Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > பாரதி மறைந்தது எப்படி? திருவல்லிக்கேணி கோவிலில் நடந்தது என்ன??

பாரதி மறைந்தது எப்படி? திருவல்லிக்கேணி கோவிலில் நடந்தது என்ன??

print
“காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்”

என்று காலனுக்கே சவால் விட்டவர் பாரதி. அவர் மரணம் இன்னும் ஒரு புரியாத மர்மம் தான். இருப்பினும் பாரதியின் இறுதிக்காலத்தில் அவருடன் இருந்தவர்கள் கூறியதை வைத்து வரலாற்று ஆசிரியர்கள் ஒரு சில விஷயங்களை கூறுகின்றனர்.

இன்று செப்டம்பர் 11 பாரதி நினைவு நாள். அது தொடர்பான பதிவு தான் இது.

Bharathiசென்னை திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்குப் பக்கத்து வீதியில் பாரதியார் குடியிருந்தார். கோவில் யானையோடு அவர் சகோதரத்துவம் கொள்ளப் பார்த்த கதை விசித்திரமானது.

பார்த்தசாரதி சுவாமி கோயிலுக்குப் போகும்பொழுதெல்லாம் பாரதியார் தேங்காய்ப் பழம் கொண்டு போவார். இவையாவும் சுவாமிக்காக அல்ல. வெளியே கட்டியிருக்கும் யானைக்காக.

யானையை தமது சகோதரனாக பாவித்த பாரதியார் அதற்கு தேங்காய் பழம் முதலியன கொடுத்து நல்லுறவு ஸ்தாபித்துக்கொள்ள முயன்றார். பழக்கம் அதிகமாக அதிகமாக அதன் கிட்டே போய் இதை கொடுக்கவும் செய்வார். சில சமயங்களில் துதிக்கையை தடவியுங் கொடுப்பார்.

சகோதரத்துவம் முதிர்ந்து வருகிறது என்பது பாரதியாரின் எண்ணம். இவ்வாறு நடந்துகொண்டிருக்கையில், ஒரு நாள் வழக்கம் போல, ‘சகோதரா!’ என்று பழங்களை நீட்டினார். ஏற்கனவே மதம் கொண்டிருந்த யானையோ வெறிகொண்டு பழங்களோடு பாரதியாரையும் சேர்த்து பிடித்து இழுத்து தான் இருக்கும் கோட்டத்துக்குள் கொண்டு போய்விட்டது. பாரதியாரை யானை காலால் மிதித்துவிடுமோ என்று பக்கத்திலிருந்தவர்கள் கதிகலங்கிப் போனார்கள். பாரதியார் கோட்டத்துக்குள் படுகிடையாக இருந்தார்.

பாரதியாருக்கு நேர்ந்த விபத்தை எப்படியோ எங்கிருந்தோ கேள்விப்பட்ட குவளைக்கண்ணன், பறந்து வந்தது போல ஓடிவந்து, யானை இருந்த இரும்பு கிராதிக் கோட்டத்துக்குள் பாய்ந்து, பாரதியாரை எடுத்து நிமிர்த்து கோட்டத்துக்கு வெளியே நின்றவர்களிடம் தூக்கி கொடுத்தார்.

"\

Thiruvidaimarudhur Elephant

சபாஷ் குவளைக் கண்ணா.! இவ்வாறு யார் செய்ய முடியும் ? பாரதியாரிடம் உயிராக இருந்த குவளைக் கண்ணனால் தான் முடியும்! யானைக்கு மதம் பிடித்திருந்த சமயம், ஆனால் அதைப் பற்றி குவளைக் கண்ணனுக்கு என்ன கவலை?

பாரதியார் பிழைத்தார்; குவளைக்கண்ணனும் கோட்டத்திலிருந்து வெளியே வந்தார். பயம் அறியாது உயிரைத் துரும்பாக மதித்த வீரனைப் படம் பிடிக்க வேண்டுமானால் அப்பொழுது காட்சியளித்த குவளைக் கண்ணனைப் படம் பிடித்திருக்க வேண்டும்.

‘காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மழையும் எங்கள் கூட்டம்’ என்று பாடிய பாரதியார், யானையோடு சகோதரத்துவம் கொண்டாடிய இந்த சம்பவத்துக்கு பின்னர் வெகுகாலம் உயிரோடு இருக்கவில்லை. யானையின் சேஷ்டையால் பாரதியாரின் தேகம் முழுதும் ஊமைக்காயங்கள். இவைகள் பாரதியாருக்கு மரண வலியை தந்தன. அவ்வளவு பொறுக்க முடியாத வலி! காயங்கள் ஏற்பட்ட வலியெல்லாம் தீர்ந்துவிட்டது. ஆனால், இந்த சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் பாரதியார் இறந்து போனார்…

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

சகோதரத்துவத்தை ஒரு வகையில் பாராட்டிப் பழகி வந்த தம்பியான யானை, இறுதியில் ஏமாற்று வித்தை செய்தது, பாரதியின் உள்ளத்தில் பெரும்பாரமாக திடீரென்று விழுந்திருக்கவேண்டும். பெரும்பாரம் தாங்கின், தளர்ந்து வளைந்து கொடுக்கும் தன்மை பாரதியாரிடம் கிடையாது.எனவே, பிறர் கண்ணுக்கு படாதபடி அவருடைய மனம் உடைந்து போயிருக்கவேண்டும். அதனால் தான் அவ்வளவு விரைவில் பாரதியார் மறைந்து போனார்.

"

இந்த சம்பவத்தை ‘தவப் புதல்வர் பாரதியார் சரித்திரம்’ நூலில் செல்லம்மா பாரதியும், ‘என் தந்தை பாரதி’ நூலில் திருமதி.சகுந்தலா பாரதியும் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்படி சம்பவம் நடைபெற்ற போது பாரதியின் அருகில் இருந்தவர் குவளைக் கண்ணன் என்றழைக்கப்பட்ட குவளை கிருஷ்ணமாச்சாரியரும், மண்டயம் சீனிவாசாச்சரியரும் தான்.

நன்றி : ய.மணிகண்டன் | பாரதியின் இறுதிக் காலம்

==============================================================

Also check :

பாரதி சொன்ன ‘அகரம் இகரம்’ !

கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து குடுகுடுப்பைக்காரனுக்கு தந்த பாரதி – ஏன் தெரியுமா???

“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்!” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை!

பாரதி விழாவும் எறும்புகளும் – MONDAY MORNING SPL 23

பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!

அக்கினிக் குஞ்சுகளின் சங்கமத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!

சிறப்பாக நடைபெற்ற நமது பாரதி பிறந்த நாள் விழா!

நெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட பயன்படுத்தவேண்டாமே – MUST READ

==================================================

[END]

 

3 thoughts on “பாரதி மறைந்தது எப்படி? திருவல்லிக்கேணி கோவிலில் நடந்தது என்ன??

  1. நடிகர் நடிகைகளின் பிறந்தநாளை ஞாபகம் வைத்து வெட்டி தனம் புரியும் பல பேருக்கு இந்த முண்டாசு கவிஞன் பாரதியை பற்றி தெரிஞ்ச்திருக்க வாய்ப்பில்லை இன்றும் ஜாதிகள் பார்த்து கொண்டு இருக்கும் மக்களின் மத்தியில் அந்த காலத்திலேயே அதை உடைத்து எறிந்த புரட்சி கவிஞன் தமிழ் மொழி இருக்கும் வரை நின் புகழ் மறையாது பாரதியே

  2. நேற்றைக்கு காலையில் இருந்தே பாரதியின் நினைவு நாளில் அவரைப் பற்றிய பதிவு வரும் என ஆவலாக இருந்தேன்.

    பாரதியை யானை தூக்கி போடும் நிகழ்வை படிக்கும் பொழுது மனதிற்குள் ஒரு வித கலக்கம்.

    பாரதிக்கு விழா எடுக்கும் தாங்கள் அவரது நினைவு நாளில் பதிவளித்து எல்லோரையும் நினைவு கூற செய்து விட்டீர்கள்.

    மிருகத்திடமும் அவர் காட்டிய சகோதர பாசம் மெய் சிலிர்க்கிறது . கடைசியில் அண்ணன் என்னடா …. தம்பி என்னடா என்ற நிலை தான் அவருக்கு ஏற்பட்டுள்ளது

    குவளைக் கண்ணனைப் பற்றி இப்பொழுதான் தெரிகிறது..

    இந்த உலகம் உள்ளவரை அவரின் பாடலும், புகழும் அழியாக் காவியமாக என்றும் எல்லோர் நெஞ்சிலும் நிலைத்து நிற்கும். இன்னும் பாரதி கொஞ்ச காலம் இருந்திருந்தால் நமக்கு பல அறிய காவியங்கள் கிடைத்து இருக்கும் .

    நன்றி
    உமா வெங்கட்

  3. பாரதி யார்?
    அண்ணன் …………………யார் என்று அடைமொழி இட்டு அரசியல் வியாதிகள் உலவிக்கொண்டிருக்கின்றன. இவரென்ன கட்சி கொடி நட்டாரா? கலாட்டா செய்தாரா? கட்சிக்காக சிறை சென்றாரா? ஒரு டாட்டா சுமோ காராவது இவரிடம் உண்டா? ஜாதி கட்சியின் முக்கிய பிரமுகரா? வோட்டு வங்கி உண்டா? இவர் பேரை சொல்லி அரசியல் பிழைப்பு நடத்த முடியுமா? பிறகு எப்படி, யார் இவரை நினைவில் வைத்துக் கொள்ளவார்கள்?

    இன்று உள்ளவர்கள் எல்லோரும் சுயநலப் பெருச்சாளிகள். சுதந்திரம் வாங்கிதந்தவரையும் அதற்குப் பாடுபட்ட தலைவர்களையும் மறந்தவர்கள் நாம், நம்மை மறக்கடிக்க வைத்தவர்கள் இன்று பெரிய தலைவர்களாக வளமுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். நாம் வாழுவது கலியுகம் அதன் அழிவில் வழி தெரியாமல் உணர்வின்றி வீழ்ந்து கொண்டிருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *