Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, April 24, 2024
Please specify the group
Home > Featured > கல் கடவுளாவது எப்போது? வாரியாரின் அற்புதமான விளக்கம் – Rightmantra Prayer Club

கல் கடவுளாவது எப்போது? வாரியாரின் அற்புதமான விளக்கம் – Rightmantra Prayer Club

print
நேற்று ஆகஸ்ட் 25 ஆங்கில தேதிப்படி வாரியார் சுவாமிகள் பிறந்தநாள். வாரியார், மகா பெரியவா, போன்ற அருளாளர்களை பொறுத்தவரை குருபூஜை அல்லது ஜயந்தி உற்சவத்திற்கு தான் நாம் பதிவளிக்க விரும்புகிறோம். ஆங்கிலத் தேதிப்படி அல்ல. (வாரியார் ஜயந்தி செப்டம்பர் 6 வருகிறது). இருப்பினும் நண்பர் ஒருவர் கேட்டுகொண்டபடியால் இன்றைய பிரார்த்தனை பதிவில் வாரியார் கூறிய அற்புதமான ஒரு விளக்கத்தை கருப்பொருளாக பயன்படுத்தியிருக்கிறோம்.

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றின் சிறப்பு மலருக்கு வாரியார் அளித்த மடல் இது…

கும்பாபிஷேகப் பெருமையை படிப்பது, சிரவணம் செய்வது மிகவும் புண்ணியம் என்பதால் இந்த பிரார்த்தனை பதிவு பன்மடங்கு சக்தி மிக்கதாக மாறியிருக்கிறது என்றே கருதுகிறோம். 

கும்பாபிஷேகத்தின் சிறப்பு!

ஜோதி எங்கும் நிறைந்திருந்தாலும் கல்லிலே அதிகம் உள்ளது. ஒரு கல்லை மற்றொரு கல்லால் தட்டினால் நெருப்பு வருவதைக் காண்கிறோம்.

ஆதலால் ஒரு தெய்வ வடிவைக் கல்லினால் செதுக்கி அமைக்கின்றார்கள்.

மந்திர ஒலிக்கு ஆற்றல் அதிகம். வேதாகமங்களில் வல்லவர்கள் யாகசாலையில் இனிய மந்திரம் ஓதி, தீ வளர்த்து, அந்த யாகாக்கினியில் விளைந்த ஜோதியை கும்பத்தில் சேர்த்து, கும்பத்தில் தங்கிய ஜோதியை பிம்பத்தில் சேர்க்கின்ற ஒரு அரிய கிரியைதான் கும்பாபிஷேகம். கும்பாபிஷேகத்துக்கு முன் அது கல். கும்பாபிஷேகம் ஆன அடுத்த விநாடியில் கடவுள்.

DSC01739-copy

காகிதத்தை ஆற்றல் உடைய அரசாங்கத்தால் கரன்சி நோட்டாக மாற்றுவதுபோல், கல்லைக் கடவுளாக அருளாளர்கள் மாற்றுகின்றார்கள்.

வேதத்தின் மந்திரத்தால்
வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான்
புள்ளிருக்கு வேளூரே

என்பது அப்பர் பெருமான் அருள்வாக்கு.

வெய்யிலிலே பஞ்சை வைத்தால் வெப்பமான சூடு ஏறும். வெந்து போகாது. சூரியகாந்தக் கண்ணாடியில் வரும் வெயிலில் பஞ்சை வைத்தால் தீப்பிடித்து பஞ்சு நீறாகிவிடும்.

பஞ்சை சாம்பலாக்கும் ஆற்றல் நேர் வெயிலுக்குக் கிடையாது. சூரிய காந்தக் கண்ணாடியில் வரும் வெயிலுக்கு உண்டு. ஏன்?

பரந்து விரிந்து உள்ள வெயிலின் சூட்டினை ஈர்த்து சேர்த்து சூரிய காந்தக் கண்ணாடி தன் வெயிலில் வரும் பஞ்சை சாம்பலாக்குகிறது. இறைவன் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றார். கோயிலில் உள்ள மூர்த்திகளில் இறையருள் மிகுதியாக விளங்குகின்றது…

ஏனைய இடங்களில் இறைவனை வழிப்பட்டால் வினை வெதும்பும். ஆலயத்தில் உள்ள மூர்த்திக்கு முன் வழிபட்டால் வினைகள் வெந்து நீறாகும். அதனாலேதான் ஒளவையார், ‘ஆலயந் தொழுவது சாலவும் நன்று’ என்கின்றார்.

IMG_0424

மாலற நேயமும் மலிந்தவர் வேடமும்
ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே

என்று சிவஞானபோதம் என்ற ஞானநூல் உபதேசிக்கின்றது.

நமது முன்னோர்கள் தீர்க்கதரிசிகள், மார்க்கதரிசிகள். ஆலயத்தின் சிறப்பு அளவிட முடியாதது. ஒரு ஆலயத்தில் சென்று 12 ஆண்டுகள் காலை, மாலையும் வழிபட்டால் எத்துனைப்புண்ணியம் எய்துமோ அத்துணைப் புண்ணியம் கும்பாபிஷேகத்தை சேவித்தோர் எய்துவர்.

கும்பாபிஷேகம் பெருஞ்சாந்தி என்று பேர் பெறும்.

பெருஞ் சாந்தி காணாது போதியோ பூம்பாவாய்

என்கின்றார் திருஞான சம்பந்தர்.

மகாகும்பாபிஷேகம் தரிசிப்பது மிகமிக அவசியமானது. வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு ஆகும். சேவித்தவர்க்கே இத்துணைப்புண்ணியம் எய்தும் என்றால் கும்பாபிஷேகத்தைச் செய்தவர், செய்வித்தவர் எய்தும் பேறுகள் சாற்றவொண்ணுமோ?

சிவநெறி ஓங்குக
அன்பு தழைக்க
அருள் நீடுக.

அன்பன்,
கிருபானந்தவாரி

================================================

வாரியார் குறிப்பிடும் பாடல் கீழே அளிக்கப்பட்டுள்ள பதிகத்தில் பத்தாவதாக இடம்பெற்றுள்ளது… வாசகர் டவுன்லோட் செய்ய வசதியாக pdf ஃபைலை கீழே இடம்பெற்றுள்ள சுட்டியை பயன்படுத்தி டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

http://rightmantra.com/wp-content/uploads/2016/08/mylai-padhigam.pdf

நரம்பு, எலும்பு தொடர்பான பிரச்சனைகளால் போராடி வருபவர்களோ அல்லது அவர்களது உற்றார் உறவினர்களோ அவர்கள் பொருட்டு இந்த பதிகத்தை பக்தியுடன் ஓதி வந்தால் அவர்கள் மருத்துவர்களே வியக்கும் வண்ணம் விரைந்து நலம் பெறுவார்கள் என்பது உறுதி.

Sambandhar

திருமயிலை பதிகம் – திருமயிலாப்பூர்

மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

மைப்பயந்த வொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்.

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

ஊர்திரை வேலை யுலாவு முயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.

மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
அடலானே றூரு மடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.

மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்தரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.

தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச் சரமமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கடம் மட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.

நற்றா மரைமலர்மே னான்முகனு நாரணனும்
முற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங் கபாலீச் சரமமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.

உரிஞ்சாய வாழ்க்கை யமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரத்தான்றன்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.

கானமர் சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம் பந்த னலம்புகழ்ந்த பத்தும்வல்லார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.

Also check : பூம்பாவை அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடம் இப்போது எங்கே உள்ளது தெரியுமா?

================================================

நமது பிரார்த்தனை பதிவின் கட்டமைப்பு 

பிரார்த்தனை பதிவுகள் ஒரு வகையில் THERAPEUTIC MYTH போல. இவற்றை படிப்பதே சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து படிப்பவர்களுக்கு விடுதலை அளிக்கக்கூடும். அந்த வகையில் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவும் கவனமாக தயாரிக்கப்படுகிறது.

1) முதலில் இறைவனின் பெருமையை கூறும் கதை அல்லது புராணச் சம்பவம்.

2) கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு ஏற்ப, ஒரு கோவிலின் கோபுரத்தின் படம்.

3) நம் திருமுறையிலிருந்து ஒரு பாடல்!

4) அடுத்து பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் அருளாளரைப் பற்றிய குறிப்பு.

5) அதற்கு அடுத்து சமர்பிக்கப்படும் பிரார்த்தனைகள்.

6) அதற்கு பிறகு, பொதுப் பிரார்த்தனை. நமது கூட்டுப் பிரார்த்தனையை வலிமையுள்ளதாக ஆக்கும் அம்சங்களில் இது முக்கியமான ஒன்று. காரணம், நமது பிரச்னைகளுக்காக மட்டுமல்லாது பொதுப் பிரச்சனைகள் மற்றும் தேசத்தின் நலன் குறித்தும் பிரார்த்தனை செய்வதால் கூட்டுப் பிரார்த்தனைக்கு உண்மையான அர்த்தம் கிடைத்துவிடும்.

7) அதற்கு பிறகு CONFESSION. இதுவரை நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு, இனி அதை செய்யாதிருக்கும் வண்ணம் இறைவனின் திருவருளை வேண்டுவது.

ஆக, இத்தனை மகத்துவமான விஷயங்களை ஒருவர் படித்தாலே அவருக்கு பாதிப் பிரச்சனைகள் தீர்ந்தது போல. மேற்கூறிய பிரார்த்தனையை சமர்பித்துள்ள வாசகர்கள் தவிர, பிறர் இதை படிக்கும்போதும் அவர்கள் பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுக்கும் நன்மை விளையும் என்று சொல்லவேண்டுமா என்ன?

நீங்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்று, உங்கள் சுற்றம் மற்றும் நட்பு வட்டங்களிலும் இதை கொண்டு சென்று அரிய சிவதொண்டில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.

==========================================================

ஒரு முக்கியமான விஷயம்!

பிரார்த்தனை கோரிக்கை அனுப்பும் வாசகர்கள் அவசியம் தங்கள் கோரிக்கையை ஓரிரு வரிகளில் அனுப்பாமல் சற்று விரிவாக அனுப்பவும். அவசியம் பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் இவற்றை குறிப்பிடவும். (ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் பிரசுரிக்கப்படமாட்டாது. கோவிலில் அர்ச்சனை செய்யவே இந்த விபரங்கள் கேட்கப்படுகிறது!)

கோரிக்கை குறித்த சந்தேகங்கள் எழும்போது பதிவை தயாரிக்க சிரமமாக உள்ளது. எனவே அலைபேசி எண்ணை அவசியம் குறிப்படவேண்டும். அலைபேசி எண் இன்றி வரும் எந்த பிரார்த்தனை கோரிக்கையும் / மின்னஞ்சலும் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

நன்றி!

– ‘ரைட்மந்த்ரா’ சுந்தர்,
ஆசிரியர், Rightmantra.com
M : 9840169215  |  E : editor@rightmantra.com

==========================================================

நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று பிரார்த்தனை நிறைவேறிய சம்பவங்களுக்கு…

முந்தி நின்ற வினைகளவை போகச் சிந்தி நெஞ்சே – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவர் : பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில் அர்ச்சகர் திரு.ராஜா குருக்கள் அவர்கள்.

Soleeswarar Gurukkal 1கடந்த பத்தாண்டுகளுக்கும் மேல் சோளீஸ்வரருக்கு தொண்டு செய்து வரும் திரு.ராஜா குருக்கள் சோளீஸ்வரரின் சக்தி பற்றி சிலாகித்து பேசுகிறார். இவரது குடும்பமே வைதேகத்தில் தோய்ந்த ஒரு குடும்பம் தான். சோளீஸ்வரர் தனக்கு எந்தக் குறையும் வைக்காமல் நன்றாக பார்த்துக்கொள்வதாகவும் இவருக்கு பூஜை செய்ய ஆரம்பித்த முதல் வாழ்க்கைத் தரம் உயர்ந்து தற்போது எந்தக் குறையுமில்லாமல் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார். இவருக்கு திருமணமாகி சோளீஸ்வரர் அருளால் குழந்தை உண்டு.

ஜூன் மாத மத்தியில் சோளீஸ்வரரை தரிசிக்க சென்றபோது இவரை சந்தித்து பேசி நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்காக நமது வாசகர்கள் நலன் வேண்டி அளிக்கும் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். நிச்சயம் செய்வதாக சொல்லியிருந்தார். நாளை அல்லது நாளை மறுநாள் பேரம்பாக்கம் சென்று இவரை நேரில் சந்தித்து வாசகர்களின் பெயர் ராசி விபரங்களை அளிக்கவிருக்கிறோம். இரண்டு ஞாயிறுகள் தொடர்ந்து சோளீஸ்வரரிடம் பிரார்த்தனை செய்யப்படும்.

Soleeswarar

இதற்கிடையே வாசகர்கள் நேரில் சென்று ஒரு முறை சோளீஸ்வரரை தரிசித்து தங்கள் நன்றியை தெரிவிக்கவேண்டும். திங்கட்கிழமை விஷேஷம். ஆனால், அன்றைக்கு ராஜா குருக்கள் பரபரப்பாக இருப்பார். சாதாரண நாளன்று சென்று தரிசித்துவிட்டு விபரங்களை கேட்டுக்கொண்டு, அதற்கு பிறகு ஒரு முறை போய்வாருங்கள். நீங்கள் நேரில் போகமுடியாவிட்டாலும் வருந்தவேண்டாம். ஏனெனில் பிரார்த்தனை நடைபெறுவதே நேரில் செல்ல இயலாதவர்களுக்காகத் தானே? ஆனால், பிரார்த்தனை நிறைவேறும் பட்சத்தில் நேரில் சென்று சோளீஸ்வரரை தரிசித்து அப்படியே ராஜா குருக்கள் அவர்களையும் சந்தித்துவிட்டு வாருங்கள்.

சிவாய நம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருகாலும் இல்லை!

இது தொடர்பான ஆலய தரிசன பதிவுக்கு : சித்தர்கள் பாடிய, நரம்பு கோளாறுகளை நீக்கும், பேரம்பாக்கம் சோளீஸ்வரர்!

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருப்பவர்கள் பற்றிய சிறு அறிமுகம்:

இந்த வாரம் பிரார்த்தனை சமர்பித்திருக்கும் கோரிக்கையாளர்கள் பலர் புதியவர்கள். பிரார்த்தனைகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் உங்களுக்கு புரியும் என்று நம்புகிறோம். நரம்பு தொடர்பான பிரார்த்தனை என்பதால் தங்கள் அன்புக்குரியவர்களின் நலன் வேண்டி பலர் பிரார்த்தனை அனுப்பியிருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. சிலர் படும் துன்பத்தை பார்த்தால் “உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என்கிற கவரியரசரின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வரும். இறைவன் இவர்களுக்கு ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரட்டும். நிச்சயம் தருவான்.

இங்கே பிரார்த்தனை சமர்பித்துள்ள பிரார்த்தனையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் பிரார்த்தனை இடம் பெற்ற இந்த பிரார்த்தனையோடு நிறுத்திவிடாமல் ஒவ்வொரு வாரமும் நீங்கள் இந்த கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்று ஒரு பத்து நிமிடம் (பிரதி ஞாயிறு 5.30 PM – 6.௦௦ PM வரை உங்களுக்கு எந்த பத்து நிமிடம் சௌகரியமோ அந்தப் பத்து நிமிடம்) மற்றவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்து வரவேண்டும். உங்கள கோரிக்கைகள் தானே நிறைவேறும்.

இந்த பிரார்த்தனை மன்றத்தில் இறுதியில் எம் தாயார் (திருமதி.சாந்தா வேணுகோபாலன்) அவர்களுக்காகவும் கோரிக்கை சமர்பித்திருக்கிறோம். சென்ற மாதம் வெளியே சென்ற இடத்தில கீழே வழுக்கி விழுந்துவிட்டார்கள். உங்கள் அனைவரின் நல்லாசி மற்றும் பிரார்த்தனைகள் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன கதையாக பெரிதாக எதுவுமில்லை. பின்பக்கத்தில் தண்டுவடம் முடியும் இடத்தில லேசான வீக்கம். கொஞ்சம் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே அம்மா தற்போது ஓய்வில் இருக்கிறார்கள். கூட்டுப் பிரார்த்தனைக்கு என்று சக்தி உள்ளது, அதை நாம் அறிவோம் என்பதால் இதில் அவர் பெயரை சேர்த்திருக்கிறோம். அவருக்காகவும் பிரார்த்திக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

பொதுப் பிரார்த்தனை… உள்ளம் உருக்கும் ஒன்று. அந்த சிறுமிக்காக நாம் அவசியம் பிரார்த்திக்கவேண்டும்.

வீட்டை விட்டு வெளியே கிளம்பினால், பத்திரமாக வீடு திரும்புவோமா என்கிற நிச்சயம் இந்த உலகில் இல்லை. எனவே ஒவ்வொரு நொடியும் இறைவன் நம்மை உடனிருந்து காக்கவேண்டும்.

==========================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

1) My son should lead normal life!

My son Sri ****** as per psychiatrist, he is suffering from DYSLEXIA, Due to that he his finding difficulty in studying and reading. He fears to attend the exam. He lacks normal behaviour. He does not respect Parents, Elders, Neighbour and relatives. As he is not interested in studies, he develops bad habits with Friends and demand money daily. He roams with friends day and night. He breaks all costly items and push with leg which is near to him.

If we do not give as per his demand and get nervous. Totally he is out of control.

We request you all to pray God that he should get rid from this nervous problem and we the parents should get peace of mind for us.

Thank you!
Maha Periyava Charanam!!

– A pity mother who don’t want to disclose the name

2) My son should lead normal life & daughter to get married soon!

Dear Sir,

Namaskarams. I am a Mahaperiyava devotee. I have 2 children. My older son is mentally challenged from birth. He can however speak a little and he regularly says Om Namah Shivaya, Mahaa Periyavaa Kaapathu before he goes to bed.

He is complaining of severe pain and hits his head. However, when he lies down to sleep he appears to be alright. Doctors are afraid to do any test on him because they have to give general anesthesia.

Please pray that he should become alright.

My daughter is 29 yrs old and we have not been able to find a suitable match for her. Please pray that she should get married soon.

My son’s name is Hariram and don’t want to disclose daughter’s name.

Please help.
Worried mother

3) Daughter to get rid of neurological problem

Dear Sir,

My daughter Vidyalaksmi is having Neurological Problem in the Brain , that is M.S. [Multiple Selerosis]. I request you all to pray for her complete cure of this auto immune disorder and get well soon. She is married and having two kids. Her details are as follows.

Please pray for her speedy recovery and with Asservadams of MAHAPERIYAVA, live happily with her family.

Thanking you in advance,
Geetha Venkataraman

4) Relatives to get cured serious nerve complications!

Dear sir

Just as i was worrying about the condition of my two male relatives from Hyderabad suffering from serious nerve complications i happened to read about lord soleeswarar at perumbakkam and your proposal to pray for people affected with nerve complications under the leadership of sri raja gurukkal.

As their condition is quite serious i request you to please arrange for the vibhuti and abhishega prasadam for their use and guide us on how to obtain us. I am giving the details of the persons affected by nerve disorders below.

(A) Shri. Kopalle Parthasarathy

Hes lost his hearing and balance earlier and used to walk with difficulty. Yesterday he has suddenly lost sensation from waist downwards and is hospitalized. Doctors say it is a complicated case. i request you to please pray for him.

(B) Shri. R S V Sunder

He’s suffering from severe nerve compression which causes severe pain in his neck and damage to eye nerves. Hes a diabetic hypertensive and hypothyroidic so doctors are against high risk surgery. He suffers from insomnia due to the pain. I request you to please pray for him.

V Usha Sunder

5) My son to be releived from Athitoid Nervous Problem

My son R.P.Sriram age 14 studying in 10th std. He is having Athitoid nervous problem since birth. Due to this he could not speek properly and write properly. This is due to nervous weekness.

Kindly do prarthana. We will also make a darshan soon.

Thanks for the information.
Regards
Padmanabhan.R

6) Varicose Veins should get cured

Hi RMS ji,

My name is T.Sriraman and I am a fan and follower of yours in FB. I having varicose (hereditary) veins problem and recently due to disk prolabs the nerve to my right leg is getting pressed and am undergoing treatment for the same.

I request you to include me also in your prayers as I believe koottu prarthanai will have its own great effect.

Thanks a ton in advance,
T.Sriraman

7) அம்மாவுக்கு பார்கின்சன் நோய் குணமாகவேண்டும்!

மதிபிற்குறிய திருவாளர் சுந்தர் அவர்களுக்கு,

என்னுடைய தாயார் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் (83) பார்கின்சன் நோயினால் மிகவும் வலியும் சொல்ல முடியாத அளவு துன்பத்தில் கடந்த பல ஆண்டுகளாக கழ்டப்பட்டு வருகிறார். அவருக்காக பிரார்த்தனையை சமர்பிக்க கோரி இந்த மின் அஞ்சலை அனுபுகிறேன். இது ஒரு நரம்பு சம்பந்தமான நோய் என்பதால் அவரின் உடல் உபாதை குறைந்து அவர் வலியின்றி அவரது மிகுந்த காலம் சற்றாவது நிம்மதியாக கழிய வேண்டி அவரது சார்பாக பிரார்த்தனை செய்யும் படிபணிவுடன் வேண்டி கொள்கிறேன்.

– ஜெயந்தி ஸ்ரீதரன்,
சென்னை

8) கணவருக்கு Bipolar Disorder தீரவேண்டும்! கடன் நீங்கி அமைதியும் மகிழ்ச்சியும் வேண்டும்!

என் கணவர் பட்டாணிராமன் 18 வருடங்களாக Bipolar Disorder வியாதியால் சிரமப்படுகிறார் விடாமல் மாத்திரை சாப்பிட்டும் இன்னும் குணமடையவில்லை.

உங்கள் பிரார்த்தனை கிளப் மூலம் என் கணவருக்காக பிரார்த்தியுங்கள். தவிர, குடும்பத்தில் ஏற்பட்டுள்ள வேறொரு பெரிய பிரச்சனை காரணமாகவும் வீட்டில் அமைதியில்லை. சண்டையும் பூசலும் நிலவுகிறது. விரைவில் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து பூசல்கள் ஒழிந்து நாங்கள் சந்தோஷமாக நிம்மதியுடன் வாழ பிரார்த்தியுங்கள் ப்ளீஸ்.

இப்படிக்கு,
மீரா

மேற்கூறியவர்களைத் தவிர கீழ்காணும் அன்பர்களுக்கும் பிரார்த்தனை செய்யப்படும்.

1) திருமதி.பி.தேவி, சென்னை

2) திருமதி.மீனாக்ஷி நமசிவாயம், மதுரை

3) திரு.கார்த்திக், பம்மல், சென்னை

4) செல்வி.ஹரிப்ரியா, எம்.எம்.டி.ஏ. காலனி

5) திரு.ராஜன், சாலிகிராமம்.

6) திருமதி.சாந்தா வேணுகோபாலன், ஐயப்பன்தாங்கல்

7) செல்வன். ராமு  அண்ணாமலை, போரூர்

8) திரு.கண்ணதாசன், அசோக் நகர், சென்னை

9) திருமதி.புனிதா, அசோக் நகர், சென்னை

10) திரு.ஹாலஸ்ய சுந்தரம், திருநெல்வேலி

* தாங்கள் கோரிக்கை அனுப்பி அது இன்னும் நம் மன்றத்தில் வெளியாகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாசக அன்பர்கள் மீண்டும் அந்த கோரிக்கையை – அதே மின்னஞ்சலை – அனுப்பவும். அல்லது நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி.

** அலைபேசி எண் இன்றி வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.

==========================================================

பொதுப் பிரார்த்தனை!

பேருந்து மோதி கால்கள் சிதைந்த பிரியா நலம் பெறவேண்டும்!

திருப்பூர் வேலம்பாளையம் திலகர் நகரைச் சேர்ந்தவர் மணிமாறன். பின்னலாடை நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் பிரியா (16). இவர், திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கால்கள் சிதைந்த கொடூரம்...
கால்கள் சிதைந்த கொடூரம்…

இவர் கடந்த வெள்ளிக்கிழமை காலை வீட்டிலிருந்து மாநகரப் பேருந்து மூலமாகப் பள்ளிக்குப் புறப்பட்டார். புஷ்பா திரையரங்கம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய மாணவி பிரியா பள்ளிக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவிநாசியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்த தனியார் மாநகரப் பேருந்து பிரியாவின் மீது மோதியது. இதில், அந்த மாணவிக்கு இருகால்களிலும் முறிவு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூரில் பேருந்து மோதி இருகால்களும் சிதைந்த பள்ளி மாணவி பிரியாவை விபத்து நடந்த இடத்தில் பார்த்தவர்கள் யாராக இருந்தாலும் கதறித் துடித்திருப்பர். இரு கால்களிலும் பேருந்தின் பின்சக்கரம் ஏறி இறங்கியதி மாணவியின் இடது கால்களில் தசைகள் முற்றிலும் பிய்ந்து எலும்புகள் வெளியே தெரிந்தன. கல்நெஞ்சையும் கரைய வைக்கும் இந்த விபத்தை பற்றி நாம் கேள்விப்பட்ட தருணமே பிரியாவுக்காக் பிரார்த்திக்கவேண்டும் என்று முடிவு செய்தோம்.

இதற்கிடையே திருப்பூரில் பேருந்து மோதி விபத்துக்குள்ளான மாணவி பிரியாவை நண்பர் லெனின் புகல் என்பவர் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார். பிரியா நம்பிக்கையுடன் இருப்பதாக கூறுகிறார். இந்த வார ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்பில் பிரியாவுக்காக பிரார்த்தனை செய்யப்படும் என்று கூறியிருந்தோம்.

லெனின் அவர்கள் அளித்திருக்கும் செய்தி விபரம் :

//கங்கா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் திருப்பூர் பிரியாவை இன்று சந்தித்தேன். இரண்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஐ.சி.யூ பிரிவில் இருந்து நியூராலஜி துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிரித்த முகத்துடன் நல்ல மன தைரியத்துடன் அனைவரிடமும் அன்பாகப் பேசி வருகிறார். இதுவே அவரை விரைவில் குணமடைய வைக்கும் என நினைக்கிறேன். அவர் அம்மாவுடன் பேசும் போது தமிழகத்தில் நிறையப் பேர் நிதி உதவி செய்தும், படிப்பு செலவை ஏற்பதாகவும் கூறியுள்ளனர் என்று கூறினார். சமூக ஊடகத்தின் வலிமை புரிந்தது அப்போது. இன்னும் சமூகத்தில் நிறைய மனித நேயமுள்ள நல்ல மனிதர்கள் வாழ்ந்து கொண்டு தான் உள்ளனர். # வாழ்க மனித நேய மனிதர்கள் ! விரைவில் குணமடையட்டும் பிரியா ! //

லெனின் அவர்களுக்கு நன்றி!

பிரியா அவர்கள் விரைவில் பரிபூரண குணமடைந்து முன்னைப் போல் அவர் நடக்கவேண்டும், பள்ளி செல்லவேண்டும். அவள் பெற்றோர் மனமகிழ்வேண்டும்.

இதுவே இந்த வார பொது பிரார்த்தனை!

==========================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpg

நரம்பு மற்றும் எலும்பு மற்றும் இதர உடற்பிணி தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இங்கு பிரார்த்தனை சமர்பித்திருப்பவர்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டுவோம். திருப்பூரில் பேருந்து மோதி இரு கால்களும் இழந்து தவிக்கும் மாணவி பிரியா விரைவில் நலம் பெறவேண்டும்.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திரு.ராஜா குருக்கள் அவர்களின் தொண்டு சிறக்கவும் அவரும் அவர் குடும்பத்தாரும் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஆகஸ்ட் 28 ஞாயிறு & செப்டம்பர் 4 2016  | நேரம் : மாலை 5.30 pm – 6.00 pm

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

==========================================================

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Help us to sustain. Donate us liberally.

Our A/c Details: Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்! For more information click here!

Rightmantra Sundar, Editor, Rightmantra.com | Mobile : 9840169215  |  E-mail : editor@rightmantra.com

==========================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

==========================================================

Rightmantra Prayer Club

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

==========================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W:www.rightmantra.com

==========================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

==========================================================

சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : வயலூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பிரதான அர்ச்சகர்களுள் ஒருவரான திரு.கார்த்திகேயன் குருக்கள் அவர்கள்.  

Vayaloorசென்ற பிரார்த்தனை எப்படி நடந்தது?

சென்ற பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற, திரு.கார்த்திகேயன் குருக்கள். மிகச் சிறப்பான முறையில் பிரார்த்தனையாளர்களின் பெயர்களில் வயலூர் அக்நீஸ்வரருக்கும் ஆதினாயகிக்கும் அர்ச்சனை செய்து அம்பாள் திரிசதி ஓதி பிரார்த்தனை செய்தார். அதற்கு அடுத்த வாரம் வயலூர் முருகனுக்கும் பொய்யா கணபதிக்கும் அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தார். இது பற்றி முகநூளில் கூட பதிவளித்திருந்தார் திரு.கார்த்திகேயன் குருக்கள். அவருடைய சிரத்தைக்கு மிக்க நன்றி. சென்ற வாரம் பிரார்த்தனை பதிவு அளிக்கப்படவில்லை. அதே பிரார்த்தனையை ரிப்பீட் செய்யுமாறு  கேட்டுக்கொண்டோம். மூன்றாவது வாரமும் சிரத்தை எடுத்து அனைவருக்கும் பிரார்த்தனை செய்து உதவினார்.

அவருடைய முகநூல் செய்தி :

ஸ்ரீ ஆதிநாயகிபதியின் அருளால் கூட்டு ப்ரார்த்தணை நடந்தது. ஆதி நாயகன் ஆதிரை நாயகனின் அருள் பெறுபவர்களாகிய அண்ணா ப்ருஹ்மஸ்ரீ Rightmantra Sundar
அவர்களும் பாரத தேச வாசிகளும் எல்லா வளமும் பெற்று வாழ பரார்த்த பூஜையில் ப்ரதோஷ புண்ய வேளையில் ப்ரார்த்தித்து கொண்டோம். மேலும் இவரின் அத்யத்புதமாந சேவை சிறக்கவும் வேண்டினோம்.நல்லார் ஒருவரிருக்க அவரால் எல்லோரும் மழை பெறுவர். இன்று பலர் ஸ்ரீ அக்நீஸ்வர ஸ்வாமியின் அருள் மழை பெற்றோம். சந்தோஷகரம்

ஏது பிழை செய்தாலும் தீது
புரியாதெய்வத்தின் அருளால் வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
ஓம் முருகா வயலூர் முருகா

==========================================================

[END]

One thought on “கல் கடவுளாவது எப்போது? வாரியாரின் அற்புதமான விளக்கம் – Rightmantra Prayer Club

  1. Good and Useful Information. Nice to Read this Article. I pray to our Guru and Acharyans for those who get Relived from there submited Queries in our Prathana Club.

    Thanks & Regards,
    S.Narayanan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *