Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > All in One > பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

print
பொள்ளாச்சியை சேர்ந்த ‘அருணாச்சல அக்ஷர மணமாலை’ என்கிற அமைப்பின் நிறுவனர் நண்பர் பாலசுப்ரமணியன் என்பவர் நேற்றைக்கு நமது வீட்டுக்கு ஒரு பெரிய கூரியர் அனுப்பியிருந்தார். மாலை சென்றபோது பிரித்துப் பார்க்கிறோம்… பகவான் ரமண மகரிஷியின் 135வது ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வெளியீடாக வெளியிடப்பட்டுள்ள ‘ரமண திருவிளையாடற் திரட்டு’ மற்றும் ‘சிவமணியம்’ என்கிற இரண்டு விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள்.

Ramana Vilaiyadal Thirattu

இரண்டு நூலையுமே ஒரு புரட்டு புரட்டியதில், “நிச்சயம் ஏதோ பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருக்கிறோம், இல்லையெனில் இது போன்ற நூல்கள் நம்மை தேடி வர வாய்ப்பே இல்லை” என்று தோன்றியது.

உடனே அதை அனுப்பிய ரமணதாசன் என்னும் திரு.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு போன் செய்து புத்தகங்கள் கிடைக்கப்பெற்ற தகவலை சொல்லி நமது மகிழ்ச்சியும் பகிர்ந்துகொண்டோம்.

“எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே சார்…. இரண்டுமே மிகப் பெரிய பொக்கிஷங்கள். என்னை நான் மேம்படுத்திக்க உதவுறது இல்லாம என்னோட வாசகர்கள் கிட்டே புதுப்புது விஷயங்களை, ஸ்ரீ ரமண மகரிஷியோட திருவிளையாடல்களை பகிர்ந்துக்க ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்!”

“அதுக்கு தான் சார் உங்களுக்கு அனுப்பி வெச்சேன். உங்ககிட்டே ஒரு நல்ல விஷயம் வந்தா அது எப்படி பரவும்னு எனக்கு தெரியும்” என்றார்.

“அருணாச்சல சிவா…. என் பாக்கியம் சார்….உங்களை போன்றோரின் நட்பும் ரமணரின் ஆசியும் சார்!!”

“நூல் இத்தனை அழகுடன், பொருளடக்கத்துடன், பிரமிப்புடன், அசத்தலான படங்களுடன் இருக்கிறதே… நீங்கள் எனக்கு ஏதாவது அனுப்பவேண்டும் என்பதற்காக பார்த்து வாங்கி அனுப்பியிருக்கிறீர்களா?” நமது சந்தேகத்தை கேட்டோம்.

“இல்லே சார்… எனக்கே இதை யார் அனுப்பினாங்கன்னு தெரியலே. என் கிட்டே வந்தா தகுதியுடையவங்ககிட்டே இந்த புக்ஸ் போய் சேரும்னு எனக்கு கொஞ்சம் காப்பீஸ் அனுப்பியிருக்காங்க. நான் எனக்கு தெரிஞ்ச பெரிய மனுஷங்களுக்கு அனுப்பிகிட்டுருக்கேன். திருப்பூர் கிருஷ்ணன், இந்து முன்னணி ராமகோபாலன் உள்ளிட்டவங்களுக்கு நேத்து அனுப்பினேன். அப்படியே உங்களுக்கும் ஒன்னு அனுப்பினேன்” என்றார்.

“சார்… என்னையும் மதிச்சி அனுப்பினதுக்கு இன்னொரு தரம் நன்றி!”

திரு.பாலசுப்ரமணியம் நம் தள வாசகர் தான் என்றாலும் தளத்தை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு பெற்றவர் அல்ல. கடந்த ஒரு சில மாதங்களாக நமது தளத்தை பார்க்கவில்லை என்றார். (திரு.பாலசுப்ரமணியம் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர் தான். இவரைப் பற்றி ஏற்கனவே நாம் நம் தலத்தில் பதிவளித்திருக்கிறோம். மேலும் நமது பிரார்த்தனை கிளப்புக்கும் இவர் தலைமை ஏற்றிருக்கிறார். இவர் அனுப்பிய அருணாச்சல அக்ஷர மணமாலையை தான் 2013 ஆண்டு விழாவின்போது வந்திருந்த அனைவருக்கும் கொடுத்தோம்.)

நாம் புதியதாக தளத்தின் பணிகளை கவனிக்கவென்றே மேற்கு மாம்பலத்தில் அலுவலகம் துவக்கியிருக்கும் விஷயத்தை சொன்னவுடன் மிகவும் சந்தோஷப்பட்டார்.

“உங்களுக்கு ஒரு குறையும் வாராது சார். நல்லா வருவீங்க. பகவான் உங்க கூடவே இருக்கார். இது நாலு பேர்கிட்டே கொண்டு போய் சேர்க்கணும் என்பது பகவானோட விருப்பம் போல சார். அதுக்கு என்னை அவர் தேர்ந்தேடுத்திருக்கார். ரமணாஸ்ரமத்தில இந்த மாதிரி செலவு பண்ணி பெரிய புக்கெல்லாம் போடமாட்டாங்க. விலைக்கு கட்டுபடியாகாது. ரமணர் மேலே பக்தி கொண்ட யாரோ ஒரு வசதி மிக்க பக்தர் இந்த புக்ஸை குறிப்பிட்ட காப்பீஸ் (LIMITED EDITION) பிரிண்ட் பண்ணி இருக்காங்க. புக்கோட காப்பிரைட் உரிமையை ரமணாஸ்ரமத்துக்கு கொடுத்திருக்காங்க. யார் எந்த விபரம்னு தெரியலே. மத்தபடி வேற எந்த விபரமும் அந்த புக்ஸ்ல இருக்காது சார்!”

நூல்களை அச்சடித்த அச்சகத்திலிருந்தே டைரக்ட்டாக இவருக்கு பார்சல் போடப்பட்டுள்ளது என்று மட்டும் தெரிகிறது. மற்றபடி வேறு எந்த விபரமும் இவரால் அறியமுடியவில்லையாம்.

நாம் இரண்டு புத்தகங்களையும் நன்கு ஆராய்ந்தோம். ‘அட உண்மை தான். யார் வெளியிட்டது… யார் எழுதியது… எங்கு அச்சிடப்பட்டது என்று எந்த தகவலும் இல்லை. CONTENT ஐ யாரும் திருடி மறுபதிப்பு செய்து பொருளீட்ட முயற்சிக்கக்கூடாது என்பதால் காப்புரிமையை மட்டும் ரமணாஸ்ரமத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். மற்றபடி இரண்டு புத்தகங்களிலும் வேறு எந்த தகவலும் இல்லை.

கோடிகள் கொடுத்தாலும் போதாது என்பதாலோ என்னவோ விலை வைக்கவில்லை. COMPLIMENTARY COPY என்று இரண்டு நூலிலும் அச்சடித்திருக்கிறார்கள்.

ஆன்மீகத்தை பிசினஸ் செய்துகொண்டிருக்கும் சில பதிப்பகங்கள் கையில் மேற்படி நூல் கிடைத்தால் எப்படியும் இரண்டும் சேர்த்து ரூ.3000/- விலை வைப்பார்கள்!

இரண்டு புத்தகங்களில் ‘ரமண திருவிளையாடற் திரட்டு’ கிட்டத்தட்ட பெரிய சைஸ்… ஆர்ட் பேப்பரில் நானூறு பக்கங்கள். நூற்றுக்கணக்கான புகைப்படங்கள். ரமணாஸ்ரமத்தில் ரமணர் நிகழ்த்திய பல்வேறு திருவிளையாடல்களின் தொகுப்பு. பெரும்பாலானவை இதுவரை எவரும் கேட்டிராத அனுபவங்கள். பார்த்திராத புகைப்படங்கள்.

‘சிவமணியம்’ : பகவான் பக்தர்களுக்கு பல்வேறு சமயங்களில் செய்த போதனைகள் மற்றும் கேள்வி பதிலின் தொகுப்பு.

இரண்டு புத்தகங்களில் இருந்து இனி அவ்வப்போது சுவாரஸ்யமான உங்களை பரவசத்தில் மூழ்கடிக்கக்கூடிய விஷயங்களை பகிர்ந்துகொள்வோம்.

நூலை காலை படிக்க ஆரம்பித்தோம். கீழே வைக்க இயலவில்லை. உங்களுக்கு ஏதாவது ஒரு திருவிளையாடலை அளிக்கலாம் என்று எண்ணி படித்தால், எதை எடுப்பது எதை விடுப்பது என்று ஒரே குழப்பம்.

கடைசியில் எதேச்சையாக கடிகாரத்தை பார்த்தால் நேரம் 1.00 ஆகியிருந்தது. அடடே… நேத்தைக்கு கதை தானா இன்னைக்கும்? இன்னைக்கு எப்படியாவது ரெண்டு பதிவு போடணும்னு நினைச்சிகிட்டிருந்தோமே… என்றபடி கஷ்டப்பட்டு மேற்கொண்டு படிப்பதை நிறுத்திவிட்டு, இதுவரை படித்ததில் சற்று சுருக்கமாக முத்தாக இருந்த இரண்டு நிகழ்வுகளை தந்திருக்கிறோம். எஞ்சியவை அவ்வப்போது வாசகர்களின் மனவோட்டத்தை அறிந்து அதற்கேற்ப தர முயற்சிக்கிறோம்.

ரமணரின் திருவிளையாடல்கள் தான் எத்தனை வகை. ஒவ்வொன்றும் ஒரு விதம். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைவதை சுட்டிக்காட்டுவதாகட்டும், முதல்ல நீ திருந்து நாடு தானா திருந்தும் என்கிற உண்மையை உணர்த்துவதிலாகட்டும், ஆஸ்ரமத்தில் அனைவருக்கும் ஏற்றத் தாழ்வில்லாத மரியாதை கொண்டு வந்ததில் காட்டிய கண்டிப்பாகட்டும், தவறு செய்துவிட்டவனை கையும் களவுமாக பிடித்து வந்து நிற்கவைக்கும்போது, “இவன் மாட்டிகிட்டான். இங்கே சில பேர் இன்னும் மாட்டிக்கலை. அவாளை விட இவன் எந்தளவு குறைஞ்சிபோயிட்டான்?” என்று எதிர்கேள்வி கேட்டு திணறடித்ததிலாகட்டும், ஏழை எளியோருக்காக சாஸ்திர
சம்பிரதாயங்களை உடைத்ததிலாகட்டும் ரமணர் பதித்த ரமணமுத்திரைகளை விளையாடல்களை சலிக்க சலிக்க சொல்லிக்கொண்டே போகலாம்.

பசுக்கள் மீது ரமணர் அலாதி அன்பு வைத்திருந்தார். பகவான் அது விஷயத்தில் நிகழ்த்திய பல்வேறு திருவிளையாடல்களும் இந்த நூலில் காணப்படுவது நமக்கு குஷியிலும் குஷி.

இன்று குரு வாரம் என்பதால் சாம்பிளுக்கு இரண்டு….

தண்டாயுதபாணி!
தண்டாயுதபாணி!

பிராப்தம் தேடி வரும்

ஓர் இரவு உணவின் போது பகவான், “நார்த்தங்காய் ஊறுகாய் இருக்கா?” என்று கேட்டார்.

கிச்சனில் தேடிப் பார்த்துவிட்டு ‘இல்லை’ என்று கூறினார்கள்.

சின்னசாமி அப்போது ஆஸ்ரமத்தை நிர்வகித்து வந்தார். அவர் அனைவரையும் கடிந்துகொண்டார்.

மறுநாள் ஆஸ்ரம ஆஃபீசிலிருந்து ஜி.எல். நரசிம்ம ராம் ஆஸ்ரமத்திலிருந்து பிறருக்கு அனுப்ப வேண்டிய கடிதங்களை பகவானின் பார்வைக்கு வழக்கம் போல கொண்டு வந்தார்.

அதில் ஒரு கடிதம், ஆஸ்ரம அதிகாரி ஒருவரால் மதுரை அன்பர் ஒருவர்க்கு ஒரு கூடை நார்த்தங்காய் வாங்கி அனுப்பும்படி வேண்டியிருந்தது.

அதை படித்தவுடன் பகவான் முகத்தில் கடுமையேறியது.

“இவாளுக்கெல்லாம் நார்த்தங்காயில தான் மோட்சம் இருக்கு போல. இல்லைன்னா அதை ஏன் வேண்டனும் இவ்வளவு பிரயாசைப்படணும்?

நமக்கு அது பிராப்தம்னா தேடி வராதோ! நல்லது.

உங்க இஷ்டம் போல பண்ணிக்கோங்க” என்று கடிதத்தை தூக்கி வீசினார்.

கடிதங்களை கொண்டு வந்தவர் பதில் கூறாமல் வெளியேறவும், ஒரு ரயில்வே காண்டிராக்டர் சீல் வைக்கப்பட்ட இரு கூடைகளுடன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

அது ரயில்வேயில் ஆர்.ஆர். இல்லாமல் ஆஸ்ரமத்துக்கு வந்த பார்சலாகும்.

அதைப் பார்த்தவுடன் பகவான் முகம் மாறியது. நகைச்சுவையாக, “பாரும் ஓய்! அது நார்த்தங்காயா இருக்கப்போறது… பிரிச்சிப் பாரும்” என்றார்.

அந்த கூடை பிரிக்கப்பட்டது. அது நார்த்தங்காய் தான்.

அது ஊறுகாய் போட கிச்சனுக்கு அனுப்பப்பட்டது.

சில நிமிடங்கள் சென்றவுடன் பகவான், “ஒரு கூடைதான் நார்த்தங்காயா இருக்கப்போறது. மத்தது ஆரஞ்சா இருக்கும். பார்க்கச் சொல்லு!” என்றார்.

பகவான் கூறியது போலவே மற்றொரு கூடையில் ஆரஞ்சு இருந்தது. அது அனைவருக்கும் பகிரப்பட்டது.

=================================================================

ஆஞ்ஞை!

மணவாசி ராமசாமி ஐயர் என்பவர் திருவண்ணாமலைக்கு மாற்றலாகி பணியில் அமர்ந்தார். பணி நேரம் போக மீதி நேரம் பகவானுடன் தான் இருப்பார். அதனால் அவரது உயரதிகாரி மணவாசி ராமசாமி ஐயரை கேலி செய்வார். உமக்கு நூத்தி ஐம்பது ரூபாய் சம்பளம் அதிகம் தான் என்பார்.

இதை மணவாசி ராமசாமி ஐயர் பகவானிடம் கூறியபோது, பகவான், “இதுக்கே இப்படி சொன்னா, உம்ம சம்பளத்தை இருநூறா உசத்தினா என்ன சொல்லுவா!” என்றார்.

அடுத்த மாதமே மணவாசி ராமசாமி ஐயரின் சம்பளம் இருநூறு ரூபாயாக உயர்த்தப்பட்டது.

=================================================================

Also Check :

ஆட்கொண்ட அருணாச்சலேஸ்வரர் – பள்ளி மாணவர்களுக்கு பாடமான நமது தளத்தின் நோட்டீஸ்!

“தன்னைப் போல பிறரை எண்ணும்  தன்மை வேண்டுமே!” .

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

மழை பொழியுது – பாத்திரத்தை முதல்ல நேரா வைங்க!

=================================================================

[END]

16 thoughts on “பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

  1. ரமணர் புத்தகத்தை தங்களுக்கு அனுப்பிய திரு பாலசுப்ரமணியன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். சரியானவரின் கைகளுக்கு சரியான நேரத்திற்கு கிடைத்திருப்பது நாம் செய்த பாக்கியம். இனிமேல் பகவான் ரமணர் பற்றி பல அறிய பொக்கிஷங்களைத் தெரிந்து கொள்ளலாம் தங்கள் எழுத்து வடிவில். பல முன்னணி பெரிய மனிதர்களின் லிஸ்டில் தாங்கள் இணைந்து இருப்பது எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமையாக உள்ளது, ரமணரின் விளையாட்டை படிக்கும் பொழுது உள்ளம் உவகை கொள்கிறது. பல்வேறு குருவின் கடாக்ஷம் தனது பக்தனை நோக்கி வருகிறது, வெகு விரைவில் திருவண்ணமலைக்கு ஓர் ஆன்மிக பயணம் செல்வததற்கு ஏற்பாடு செய்யுங்கள் . நாங்கள் தங்களின் ஆன்மிக பயணத்தில் கலந்து கொள்ள ஆவலாக உள்ளோம் .

    குருப்யோ நமஹ

    நன்றி
    உமா வெங்கட்

  2. என்னே அவரின் விளையாட்டு!

    திரு. பாலசுப்ரமணியன் அவர்களுக்கு அனுப்பியதும் அவர் தான். தங்களுக்கு அனுப்ப வைத்ததும் அவர் தான். தங்களால் எங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று அருள் புரிந்ததும் அவர் தான்! அருள் மழை பொழியும் போது பாத்திரத்தை நேராக பிடிப்பதை மட்டும் நாம் செய்தால் போதுமே!

    ஓம் அருணாச்சலேஸ்வராய நமஹ!

  3. நம்மை தேடிவந்த செல்வம் ரமண மகரிஷியை பற்றிய இந்த இரண்டு நூல்கள். யாரிடம் போய் சேர்ந்தால் சரி என்று தெரிந்து நம் சுந்தருக்கு அரிய நூல்களை அனுப்பிய ரமணதாசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    பிராப்தம் இருந்தால் நல்ல நூல்கள் நம்மை தேடி வரும். சுந்தரின் பிராப்தம் நம் பாக்கியம்.

  4. காலையில் இருந்து பதிவுக்கு காத்திருந்த எங்களுக்கு மிக பெரிய பொக்கிஷத்தை தந்து உள்ளீர்கள்.

    இரண்டு நிகழ்வுகளும் அற்புதம்.

    புத்தகங்களின் அட்டைப் படங்கள் பார்க்கும் போதே மெய் சிலிர்க்கின்றன.

    அனுப்பிய அன்பருக்கு மிக்க நன்றி. ஏனன்றால் மிகச் சரியான நபருக்கு அனுப்பியுள்ளார்.

    குருவின் ஏனய திருவிளையாடல்களை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளோம்.

  5. ஒவொரு குரு வாரமும் ஒவ்வொரு மகரிஷிகளைப் பற்றி உங்கள் மூலம் தெரிந்து கொள்வதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி.அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் ப்ராப்தம் எங்களுக்கு உங்கள் மூலமாக கிடைக்கிறது.

    குருவே சரணம்
    நன்றி

  6. வணக்கம் சுந்தர் சார்

    என் அம்மாவுக்கு ரமன மஹரிஷி விருப்பட்ட தெய்வம் சார்

    அடுத்த பதிவுக்காக எதிர்பார்த்து இருக்குறோம் சார்

    நன்றி

  7. குருஅருள் இருந்தால் திருவருள் தானாக வரும். உங்கள்கு குருஅருள் இருக்குது சுந்தர்.

    1. குருஅருள் நமக்கும் இருக்குது நாராயணன் சார். அதனால்தான் நாம் ரைட்மந்திரா வாசகர்களாக இருக்கிறோம்.

  8. சுந்தர்-அவர்களின் வாசகன் என்பதில் பெருமிதப்படுகிறோம். உங்கள் மூலம் எங்களுக்கும் ப்ராப்தம் உள்ளது அன்னாரின் திருவிளையாடல்களை அறிந்துகொள்ள.

  9. அருமை. ரமண மகரிஷியைப்பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளது.

    சத்குருவே சரணம் சரணம்

  10. குருவாரத்தில் எப்படியாவது எதாவது ஒரு விதத்தில் குரு மகிமை பற்றி செய்தி வரும்.
    அது பெரும்பாலும் நீங்கள் எதிர்பார்க்காத நல்லதொரு பதிவாக அமையும்.
    அது போல இந்த பதிவும் பார்க்க மெய்சிலிர்க்கிறது.
    குருவருளும் திருவருளும் எப்போதும் உங்களுக்கு உண்டு.
    ரமண மகிரிசியை பற்றிய பதிவு எழுதவும் அதை நாங்கள் படிக்கவும் நாங்கள் என்ன புண்ணியம் செய்தமோ .
    எல்லாம் குருவருள்.
    நன்றி

  11. குருவருளே திருவருள்………….குருவின் பத்ம பாதங்களுக்கு நம் அனந்த கோடி நமஸ்காரங்கள்………. குருவாரத்தில் குருவைப் பற்றி அறிந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி…………….

  12. குரு அருள் தங்களுக்கும் தங்கள் மூலம் எங்களுக்கும் இருகின்றது என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

    திரு பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நன்றி.

    அந்த புத்தகம் வெளி வர உதவியவர் தனது பேர் போடாமல் புரிந்த தொண்டு மெச்சதக்கது . அவர் ஆண்டவன் அருளால் மன நிம்மதி என்றும் அடைய வேண்டும்.

    நன்றி தங்கள் பதிவுக்கு.

    கே. சிவசுப்ரமணியன்

  13. குருவருள் திருவருள் நிறைந்த சுந்தர் ஜி உங்களின் பதிவில் எங்கள் கண்களில் ஆனந்த கண்ணீர் தொடர்ந்து படிக்க ஆவலாக உள்ளேன்
    நன்றி .

  14. வணக்கம் சுந்தர் . அந்த புத்தகத்தில் உள்ளவற்றை தயவுசெய்து எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் . குருவே துணை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *