சொல்லி கேட்கிறாராம் வினோதினி. கடவுள் தான் விரும்பும் தன்னை விரும்பும் பொம்மைகளை வைத்து தான் அதிகம் விளையாடுவானோ?

முருகா…. கல்லும் கரையுமே இதை கண்டால்… உனக்கு மனம் இரங்கவில்லையா ?

வினோதினி நலம் பெற்று பழைய நிலைக்கு விரைவில் திரும்ப அவருக்காக நமது பிரார்த்தனையில் சில வினாடிகள் தினசரி ஒதுக்குவோம்.

இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளி விளக்கு
நம்பிக்கையின் ஒளி விளக்கு

ஆண்டவனே உன் பாதங்களை
நான்கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க
இன்று உன்னிடம் கையேந்தினேன்..முருகையா…
ஆண்டவனே உன் பாதங்களை
நான்கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க
இன்று உன்னிடம் கையேந்தினேன்

பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமதில் உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்

ஆண்டவனே உன் பாதங்களை
நான்கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க
இன்று உன்னிடம் கையேந்தினேன்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
யாரோ நல்லுள்ளம் கொண்ட ஒரு ஆத்மா வினோதினிக்கு உதவுவதற்கென்றே www.helpvinodhini.com என்ற தளத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் (Bi-lingual) தொடங்கியிருக்கிறார். வினோதினியின் தந்தையின் வங்கிக் கணக்கு எண்  அதில் அளிக்கப்பட்டுள்ளது. உதவி செய்ய விரும்புகிறவர்கள் நேரடியாக செய்யலாம்.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

[END]

6 thoughts on “பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்

 1. மனித மனம் பக்குவப்படாமல் போனதால் வந்த வினை. இது போல் நடவாமல் இருக்க இறைவனை பிரார்த்திப்போம்.

  பிறர் இன்பத்தில் பங்கு பெறுவதை விட துன்பத்தில் கூட இருப்பதே நலம்.

 2. உண்மையில் இத்தனை வருடம் நான் கழித்த புத்தாண்டுகளில் இது தான் மிகவும் பயனுள்ளதாக மன திருப்தியோடு கழிந்த நாள் அந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த கடவுளுக்கும் ,சுந்தருக்கும் என் நன்றி.

  இனிமேல் நண்பர்கள் அனைவரும் வினோதினி அவர்களை உங்கள் குடும்பத்தின் ஒருவராக கருதி பிராத்தனை செய்யுங்கள் கண்டிப்பாக மீண்டு வருவார்

  தங்கை வினோதினி இருக்கும் நிலையை பார்த்தல் ஐயோ கடவுளே நீ படைத்த மனிதர்களில் ஏன் இப்படி ஒரு வேறுபாடு,மனிதனாக பிறந்து மிருக குணத்தோடு இருந்த ஒரு மிருகத்தின் ஆணவத்தால் ஒன்றுமே அறியாத இந்த சிறிய பெண் ,அவளது குடும்பத்தார் ஏன் இவ்வளவு பாதிப்பு ஏற்பட வேண்டும்.நாங்கள் அவருடைய அப்பாவிடம் பேசி கொண்டு இருக்கும் போது அவர் சொன்ன சில வார்த்தைகள் இந்த மாதிரி செயலுக்கு மரண தண்டனை என்பது தீர்வாகது ,தூக்கில் போட்டால் அவன் அந்த நிமிட வேதனையோடு போய் விடுவான் ,ஏன் பெண் படும் கஷ்டம் எப்படி தெரியும் ,இப்படி கேட்கும் போது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா அந்த அரக்கனின் கண்களில் ,மற்றும் இரு கை கால் களில் அவன் வீசியது போல் தரவகம் வீசி எந்த மருத்துவ உதவியும் கிடைக்காமல் அவன் அழுகி சாக அடிக்க பட வேண்டும் என்று தான் எனக்கு தோன்றியது

  அடுத்து அவர் கூறியது இப்படி ஒரு நிகழ்வு என் பெண்ணிற்கு நடந்து தான் கடைசியாக இருக்க வேண்டும் என்று கூறினார்.கடுமையான தண்டனைகள் கிடைக்க வேண்டும் அவன் செய்த செய்களை விட தண்டனைகள் மிக கொடூரமானதாக இருக்க வேண்டும் அப்பொழுது தான் தப்பு செய்ய பயபடுவார்கள்.பார்த்த எனக்கே இவ்வளவு வலி கோபம் வருகிறது என்றால் அனுபவித்து கொண்டு இருக்கும் அவர்களுக்கு எவ்வளவு வேதனை ,கோபம் இருக்கும்.

  நண்பர்கள் அனைவருக்கும் நான் கேட்டுகொள்வது இது தான் இப்பொழுது தங்கை விநோதினியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றி விட்டார்கள் அதனால் அவர்களுக்கு பணத்தேவை நிறைய உள்ளது அதனால் தயவு கூர்ந்து தொகையை பார்க்காதீர்கள் உங்களால் முடிந்தது பத்து ரூபாயாக இருந்தாலும் அது போதும் அவர்கள் பணத்தை விட மனதை தான் எதிர்பார்கிறார்கள் அவர்களின் வேண்டுதலோடு நாமும் பிராத்திப்போம் ,அடுத்த வருடம் தங்கை வினோதினி நமது தல நண்பர்களோடு புத்தாண்டு கொண்டாடுவார் என்று நம்புவோமாக

  கடவுளே வேண்டாம் இது போல் ஒரு கொடுமை இனிமேல் யாருக்கும்

 3. டியர் சுந்தர் இந்த பதிவில் நீங்க கொடுத்துள்ள JAYABALAN’S ACCOUNT போய் நான் என்னால் முடிந்த ஒரு சிறிய 100 டாலர்ஸ்(Rs .5689) transfer பண்ணி இருக்கிறேன்.அந்த transaction ஆன details என் மொபைல் க்கு வந்ததை உங்களுக்கு forward பண்ணி இருக்கிறேன்.

 4. நம் தளம் புத்தாண்டில் எடுத்த முதல் அடி வெற்றி படி தான் 🙂 அக்கா வினோதினிக்கு சீக்கிரம் குணமாகி அவர் பழைய படி திரும்புவார்!! இதனை நல்ல உள்ளங்களும், முருகரும், பாலம் அய்யாவின் ஆசிர்வாதங்களும் இருக்கும் போது நிச்சயம் அவங்க பழைய நிலைமைக்கு வருவாங்க!! நல்லா இருப்பாங்க!!

 5. கிரேட் சுந்தர் ணா… வினோதினி அக்கா கண்டிப்பாக முழு குணம் அடைய இறைவனை பிரார்திகின்றேன்…

  -ஜி.உதய்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *