வருடாவருடம் ஆண்டு இறுதியில் பாரதி பிறந்த நாள் விழாவும் நம் ரைட்மந்த்ரா தளத்தின் ஆண்டுவிழாவும் நடத்துவது வழக்கம். அவ்விழாக்களில் நம்மிடையே வாழும் சமூக அங்கீகாரம் தேவைப்படும் சாதனையாளர்களை பல்வேறு துறைகளிலிருந்து தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருதும் சான்றிதழும் தருவது வழக்கம். இது அவர்கள் சாதனைக்கு ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறு ஊக்கம். உற்சாகம்.
கடைசியாக 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முப்பெரும் விழாவாக இது சென்னையில் கே.கே.நகரில் சக்தி விநாயகர் கோவிலில் நல்ல முறையில் நடைபெற்றது. கடந்த 2015 ல் மழை வெள்ளப் பிரச்சனை காரணமாக விழா நடத்த முடியவில்லை. துவக்கநிலையிலேயே ரத்து செய்துவிட்டேன்.
இந்த ஆண்டு பல்வேறு பணிகளால் விழா குறித்து முடிவு செய்வதற்குள் ஆண்டு இறுதி வந்துவிட்டது. (காலம் தான் எத்தனை வேகமாக ஓடுகிறது!). அடுத்த வருடம் கோடையில் முப்பெரும் விழாவாக பிரமாதமாக நடத்திவிடலாம் ஆனால் இந்த ஆண்டு அட்லீஸ்ட் பாரதி விழாவாவது எளிமையாக நடத்தவேண்டும் என்று முடிவு செய்து விழா ஏற்பாடுகளை செய்யத் துவங்கினேன். சோதனைகள் நமக்கு புதிதல்லவே… பழகிய ஒன்று. ஏற்பாடுகள் பாதி முடிந்த நிலையில் ‘வார்தா’ வந்து சென்னையை புரட்டிபோட்டு போய்விட்டது. தகவல் தொடர்பு முதல் அனைத்தும் பாதிக்கப்பட டிசம்பர் 18 (நேற்று) நடைபெறவிருந்த விழாவை வேறு வழியின்றி ஒரு வாரம் ஒத்திவைத்தேன்.
இறுதியாக வரும் டிசம்பர் 25 ஞாயிற்றுக்கிழமை விழா சென்னை வளசரவாக்கத்தில் ஆற்காடு சாலையில் உள்ள நவீன் மஹாலில் நடைபெறவிருக்கிறது. இத்துடன் அழைப்பிதழை இணைத்திருக்கிறேன்.
அடியேன் நடத்தும் நிகழ்ச்சி எதுவானாலும் முதல் அழைப்பிதழ் நரசிம்மருக்கு சமர்பித்துவிட்டு அதன் பிறகே வெளியே விடுவேன். இம்முறையம் அப்படியே. இதோ சற்று முன்னர் நரசிங்கபுரம் (பேரம்பாக்கம்) வந்து நரசிம்மரை தரிசித்து அவருக்கு முதல் அழைப்பிதழை வைத்து அவரிடம் ஆசிபெற்றாகிவிட்டது. அப்படியே அருகிலுள்ள கூவம் (திருவிற்கோலம்) திரிபுராந்தகரையும் தரிசித்து அவருக்கு அழைப்பு வைக்கவிருக்கிறேன்.
குருவருளும் திருவருளும் நல்லமுறையில் விழாவை நடத்தி தரவேண்டும்.
* இது நம் நண்பர்கள் மற்றும் வாசகர்கள் சிலர் இணைந்து தோள் கொடுத்து நடத்தும் விழா. ஸ்பான்ஸர்கள் கிடையாது. இவ்விழாவிற்கு உதவிட விரும்புகிறவர்கள் தாரளமாக உதவலாம். நன்றி!
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து!
– ‘ரைட்மந்த்ரா’ சுந்தர் | M : 9840169215 | E : editor@rightmantra.com
Our A/c Details – Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
==========================================================
Also check… Articles on பாரதியார்
பாரதிக்கு நிலையாமை பாடம் சொன்ன கிழவி!
மகாகவி சுப்ரமணிய பாரதியின் குரு யார் தெரியுமா?
பாரதி மறைந்தது எப்படி? திருவல்லிக்கேணி கோவிலில் நடந்தது என்ன??
கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து குடுகுடுப்பைக்காரனுக்கு தந்த பாரதி – ஏன் தெரியுமா???
“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்!” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை!
பாரதி விழாவும் எறும்புகளும் – MONDAY MORNING SPL 23
பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!
அக்கினிக் குஞ்சுகளின் சங்கமத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!
சிறப்பாக நடைபெற்ற நமது பாரதி பிறந்த நாள் விழா!
நெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட பயன்படுத்தவேண்டாமே – MUST READ
==========================================================
வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!
‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!
வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!
பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!
==========================================================
[END]
Dear SundarJI,
All the best for the function.
Rgds,
Ramesh