தாய் தந்தையர் மற்றும் அவர்களை பெற்றவர்களின் ஈமச் சடங்குகள் மற்றும் சிரார்த்தம், தெவசம் உள்ளிட்டவைகள் நடைபெறும்போது தவறாமல் அதில் கலந்துகொள்ளவேண்டும். இதெல்லாம் ஏன் எதற்கு என்று ஏகடியம் பேசுதல் கூடாது.
நமது முன்னோர்களுக்கும் பித்ருக்களுக்கும் உரிய சடங்குகளை தவறாமல் செய்து வரவேண்டும். நீங்கள் இங்கு சிரார்த்தத்தில் அளிக்கும் உணவும் நீருமே மேலே இருக்கும் நமது பித்ருக்களுக்கு உணவும் தண்ணீரும் ஆகும். நீங்கள் அவற்றை செய்ய தவறும்போதும் அவர்கள் பசியினாலும் தாகத்தினாலும் வாடுவர். அப்போது அவர்கள் உங்களை சபிப்பர். ஜாதகத்தில் இதற்கு பரிகாரமே கிடையாது.
ஆனால் முன்னோர்கள் கூறியுள்ள கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் ஓரளவு பித்ருதோஷம் குறையும்.
அமாவாசை போன்ற புண்ணிய நாட்களில் பசுமாட்டிற்கு அகத்திக்கீரை, பச்சரிசி, வெல்லம் , எள்ளு இவற்றை கலந்து கொடுக்கவேண்டும். இப்படி செய்துவந்தால் பித்ரு தோஷத்தின் தாக்கம் குறையும். அதே போல், அவர்களின் நினைவு நாளன்று முறைப்படி தர்ப்பணம் முதலியவற்றை செய்து அன்னதானம் செய்யவேண்டும். தர்ப்பணம் போன்ற சம்பிரதாயங்கள் இல்லாதவர்கள் பெற்றோர்களது நினைவு நாளில் பயபக்தியுடன் சைவ சமையல் செய்து, அதை ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவேண்டும்.
* ஒரு குடும்பத்தில் பெற்றோருக்கு ஒரே ஒரு பெண். அவர்களும் காலமாகிவிடுகின்றனர். அவர்களுக்கு அந்த பெண் திதி கொடுக்கலாமா?
* திதி கொடுக்க மறந்தவர்கள், திதி கொடுப்பதே தெரியாமல் இருந்தவர்கள், வாரிசு இல்லாத அல்லது இழந்த பெற்றோர், விபத்து, தற்கொலை காரணமாக அகால மரணமடைந்தவர்களின் வாரிசுகள் இவர்களுக்கெல்லாம் என்ன தான் வழி?
செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் சாலையில் நென்மேலி என்ற கிராமத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. திதி கொடுக்க மறந்தவர்கள், திதி கொடுப்பதே தெரியாமல் இருந்தவர்கள், வாரிசு இல்லாத அல்லது இழந்த பெற்றோர், விபத்து, தற்கொலை காரணமாக அகால மரணமடைந்தவர்களின் வாரிசுகள் என்று யார் இந்த தலத்துக்கு வந்தாலும் அவர்கள் சார்பில் தானே நின்று திதி கொடுக்கிறார் சிரார்த்த சம்ரட்சண பெருமாள்.
இந்த கிராமத்தின் மத்தியில் சிரார்த்த சம்ரட்சண பெருமாள் எனும் பெயரோடு லட்சுமி நாராயணன் சேவை சாதிக்கிறார். பித்ரு வேளை பூஜை எனும் பிற்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த கிரியைகளைப் பெருமாள் ஆராதனம் ஏற்று விரதமிருந்து செய்கிறாராம். திதி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் 11 மணிக்குள் பெருமாள் சந்நிதிக்கு வர வேண்டும்.
மஞ்சள், எள், தர்ப்பைப்புல், விரலில் அணிய பவித்ரம், வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றை பெருமாளிடம் சமர்ப்பித்து, தங்களுடைய பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். பிறகு கோவிலின் பின் பக்கத்திலுள்ள விஷ்ணு பாதம் எனும் பெருமாளின் திருவடிக்கு அருகில் சாஸ்திரிகள் வழிகாட்ட திதி கொடுப்பவர் தன் முன்னோருக்கு மறுபடியும் ஒரு சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு சமர்ப்பிப்பதே சிரார்த்த சம்ரட்சணமாகும். மீண்டும் அவர்கள் பெருமாள் சந்நிதிக்கு வந்து பெருமாளுக்கு மகா சங்கல்பமும் சகல உபசாரங்களுடன் பூஜையும் நடத்த வேண்டும். இறுதியில் நம் வீட்டில் செய்யும் சம்பிரதாய திவசச்சமையல் போல வெண்பொங்கல், தயிர் சாதம், பிரண்டையுடன் கலந்து எள் துவையல் எல்லாம் செய்யப்பட்டு நைவேத்தியம் செய்யப்படுகின்றன. இதை ஏற்று, நம் முன்னோர்களின் ஆத்மாக்களைப் பெருமாள் திருப்திப்படுத்துவதாக ஐதீகம்.
கயா, காசி, ராமேஸ்வரம் ஆகிய தலங்களில் இல்லாத சிறப்பு இந்த தலத்தில் உண்டு. பெண்கள் தங்கள் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்.
நம் தளம் சார்பாக இந்த கோவிலுக்கு (ஆலய தரிசனம்) செல்ல ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது. வருபவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப வாகனம் ஏற்பாடு செய்யப்படும். பித்ருக்களுக்கு செலுத்த வேண்டிய கடமையிலிருந்து தவறியவர்கள் அனைவரும் இதை நன்கு பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். நம்முடன் வந்திருந்து அவரவர் தத்தங்கள் முன்னோர்களுக்கும் காலம் சென்ற பெற்றோருகளுக்கும் சிரார்த்தம் செய்யலாம்.
செல்லும் தேதி விரைவில் தெரிவிக்கப்படும். வர விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயருடன் PITHRU DHOSHA PARIGARA VISIT என்று சப்ஜெக்டில் குறிப்பிட்டு நமக்கு editor@rightmantra.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். மறக்காது தங்கள் மொபைல் எண்ணை குறிப்பிடவும்.
ஆலய முகவரி :
Sri Sampath Bhattacharyar
Brahmana street
Nenmeli and post
Via Nandham, Chengalpet – 603002.
Kanchipuram District
Ph : 044- 27420053.
==========================================================
Like our website? Kindly extend your support!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. We are striving to sustain. Help us. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break or Donate us liberally.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
==========================================================
Similar articles on Pariharam :
எது மிகச் சிறந்த பரிகாரம், வழிபாடு?
பரிகாரங்கள் பலனளிக்காமல் போவது ஏன்? MUST READ
பரிகாரத் தலங்கள் என்பவை உண்மையா? MUST READ
சாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன? MUST READ
ஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி? கேள்வியும் பதிலும்
விதியை மாற்றி எழுதிய சிவபுண்ணியம்
=========================================================
Also check :
வாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்!
விஸ்வரூப தரிசனம் என்றால் உண்மையில் என்ன?
தீராத வினை தீர்க்கும் அடியார்கள் பாத தூளி – நம் இராமநவமி அனுபவம்!
108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!
புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்!
வரங்களை அருள்வதில் திருமலைக்கு நிகரான ‘திருநீர்மலை’ திவ்யதேசம்!
மலை மீது ஒரு எழில் கோலம்! சென்னை புதுப்பாக்கம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்! (ஆலய தரிசனம் 1)
விருந்துண்ண சென்றவனுக்கு மருந்தும் கொடுத்தனுப்பிய என் கோதண்டராமன் – (ஆலய தரிசனம் 2)
நம் ராமநவமி தரிசனமும், பொறுமைக்கு கிடைத்த பரிசும்!
ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!
‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!
பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!
நரசிம்மரும் நாயன்மாரும் நமக்கு வழங்கியுள்ள மிகப் பெரிய பொறுப்பு!
அண்ட சராசரங்களை கிடுகிடுக்க வைத்த நரசிம்மர் ஒரு வேடனிடம் கட்டுண்ட கதை!
=========================================================
[END]
வணக்கம் சுந்தர்ஜி ,
நல்ல தகவல் .கண்டிப்பாக நாங்களும் கலந்துகொள்ள விரும்புகிறேன்.இந்த கோவிலின் தலைமை குருக்கள் திரு.சம்பத் பட்டாச்சாரியா சேவைகள் அறிந்துள்ளேன் .
நன்றி .
சிவனடிமை மனோகரன் .
தகவல்களுக்கு மிக்க நன்றி சுந்தர் ஜி !!!
நிச்சயம் இந்த தகவல் எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் பல பெயரது வாழ்கையில் உள்ள பல்வேறு தடைகளை நீக்கி அவர் தம் வாழ்வில் முன்னேற்றத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை !!!
As usual, lets make this temple trip as another memorable one.
Ji – Pls dont plan it on Pongal weekend, many of us will be going to native.
——————————————
Sure. After Pongal holidays only.
– Sundar
மிகவும் பயனுள்ள அறிய தகவல் நன்றி சுந்தர் ஜி
Namaste Ji.
I am also intrested in joining the pilgrimage . Also if you can share the contact details of the Bhattar it would be of great help.
Ya pls wait for a day or two.
– Sundar
வெரி இன்பொர்மடிவெ ஷௌல்து பெ ஷறேத் வித் all
மிக்க நன்றி, பகவானே நேரில் வந்து அனுக்ரஹித்தது போல இருந்தது
எங்கள் பெற்றோருக்கு நாங்கள் இருவருமே பெண்கள் எப்படி அவர்களுக்கு கடமைகளை செய்து முடிக்கப் போகிறோம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த தகவல் மிக அருமையாக இருக்கிறது
எங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இதை பற்றி சொல்வோம்
மீண்டும் மிக்க நன்றி
மிக்க நன்றி ஐயா ,
என்னுடைய தந்தை பித்ருகளுக்கு தர்ப்பணம் தருவது புரட்டாசி அம்மாவாசை மற்றும் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் வீட்டில் செய்கிறார் மற்றபடி அவர் பித்ருகளுக்கு எதுவும் செய்வது இல்லை . அவர் இருக்கும் போது நான் பித்ருகளுக்கு தர்ப்பணம் தரலாமா ? அது முறையா? ஐயா நீங்கள் தயவு செய்து சொல்லுங்கள்….
நன்றி ,
தந்தை இருக்கும்போது மகன் பித்ரு காரியங்கள் செய்யக்கூடாது. அதற்கு பதில் கோ-சம்ரோக்ஷனம் செய்யலாம். கோ-சம்ரோக்ஷனம் பரம ஔஷதம். பசுவுக்கு அகத்திக்கீரை, பழங்கள் இவற்றை வாங்கித் தரலாம். உங்கள் பித்ருக்களின் திதியன்று நீங்கள் அன்னதானம் செய்யலாம். காக்கைக்கு உணவிடலாம். ஏழைகளுக்கு வஸ்திர தானம் உள்ளிட்டவற்றை செய்யலாம். இவை நிச்சயம் உங்கள் பித்ருக்களை திருப்தி படுத்தும்.
– சுந்தர்
ஹாய்,
என்னுடைய தந்தை கடந்த வருடம் ஆகஸ்ட் 15,2014 அன்று காலம் ஆனார் .
அவருக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 2015 அதே நாளில் திதி கொடுக்க விரும்பு கிறேன். நன் தற்போது சென்னை இல் வசிக்கிறேன். எனக்கு தங்கள் உதவ வேண்டும் .
சென்னையில் திதி கொடுக்க தளங்கள் இருகின்றனவா ?
இல்லை சென்னை அருகில் திதி கொடுக்க ஏதேனும் இடம் உள்ளதா?
அப்படி எனில் அந்த விவரங்களை தெரிவிக்கவும்.
இல்லை இனி உங்களது ஆலயத்துக்கு வரலாமா ?
பொதுவாக சென்னைவாசிகள் தர்ப்பணம் கொடுக்கும் இடம் பற்றி கூறுகிறேன்.
மயிலை கபாலீஸ்வரர், பார்த்தசாரதி கோவில் குளக்கரை, கோயம்பேடு குறுங்காலீஸ்வரர், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் குளக்கரை, தி.நகர் சிவ&விஷ்ணு ஆலையத்தின் அருகிலும், வடபழனி ஆண்டவர் கோயில் குளக்கரை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, தாம்பரம், குன்றத்தூர், மாங்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலுள்ள வழிபாட்டு தலங்களில் உள்ள குளக்கரைகளிலும் தர்ப்பணம் கொடுக்கலாம்.
மிக்க நன்றி
எல்லோருக்கும் தெரியாத பல தகவல்களை பகிர்ந்ததுக்கு மிக்க நன்றி ஐயா. நென்மேலி கிராமத்திற்கு சென்னையில் இருந்து எப்படி செல்வது மற்றும் தர்ப்பணம் பண்ணுவது என்றால் யாரை முன்கூட்டியே அங்கு தொடர்பு கொள்வது
என்பதை சொல்லவும் என்னுடைய ஈமெயில் அட்ரஸ் mohansackthi.@gmail.com. நன்றி
தெரியாத தகவல்களை பகிர்ந்ததர்க்கு மிக்க நன்றி.