Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > சித்தர்கள் பாடிய, நரம்பு கோளாறுகளை நீக்கும், பேரம்பாக்கம் சோளீஸ்வரர்!

சித்தர்கள் பாடிய, நரம்பு கோளாறுகளை நீக்கும், பேரம்பாக்கம் சோளீஸ்வரர்!

print
சிவாலயங்களை பொதுவாக சைவ சமயக் குரவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என நால்வர் பாடியிருக்கின்றனர். ஆனால், சித்தர்கள் பாடிய சிவாலயம் ஒன்று இருக்கிறது தெரியுமா?

திருவள்ளூரை அடுத்துள்ள பேரம்பாக்கத்தில் எழுந்தருளியிருக்கும் சோளீஸ்வரர் தான் அந்த பெருமையை உடையவர். முதலாம் குலோத்துங்க சோழனால் கி.பி.1112ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பழமையான கோயில், நரம்புக் கோளாறுகளை நீக்கும் தலம் என பல்வேறு பெருமைகள் கொண்டது காமாட்சியம்மன் உடனுறை சோளீஸ்வரர் திருக்கோயில்.

690

இன்றைய பேரம்பாக்கம், சோழர் காலத்தில் பெரும்பாக்கம் என்று அழைக்கப்பட்டது. பெரும்பாக்கம் என்ற பெயர் காலப்போக்கில் மருவி, பேரம்பாக்கம் என அழைக்கப்படுகின்றது.

இத்தலம் நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்யும் தலமாக விளங்கியதை, நாடி ஜோதிட சுவடிகள் எடுத்துரைக்கின்றன. இதன் மூலம் இத்திருக்கோயிலில் ரிஷிகளும், மகான்களும் வழிபட்டு பேறு பெற்றதையும் அறிய முடிகிறது. சித்தர் பாடல்கள் சிலவும் இதை உறுதி செய்கிறது.

692

பேரம்பாக்கம் சோளீஸ்வரர் ஆலயத்தில் இறைவன் நரம்பு சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் அரிய மருத்துவராக விளங்குகிறார். நரம்பு சம்மந்தமான கோளாறு உள்ளவர்கள் அக்கோளாறு நீங்க திங்கட்கிழமைகளில் தொடர்ந்து ஆறு வாரங்கள் பரிகார பூஜைகளும் ஏழாவது வாரம் சுவாமிக்கு மஹா அபிஷேகமும் செய்து பிரார்த்தனையை முடிக்க வேண்டும்.

இவ்வாலயம் பேரம்பாக்கம் நகரில் ஈசான மூலையில் அமைந்துள்ளது. இறைவனின் பெயர் சோளீஸ்வரர், அம்பாள் காமாட்சி அம்மன். இவ்வாலயத்தின் நுழைவாயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரம் காணப்படவில்லை.

694

ஆலயத்தினுள் நுழைந்ததும் இடது புறம் சக்தி கணபதி. அவருக்கு அருகில் காசி விஸ்வநாதர். நுழைவாயிலுக்கு நேர் எதிரே காமாட்சியம்மன் உடனுறை சோளீஸ்வரர் சன்னிதி இருக்கிறது. ஆலயத்தில் இந்த அமைப்பு மட்டுமே பழமைத் தன்மையுடன் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீசோளீஸ்வரர் கிழக்கு நோக்கி எழிலுடன் காட்சி தருகின்றார். அன்னை காமாட்சி தெற்கு முகமாக நின்ற கோலத்தில் அழகுற அமைந்து அருள்பாலிக்கிறாள். ஆலயத்தின் மேற்புறத்தில் வள்ளி தெய்வயானை உடனுறை முருகன் சன்னிதி அமைந்துள்ளது. கீழ்ப்புறத்தில் ஸ்ரீ ஐயப்பன் ஆலயமும், அதனருகே நாக தெய்வங்களும் அமைந்துள்ளன. இவ்வாலயத்தின் தலவிருட்சம் வில்வ மரமாகும்; தலத்தீர்த்தம் கூவம் ஆறாகும்.

DSC06517

இந்தக் கோவில் மிகவும் சிதிலமடைந்து காலப்போக்கில் எடுத்து கட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கோவிலுக்கு சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் காஞ்சி மகா ஸ்வாமிகள் (அப்போதைய கும்பாபிஷேகத்தின்போது) வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோளீஸ்வரர் ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

DSC06714

DSC06738விழாக்கள்

இவ்வாலயத்தில் பங்குனியில் பிரம்மோற்சவம், காணும் பொங்கல் ஆற்றுத் திருவிழா, விநாயகர் சதுர்த்தி, பிரதோஷம், கிருத்திகை ஆகியவை சிறப்புடன் கொண்டாடப் படுகின்றன. திங்கட்கிழமை தோறும் நரம்புக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களால் பூஜைகளும், அபிஷேக ஆராதனை மற்றும் அன்னதானமும் சிறப்புடன் நடத்தப்படுகின்றன.

அது சமயம் நரம்புக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாக ஆணையும் பெண்ணையும் முறையே கொண்டு திருநீறு பூசி உருவிவிடுவார்கள். இது சோளீஸ்வரருக்கு அபிஷேகம் செய்த திருநீறு என்பதால் தனி மகத்துவம் உண்டு. நரம்புக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள், வாரநாட்களில் ஒரு முறை சென்று சோளீஸ்வரரை தரிசித்துவிட்டு நரம்புக் கோளாறுகள் நீங்க செய்யவேண்டிய பரிகார பூஜை விபரங்களை அறிந்துகொண்டு, பின்னர் ஒரு திங்கட்கிழமை செல்லவேண்டும்.

DSC06717

திங்கட்கிழமை கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும் என்பதால் உங்களால் எதையும் தெரிந்துகொள்ளமுடியாது. எனவே தான் திங்கள் தவிர வேறு ஏதாவது ஒரு நாள் பேரம்பாக்கம் சென்று தரிசனம் முடித்து ஆலயத்தின் அர்ச்சகர் ராஜா குருக்கள் அவர்களிடம் விபரத்தை கேட்டுக்கொண்டு பின்னர் திங்கட்கிழமை சென்றால் அனைத்தும் சுபமாக முடியும். திங்கட்கிழமை மதியம் அன்னதானம் இங்கு உண்டு என்பதால் மதிய உணவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

அமைவிடம்

தொண்டை வள நாட்டில் பாடல் பெற்ற கூவம் (திருவிற்கோலம்), இலம்பையங்கோட்டூர், திருவாலங்காடு, திருப்பாசூர், நரசிங்கபுரம், மப்பேடு ஆகிய தலங்களுக்கு நடுநாயகமாக அமைந்துள்ளது, பேரம்பாக்கம். இவ்வூருக்கு ரெயில் மார்க்கமாக வர விரும்புவோர், சென்னை–அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள கடம்பத்தூர் ரெயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பேருந்து மூலமாக அல்லது ஷேர் ஆட்டோ மூலமாக பேரம்பாக்கத்தை அடையலாம். தவிர சென்னை கோயம்பேடு, தி.நகர், வடபழநி, பூந்தமல்லி, திருவள்ளூர், காஞ்சீபுரம், அரக்கோணம் ஆகிய ஊர்களில் இருந்தும் பேருந்துகள் மூலம் பேரம்பாக்கத்தை எளிதில் வந்தடையலாம்.

Soleeswarar
சிவக்கொழுந்தீஸ்வரர் , சிவன்குடில்

பரிகார நபர்கள் செய்ய வேண்டியவை:

1) காலையில் எழுந்து குளிக்க போகும் முன்பு ஒரு சிட்டிகை பரிகார விபூதியை குளிக்கும் தண்ணீரில் போட்டு ”ஸ்ரீ காமாட்சியம்பாள் சமேத ஸ்ரீ சோளீஸ்வரர் நமஹ” என்று கூறி குளிக்கவும்.

2) தினமும் அதிகாலை ஒரு டம்ளரில் நீர் எடுத்து அதில் ஒரு சிட்டிகை பரிகார விபூதியையும் அபிஷேக வில்வ பொடியையும் போட்டு சுவாமியை பிரார்த்தனை செய்து தங்களின் உடம்பில் உள்ள நோய் போக வேண்டும் என்று கூறி தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

3) காலை குளித்த பின்பும், இரவு படுக்கைக்கு போகும் முன்பும், பரிகார விபூதியை உங்கள் உடலில் எந்த இடத்தில் நரம்பு பிரச்சனை உள்ளதோ, அங்கு பூசிக்கொள்ளவும்.

4) இவ்வாறு தொடர்ந்து ஆறு வாரங்கள் பரிகார விபூதியையும் அபிஷேக வில்வ பொடியையும் திருக்கோயிலிலிருந்து பெற்று வைத்தியம் செய்து பிறகு ஏழாவது வாரம் சுவாமிக்கு மஹா அபிஷேகம் செய்து முழு பலன் பெறவும். (ஏழாவது வாரம் இயன்றவர்கள் அன்னதானமும் செய்து வேண்டுதலை முடிக்கலாம்.)

நரம்பு நோயால் வெகுவாக பாதிக்கப்பட்டு நேரில் வர முடியாதவர்களுக்கு, அவர்கள் வேண்டுகோளின் பேரில் அபிஷேக விபூதியும், வில்வ பொடியும் அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்து கூரியர் தபாலில் அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் நேரில் ஒருமுறையேனும் செல்வது சிறப்பு.

DSC06533

திரு.ராஜா குருக்கள் நம்மிடம் பேசும்போது கூறிய ஒரு தகவலே சோளீஸ்வரரின் மகத்துவத்திற்கு சான்று. இவ்வூரில் உள்ள பெரிய செல்வந்தர் ஒருவர் நரம்புக் கோளாறினால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பப்பட்டுக்கொண்டிருந்தார். சோளீஸ்வரர் மீது நம்பிக்கை வைத்துப் பிரார்த்தனை செய்து கொண்டார். அவர் பிரார்த்தனை பலித்தது.

DSC06722

அவருக்கு இருந்த நரம்புக் கோளாறும் அகன்றது. இதையடுத்து நன்றி செலுத்தும் விதமாக கோயிலுக்குப் புதிய கொடி மரம் அமைத்து, தனது பிரார்த்தனையை நிறைவு செய்தார். (மேலே நீங்கள் காணும் கொடிமரம் அந்த அன்பர் செய்துகொடுத்தது!)

==========================================================

DSC06522 copy
திரு.ராஜா குருக்களுடன் …

நரம்பு கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஷேஷ பிரார்த்தனை!

நமது தளத்தில் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக விஷேஷ பிரார்த்தனை கிளப் பதிவு அளிக்கப்படவிருக்கிறது. சோளீஸ்வரர் கோவில் அர்ச்சகர் திரு.ராஜா குருக்கள் அந்த பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவுள்ளார். எனவே நரம்பு தொடர்பான பிரச்சனைகள் உள்ள வாசகர்கள் தங்கள் பிரார்த்தனையை அவரவர் பெயர், ராசி, நட்சத்திரத்துடன் சற்று விரிவாக நமக்கு அனுப்பவும்.

நாம் நேரில் சென்று பிரார்த்தனையை சமர்பித்துவிட்டு அர்ச்சனை செய்துவிட்டு வருகிறோம். நீங்களும் ஒரு முறை நேரில் சென்று விபரங்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

சோளீஸ்வரரை தரிசிக்க செல்பவர்கள் அதே தெருவில் கடைசியில் இருக்கும் வைகுண்டப் பெருமாளையும் தரிசிக்கலாம். அதுவும் புனரமைக்கப்பட்ட ஒரு தொன்மை வாய்ந்த வைணவ ஆலயம். ஸ்த்ரீ தோஷ நிவர்த்தி தலம் அது. (அக்கோவில் பற்றி இதே மாதிரி ஒரு ஆலய தரிசனப் பதிவு விரைவில் வரும்!)

நரம்பு தொடர்பான பிரார்த்தனை கோரிக்கையை வரும் 20/07/2016 க்குள் editor@rightmantra.com என்கிற முகவரிக்கு அனுப்பவும். சந்தேகங்களுக்கு நம்மை தொடர்புகொள்ளலாம்.

* பேரம்பாக்கம் செல்லவிரும்புகிறவர்கள் நம்மை தொடர்புகொண்டால் அந்த டிரிப்பை பயன்படுத்தி எப்படி பேரம்பாக்கத்தின் சுற்றுபுறத்தில் உள்ள மேலும் சில ஆலயங்களை தரிசிக்கலாம் என்று உங்களுக்கு யோசனை சொல்வோம்.

==========================================================

நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…

முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

==========================================================

Support Rightmantra – Help in a noble cause!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest or ad revenues. We are purely relying on our readers’ contribution. Donate us liberally. Small or big your contribution really matters.

Our A/c Details

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

திருச்சி பயணம்!

திருவருள் துணைக்கொண்டு நாளை (ஜூலை 6, 2016 புதன்கிழமை) இரவு பெற்றோருடன் திருச்சி பயணம். எங்கள் குலதெய்வம் வயலூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கும் அப்படியே அருகே உள்ள (குழுமணி) புலிவலம் வியாக்ரபாதீஸ்வரர் கோவிலுக்கும் செல்லவிருக்கிறோம். ஒரு நாள் பயணம் என்பதால் எத்தனை ஆலயங்களை தரிசிக்க முடியும் என்று தெரியவில்லை. ஆனால் மாலை, நாம் பிறந்த ஊரான திருவானைக்கா சென்று அன்னை அகிலாண்டேஸ்வரையையும் ஜம்புகேஸ்வரரையும் தரிசிக்கவிருக்கிறோம். முருகனருளால் வெள்ளிக் காலை சென்னை திரும்பிவிடுவோம். அதையொட்டிய ஆலய தரிசனப் பதிவுகள் விரைவில் வரும்.

ரைட்மந்த்ரா சுந்தர்,
ஆசிரியர், www.rightmantra.com
M : 9840169215 | E : editor@rightmantra.com

==========================================================

அருள்மிகு ஸ்ரீ சோளீஸ்வரர் பதிகம்

திருக்கூவம் இலம்பையங் கோட்டூர் ஊறல்
திருவாலங் காட்டுடனே பாசூர் சூழ
திருக்கோயில் கொண்டருளும் பேரம் பாக்கம்
திருவாளர் சோளீசன் தாள் பணிந்தால்
சுருக்குண்ட நரம்பெழுந்து நாடி கூட்டும்
திருமணமும் மகப்பேறும் திண்ண மாகும்
ஒரு மனத்தால் அவனடியே சென்னி சேர்த்தால்
ஒருகோடி நலஞ்செய்வான் உண்மை தானே!

சோளீஸ்வரர் போற்றி

அருளாளனே சோளீஸ்வரா போற்றி
பக்தர்களைக் காக்கும் ஈஸ்வரா போற்றி
விபூதிப்பிரியனே சோளீஸ்வரா போற்றி
அபிஷேகப்பிரியனே சோளீஸ்வரா போற்றி
ஆருந்திரை நாதா சோளீஸ்வரா போற்றி
பேரையில் வாழும் புண்ணியனே போற்றி
காமாட்சி சமேத சோளீஸ்வரா போற்றி
தனயனுக்கே சிஷ்யரான சோளீஸ்வரா போற்றி
எங்கள் உயிரான தெய்வம் சோளீஸ்வரா போற்றி
மும்மூர்த்திகள் தலைவா சோளீஸ்வரா போற்றி
காக்க, அழிக்கச் செய்யும் சோளீஸ்வரா போற்றி
நல்லோர்களைக் காக்கும் ஈஸ்வரா போற்றி
தீயோர்களை தண்டிக்கும் ஈஸ்வரா போற்றி
வணங்குவோரை அருள் செய்வாய் ஈஸ்வரா போற்றி
பரம்பொருளே ஐயா சோளீஸ்வரா போற்றி
ஏழை பங்காளா சோளீஸ்வரா போற்றி
நந்தி வாகனனே சோளீஸ்வரா போற்றி
உமையவள் மணவாளா ஈசா போற்றி
நாகபூஷனா சோளீஸ்வரா போற்றி
பாப வினைகள் தீர்ப்பவனே ஈசா போற்றி
ஈசனே போற்றி சர்வேஸ்வரா போற்றி
போற்றியே போற்றி போற்றி

நரம்பு சம்பந்தமான நோய்கள் தீர சித்தர்கள் பாடிய பாடல்

”புண்ணிய தீர்த்தமாங் கூவக்கரை
குடிகொண்ட மகாதேவனாம் – நாடி
நரம்பியல் பீடையறுப்பானாம் –
நம்பி நின்ற மாதர் தம் மஞ்சளும்
காத்து மாங்கல்ய பலம் தருமீசன்
இக்குலோத்துங்க சோழீசனைத்
தொழுவார் தவமிக்கவுடையரே”
– வசிஷ்ட மகரிஷி

”சோழீகுலோத்தம்மகா தேவர்
நாடி நரம்பு சுத்திப்பானிவன் –
நஞ்சு தன்னை முறிப்பான் –
கூவத்தான், கூவ வருவான்
தட்சிணமூர்த்தி தாம்பத்யமானால்
தென்புல நோக்கி நின்றருள்
செய்ய யென்ன குறை நமக்கே”
– பாம்பாட்டி சித்தர்

அருள்மிகு ஸ்ரீ சோளீஸ்வரர் திருக்கோவில், 
பேரம்பாக்கம்,
திருவள்ளூர் மாவட்டம் – 631402
டிரஸ்டிகள் அலைபேசி : 94443 08707, 94451 27892, 944430 67204

==========================================================

இந்தப் பதிவுகளை காணத் தவறாதீர்கள்…

பரிகாரத் தலங்கள் என்பவை உண்மையா? MUST READ

சாபம் என்றால் என்ன, தோஷம் என்றால் என்ன?

பூம்பாவை அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடம் இப்போது எங்கே உள்ளது தெரியுமா?

=========================================================

Also check :

அற்புதமான வாழ்க்கை வேண்டுமா? அரியத்துறைக்கு வாங்க!

திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் – அற்புதங்கள் பல நிகழ்ந்த திருநாவுக்கரசர் முக்தி தலம்!

கடனில் சிக்கித் தவிப்போரை மீட்கும் திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர்!

திருநின்றவூரின் திருவாய் நிற்கும் ஏரிகாத்த ராமர் – ஸ்ரீராமநவமி ஸ்பெஷல் !

நந்தனாருக்காக விலகிய நந்தி – திருப்புன்கூர் ஒரு நேரடி தரிசனம்!

ஸ்ரீரங்கம் யானையும் வழக்கறுத்தீஸ்வரரும் – வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஒரு அருமருந்து!

அபயம் தருவான் அஞ்சனை மைந்தன் – காக்களூர் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் தரிசனம் !

நமது பிறவிப் பிணியும் திருப்பதி, திருவண்ணாமலை தரிசனமும்!

சிவனின் பெருமையை பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!

நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா….

சிறுவாபுரி முருகன் கோவிலை பார்த்துக்கொள்ளும் ‘பரமசிவன்’!

கந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே!

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

சுந்தரர் வெள்ளை யானை மீதேறி கயிலைக்கு புறப்பட்ட அற்புத காட்சி – ஒரு சிறப்பு பார்வை!

அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!

திருநாவுக்கரசர் பதிகம் பாடி புரிந்த அற்புதங்கள்!

==========================================================

வள்ளிமலை அற்புதங்கள்

வள்ளி தவப்பீடத்தில் அருள்பாலிக்கும் அறுபடை முருகன்  – வள்ளிமலை அற்புதங்கள் (4)

வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (3)

சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)

புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *