நண்பர் ஸ்ரீராம் வாட்ஸ் ஆப்பில் நமக்கு அனுப்பிய ஒரு அருமையான ஆங்கில ஜென் கதையை தமிழில் மொழிபெயர்த்து தந்திருக்கிறோம்.
எவண்டா அவன் இங்கேயும் வந்து தொந்தரவு பண்றது?
தியானம் செய்யும்போது ஏதாவது ஒரு இடையூறு ஏற்படுகிறது என்பதால் வெறுப்படைந்த அந்த துறவி மடத்திற்கு வெளியே தொலைதூரத்தில் உள்ள ஒரு ஏரிக்கு சென்று அங்கு ஒரு படகை எடுத்துக்கொண்டு ஏரியின் நடுப்பகுதிக்கு சென்று தியானம் செய்ய முடிவெடுத்தார். அப்படியே செய்தார்.
எந்த வித இடையூறும் இல்லாமல் ஒரு சில மணிநேரங்கள் தியானத்தில் கழிந்த பின், வேறு ஏதோ ஒரு படகு ஒரு வந்து இவர் அமர்ந்திருந்த படகின் மீது மோத, இவருக்கு “இங்கேயுமா…?” என்று கோபம் மெல்ல தலைக்கேறுகிறது. கோபத்தை அடக்க முடியாமல் கண்களை திறந்து தன் படகின் மீது மோதியவர் யார் என்று பார்த்து கூச்சலிட தீர்மானித்த நேரத்தில் பார்த்தால் அது ஒரு ஆளில்லா படகும். யாரோ படகை கயிற்றில் கட்டாமல் விட்டுவிட, அது அப்படியே காற்றின் போக்கில் நகர்ந்து ஏரியின் நடுப்பகுதிக்கு வந்து இவர் படகின் மீது மோதியிருக்கிறது. அவ்வளவு தான்.
‘இந்த ஆளில்லா படகின் மீதா நமது கோபத்தை காட்ட தீர்மானித்தோம்???’ என்று தன்னை அவர் நொந்துகொண்ட தருணத்தில் அவருக்கு தன்னிலை உணர்வு ஏற்பட்டது. ‘கோபம் என்னும் அழிவு சக்தி வெளியே இல்லை நமக்குள் தான் இருக்கிறது. வெளிப்புறத்திலிருந்து ஏதோ ஒன்று அதை தூண்டிவிட்டால் போதும். நாம் அதற்கு இரையாகிவிடுகிறோம்’ என்று உணர்ந்தார்.
அது முதல் அவரை யார் எரிச்சலூட்ட முயன்றாலும் சரி தூண்டிவிட்டாலும் சரி…. “எதிரே இருப்பது ஜஸ்ட் ஒரு வெற்றுப்படகு. கோபம் எனக்குள் தான் இருக்கிறது” என்று நினைத்துக்கொள்வார்.
இனி வெற்றுப்படகுகளை கண்டு நாம் கோபம் கொள்ளலாமா நமது நிம்மதியை கெடுத்துக்கொள்ளலாமா என்று நீங்களே முடிவு செய்த்துக்கொள்ளுங்கள்.
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும். (குறள் 306)
குறள் விளக்கம் : சினம் என்பது யாரிடம் இருக்கிறதோ அவர்களை அழித்து விடுவதோடு அவருக்கு வாழ்வில் பேருதவியாக இருக்கும் அருநட்பையும் கெடுத்து விடும்.
================================================
We are waiting for your support…
We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!
================================================
Also check…
நம்முடைய மதிப்பை உயர்த்துவது எது?
அள்ளிக்கொடுத்த வள்ளலும் நன்றி மறந்த புதுப்பணக்காரனும்!
வாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன?
எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??
எல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து!
‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?
செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்!
வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?
எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?
What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?
இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!
பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?
ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?
விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?
நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?
‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’
எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –
வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?
பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?
சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்
மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?
இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?
நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!
அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?
நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!
மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?
================================================
Don’t miss this….
எதுக்குமே டயம் இல்லை சார்… என்ன பண்றது?
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!
================================================
[END]
அருமை!!