Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > All in One > ‘தொண்டின் ஆராதனை’ – இதுவன்றோ சேவை ! மிகப் பெரிய கைங்கரியத்தில் உங்கள் பங்கு இடம் பெற….

‘தொண்டின் ஆராதனை’ – இதுவன்றோ சேவை ! மிகப் பெரிய கைங்கரியத்தில் உங்கள் பங்கு இடம் பெற….

print
‘கந்தன் கருணை’ படத்துல “உலகத்திலேயே பெரியது என்ன?” அப்படின்னு ஒளவை பாட்டியிடம் முருகப் பெருமான்  கேட்கும்போது  ஒளவை என்ன சொல்வாங்கன்னு ஞாபகம் இருக்கா?

பெரியது கேட்கின் நெறிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரிய மாலோ அலைகடற் றுயின்றோன்
அலைகடலோ குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக் கொருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத்தொடுக்கம்
இறைவரோ தொண்டருள்ளத்தொடுக்கம்
தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே

…..அப்படின்னு சொல்லி முடிக்கிறாங்க.

இதுல இருந்து என்ன தெரியுது? இந்த உலகத்தைவிட, அதை படைத்தவனை விட பகவத் சேவையில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ள  தொண்டர்களின் பெருமையை பேசுவதே பெரியது.

பேசுவதே பெரியது எனும்போது, அந்த தொண்டர்கள் செய்யும் சேவையும் அவர்களும் எவ்வளவு பெரியவர்கள், எத்தனை பெருமை மிக்கவர்கள் என்று சற்று நினைத்து பாருங்கள். அவர்களை கௌரவிப்பது என்பது இன்னும் எத்தனை பெரிது என்று சிந்தித்து பாருங்கள்.

தொண்டுக்கெல்லாம் பெருந்தொண்டு அதுவாகத் தானே இருக்க முடியும்?

அந்த தொண்டில் அதாவது இறையடியார்களை கௌரவிக்கும் அந்த பெருந்தொண்டில் எந்த வித சிரமமும் நேர விரயமும் இன்றி உங்களை ஈடுபடுத்திக்கொள்ள, மிகப் பெரிய & அரிய வாய்ப்பு ஒன்று உங்கள் வாயில் கதவை தட்டியுள்ளது.

கிடைக்குமா இது போன்றதொரு வாய்ப்பு ? பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் தலைமுறைக்கும் நற்பலன்களை அள்ளிக்கொள்ளுங்கள்.

தனுர் மாசம் என்றழைக்கப்படும் மார்கழி மாதத்திற்குரிய சிறப்பு பற்றி ஏற்கனவே நாம் ஒரு பதிவில் சொல்லியிருந்தோம். மானுடம் உய்ய கண்ணன் கீதை தந்ததும், ஆண்டாள் திருப்பாவை தந்ததும் இந்த மார்கழி மாதத்தில் தான்.

திருப்பாவையின் பெருமையை நாடு முழுக்க  பரப்புவதர்க்கென்றே பராசர பத்ரிநாராயண பட்டர் சுவாமி என்பவரால் துவக்கப்பட்டுள்ள இயக்கம் தான்  ‘ஸ்ரீமான் அறக்கட்டளை’. பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தை தலைமையிடமாக கொண்டு இந்த அறக்கட்டளை இயங்குகிறது.

அனைத்து தரப்பு மக்களிடமும் திருப்பாவையை கொண்டு செல்லும் உயரிய நோக்கத்தில் பல மொழிகளிலும் இந்த மார்கழி மாதம் முழுக்க திருப்பாவை சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளது.

இந்த அரிய முயற்சி சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் பிள்ளையார் சுழி போடப்பட்டு துவங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த இளையவல்லி  ஸ்ரீமான் சுவாமி  மேற்படி ஆலயத்தில் தினமும் திருப்பாவை பற்றிய சொற்பொழிவை ஆற்றிவருகிறார். பூவோடு சேர்ந்த நாரே மணக்கும் எனும்போது காம்பு மணக்காதா என்ன? அவருடைய ஏழு வயது பாலகன் ஸ்ரீ சடஜித் என்பவர், எம்பெருமான் & தாயாரின் திருக்கல்யாண உற்சவங்களை பற்றி வாரம் ஒரு தலைப்பு வீதம் சொற்பொழிவு ஆற்றிவருகிறார். (லக்ஷ்மி, சீதா, ருக்மிணி, சத்யபாமா & ஆண்டாள்).

திருப்பாவையின் மையக்கருத்தே இறைவனுக்கு செய்யும் தொண்டு என்பதால் இறைவனுக்கு தொண்டு செய்யும் பணியில், பக்தி மார்கத்தை பரப்பும் பணியில், தன்னலமற்று தம்மை பன்னெடுங்காலமாக ஈடுபடுத்திக்கொண்டு வரும் தொண்டர்களை அடையாளம் கண்டு, அவர்களை இந்த மாதம் முழுக்க தினசரி ஒருவர் வீதம் கௌரவித்து வருகிறார்கள்  ஸ்ரீமான் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகியினர்.

மடப்பள்ளியில் அக்கினியின் அனலுக்கிடையே நின்றுகொண்டு தம்மை வருத்திக்கொண்டு நமக்காக பிரசாதம் செய்கிறவர் முதல் கோவிலில் திரளாக வரும் பக்தகோடிகளை ஒழுங்கப்படுத்தி வரிசையில் நிற்கவைக்கும் பணி செய்பவர், கோவிலை சுத்தம் செய்யும் பணியில் பன்னெடுங்காலமாக ஈடுபட்டு வருபவர், மற்றும் புஷ்ப கைங்கர்யம் செய்பவர்  வரை இறைவனின் தொண்டுக்காகவே தமது வாழ்நாளை அற்பணித்துக்கொண்டுள்ள பலர் இதன் மூலம் பலன் பெறுகிறார்கள்.

[button style=”note” color=”purple” window=”yes”]மடப்பள்ளியில் அக்கினியின் அனலுக்கிடையே நின்றுகொண்டு தம்மை வருத்திக்கொண்டு நமக்காக பிரசாதம் செய்கிறவர் முதல் கோவிலில் திரளாக வரும் பக்தகோடிகளை ஒழுங்கப்படுத்தி வரிசையில் நிற்கவைக்கும் பணி செய்பவர், கோவிலை சுத்தம் செய்யும் பணியில் பன்னெடுங்காலமாக ஈடுபட்டு வருபவர், மற்றும் புஷ்ப கைங்கர்யம் செய்பவர்  வரை இறைவனின் தொண்டுக்காகவே தமது வாழ்நாளை அற்பணித்துக்கொண்டுள்ள பலர் இதன் மூலம் பலன் பெறுகிறார்கள்[/button]. இப்படி இந்த ஸ்ரீமான் டிரஸ்ட்டினரால் அடையாளம் காணப்படும் ஒவ்வொரு உன்னத ஆத்மாவும் தினசரி சொற்பொழிவின் முடிவில் அனைவரிடமும் அறிமுகப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்கள். எனவே இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சிக்கே ‘தொண்டின் ஆராதனை’ என்று பெயரிட்டுவிட்டார்கள்.

என்ன ஒரு பொருத்தமான பெயர்….!

இந்த தொண்டின் ஆராதனை மூலம் கௌரவிக்கப்படும் இறையடியார்கள் சிலரைப் பற்றிய குறிப்பு :

திரு.சத்தியமூர்த்தி :

கண்ணிருந்தும் வேதங்களையும், உபநிஷதங்களையும் காக்கத் தவறியவர்கள் மத்தியில் இவர் செய்வதை பாருங்கள்….

திருவல்லிக்கேணியை சேர்ந்த இந்த 80 வயது பெரியவர் மிகப்பெரிய வேத பண்டிதர். முப்பது வருடங்களுக்கு முன்பு இவருக்கு பார்வை போய்விட்டது. தற்போது பார்வையற்ற நிலையிலும் வேதத்தை காக்கும்பொருட்டு அதை இலவசமாக அனைவருக்கும் கற்றுத் தருகிறார். ஆர்வமிக்க பலர் இவரிடம் வேதம் பயின்று வருகிறார்கள். அவர்களிடம் இவர் ஒரு ரூபாய் கூட வாங்குவதில்லை. எத்தனையோ இன்னல்களுக்கு இடையே அவர் இந்த அரிய  செயலை செய்துவருகிறார்.  கோவில் பிரகாரம், மரத்தடி, முட்டுச் சந்து என்று கிடைக்கும் இடத்தில் இவர் பாடம் நடத்தி விடுகிறார். எந்த சௌகரியங்களையும் எதிர்பார்ப்பதில்லை. இவரை கௌரவிப்பது நமது கடமையன்றோ?

Person honoured : Sri Sathyamoorthy swamy ( Kainkaryam = Veda adyapakar)

Person doing the honour : Sri K.E.B Rangarajan swamy & Sri E.B.Sriram swamy

Even a small accident ( a bruise) makes us feel mentally handicapped for a long period. But here is a person who had lost his vision before three decades but has never skipped taking the regular Veda session for his students. Sri Sathyamoorthi swamy living at Thiruvallikeni is one who is an epitome of determination and perseverance. The Upanishads flow from his tongue like an uninterrupted waterfall. Though he cannot see through mortal eyes, he can identify the exact number of students present for the Veda class and can point out the exact mistakes committed by each of them in pronunciation or swaras. Despite impediments, the thought of kainkaryam has made all the obstacles miniscule in his perception. His students fill the temple of Lord Parthasarathy and Bhagavath Ramanujacharya with Veda gosham at the time of Thirumanjanam. Swamy has not stopped with teaching people. He has created the wisdom to use that knowledge at the appropriate time for the purpose of Kainkaryam. He is a symbol of success to mankind.

திரு. ரகு  :

இறைபணியில் ஒரு இரும்பு உறுதி

மேற்கு மாம்பலம் சத்தியநாராயண சுவாமி திருக்கோவிலின் மடப்பள்ளியில் சமையல்காரர். நளபாகத்தில் இவர் தயாரிக்கும் பிரசாதம் அமிழ்தினும் இனிய சுவை உடையது. அந்த கோவிலின் பக்தர்கள் மத்தியில் இவரது கைமணம் மிகவும் பிரசித்தம். தற்போது 60 வயதாகும் இவருக்கு இவரது சமையல் திறமையை  பார்த்து எத்தனையோ வெளி காட்டரிங் காண்ட்ராக்டுகள் வந்தன. ஆனாலும் தமது கைத்திறமையை வணிகரீதியாக பயன்படுத்த விருப்பமின்றி அவற்றை ஏற்காது மறுத்துவிட்டார். மேலும், இறைவனுக்கு சமைத்துவிட்டு மற்றவர்களுக்கு தம்மால் சமைக்க முடியாது என்றும் உறுதி படக்கூறிவிட்டார்.

திருமதி.வேதவல்லி :

பெண்கள் தங்கள் கணவர்களைப் போலல்லாமல் பொதுவாகவே ஒரே நேரத்தில் பல வேலைகளை அனாயசமாக செய்யக்கூடியவர்கள். ஆனால் அவர்களது அத்தகைய திறமை அவர்களது குடும்பத்திற்கும் இல்லறம் நடத்தவும் மட்டுமே பயன்படுகிறது. ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே தாங்கள் செய்யும் அத்தகைய அன்றாட பணிகளுக்கு இடையே கைங்கரியத்தை செய்யக்கூடிய பாக்கியம் கிடைக்கிறது. அவர்களில் ஒருவர் தான் இந்த திருமதி.வேதவல்லி என்னும் அம்மா. கடந்த 20 ஆண்டுகளாக ஸ்தோத்திரங்கள், திவ்ய பிரபந்தங்கள், இதிகாச நாடகங்கள், நாட்டியங்கள் என சொல்லிக்கொடுத்திருக்கிறார். அதன் மூலம் எண்ணற்ற மழலைச் செல்வங்களுக்கு ஒப்பற்ற ஞானத்தை வழங்கியிருக்கிறார் . மூன்றே வயது நிரம்பிய ஒரு குழந்தைக்கு வெற்றிகரமாக பாதுகா சுலோகங்களை சொல்லிக்கொடுத்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

குடும்பம், கைங்கர்யம் இரண்டையும் எப்படி மானேஜ் செய்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டால் அவர் சிரித்துக்கொண்டே, “கைங்கரியத்தை ஒரு தனி வேலையாக, பணியாக நினைக்கும்போது தான் தயக்கம் வரும். ஆனால் அதுவே நம் முழுமுதற் கடமை என்று கருதி செயல்பட்டுவந்தால் எப்படி அது முடியாமல் போகும்? தினமும் பல் துலக்குகிறேன், குளிக்கிறேன்… அது போலத் தான் தினமும் பாடம் சொல்லிக்கொடுக்கிறேன்.”

தான் செய்து வரும் கைங்கரியம் குறித்த அவரது தீர்க்கமான பார்வை நம்மை பிரமிக்க வைக்கிறது.

இப்படியும் சிலர் இருப்பதால் தானோ இந்த உலகம் டிசம்பர் 22 அன்று அழியவில்லை?

இப்படி ஒவ்வொரு நாளும் ஒருவர்.

இவரைப் போன்றவர்களுக்கு இந்த கைங்கரியத்தில் நாம் அளிக்கும் பணமோ பொருளோ ஒரு பொருட்டல்ல என்றாலும்… அவர்களது சேவையை ஒரு சபையில் நினைவுகூர்ந்து அனைவர் முன்னிலையிலும் அளிக்கும் கௌரவம் அந்த பரந்தாமனுக்கே அளிக்கும் கௌரவம் அல்லவா?

மேற்கூறிய இறையடியார்களை கௌரவிக்கவும், உபஞாசத்துக்கு வருகை தரும் சுவாமிகளுக்கு சம்பாவனை அளிக்கவும் நிதி தேவைப்படுகிறது.

இந்த பணத்தின் மூலம் மேற்படி தொண்டர்களுக்கு பணம்,  வேட்டி சட்டை புடவை உள்ளிட்ட வஸ்திரங்கள், நினைவு பரிசு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணா சுவீட்ஸ் நிறுவனத்தார் நினைவுப் பரிசிற்கான செலவை ஏற்றுக்கொண்டு அதை அளித்துவருகின்றனர்.

இந்த தொண்டிற்கு தேவையான மொத்த பணத்தையும் ஒருவரிடமே இந்த டிரஸ்ட்டினர் பெற்றுவிட முடியும். ஆனால், இந்த பெரும் கைங்கர்யத்தில் நமது பங்கும் இருக்கவேண்டும் என்ற உயரிய நோக்கில் ஒரு அருமையான திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

மேற்கூறிய மிகப் பெரிய கைங்கர்யத்தில் தமது பங்கை அளிக்க விரும்பும் பக்தகோடிகள் தலா ரூ.1000/- நன்கொடை அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒருவரிடம் ரூ.1000/-த்துக்கு மேல் இவர்கள் பெற்றுக்கொள்வதில்லை. இவர்கள் நோக்கம் பணம் பெறுவதல்ல. இந்த மாபெரும் கைங்கரியத்தில் கூடுமானவரை பலரை சேர்க்கவேண்டும் என்பது தான்.

இந்த ‘தொண்டின் ஆராதனை’ நிகழ்ச்சிக்கு பொறுப்பாளர்கள் ஸ்ரீவத்சன் (9840128785) மற்றும் சடகோபன் (9940044928) என்னும் இளைஞர்கள். சந்தேகம் ஏதேனும் இருப்பின் இவர்களை  கேட்கலாம்.

சிறுதுளி பெருவெள்ளம் என்பதால் பக்தகோடிகள் இந்த கைங்கர்யத்திற்க்கு கைகொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நீங்கள் அளிக்கும் தொகை அனைத்தும் பகவத் சேவையில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் தொண்டர்களை தவறாமல் போய் சேரும். அதற்குரிய புண்ணியம் உங்களை வந்து சேரும்.

இந்த கைங்கரியத்தை செய்து வரும் ஸ்ரீமான் டிரஸ்ட்டின் வங்கிக் கணக்கு விபரங்களை கீழே தந்திருக்கிறேன்.

விருப்பப்படுகிறவர்கள்  ரூ.1000/- பணத்தை அவர்கள் அக்கவுண்ட்டுக்கு செலுத்தவும். பணத்தை செலுத்திய பின்னர் srimaantrust@gmail.com & ramaswamy.ranganathan@gmail.com ஆகிய இ-மெயில் முகவரிக்கு அக்கவுண்ட் தேவைக்காக மின்னஞ்சல் அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Name : Srimaan Trust

Acc no :  612501123322

Bank : ICICI, Srirangam

IFSC Code : ICIC006125

Contributions to the Trust are eligible for 80G deduction under the Income Tax Act, 1961.

ஸ்ரீமான் டிரஸ்ட் மற்றும் அவர்களது சேவைகள் பற்றிய விபரங்களுக்கு :
http://www.srimaantrust.com/ என்ற முகவரியை செக் செய்யவும்.

[END]

2 thoughts on “‘தொண்டின் ஆராதனை’ – இதுவன்றோ சேவை ! மிகப் பெரிய கைங்கரியத்தில் உங்கள் பங்கு இடம் பெற….

  1. ஏழைகளுக்கு செய்யும் தொண்டு கடவுளுக்கே செய்யும் தொண்டு அதே போல் கடவுளின் காலடிகளில் இருந்து கொண்டு சேவை செய்யும் இவர்களை இன்னும் நல்லபடியாக கடவுள் பார்த்துகொள்வார்.

    இப்படி இவர்களை ஆராதிப்பது கடவுளை நேரடியாக ஆராதிப்பது போன்றது

    வாழ்க வளர்க இவர்களின் சேவை

  2. இவர்கள் அனைவரும் கடவுளின் தூதுவர்கள். சுந்தர் கூறியது எத்துனை உண்மை இவர்களை போன்றோர் இருபதினால் தான் டிசெம்பர் 22 அன்று உலகத்துக்கு எந்த ஒரு அசம்பாவிதம் நடைபெறவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *