நம்மை பொருத்தவரை நமது வாழ்க்கையில் மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது திரு.இளங்கோ அவர்களின் சந்திப்பு தான்.
இளங்கோ அவர்கள் இரு கண்களிலும் பார்வையற்ற ஒரு மாற்றுத் திறனாளி. பிறந்தது முதல் பல்வேறு போராட்டங்களை சந்தித்து சந்தித்து அதன் மூலம் தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இன்று ஒரு மிகப் பெரும் சாதனையாளராக உயர்ந்திருப்பவர்.
அவரை ஒரு பேட்டிக்காக சந்தித்தது தான் நமது வாழ்க்கையின் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
இளங்கோ அவர்கள் பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள ஒரு நிறுவனத்தின் தலைவர். பாடகர். டப்பிங் ஆர்டிஸ்ட். தன்னம்பிக்கை பயிற்சியாளர். ஆங்கில ஆசிரியர். இப்படி பன்முகங்கள் கொண்டவர். நமக்கு அவரிடம் அறிமுகம் எதுவும் இல்லை. நம்மை யாரென்று தெரியாது. அப்படியிருந்தும் நாம் அவரை பேட்டி காண விரும்பியதும் பெரிய மனதுடன் ஒப்புக்கொண்டு நமக்கு நேரமும் தந்தார்.
பேட்டியெல்லாம் முடிந்து கிளம்பும்போது அவரிடம் “எப்படி சார்… மிகப் பெரிய ஊடங்களுக்கு மட்டுமே அனைவரும் முக்கியத்துவம் கொடுத்து பேட்டி கொடுக்கும் சூழ்நிலையில், நீங்கள் இருக்கும் பிஸி ஷெட்யூலில் எங்களை போன்றவர்களையும் மதித்து இப்படி ஒரு விரிவான பேட்டி கொடுக்கவேண்டும் என்று தோன்றியது?”. நம் சந்தேகத்தை கேட்டோம்.
“நீங்க நிஜ ஹீரோக்களை தேடி கிளம்பியிருக்கீங்க சுந்தர். So, I wanted to encourage you!” என்றார்.
அவர் அன்று சொன்ன அந்த வாக்கியம் எமக்கு உள்ளுக்குள் ஒரு வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது.
நாளும் கோளும் மாற, புதிய பாதை தென்பட்டது. ரைட்மந்த்ரா பிறந்தது. முதல் ஆண்டு பாரதி விழாவை டிசம்பர் 2012 ல் கொண்டாடும்போது திரு.இளங்கோ அவர்களையே சிறப்பு விருந்தினராக கூப்பிட்டு கௌரவித்தோம்.
அவரது தாயாருக்கு அன்று நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையிலும், நம் நிகழ்ச்சிக்கு தவறாமல் வந்திருந்து கலந்துகொண்டு பாரதி பாடல்கள் பாடி, உரையாற்றி சிறப்பித்தார்.
கடவுள் வாழ்த்தாக பாரதி விழாவில் அப்போது இளங்கோ அவர்கள் பாடிய பாடல் என்ன தெரியுமா? “குறையொன்றுமில்லை… மறைமூர்த்திக் கண்ணா!” பாடல் தான்.
இளங்கோ அவர்கள் இந்த பாடலை தான் பாடவேண்டும் என்று நாம் வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டோம். அதற்கு காரணம் இருக்கிறது. இளங்கோ அவர்கள் ஒரு தன்னம்பிக்கையாளர். கடவுள் மறுப்பாளர். இருப்பினும் நமது வேண்டுகோளை புறந்தள்ளாது அந்த பாடலை பாடி விழாவிற்கு ஒரு அருமையான துவக்கத்தை தந்தார்.
இளங்கோ அவர்கள் அந்த பாடலை பாட, அதை கேட்டோர் மெய்மறந்தனர்.
விழா முடிந்த பிறகு, ஒரு நாள் அவரை சந்திக்க சென்றிருந்தபோது, இதுவரை வெளியான தமது பேட்டிகளிலேயே நாம் எடுத்த பேட்டி தான் மிகச் சிறப்பாக வந்திருப்பதாக அனைவரும் பாராட்டுவதாகவும், அதில் இடம்பெற்றுள்ள சம்பவங்களுடன் மேலும் பல சம்பவங்களை சேர்த்து கிழக்கு பதிப்பகத்திற்கு தான் ஒரு புத்தகம் எழுதவிருப்பதாகவும் அவர் சொல்ல சொல்ல அதை நாம் தான் எழுதித் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
எப்பேர்ப்பட்ட சேவை… எப்பேர்ப்பட்ட வாய்ப்பு… மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டோம்.
பிரதிபலன் எதுவும் எதிர்பாராமல் இளங்கோ அவர்களுக்கு நாம் இதை செய்ய விரும்பினாலும், அவர் இந்த பணிக்காக நமக்கு ஏதேனும் செய்ய விரும்பினார். மிகப் பெரிய உதவி ஒன்றையும் செய்தார்.
நண்பர் சிட்டியிடம் இதைப் பற்றி சொன்ன போது, “கரும்பு தின்னக் கூலியா?” என்று கேட்டார். “இளங்கோ போன்ற சாதனையாலர்களுடன் பேசுவதே இனிமையான அனுபவம். அவரது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை எழுதுவது என்றால் அது நமக்கு எத்தனை பெரிய பூஸ்ட் கொடுக்கும்!” என்றார்.
அவர் சொன்னது உண்மை தான் என்பதை புத்தகத்தை எழுத ஆரம்பித்தபோது உணர்ந்துகொண்டோம்.
கொஞ்சம் கூட கஷ்டப்படாமல், உடலையோ மனதையோ வருத்திக்கொள்ளாமல், வெகு சுலபமாக கிடைக்கப்பெற்று நாம் இன்று அனுபவித்து வரும் பல சௌகரியங்கள், தங்களுக்கு கிடைக்காது, அவற்றுக்காக எண்ணற்றோர் இந்த உலகில் தவமிருக்கிறார்கள் தெரியுமா?
இளங்கோ அவர்களை பொருத்தவரை, நம்மை விட அதிகம் படித்தவர். பண்பாளர். சிறந்த முறையில் ஆங்கிலத்திலும், தமிழிலும் உரையாடக்கூடியவர். ஆனால் அவருக்கு பார்வையில்லை என்ற ஒரே காரணத்திற்காக நாம் சர்வசாதரணமாக பெறக்கூடிய பாஸ்போர்ட், ஏ.டி.எம். கார்ட், செக் புக் முதலியவைகள் அவருக்கு மறுக்கப்பட்டன.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவற்றை பெற அவர் வங்கிக்கும், பாஸ்போர்ட் அலுவலகத்துக்கும், இதர அலுவலகங்களுக்கும் அலைந்த அலைச்சலும் நடந்த நடையும் இருக்கிறதே… அப்பப்பா… “எனக்கு ஏன் மறுக்கிறீர்கள்? மற்றவர்களை விட நான் ஏ.டி.எம். கார்டையும் செக் புக்கையும் திறமையாக கையாள்வேன்” என்று விடாமுயற்சியுடன் வாதிட்டு சாதிக்கப்பெற்றார்.
இந்த புத்தகத்தை எழுத நாம் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி சொல்ல வேண்டுமென்றால்…. எமக்கு அலுவலகம் முடிந்ததும் இளங்கோ அவர்களை சந்திக்க அடையாரில் உள்ள அவர் அலுவலகத்துக்கு சென்றுவிடுவோம். அவர் கூறுவதை மொபைலில் ரெக்கார்ட் செய்துகொள்வோம். டைரியில் குறிப்பெடுத்துக்கொள்வோம். பின்னர் வீட்டிற்கு வந்து அதை கணினியில் போட்டு கேட்டு நம் பாணியில் சற்று காரமும் மணமும் சேர்த்து எழுதுவோம். அதை அவருக்கு PROOF அனுப்புவோம். அதற்கு பிறகு ரைட்மந்த்ராவுக்கு பதிவுகள் எழுதுவோம். இப்படியே நாட்கள் ஓடின.
இளங்கோ அவர்களுடன் நமக்கு ஏற்கனவே ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இருந்ததால் அவரது வலிகளையும் சாதனைகளையும் நாம் சரியான முறையில் பிரதிபலித்தோம். அதன் விளைவாக நூல் சிறப்பாக ஷேப் ஆகிக்கொண்டிருந்தது.
மேலும், அவர் சந்தித்த அதே பிரச்னைகளையும் போராட்டங்களையும் அவமதிப்புக்களையும் துரோகங்களையும் நாமும் குறைவின்றி சந்தித்துள்ளோம் என்பதால் அவரது உணர்சிகளை அப்படியே எம்மால் பிரதிபலிக்க முடிந்தது. இல்லையெனில் அவை ஜஸ்ட் வெறும் எழுத்தாகத் தான் போயிருக்குமே தவிர தன்னம்பிக்கை நூலாக மாறியிருக்காது.
டிசம்பர் 2012 துவங்கிய பணி ஜூலை 2013 வரை நீடித்தது. சென்ற ஆண்டு நடுவிலேயே இந்த பணி நிறைவடைந்து நூல் வெளியாகியிருக்கவேண்டியது. கடுமையான வேலைப் பளு நமக்கு இருந்தபடியால் நம்மால் சில சமயம் எழுதமுடியாது போய் அதனால் தாமதம் ஏற்பட்டது. எனவே நம்மைத் தவிர நூலின் இறுதி வடிவத்துக்கு வேறு ஒருவரும் துணை புரிந்திருக்கிறார்.
ஒருவழியாக அனைத்தும் முடிவு பெற்று இதோ இந்த ஆண்டு புத்தக சந்தையில் கிழக்கு பதிப்பகம் சார்பாக நூல் வெளியிடப்பட்டு விட்டது.
இப்படி ஒரு நூலை எழுதுவது நமக்கு மிகவும் பெருமை என்றாலும், இதை எப்படி வெளியில் சொல்வது என்று நமக்கு தெரியவில்லை. ஏனெனில், நூல் உருவான விதம் குறித்து இளங்கோ அவர்கள் என்ன சொல்லப்போகிறார், அப்படியே அவர் சொன்னாலும் கிழக்கு பதிப்பகம் அதற்கு ஒப்புக்கொள்ளுமா என்றெல்லாம் எமக்கு சந்தேகம் இருந்தது. நட்புக்காக இதை செய்கிறோம். இதில், நமக்கு பெயரை எதிர்பார்க்க வேண்டாம். இப்படி ஒரு நூல், அதுவும் இளங்கோ போன்ற சாதனையாளர்களின் வாழ்வியல் அனுபவங்களை எழுதுவதே நமக்கு கிடைத்த்த மிகப் பெரிய வாய்ப்பு. அதுவே போதும் என்ற மனநிலையில் தான் நாம் இருந்தோம். எனவே எம் நெருங்கிய நண்பர்களுக்கு கூட இப்படி ஒரு பணியில் நம்மை நாம் ஈடுபடுத்தி கொண்டு வந்தது தெரியாது.
புத்தக சந்தைக்கு சமீபத்தில் சென்றபோது நூலை வாங்கிப் பார்த்தால் ஒரே இன்ப அதிர்ச்சி. இளங்கோ அவர்கள் இந்த நூல் எழுதுவது தொடர்பாக நடந்தவைகள் அனைத்தையும் ஒளிவு மறைவு இல்லாமல் கூறி நமது பெயரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருந்தார். நமது பெயருக்கு பிறகு தான் அவரது தாயாரின் பெயரை கூட குறிப்பிட்டிருந்தார்.
அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய நூல். நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் பரிந்துரை செய்யவேண்டிய நூல்.
புத்தக வடிவில் ஒரு குளுக்கோஸ் இந்த நூல் என்பதால் பரிசளிக்க ஏற்ற ஒரு நூல்.
நூலில் இடம்பெற்றுள்ள பல சம்பவங்கள் நமது அறிவுக் கண்களை திறந்து நமது வாழ்க்கையின் போக்கையே மாற்றக்கூடியவை என்றால் மிகையாகாது.
திரு.இளங்கோ அவர்களுக்கும், கிழக்கு பதிப்பகத்திற்கும் நாம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். புத்தக கண்காட்சிக்கு சென்ற போது கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனர் திரு.பத்ரி ஷேஷாத்ரி அவர்களை சந்திக்க நேர்ந்தது. நமது பெயரை இடம் பெறச் செய்தமைக்கு அவருக்கு கைகுலுக்கி நன்றி தெரிவித்தோம்.
நம்மையுமறியாமல் நமது எழுத்து புத்தக கண்காட்சிக்குள் நுழைந்து விட்டதால் – இறைவன் அருளால் – எதிர்காலத்தில் நாம் எழுதப்போகும் பல ஆன்மீக / தன்னம்பிக்கை நூல்களுக்கு இதுவே ஒரு பிள்ளையார் சுழி என்றால் மிகையாகாது.
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். (குறள் 443)
===================================================
இளங்கோ அவர்களின் பேட்டிக்கு :
ஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்! Part 1
ஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்! Part 2
===================================================
[END]
வாழ்த்துக்கள்
தொடரட்டும் இது போன்ற இன்பப அதிர்ச்சிகள்
சாதாரண கல்லைக்கூட உயிரூட்டசெய்து அதனுடைய வாழ்க்கை போராட்ட கதையை கூறி கண்களில் கண்ணீர் வரவைக்ககூடிய ஆற்றல் உங்களுடைய எழுத்துக்கு உள்ளது. அப்படி இருக்கும்போது உங்களது கை வண்ணத்தில் உதயமான இளங்கோ அவர்களின் இந்த புத்தகம் கேட்கவும் வேண்டுமா?
வாழ்த்துக்கள் சுந்தர் சார்..
நீங்க கலக்குங்க சுந்தர் சார்..சொல்ல வார்த்தைகள் இல்லை.
வாழ்த்துக்கள் சுந்தர் சார். உங்கள் பனி தொடரட்டும்.
sir congrats
பாராட்டுகள்.(ITS A SWEET SURPRISE) எங்களை போன்றவர்கள் உங்களை போன்றவர்களை எப்போதும் ஊக்கு வித்து கொண்டே இருப்போம். நிறைய எழுதுங்கள்.படிக்க நாங்கள் ரெடி.
Congatulations Sundar,,, You can definitely come with many more work
இறைவன் அருளால் – எதிர்காலத்தில் நாம் எழுதப்போகும் பல ஆன்மீக / தன்னம்பிக்கை நூல்களுக்கு இதுவே ஒரு பிள்ளையார் சுழி என்றால் மிகையாகாது
எண்ணிய ண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணியர் ஆவர் பெறின் Kural 666
மிக்க நன்றி சார். தங்களை போன்றவர்களின் வழிகாட்டுதல்களும் ஆசியும் இருக்கும்பட்சத்தில் எதுவும் சாத்தியமே.
– சுந்தர்
மனமார்ந்த வாழ்த்துக்கள் சுந்தர். எனக்கு தெரியும் இது ஒரு ஆரம்பம்தான். திரு இளங்கோ போன்றவர்களின் அனுபவங்களே நமக்கு பெரிய பாடம்.
உயர் காவல் துறை அதிகாரி திரு சைலேந்திர பாபு அவர்களையும் சந்தித்து அவரை நம் தளத்திற்காக பேட்டி எடுக்க முயற்சி எடுக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். காவல் துறை அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுனர்கள் ஆகியோரின் மேலான கருத்துக்களை நம் தளத்தில் வெளியிடுவதன்மூலம் அவர்களின் துணையும் வழிகாட்டுதலும் நமக்கு கிடைத்தால் கூடுதல் பாதுகாப்பு.
\\உங்கள் கர்மா நன்றாக இருந்தால் தகுதியுடையவர்களை சந்தித்து அது நல்ல திருப்புமுனையை உங்களுக்கு ஏற்படுத்திவிடும். கர்மா சரில்லை என்றால், தகுதியற்றவர்களை சந்தித்து அதன் மூலம் உங்கள் வாழ்க்கையே திசை மாறிப் போய்விடும்.
அவர்களின் நட்பெல்லாம் மகோன்னதமாகத் தெரியும். அதை கொண்டாடி மகிழ்வீர்கள். எல்லாம் முடிந்து, அனைத்தையும் இழந்து நிற்கும்போது தான் அது உறைக்கவே உறைக்கும். \\
இந்த வரிகளை படித்தாலே நாம் யாருடன் தற்போது உள்ளோம் என்பதை உறுதிசெய்து கொள்ளலாம் .
பிள்ளையார் சுழி தன்னம்பிக்கை நூலக மலர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி .பாராட்டுக்கள் …
-வாழ்த்துக்களுடன் .
மனோகர்
sundarji,
very happy to read this article. I don’t find exact words to praise you. your counting starts now i think! உங்கள் எழுத்து ஆற்றல் கொண்டு பாரதியாரைப்போல் புகழ் பெறவும், வாழ்வும் சிறக்கவும் அடியாளின் மனமார்ந்த வாழ்த்துக்கள்! வாழ்க! வளர்க !
நன்றி
சுந்தர்ஜி
தங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.பெரியவா அவர்களின் ஆசி தங்களுக்கு எப்போதும் உண்டு.
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைகல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா
வெற்றிக்கொடி கட்டு மலைகளை முட்டும்வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படைஎடு
sundar sir
en மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்
nandri
வாழ்த்துக்கள் சுந்தர், இறைவன் அருளால் உங்கள் பனி தொடரட்டும்.
டியர் சுந்தர்ஜி,
வாழ்த்துக்கள்
V ஹரிஷ்
சுந்தர் சார்.
உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
உங்கள் கை வண்ணத்தில் உண்டான நூலை பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
திரு இளங்கோ போன்றவர்களின் அனுபவங்களே நமக்கு பெரிய வாழ்க்கை பாடங்கள். இது போல இன்னும் பல வெற்றிகள் கிடைக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறோம்.
சுந்தர் ,
நீண்ட இடைவெளிக்குப்பின் இணையத்தில் மீண்டும் இப்பொழுது ஆக்டிவாக உள்ளேன்… … ஆண்டவன் நம்மை மேலும் மெருகேற்ற மேலும் சில பிரச்சனைகள் தந்திருக்கிறான் – அதனால் இனைய வாசிப்பு குறைந்து போனது..பல நாட்கள் இல்லாமலே போனது …..பல நல்ல பதிவுகள், நிகழ்வுகள் மிஸ் பண்ணியிருப்பேன் என்று நினைக்கிறேன் ..வேலை மாற்றம் வேறு , அதனாலும் இணையத்தில் படிக்க நேரம் கிடைப்பது கடினமாக உள்ளது … இருந்தும் இப்பொழுது எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்க முயற்சி செய்திருக்கிறேன் …. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் நண்பர்களுக்கும் ..நம் இனைய வாசகர்கள் அனைவருக்கும் இந்த தை பிறப்பு வாழ்க்கையில் வசந்தம் கொண்டு வர வாழ்த்துக்கள்..பிராத்தனைகள் .
இந்த பதிவை படித்தவுடன் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன் ….2012ல் நீங்கள் என்னை தொலைபேசியில் அழைத்து , rightmantra ஆரம்பிக்க போவதாக கூறினீர்கள் … அப்பொழுது நம் உரையாடல் இன்னும் நினைவில் உள்ளது …நான் அன்றே கூறியது போல் -” பிடித்த வேலையில் நம்மை ஈடுபடுத்திகொள்ள பெரும் பாக்கியம் வேண்டும் ..அது உங்களுக்கு கிடைத்திருக்கிறது…இறைவன் அருள் இருக்கிறது .. rightmantra ஒரு பெரிய சாதனைக்கான முதல் படி ……” பதிப்புலக அறிமுகம் இரண்டாம் படி …. இவை அனைத்தும் ஒரு பெரிய சாதனை செயலை நோக்கியே பயணிக்கிறது !!
உங்கள் வாழ்வு , தொண்டு , செயல் , மேலும் மேலும் செழிக்க திருவருள் துணை நிற்கட்டும் …
வாழ்க வளமுடன் !
thanks ji and all the best.
– Sundar
சுந்தர் சார்,
இந்த பிள்ளையார் சுழியை நாம் முன்பே நினைத்தோம். அது இப்பொழுது நடந்து விட்டது.
“சுந்தர் சார் அதை அப்படியே கட்டுரையாக மாற்றிவிடுவார்” என்று நம் இளங்கோ சார் அவர் எழுதிய புத்தகத்தில் சொல்லி இருப்பது மிகவும் பெருமை.
சுந்தர் சார் உங்கள் வெற்றி தொடரட்டும்.
நன்றியுடன் அருண்
சுந்தர்ஜி,
PARAATTUKAL . MANAM MIKAVUM MAKIZHCHIYAAGA ULLATHU.
ODI ODI UZHAITHADHIN PALAN UNGAL KAI VANNATHIL INDHA NOOL VELI VANDHULLATHU. THANGALATHU VETRIKAL THODARA VAZHTHUKKAL
Dear சுந்தர்ஜி
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.. நீங்கள் மேலும் மேலும் பல சாதனையாளர்களின் நூல்களையும் ஆன்மிக நூல்களையும் எழுத இறைவன் உங்களுக்கு துணை நிற்ப்பார். இதுதான் உங்களுக்கு வாழ்கையின் வெற்றி படிக்கட்டு
நன்றி
uma
Hats off Dear Sundar Anna. Ennudaiya Manamaarndha Vazthukkal. Valrga!!