உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்….
விவேகானந்தர் சிகாகோ சென்றிருந்தபோது, சுவாமிஜியும் ஹாலிஸ்டர் என்ற சிறுவனும், ஒரு புல்வெளி வழியாக நடந்து சென்றனர். அங்கே கோல்ப் மைதானம் ஒன்று இருந்தது. சுவாமிஜி கோல்ப் பற்றி அறியாதவர். மைதானத்தில் ஒரு கொடி பறந்ததும் அதை கண்டு ஹாலிஸ்டரிடம் அது பற்றி கேட்டார்.
அவன் அந்த விளையாட்டை பற்றி கூறிவிட்டு “ஆரம்பத்தில் விளையாடுபவர்கள் குழியில் பந்தை போடுவதற்கு 4, 7 அல்லது 9 முறை அவகாசங்கள் தரப்பும்!” என்றான்.
அதற்கு சுவாமிஜி, “அதற்கு ஏன் இத்தனை அவகாசங்கள்..? நான் ஒரே ஒரு முறையில் குழியில் பந்தை போடுகிறேன்.”
“அது உங்களால் முடியாது சுவாமிஜி… தேர்ந்தே விளையட்டுக்கார்களுக்கு கூட அது சாத்தியமற்ற ஒன்று”
“நான் ஒரே தடவையில் குழியில் பந்தை போடுகிறேன். வேண்டுமானால் பந்தயம் கட்டிக்கொள்ளலாமா?” என்றார் விவேகானந்தர் தீர்க்கமான குரலில்.
சுவாமிஜியால், அது சாத்தியமேயில்லை என்று கருதினான் ஹாலிஸ்டர். எனவே அவரிடம், “பந்தயத்திற்கு நான் தயார். நீங்கள் ஒரே அடியில் பந்தை குழிக்குள் போட்டால் நான் உங்களுக்கு ஐம்பது சென்ட் தருகிறேன்” என்றான்.
“போடாவிட்டால் நான் ஒரு டாலர் தருகிறேன்” என்றார் சுவாமிஜி.
அப்போது அந்த வழியே வந்த லெக்கட் என்கிற சீமானும் அந்த பந்தயத்தில் கலந்துகொண்டார்.
உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
“சுவாமிஜி, ஒரே அடியில் பந்தைப் போட்டுவிட்டால், நான் 10 டாலர் தருகிறேன்” என்றார் அவர்.
சுவாமிஜி கோல்ப் மட்டையை கையில் எடுத்தார். சிறிது நேரம் கூர்மையான பார்வையை செலுத்தி கொடியை பார்த்தார். பிறகு வேகமாக பந்தைத் தட்டினார். பந்து சரியாக குழியில் விழுந்தது.
எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். திகைப்பு. உடனே கரகோஷம் எழுப்பி சுவாமிஜியை பாராட்டினர்.
[pulledquote]சுவாமிஜியை பொறுத்தவரை, “வேலைப் பற்றிய அறிவு + சுய வலிமை பற்றிய தெளிவு + மனம் ஒன்றிய ஈடுபாடு = வெற்றி!”[/pulledquote] “ஆமாம்… சுவாமிஜி… நீங்கள் இப்படி ஒரே அடியில் பந்தை குழியில் போட்டது உங்கள் யோகசக்தியினாலா?” ஆச்சர்யத்தில் உறைந்துபோன லெக்கட் கேட்டான்.
அதற்கு சுவாமிஜி, “இது போன்ற அற்ப விஷயங்களுக்கெல்லாம் நான் யோக ஆற்றலை பயன்படுத்துவதில்லை.” என்றார்.
“பிறகு எப்படித் தான் இந்த அதிசயம் சாத்தியப்பட்டது?”
சுவாமிஜி விளக்கினார்… “நான் என்ன செய்தேன் என்பதை இரண்டே வாக்கியங்களில் விளக்குகிறேன். முதலில் தூரத்தை கண்களால் அளந்துகொண்டேன். என் கை வலிமை எனக்கு தெரியும். இரண்டாவதாக இந்த பந்தயத்தில் ஜெயித்தால் எனக்கு பத்தரை டாலர் கிடைக்கும் என்பதை என் மனதிற்கு கூறினேன். பிறகு பந்தை அடித்தேன்.”
சுவாமிஜியை பொறுத்தவரை, “வேலைப் பற்றிய அறிவு + சுய வலிமை பற்றிய தெளிவு + மனம் ஒன்றிய ஈடுபாடு = வெற்றி!”
சுவாமிஜி அவருக்கு மட்டுமா இதைக் கூறினார்?
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்
என்று கண்ணதாசன் கூறியது இதைத் தான். அதாவது தனது பலம் என்ன பலவீனம் என்ன என்பதை ஒருவர் அறிந்து அதற்கேற்ப செயலாற்றினால் வாழ்க்கையில் வெல்லலாம் என்பது தான்.
சுவாமிஜி பெற்ற கோல்ப் வெற்றி கூறுவதும் அதைத் தான்!
================================================================
இனிதே நடைபெற்ற அகத்தியர் தேவாரத் திரட்டு முற்றோதல் !
ஆகஸ்ட் 2 ஞாயிறு காலை குன்றத்தூரில் நமது தளம் சார்பாக நடைபெற்ற ‘அகத்தியர் தேவாரத் திரட்டு முற்றோதல்’ எல்லாம் வல்ல ஈசனின் தனிப்பெருங்கருணையால் மிக மிக சிறப்பாக நடந்தேறியது. கிட்டத்தட்ட நமது ஆண்டுவிழா போல அமைந்துவிட்ட இந்த ஆன்மீக நிகழ்வை எத்தனையோ சிரமங்களுக்கு இடையே நல்லபடியாக நடத்தி முடித்தோம்.
மாணவர்களுக்கு திட்டமிட்டதைவிட அதிகமாக பொருட்களை கொடுக்க முடிந்தது. நமது அன்புப் பரிசு மழையில் மாணவர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். ஒத்துழைப்பும் ஆதரவும் நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி. விரைவில் இது தொடர்பான பதிவு தளத்தில் அளிக்கப்படும்.
================================================================
Also check articles on Swami Vivekananda in Rightmantra.com
‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்!
களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!
“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!
பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !
அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?
ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70
வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67
யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!
================================================================
Also check for more motivational stories :
பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?
ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?
விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?
நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?
‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’
எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –
வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?
பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?
சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?
இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?
நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!
அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?
நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!
மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?
================================================================
[END]
சுவாமிஜி பற்றிய மிகவும் அருமையான பதிவு.
அறிவும், தெளிவும் , மன ஈடுபாடும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை சுவாமிஜி மிகவும் அழகாக நமக்கு விளக்கி இருக்கிறார்.
நாமும் வெற்றி என்னும் குறிக்கோளையே நம் வாழ்வின் உன்னத லட்சியமாக கொள்வோம்
முற்றோதல் பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
வாழ்க வளமுடன்
நன்றி
உமா வெங்கட்
இந்த பதிவு என் மனதுக்குள் ஒரு புது உத்வேகத்தை ஏற்படுத்தியது என்பதனை இங்கு மகிழ்சியுடன் பகிருகிறேன்.
அற்புதமான பதிவு.
மிக்க நன்றி
வணக்கம் சுந்தர். அருமையான பதிவு.சுய அலசல் செய்து கொள்ள தெளிவான மனம் வேண்டும் அது பயிற்சியினால் சாத்தியமே.அப்படி இருக்கிறவர்கள் வாழ்கையில் வெற்றி பெறுகிறார்கள்.தலை நிமிர்ந்து நடக்கிறார்கள்.நன்றி
வெற்றியின் சூத்திரத்தை விவேகானந்தரின் வாழ்வில் நடைபெற்ற சம்பவம் மூலம் உணர்த்தியது அருமை. இனிமே கோல்ப் என்றாலே,இந்த நிகழ்வு தான் நினைவிற்கு வரும். ஒரே ஷாட்..செம ஷார்ப்..இது தான் வாழ்கையின் சூத்திரமோ என்றும்? நினைக்க தோன்றுகிறது.
நாமும் நம் இலக்கை நிரனயித்து..நம் பலத்தை மதிப்பிடு செய்து..வாழ்கையை தொடருவோம்.
நன்றி அண்ணா..