“நல்ல கேள்வி. இதற்கு உனக்கு நாளை பதில் அளிக்கிறேன்” என்று கூறுகிறார் குரு.
மறுநாள் மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள்.
மாணவர்களுக்கு முன்னாள் இரண்டு மண்ணால் செய்யப்பட்ட ஜாடிகள் இருக்கின்றன. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருந்தன.
“இங்கே இருப்பது என்ன? இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?” மாணவர்களை கேட்கிறார்.
மாணவர்கள் ஒரு கணம் கழித்து “இரண்டு ஜாடிகளும் ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவை தான். ஒரே கொள்ளளவு கொண்டவை தான்.”
“இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?” மாணவர்களை கேட்கிறார்.
“தெரியவில்லை”
“ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.”
மாணவர்களுக்கு எதிரே முதல் ஜாடியை கீழே தள்ளி கவிழ்த்தார். அதிலிருந்து தேன் வெளியே வந்தது. மற்றொரு ஜாடியை கவிழ்த்தார் அதிலிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது.
“ஜாடியை நான் கீழே தள்ளியவுடன், அதனுள் என்ன இருக்கிறதோ அது வெளியே வந்தது. அதை நான் கீழே தள்ளும் வரை அதற்குள் என்ன இருந்தது என்று உங்களுக்கு தெரியாது. இரண்டும் ஒன்றே என்று நினைத்துக்கொண்டீர்கள். வித்தியாசம் உள்ளே இருந்த பொருளில் தான் இருந்தது. அது வெளியே தெரியாமல் இருந்தது. ஆனால் அதை கீழே தள்ளியவுடன் உள்ளே இருப்பதை காட்டிவிட்டது.
இறைவன் நமக்கு தரும் சோதனைகளும் இப்படித் தான். நாம் சோதனைகளை சந்திக்கும் வரை சகஜமாக நல்லவர்களாக இருக்கிறோம். ஆனால் சோதனையை சந்திக்கும்போது தான் நமக்கு உள்ளே இருக்கும் நமது உண்மையான குணம் வெளியே வருகிறது. நமது உண்மையான எண்ணங்களும், நமது மனப்பான்மையும் வெளிப்படுகிறது. நமது உண்மையான குணத்தை பரீட்சிக்கவே இறைவன் சோதனைகளை தருகிறான்” என்றார்.
“மேற்படி இரண்டு ஜாடிகளில் ஒரு ஜாடியை நீங்கள் எடுத்துக்கொள்ள நான் அனுமதியளித்தால் நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?”
அனைவரும் ஒருமித்த குரலில், “தேன் அடைக்கப்பட்டுள்ள ஜாடியைத் தான்!”
“இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருக்கின்றன. ஒரே இடத்தில் செய்யப்பட்டவையே. இருப்பினும் தேன் ஜாடியை மட்டும் நீங்கள் வேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள்? சற்று யோசித்து பாருங்கள்!”
கெட்டவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இறைவன் நன்கு அறிவான். ஆகையால் தான் சில சமயம் நமது வேண்டுகோள்களை அவன் செவி சாய்ப்பதில்லை.
இறைவன் நம்மை சோதிப்பதும் சீண்டுவதும் நமது உண்மையான குணத்தை நாம் அறியவே. அவனறிய அல்ல. அவனுக்கு தான் உள்ளே இருப்பது சந்தனமா சாக்கடையா என்று தெரியுமே. அவன் அப்படி செய்வது நம்மை நாமே தெரிந்துகொள்ள. நம்மை நாம் அறிந்துகொண்டால் தான் நம்மை திருத்திக்கொள்ள முடியும். இல்லையெனில் நமது தவறுகளை திருத்திக்கொள்ள நமக்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும்.
அடுத்த முறை ஒரு மிகப் பெரிய சோதனையை சந்தித்தாலோ அல்லது வாழ்க்கையில் இடறிவிழுந்தாலோ அல்லது எவரேனும் உங்களை சீண்டினாலோ உங்களது ரியாக்ஷன் எப்படி இருக்கும்? உங்களிடம் இருந்து என்ன வார்த்தைகள் வெளியே வரும்?
தேனின் பொறுமையும் கனிவுமா?
அல்லது சாக்கடை நீரின் கோபமும், அருவறுப்புமா?
[END]
=============================================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
=============================================================
Dear sundarji,
Very nice article.
Valuable message.
Thanks & Regards
Harish.V
டியர் சார்,
உண்மையிலே சூப்பர் பதிவு
As usual , monday morning ஸ்பெஷல் சூப்பர் .
திருக்குறள்:
சென்ற இடத்தார் செலவிடா தீதொரீஇ
நன்றின் பால் உய்ப்ப தறிவு
It means
தீய வழிகளை தள்ளிவிட்டு நல வழியை தேர்வு செய்வதே அறிவுடமையாகும்.
Wisdom checks the straying senses
Expels evils, impels goodness
நன்றி
உமா
Nice ……..Sir
-Uday
அருமையான உதாரணம்……
நம் மனதில் இருந்து வெளியே என்ன வருகிறது என்பதை அறியவே சோதனை …நல்ல பதிவு ….
அருமையான வரிகள்….எளிமையான முறையில் கூறப்பட்ட வாழ்வியல் தத்துவம்….பாமரனுக்கும் புரியும் வகையில் எழுதிய உங்களுக்கு எனது பாராட்டுக்கள்…வாழ்க வளமுடன்…
\\\இறைவன் நம்மை சோதிப்பதும் சீண்டுவதும் நமது உண்மையான குணத்தை நாம் அறியவே. அவனறிய அல்ல.\\\
\\\நமது உண்மையான குணத்தை பரீட்சிக்கவே இறைவன் சோதனைகளை தருகிறான்” \\\
விவேகானந்தரின் சாராம்சம் இது தான் .. ‘முதலில் உங்களிடமே நம்பிக்கை கொள்ளுங்கள். அதன்பின் ஆண்டவனை நம்புங்கள். உணர்வதற்கு இதயமும், எண்ணுவதற்கு அறிவும், உழைப்பதற்கு உறுதியான உடலும் நமக்கு வேண்டும். இதயத்துக்கும் அறிவுக்கும் போராட்டம் மூளுமானால் இதயத்தைப் பின்பற்றி நடங்கள்!
-பாராட்டுகளுடன் ,
மனோகர்
சுந்தர்ஜி
ரியலி சூப்பர். வைரம் பட்டை தீட்ட தீட்ட தான் வைரம் ஜொலிக்கிறது. அதை போல் தான் நம்மை இறைவன் சோதித்து சோதித்து வைரம் போல் ஜொலிக்க செய்கிறார்.
அருமையான பதிவு