திருவாரூரில் வாழ்ந்து வந்த வைத்தியநாத நாவலரிடம் இலக்கண இலக்கியங்களை கற்றுப் புலவரானார். திருமணமான பிறகு வல்லை மாநகர் காளத்தியிடம் சென்று பாடிப் பொருளையும் ஒரு கறவை மாட்டையும் பெற்று வந்தார்.
மாவண்டூரில் உள்ள கறுப்ப முதலியாரின் வேண்டுகோளுக்கிணங்க தொண்டை மண்டல சதகம் பாடி அரங்கேற்றி நவரத்தினங்கள் பதித்த ஹாரத்தையும் தங்கக் காசுகளையும் பெற்று பல்லக்கில் ஏற்றி தம்பியரோடு பல்லக்கு சுமந்து பவனி வரச் செய்தார்.
சில நாள் கழித்து இராமநாதபுரத்திலுள்ள ரகுநாத சேதுபதியுடன் பல நாள் தங்கியிருந்தார். அடுத்து காயல்பட்டினத்திலுள்ள வள்ளல் சீதக்காதியை பாடி பரிசு பெற்றார்.
தஞ்சையை அடைந்து அங்குள்ளவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க ‘தண்டலையார் சதகத்தை’ பாடினார்.
சிதம்பரம் சென்றதும், சிவகாமி அம்பாளை தரிசித்து
வேல் கொடுத்தாய் திருச்செந்தூர்க் கம்மியின் மீது வைக்கக்
கால் கொடுத்தாய் நின் மணவாளனுக்குக் கவுணியர்க்குப்
பால் கொடுத்தாய் மதவேனுக்கு மூவர் பயப்படச் செங்
கோல் கொடுத்தாய் அன்னையே எனக்கேதும் கொடுத்திலையே’
என்று பாடினார்.
இதன் பொருள், “முருகனுக்கு வேல் கொடுத்தாய்! பரமசிவன் திருமணத்தின்போது அம்மியின் மீது ஏற்றக் கால் கொடுத்தாய். திருஞான சம்பந்தருக்கு பால் கொடுத்தாய். தாயே எனக்கெதுவும் கொடுக்கவில்லையே” என்பதாகும். “புலவருக்கு அம்மையின் பொற்கொடை” என்று அசரீரி ஒலிக்க, ஐந்து பொற்காசுகள் கீழே விழுந்தன.
தில்லை வாழ் அந்தணர் ஒருவர் பொற்தட்டில் அதை எடுத்து வைத்து அம்பிகையின் பிரசாதத்துடன் புலவரிடம் தந்தார். அன்று முதல் புலவருக்கு ‘படிக்காசு புலவர்’ என்ற பெயர் வழங்கலாயிற்று.
“செக்களவு பொன் ஆயினும் செதுக்கி உண்டால் எத்தனை நாள் வரும் ?”
மீண்டும் வறுமை வந்தது. மனைவி, “நண்பர் சீதக்காதியை கண்டு வாருங்கள்” என்று கூறினாள்.
சீதக்காதி இறந்துவிட்டார் என்று கேட்டப்போது துடித்துப் போன புலவர் மயானத்துக்கு ஓடினார்.
“புலமையை போற்றும் புகழுடம்பு மடிந்ததே! தருமம் கலக்காமல் வரும் புகழும் சுகமும் பொய்யாகி அழியும் என்று கூறிய நா ஓய்ந்ததோ? கொடுத்து மகிழ்ந்த கொடை வள்ளல் நான் வந்தது அறியாமல் கிடக்கின்ற கோலமும் காணப்பெற்ற பாவியானேனே” எனக் பாடல் வரிகளை இயற்றி கதறினார்.
சீதக்காதியை அடக்கம் செய்த இடம் வெடித்து அவர் கை நீண்டது. அந்த கைவிரலில் இருந்த மோதிரம் நழுவி புலவர் முன் விழுந்தது. புலவர் அதை எடுத்துக்கொண்டு போய் சீதக்காதியின் உறவினர்களிடம் கொடுத்து நடந்ததை கூறினார்.
அவர்கள், “சீதக்காதி இதை விரலின் இருந்து கழற்றக் கூடாது என்று சொல்லியிருந்தார். அது உங்களுக்கு கொடுப்பதற்காகத் தான் போலும்” என்றனர்.
புலவரின் துக்கம் அதிகமாயிற்று. “பாடலைக் கேட்டுவிட்டு சுமா அனுப்பக்கூடாது என்று நினைத்தீர்களோ?” என்று புலம்பினார்.
“செத்தும் கொடுத்தான் சீதக்காதி” என ஊரார் புகழ்ந்தனர்.
தருமபுர சைவ மடத்தின் தொண்டரானார் புலவர். சைவ சித்தாந்த நூல்களை படித்தார். துறவு ஏற்ற பிறகு அனைவரும் அவரை ‘படிக்காசு தம்பிரான்’ என்று அழைத்தனர்.
‘புள்ளிருக்கு வேளூர் கலம்பகம்’ என்னும் நூலை வைத்தீஸ்வரன் கோவிலில் அரங்கேற்றினார். அக்கோயிலின் கட்டளை தம்பிரான அவர் நியமிக்கப்பட்டார்.
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. (குறள் 39)
தரும காரியங்களை செய்து அதனால் சந்தோஷப்படுகிறாரே அவருடைய மகிழ்ச்சியே உண்மையானது. தருமம் கலக்காமல் வரும் புகழும் இன்பமும் பொய்யாகி விரைவில் அழியும்.
(நன்றி : திருக்குறள் விளக்க நீதிக் கதைகள்)
=================================================================
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர்: மயிலை திருவள்ளுவர் கோவில் அர்ச்சகர் திரு.ஆறுமுகம் குருக்கள் அவர்கள்.
ஆறுமுகம் குருக்கள் அவர்கள் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமானவர் தான். திருவள்ளுவர் கோவில் குறித்த பதிவுகளில் இவரை பற்றி படித்திருப்பீர்கள். இவருடைய மனைவி, தேவாரம் பாடுவதில் வல்லவரான இவருடைய துணைவியார் திருமதி.கற்பகம் அவர்கள் இவருடைய பணிக்கு துணையா இருப்பதோடு மட்டுமல்லாமல், இன்றும் பலருக்கு தேவாரம் சொல்லிக்கொடுத்து வருகிறார்.
குருக்கள் அவர்கள் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீட்டிற்கு திரும்பிய சமயம், நம் தளம் சார்பாக அவருக்கு உதவி செய்ய விரும்பி நாம் எடுத்துக்கொண்ட முயற்சி பற்றியும், அது தொடர்பாக தொண்டர்ந்து நடைபெற்ற அதிசயம் பற்றியும் நாம் ஒரு பதிவு அளித்தது நினைவிருக்கலாம்.
நமது ஆண்டு விழாவில் கற்பகம் அவர்களின் குழுவினர் தான் இறைவணக்க பாடல்களை பாடினார்கள். விழாவின் இடையே திரு.ஆறுமுகம் & கற்பகம் தம்பதியினர் மேடைக்கு அழைக்கப்பட்டு நம் தளம் சார்பாக கௌரவிக்கப்பட்டனர்.
திருவள்ளுவர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், திருவள்ளுவர் திருக்கல்யாணம், ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி திருக்கல்யாணம், முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் ஆகியவை வெகு சிறப்பாக நடைபெறும். பல நேரங்களில், விழாவுக்கு தேவையான பொருளுதவி கிடைக்காமல் போய், இவர் கைக்காசை இட்டு அந்த விழாக்களை எந்த குறையுமின்றி சிறப்பாக நடத்திவிடுவார் திரு.ஆறுமுகம்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வள்ளுவர் கோவிலில் குருக்களாக திருவள்ளுவருக்கு தொண்டு செய்துவருகிறார் திரு.ஆறுமுகம்.
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்தவர், வள்ளுவரின் சன்னதியிலேயே தனது துணைவியாருடன் அமர்ந்து திருக்குறள்களை சொல்லியும் தேவாரம் பாடியும் அந்நேரம் பிரார்த்தனை செய்வதாக சொல்லியிருக்கிறார்.
அவருக்கு நம் நன்றி!
=================================================================
பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!
திருக்குறள் தந்த திருவள்ளுவர் தம்பதி சமேதராக எழுந்தருளியிருக்கும் பழமை வாய்ந்த கோவில்
=================================================================
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
மனைவிக்கு சுகப் பிரசவம் ஆகவேண்டும் !
நண்பர்களுக்கு வணக்கம்.
நண்பர் ஒருவர் மூலம் இந்த தளம் பற்றியும் பிரார்த்தனை கிளப் பற்றியும் அறிந்தேன்.
என் பெயர் ஜெகதீஷ். (28). எனக்கு திருமணமாகி ஆறு மாதங்கள ஆகிறது. என் மனைவி மஞ்சரி (26) சற்று உடல் பலகீனமானவள். கடவுள் அருளால் தற்போது அவள் கருத்தரித்திருக்கிறாள். நல்ல முறையாக கரு வளர்ந்து, சுகப் பிரசவமாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்க, அனைவரையும் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
– ஜெகதீஷ்,
ஹோசூர்
=================================================================
திருமண வாழ்க்கையில் சோகம் தீர்ந்து மகிழ்ச்சி பூத்து குலுங்க வேண்டும்!
இது எனக்கு தெரிந்த ஒரு பெண்ணை பற்றி.
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் திருமணம் அப்பெண்ணுக்கு தோல்வியில் முடிந்துவிட்டது. திருமணமான நாள் அன்றே அப்பெண் வீட்டுக்கு திரும்பிவிட்டார். மணமகனுக்கு ஏற்கனவே திருமணமான விஷயத்தை மறைத்து இப்பெண்ணை திருமணம் செய்து வைத்து ஏமாற்றிவிட்டனர். மணமகனுக்கும் பல்வேறு தீய பழக்கங்கள் இருந்தது தெரியவந்தது. எந்த வித சடங்கும் நடக்காத நிலையில் அப்பெண் பிறந்த வீடு திரும்பிவிட்டாள். பெண்ணின் பெற்றோர் அது கண்டு துடித்தனர். கண்ணீர் வடித்தனர்.
முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததால், பார்த்து பார்த்து இரண்டாம் திருமணம் செய்துவைத்தனர் பெற்றோர். புலியிடம் இருந்து தப்பித்து சிங்கத்திடம் மாட்டிக்கொண்ட கதையாக இந்த இடத்திலும் அந்தப் பெண் சுகப்படவில்லை. அவள் கணவன் முந்தைய திருமண வாழ்க்கை குறித்த சந்தேகங்களை அடிக்கடி எழுப்பி தினசரி கொடுமைப்படுத்துவதாகவும் பல்வேறு இன்னல்களை தருவதாகவும் கேள்விப்பட்டோம்.
(இரண்டாம் முறை இந்த பெண்ணை நமக்கு பேச பெற்றோர் முற்பட்டபோது, வயது வித்தியாசம் காரணமாக அது கைகூடாமல் நழுவிவிட்டது.)
சமீபத்தில் தான் இந்த தகவல் நமக்கு கிடைத்தது. கேள்விப்பட்டதில் இருந்து மனதே சரியில்லை. அந்த பெண்ணின் பெயர் கூட நமக்கு தெரியாது. அச்சகோதரி, தற்போது வாழும் வீட்டில் எந்தக் குறையும் இல்லாமல் சௌக்கியமாக சந்தோஷமாக வாழவேண்டும், அவள் கணவன் மனம் திருந்தி இல்லறத்தை இனிமையாக்க வேண்டும் என்பதே நம் பிரார்த்தனை.
=================================================================
இந்த வார பொது பிரார்த்தனை
விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாறுவது தடுக்கப்படவேண்டும்!
உலகில் எந்த தொழிலை எடுத்தாலும் அதில் ஒரு குற்றம் உண்டு. ஆனால் குற்றமற்ற ஒரு தொழில் இருக்கிறதென்றால் அது விவசாயம் தான்.
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை. (குறள் 1036)
எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும் என்பது இதற்கு பொருள்.
ஆனால் அந்த விவசாயம் இன்று எப்படி இருக்கிறது தெரியுமா?
மின்சாரம் இல்லை. தண்ணீர் இல்லை. வயலில் வேலை செய்ய ஆட்கள் இல்லை. (நன்றி : நூறு நாள் திட்டம்). வேலை செய்ய முன்வரும் கொஞ்சநஞ்ச போரையும் டாஸ்மாக் இழுத்துவிடுகிறது. அப்படியே வேலை செய்தாலும் விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைப்பதில்லை.
இப்படி அடுத்தடுத்து விவசாயம் பிரச்சனைகளை சந்தித்து வருவதால், விவசாயிகள் பணக் கஷ்டத்தில் மூழ்குகின்றனர். இவர்களின் நிலையை பயன்படுத்தி ரியல் எஸ்டேட் பண முதலைகள் இவர்களை ஆசை வார்த்தை காட்டி, நிலத்தை வாங்கி, பிளாட்டுகள் போட்டு விற்று விடுகின்றனர். (தள்ள வேண்டியவர்களுக்கு தள்ளவேண்டியதை தள்ளினால், கவர்னர் மாளிகையை கூட உங்களால் விற்க முடியும் எனும்போது எங்கோ புறநகரில் இருக்கும் விவசாய நிலத்தை விற்க முடியாதா என்ன?)
விவசாய நிலங்கள் இப்படி பிளாட்டுக்களாக மாறுவது தடுக்கப்படவில்லை என்றால், ஒரு கி.லோ. அரிசியை ரூ.50/- கொடுத்து வாங்கும் நாம் அதற்கு ரூ.500/- கொடுக்கும் நிலை விரைவில் வரும்.
அண்மையில் நம் முகநூலில் நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்த காணொளியை கண்டோம். வீடியோவை நமது தளத்தின் முகநூலில் பாருங்கள். (https://www.facebook.com/RightMantra) நாமெல்லாம் எவ்வளவு பெரிய ஆபத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம் என்பது புரியும்.
=================================================================
ஹோசூரை சேர்ந்த ஜகதீஷ் அவர்களின் மனைவி மஞ்சரி அவர்களுக்கு சுகப்பிரசவம் நடக்கவும், நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்கவும், முதல் திருமணம் தோல்வியில் முடிந்து இரண்டாவது திருமண வாழ்க்கையும் ஊசலாட்டத்தில் உள்ள அந்த அபலைப் பெண்ணுக்கு துன்பங்கள் யாவும் நீங்கி இல்லறம் சிறக்கவும், விவசாய நிலங்கள் பிளாட்டுக்களாக மாறும் கொடுமை தடுத்து நிறுத்தப்படவும், விவசாயிகள் எந்த குறையும் இன்றி நிம்மதியாக தங்கள் தொழிலை பார்க்கவும் திருவருளை வேண்டி பிரார்த்திப்போம்.
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
பிரார்த்தனை நாள் : ஏப்ரல் 13, 2014 ஞாயிறு நேரம் : மாலை 5.30 – 5.45
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
============================================================
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
============================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E-mail : simplesundar@gmail.com Mobile : 9840169215
=======================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================
சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : திருநீர்மலை கோவில் அர்ச்சகர் திரு.ராஜூ பட்டர்
அருமை சகோதரி மஞ்சரி அவர்களுக்கு நல்ல முறையாக கரு வளர்ந்து, சுகப் பிரசவமாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்க எல்லாம் வல்ல பரம்பொருளை பிராத்தனை செய்கிறோம்.
பெயர் தெரியாத அந்த சகோதரி அவர்களுடைய இல்வாழ்க்கையில் நல்ல மாற்றம் வரவும், இனிய எதிர்காலம் அமையவும் வேண்டி கொள்கிறோம்.
படிக்காசு தம்பிரானின் கதை அருமை. இது வரை கேள்விப்பட்டதில்லை. தில்லையில் அன்னை அவருக்கு பொற்காசுகள் அளித்தது நெகிழ வைக்கும் ஒன்று. அன்னையிடம் கேட்டால் அவள் இல்லை என்று சொல்வாளா என்ன?
இறந்தபின்னும் தன்னை நாடி வந்தவர்க்கு இல்லை என்று சொல்லாமல் கல்லறையை பிளந்து தர்மம் செய்த சீதக்காதியின் கொடைத் தன்மை சிலிர்க்க வைக்கிறது. திருவள்ளுவர் கோவில் குருக்கள் ஆறுமுகம் ஐய்யா தலைமை தாங்கும் பதிவுக்கு திருக்குறள் கதை மிகவும் பொருத்தம். அவர்களுக்கு என் மனமார்ந்த வணக்கங்கள்.
ஹோசூரை சேர்ந்த ஜகதீஷ் அவர்களின் மனைவி மஞ்சரி அவர்களுக்கு சுகப்பிரசவம் நடக்கவும், நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்கவும், முதல் திருமணம் தோல்வியில் முடிந்து இரண்டாவது திருமண வாழ்க்கையும் ஊசலாட்டத்தில் உள்ள அந்த அபலைப் பெண்ணுக்கு துன்பங்கள் யாவும் நீங்கி இல்லறம் சிறக்கவும், விவசாய நிலங்கள் பிளாட்டுக்களாக மாறும் கொடுமை தடுத்து நிறுத்தப்படவும், விவசாயிகள் எந்த குறையும் இன்றி நிம்மதியாக தங்கள் தொழிலை பார்க்கவும் திருவருளை வேண்டி பிரார்த்திப்போம்.
நன்றி
உமா
செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்பதன் உண்மையான காரணம் இப்போதுதான் எனக்கு தெரியும். இப்படிப்பட்ட நல்ல ஆத்மாக்கள் வாழ்ந்த நாட்டில் நாமும் வாழ்கிறோம் என்பதே பெருமை.
மனநிறைவு தந்த ஒரு பதிவு. அந்த நிறைவோடு நாம் பிரார்த்தனை செய்வோம். எல்லோருக்கும் நல்லதே நடக்கும்.
விரைவில் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன் சுந்தர்.
படிக்காசு புலவர் படிக்காசு பெற்ற கதை அருமை.
செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்று கேள்வி பட்டு இருந்தாலும் அதன் அர்த்தமும் பலனும் இப்போதுதான் தெரிந்தது.
படிக்காசு புலவர் கதை நமக்கு புதிது. முருகனுக்கு வேல் கொடுத்தாய் எனக்கு என்ன கொடுத்தாய் என்று அவர் பாடி பொற்காசுகள் பெற்றதும், அவரது திறமையும் நம்மை வியக்க வைக்கிறது.
இந்த வார பிரார்த்தனை தலைவர் நாம் எப்போதோ எதிர்பார்க்க பட்ட திரு.ஆறுமுகம் குருக்கள் மற்றும் அவரது துணைவி திருமதி கற்பகம் அம்மாள்.
ஒவ்வொரு வாரமும் எப்படித்தான் நம் பிரார்த்தனை தலைவர்கள் பொருந்துகிறர்களோ தெரியவில்லை.
இந்த வார கோரிக்கை இரண்டும் பெண்கள் சம்பந்தபட்டது. அதனால் அந்த அம்மைஅப்பன் இவர்களை தேர்ந்தெடுத்தான் போலும்.
ஏகம்பறேஸ்வரர் திருகல்யாண் உற்சவம் போட்டோ நன்றாக உள்ளது.
ஹோசூரை சேர்ந்த ஜகதீஷ் அவர்களின் மனைவி மஞ்சரி அவர்களுக்கு சுகப்பிரசவம் நடக்கவும், நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்கவும், முதல் திருமணம் தோல்வியில் முடிந்து இரண்டாவது திருமண வாழ்க்கையும் ஊசலாட்டத்தில் உள்ள அந்த அபலைப் பெண்ணுக்கு துன்பங்கள் யாவும் நீங்கி இல்லறம் சிறக்கவும், விவசாய நிலங்கள் பிளாட்டுக்களாக மாறும் கொடுமை தடுத்து நிறுத்தப்படவும், விவசாயிகள் எந்த குறையும் இன்றி நிம்மதியாக தங்கள் தொழிலை பார்க்கவும் திருவருளை வேண்டி பிரார்த்தனை செய்வோம்.
ஹோசூரை சேர்ந்த ஜகதீஷ் அவர்களின் மனைவி மஞ்சரி அவர்களுக்கு சுகப்பிரசவம் நடந்து, நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்கவும், முதல் திருமணம் தோல்வியில் முடிந்து இரண்டாவது திருமண வாழ்க்கையும் நன்றாக அமையாத அந்த பெண்ணுக்கு துன்பங்கள் யாவும் நீங்கி இல்லறம் சிறக்கவும், விவசாய நிலங்கள் பிளாட்டுக்களாக மாறும் கொடுமை தடுத்து நிறுத்தப்படவும், விவசாயம் நன்கு நடக்கவும், மகா பெரியவாவை வணங்கி மனம் உருகி பிரார்த்தனை செய்வோம்
ஹோசூரை சேர்ந்த ஜகதீஷ் அவர்களின் மனைவி மஞ்சரி அவர்களுக்கு சுகப்பிரசவம் நடக்கவும், நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்கவும், முதல் திருமணம் தோல்வியில் முடிந்து இரண்டாவது திருமண வாழ்க்கையும் ஊசலாட்டத்தில் உள்ள அந்த அபலைப் பெண்ணுக்கு துன்பங்கள் யாவும் நீங்கி இல்லறம் சிறக்கவும், விவசாய நிலங்கள் பிளாட்டுக்களாக மாறும் கொடுமை தடுத்து நிறுத்தப்படவும், விவசாயிகள் எந்த குறையும் இன்றி நிம்மதியாக தங்கள் தொழிலை பார்க்கவும் திருவருளை வேண்டி பிரார்த்திப்போம். –
\\\\சீதக்காதியை அடக்கம் செய்த இடம் வெடித்து அவர் கை நீண்டது. அந்த கைவிரலில் இருந்த மோதிரம் நழுவி புலவர் முன் விழுந்தது. புலவர் அதை எடுத்துக்கொண்டு போய் சீதக்காதியின் உறவினர்களிடம் கொடுத்து நடந்ததை கூறினார். அவர்கள், “சீதக்காதி இதை விரலின் இருந்து கழற்றக் கூடாது என்று சொல்லியிருந்தார். அது உங்களுக்கு கொடுப்பதற்காகத் தான் போலும்” என்றனர். \\\
படிக்கும் போது மெய் சிலிர்க்கின்றது .சீதக்காதி கதை நானும் தற்போதுதான் முழுமையாக தெரிந்துகொண்டேன் .
இந்த வார பிரார்த்தனைக்கு சமர்ப்பித்த அனைவரின் கோரிக்கைகளும் சீக்கிரம் நிறைவடையும் .
வாழ்த்துக்களுடன்
-மனோகர்
சுவாமிமலை அருகில் உள்ள திருக்கருகாவூர் முல்லைவன நாதசுவாமி- கருகாத்த நாயகி (கர்ப்பரட்சாம்பிகை) கோவில் சென்று கர்ப்பிணி பெண்கள் அம்பாள் பாதத்தில் வைத்து மந்திரித்து தரப்படும் விளக்கெண்ணை பிரசாதத்தை வாங்கி வந்து வயிற்றில் வலி ஏற்படும் சமயம் தடவி வர சுகப்பிரசவம் நிச்சயம் …அவளை முழுவதுமாய் சரணடைந்து விடுங்கள்.முடிந்தால் தங்கள் கணவரை திருக்கருகாவூர் அனுப்பி சுகப்பிரசவ விளக்கெண்ணை வாங்கி வர சொல்லவும் ….அசைவம் விட்டு விடுங்கள் …கந்தர் சஷ்டி கவசம்,சுந்தர காண்டம்,அபிராமி அந்தாதி படித்து வரவும் ..
“ஹிமவத் யுத்தரே பார்ச்வே ஸுரதா நாம யக்ஷினி
தஸ்யா ஸ்மரண மாத்ரேண விசல்யா கர்ப்பிணீபவேது.”[இதனை எப்போதும் மனதில் சொல்லி வாருங்கள் ]…
உங்கள் ஹோசூரில் உள்ள கோட்டை மாரிஅம்மன்னை வழிபட்டு வாருங்கள் ..தினமும் பைரவர் கவசம் படித்து வரவும் …..உங்களையும்,உங்கள் வளரும் கருவையும் பைரவர் காத்திடுவார் ….முடிந்தால் ஒருமுறை ஹோசூர் மலை சந்திர சூடேஸ்வரர் திருகோயில் எதிரில் தனி கோயில் கொண்டு அருளும் பைரவர் மூர்த்தியை வழிபட்டு உங்கள் கணவரை வர சொல்லவும் …தாராளமாக உங்கள் கணவர் மலை கோயில் செல்லலாம்…
எளிமையான தகுந்த பரிகாரத்தை கூறியமைக்கு நன்றி சார். தொடரட்டும் உங்கள் தொண்டு.
-சுந்தர்
இவ்வார பிரார்த்தனைக் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற மகாப்பெரியவா அவர்களின் பொற்பாதம் பணிகிறேன். வள்ளல் சீதக்காதியின் கொடைத்தனமை நன்கு புரிந்தது………………கர்ண மாமன்னர் சொன்னது போல் வாங்கும் மக்களால் தான் நமக்கு புண்ணியம் உண்டாகிறது பேராசைப்படாமல் வாழ்ந்த புலவர் பெருமக்களால் தான் கொடை வள்ளல்களின் புகழும் ஓங்குகிறது என்பதில் ஐய்யமில்லை………………