Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > Where there’s a will, there’s a way!

Where there’s a will, there’s a way!

print

ரே மாதிரியான அனுபவங்கள் பலருக்கு கிடைத்தாலும் வெற்றிகரமான மனிதர்களின் சிந்தனை எப்போதுமே வித்தியாசமாகத்தான் இருக்கும் என்பதற்கு
மற்றுமொரு உதாரணம் இந்த பதிவில் வரும் ஒரு வெற்றிவீரனின் கதை. நண்பர் வெங்கடேஷ் பாபு நமக்கு வாட்ஸ் ஆப்பில் ஆங்கிலத்தில் பகிர்ந்த அற்புதமான ஒரு சம்பவத்தை தமிழில் நமது பாணியில் மெருகேற்றி, மொழிபெயர்த்து, உயிர்கொடுத்து தந்திருக்கிறோம். படியுங்கள். இந்தப் பதிவு உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடும்.

Reward

Where there’s a will, there’s a way!

மெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரின் சேரிப்பகுதி ஒன்றில் 1963 ஆம் ஆண்டு ஒரு கறுப்பர் குடும்பத்தில் பிறந்தார் மைக்கேல். அவருக்கு நான்கு சகோதரர்கள். அவரது தந்தை ஈட்டும் வருவாய் அந்த பெரிய குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை. எனவே ஒரு ஏழ்மையான பின்னணியில் தான் மைக்கேல் வளர்ந்தார். எதற்கெடுத்தாலும் வன்முறை, துவேஷம் காட்டப்பட்ட ஒரு சூழ்நிலையில் தனது எதிர்காலம் குறித்து அவருக்கு எந்த நம்பிக்கையும் இல்லை.

அப்போது மைக்கேலுக்கு 13 வயது. துறுதுறுப்புடன் ஓடி விளையாடி மகிழ்ச்சியாக நாட்களை கழிக்கவேண்டிய தனது மகன் இப்படி சோம்பிப் போய் தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பதை சகிக்கமுடியாத அவன் அப்பா, ஒரு நாள் அவனை அழைத்து, ஒரு சிறு பயன்படுத்திய துணியை (USED CLOTHE) காண்பித்து, “இதன் மதிப்பு என்ன?” என்று கேட்டார்.

சற்று யோசித்தவன், “ஒரு டாலராக இருக்கலாம்” என்றான்.

“இதை இரண்டு டாலருக்கு உன்னால் விற்கமுடியுமா? உன்னால் விற்க முடிந்தால் நம் குடும்பத்திற்கு நீ செய்யும் மிகப் பெரிய உதவி இது.. ” என்றார்.

“நான் முயற்சி செய்றேன் அப்பா. ஆனா நிச்சயமா விற்கமுடியும்னு சொல்ல முடியாது…”

அதை வாங்கிய மைக்கேல் அந்த துணியை நன்கு துவைத்து அதிலிருந்த அழுக்குகளை நீக்கினான். துவைத்து உலர்த்திய பிறகு அவர் வீட்டில் அயர்ன் செய்ய வசதியில்லை என்பதால் அடுக்கடுக்கான பலகைகளுக்கு அடியில் அதை வைத்து அதில் இருந்த சுருக்கங்களை அகற்றினான்.

பின்னர் அதை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்றான். அங்கு அதை விற்க முயன்றான். நேரம் தான் போனதே தவிர அதை யாரும் வாங்குவதாக தெரியவில்லை. கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் போனது. இனி வாய்ப்பில்லை என்று கருதிய போது ஒருவர் அந்த துணியை இரண்டு டாலருக்கு வாங்க முன்வந்தார்.

உடனே வீட்டுக்கு ஓடினான்.

Michael-Jordan-Quote

அதன் பிறகு இதே போல தினமும் ஒரு பயன்படுத்திய துணியை (USED CLOTHE) கொண்டு வந்து அழுக்குகள் நீக்கி, துவைத்து உலர்த்தி விற்றுவந்தான். சில நேரங்களில் அதே விலைக்கு விற்க வேண்டி இருந்தது. (அதாவது ஒரு டாலர்).

இப்படியே பத்து நாட்கள் சென்றது.

அவன் தந்தை மறுபடியும் ஒரு அழுக்குத் துணியை கொண்டு வந்து, “இந்த ஆடையை உன்னால் இருபது டாலருக்கு விற்க முடியுமா?” என்று கேட்டார்.

மைக்கேல் திகைத்தான்.

“எப்படிப்பா முடியும்? அதிகபட்சம் ரெண்டு டாலருக்கு போகும்… அதுக்கு மேல சான்ஸே இல்லை”

“நீ ஏன் முயற்சிக்கக்கூடாது? ஏதேனும் வழி இருக்கும். முடியாது என்று சொல்வதற்கு முன் முயற்சித்துப் பாரேன்…..”

கிட்டத்தட்ட பல மணிநேரங்கள் மண்டையை போட்டு உடைத்துக்கொண்டான். கடைசியில் ஒரு யோசனை உதித்தது.

அவனுடைய கஸின் ஒருவருக்கு ஓவியம் தெரியும். அவரிடம் அதைக் கொண்டு சென்று, அந்த ஆடையில் டொனால்ட் டக் மற்றும் மிக்கி மவுஸ் கார்ட்டூனை வரைந்து தருமாறு கேட்டுக்கொண்டான்.

அவர் வரைந்து தர, அந்த ஆடையை எடுத்துக்கொண்டு பணக்கார வீட்டு குழந்தைகள் படிக்கும் பள்ளி ஒன்றின் முன்பு சென்று அதை விற்க முயற்சித்தான்.

அந்த பள்ளியில் படிக்கும் தனது எஜமானரின் மகனை பிக்கப் செய்ய வந்த ஒரு டிரைவர், அந்த குழந்தைக்கு அடுத்து வரக்கூடிய பிறந்தநாளை முன்னிட்டு பரிசாக வழங்கவேண்டி அதை வாங்கினார். அந்த குழந்தைக்கோ அந்த ஆடை மிகவும் பிடித்துவிட அதன் மூலம் மைக்கேலுக்கு மேலும் ஐந்து டாலர் டிப்ஸ் கிடைத்தது.

தற்போது அவர் கையில், 25 டாலர்கள்.

25 டாலர்கள் என்பது மைக்கேலுக்கு மிகப் பெரிய விஷயம். அவர் தந்தையின் ஒரு மாத ஊதியம் அது.

வீட்டுக்கு திரும்பி தந்தையிடம் 25 டாலர்களை கொடுத்தவுடன் “வெல்டன் மை பாய். I am proud of you” என்று உச்சி மோர்ந்தார்.

அடுத்து அவரிடம் வேறு ஒரு ஆடையை கொடுத்து, “இந்த ஆடையை உன்னால் 200 டாலருக்கு விற்க முடியுமா?” என்று கேட்டார்.

அது ஒரு பயன்படுத்திய ஜெர்கின் கோட்.

இந்த முறை மைக்கேல் அதை சிறிதும் தயக்கமின்றி வாங்கிக்கொண்டான்.

ஆனால் இதை விற்க சற்று நேரம் பிடித்தது.

mary faccetஅடுத்த இரண்டு மாதங்களில் ‘சார்லீஸ் ஏஞ்சல்ஸ்’ படத்தில் நடித்த மேரி ஃபாரா என்ற நடிகை அந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்கு நியூயார்க் வந்திருந்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பு நிறைவு பெற்றபிறகு, நம் மைக்கேல் எப்படியோ பாதுகாப்பு அதிகாரிகளின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு மேரி ஃபாரா முன்பு சென்று, தான் கொண்டு வந்த ஜெர்கினை காண்பித்து, “மேம்… நான் உங்கள் ரசிகன். இதில் ஒரே ஒரு ஆட்டோகிராப் போட்டுத் தரமுடியுமா? ப்ளீஸ்…” என்று கேட்க, 13 வயது நிரம்பிய ஒரு சிறுவன் இப்படி காவலை மீறி வந்து தன்னிடம் ஆட்டோகிராப் கேட்பதை கண்டு வியந்த மேரி ஃபாரா மறுப்பெதுவும் சொல்லாமல் சிரித்துக்கொன்டே ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுத்தார்.

கையெழுத்தைப் பெற்றுக்கொண்டு வெளியே வந்த மைக்கேல், உற்சாகத்தில் “Hurraay… I have did it…! என்று கூக்குரலிட்டான்.

“இது மேரி பாரா சற்று முன்பு ஆட்டோகிராஃப் போட்ட ஜெர்கின். இதன் ஆரம்ப விலை $200. யாருக்கு வேண்டும் இந்த அரிய பொக்கிஷம்??” என்று கூவினான்.

நான் நீ என்று பலர் போட்டிப் போட்டுக்கொண்டு வாங்க வர, இறுதியில் அதை மேரி பாராவின் பணக்கார ரசிகர் ஒருவருக்கு $1200 க்கு ஏலம் விட்டான்.

வீட்டுக்கு $1200 டாலருடன் திரும்பிய மகனைக் கண்டு தந்தை ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

“நீ சாதித்துவிட்டாய் மகனே. நீ சாதித்துவிட்டாய்…”

அன்று இரவு மைக்கேல் அவன் தந்தைக்கு அருகவே படுத்துக்கொண்டான்.

“மைக்கேல், இந்த துணிகளை விற்க முயன்ற இந்த அனுபவங்களில் இருந்து நீ என்ன கற்றுக்கொண்டாய்?”

“Where there’s a will, there’s a way! மனமிருந்தால் மார்க்கமுண்டு!!” என்றான் பளிச் என்று.

“நீ சொன்னது தவறில்லை. ஆனால் ஆடையை கொடுத்த என் நோக்கம் அதுவல்ல. ஒரு டாலரே மதிப்புடைய ஒரு சாதாரண ஆடையின் மதிப்பையே சற்று முயற்சித்தால் உயர்த்த முடியும் எனும்போது ஜீவனோடு வாழும், சிந்திக்கும் மனிதர்களால் அவர்கள் மதிப்பை உயர்த்திக்கொள்ளமுடியாதா? நாம் கருப்பாக இருக்கலாம். ஏழையாக இருக்கலாம். ஆனால், நம்மால் கூட நமது மதிப்பை உயர்த்திக்கொள்ள முடியும்!

தந்தையின் இந்த சொல் மைக்கேலின் மனதில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.

ஒரு சாதாரண அழுக்குத் துணியையே மதிப்புடையதாக ஆக்க முடிந்த என்னால், என்னை ஏன் அவ்வாறு உயர்த்திக்கொள்ள முடியாது? நிச்சயம் முடியும்.

அந்த கணம் முதல் தனது எதிர்காலம் ஒளிமயமாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று நம்பிக்கை வைத்தான் மைக்கேல்.

அந்த மைக்கேல் வேறு யாருமல்ல… பிற்காலத்தில் உலகப் புகழ் பெற்ற கூடைப் பந்து வீரராக ஜொலித்த மைக்கேல் ஜோர்டான்.

பிற்காலத்தில் அவரது ஆட்டோகிராஃப் போட்ட ஒரு சாதாரண டீ-ஷர்ட் $2000 க்கு ஏலம் போனது தனிக்கதை!

==========================================================

மைக்கேல் ஜோர்டான் எங்கே வித்தியாசப்படுகிறார் தெரியுமா?

மைக்கேல் தன் மதிப்பை உயர்த்திக்கொண்டு சாதித்து காட்டிவிட்டார். நாம் எப்படி நம் மதிப்பை உயர்த்திக்கொள்வது? எப்படி சாதிப்பது?

அடுத்தடுத்து வரக்கூடிய பதிவுகளில் அதை விரிவாக பார்ப்போம்!

இப்போதைக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்ல ஆசைப்படுகிறோம்.

ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்தால் புரியும், எங்கோ ஒரு தூரதேசத்தில் வாழ்ந்த மைக்கேலுக்கு கிரகங்களோ பெயர்ச்சியோ பரிகாரமோ இதெல்லாம் எதுவும் தெரியாது. அவனிடம் இருந்ததெல்லாம் தன்னம்பிக்கையும், ஜெயித்து காட்டவேண்டும் என்கிற வெறியும் தான். தன்னம்பிக்கை மிகுந்த ஒருவரை யாரும் எதுவும் செய்து விடமுடியாது. யாரும் அவர்கள் வெற்றியை தடுத்து நிறுத்தவும் முடியாது.

தன்னுடைய ஐடியாக்கள் கிளிக் ஆனதும் ஆடையை துவைத்து உலர்த்தி விற்கும் பிஸினஸை அவர் செய்யவில்லை. மாறாக அதில் கிடைத்த பாடத்தை உணர்ந்துகொண்டு தன்னை மேம்படுத்தும் பணியில் இறங்கினார். அங்கேதான் அவர் தனித்து நிற்கிறார்.

Michael jordan autograph 2

இதே நாமாக இருந்த என்ன செய்திருப்போம்? ஆயிரக்கணக்கான பழந்துணிமணிகளை வாங்கி வந்து அதை பிஸ்னஸ் செய்ய முயற்சித்திருப்போம்.

மைக்கேல் ஜோர்டான் அதை செய்திருந்தாலும் நிச்சயம் உயர்ந்திருப்பார். ஆனால், தனது கையெழுத்து போட்ட ஜெர்கின் $2000 க்கு ஏலம் போகும் அளவுக்கு உயர்ந்திருக்க மாட்டார்.

எப்போதும் வித்தியாசமாக சிந்திக்கவேண்டும். தன்னம்பிக்கையுடன் போராடவேண்டும்.

‘கருமத்தை முடிப்பவன் கட்டத்தை பாரான்’ – இதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.

==========================================================

குறிப்பு : அரும்பாடுபட்டு நமது வாசகர்களுக்காக தயாரான நல்விருந்து இது. TRANSLATION என்பதைவிட INSPIRATION என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். இந்நிலையில் தங்களை நம்மிடம் அடையாளம் காட்டிக்கொள்ளக் கூட மனமின்றி நமது படைப்புக்களை தொடர்ந்து சிலர் பயன்படுத்தி பல்வேறு வகைகளில் ஆதாயம் அடைந்து வருவது நமக்கு தெரியும். அவர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். ஒருவர் உழைப்பை திருடுவது போன்ற கேவலமான செயல் வேறு எதுவும் இல்லை. Don’t use me if you don’t want to promote me or support me! 

==========================================================

swami-vivekananda 2என்னால் எதுவும் முடியும்!

“யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசட்டும், உங்கள் பாதையில் உறுதியாகச் செல்லுங்கள். உலகம் உங்கள் காலடியில் வந்து விழும். கவலை வேண்டாம். ‘இவரிடம் நம்பிக்கை வையுங்கள், அவரிடம் நம்பிக்கை வையுங்கள்’ என்றெல்லாம் சொல்வார்கள். முதலில் உங்களிடமே நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று நான் சொல்கிறேன். உங்களிடம் நம்பிக்கை வையுங்கள், எல்லா ஆற்றலும் உங்களிடம் உள்ளது. அதை உணருங்கள், அதை வெளிப்படுத்துங்கள். ‘என்னால் எதுவும் முடியும்’ என்று சொல்லுங்கள். ‘இல்லை, இல்லை என்று சொன்னால் பாம்பின் நஞ்சுகூட இல்லாமல் போய்விடும்!”

– சுவாமி விவேகானந்தர்

==========================================================

இந்த மாத விருப்ப  சந்தா  செலுத்திவிட்டீர்களா?

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Also check… 

நம்பிக்கை!

ஒரு தொழிலதிபருக்கு விவேகானந்தரின் சந்திப்பு ஏற்படுத்திய திருப்புமுனை

எனக்கு ஒரு பிரச்சனை – தப்பு தப்பு – ‘சவால்’!

சேவைக்கு சுவாமி விவேகானந்தர் கொடுத்த பரிசு!

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

ஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read!

‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்!

களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!

பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !

அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?

ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

யார் உங்கள் தலைவர்?

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள்

நிலம், கடல், வானம் இவற்றை விட பெரியது எது தெரியுமா ?

==========================================================

[END]

2 thoughts on “Where there’s a will, there’s a way!

  1. Sundar Ji, A beautiful inspirational story on Michael Jordan the way you have conveyed message is great. Think Differently and Fight Confidently is a beautiful message you have conveyed through Jordan .
    Swami Vivekanda message is an insipration and really it is good to read the Content. Generally we read the whatsapp message but since most of the messages are junk and even though we read a good message or an inspirational message from whats app the very next message will make us to forget the inspirational messages because of the content but when we see a message in different platform like rightmantra.com where we used to read Inspiratonal , Motivational and Spirtual message it really blooms us .

    Thanks
    Venkatesh

  2. Wow wonderful message. The way u narrated the story will enlighten everyone. At this moment this type of inspirational messages r surely the need of the hour for us. Beautiful message is that great people don’t do different things but they do things differently. Their thinking and self motivation will be unimaginable, thanks for the mega treat article. May god bless u for the most successful career in this field.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *