Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > எதுக்குமே டயம் இல்லை சார்… என்ன பண்றது?

எதுக்குமே டயம் இல்லை சார்… என்ன பண்றது?

print
றைவனின் படைப்பில் நாம் அவசியம் புரிந்துகொள்ளவேண்டிய ஆனால் புரிந்துகொள்ள மறுக்கும் அம்சம் – TIME என்று சொல்லக்கூடிய நேரம் தான். கடிகாரத்தை வைத்தோ, சூரிய சந்திரனை வைத்தோ உணரக்கூடியது அல்ல ‘நேரம்’ என்பது. ‘நேரம்’ என்பது இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட ஒன்று.

இன்று பலர் தாங்கள் செய்யக் கூடிய செய்ய வேண்டிய பொன்னான விஷயங்களை / கடமைகளை செய்யத் தவறுகிறமைக்கு சொல்லும் விஷயம் : “எனக்கு நேரமேயில்லை!” என்பது தான்.

“இன்னைக்கு ரொம்ப விசேஷமான நாளாச்சே? கோவிலுக்கு போனீங்களா?”

“இல்லே சார்…. நேரமேயில்லை சார்… அதனால போகலே…”

“உங்க சொந்தக்காரர் ஒருத்தரை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்கன்னு சொன்னீங்களே… அவரை போய் பார்த்தீங்களா?”

“இல்லே சார்…. எங்கே நேரமிருக்கு… மூச்சு விடக்கூட நேரமில்லை”

“இராம நாம மகிமை சொற்பொழிவு உங்க ஏரியாவுல நடந்துதே… கேட்க போனீங்களா?”

“எங்கே சார் டயம் இருக்கு….”

இது தான் பெரும்பாலானோர் சொல்வது.

இது எந்தளவு உண்மை?

இங்கு தான் ஒரு சூட்சுமமே அடங்கியிருக்கிறது.

Time defines 2

நியாய தர்மங்களுக்கு உட்பட்டு ஒரு நல்ல விஷயத்தில் நீங்கள் உங்களை ஈடுபடுத்திக்கொண்டால், ‘நேரம் உங்களுக்கு கட்டுப்படும்’ என்பதே அது.

இதை நாம் பலமுறை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறோம்.

சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் நடந்தது இது.

நமக்கு தெரிந்த ஒரு மீடியா புகைப்படக்காரர் திடீரென மாரடைப்பு வந்து இறந்துவிட்டார். அந்த தகவல் நாம் அப்போது பணிபுரிந்த அலுவலகத்தில் இருந்தபோது, மதியம் சுமார் 2.00 மணியளவில் கிடைத்தது.

அவர் மிகப் பெரிய மனிதரோ செல்வந்தரோ அல்ல. சாதாரண நபர் தான். சுமார் பத்து பதினைந்து நாட்களுக்கு முன்னர் தான் அவரிடம் பேசினோம். அவர் இறந்துவிட்டார் என்பதை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.

அஞ்சலி செலுத்த போகலாமா அல்லது வேண்டாமா என்று ஒரே குழப்பம். காரணம், மறுநாள் அதிகாலை வெளியூர் புறப்படவேண்டியிருந்தது. இங்கே இவரது வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் வீட்டுக்கு சென்றால் நேரமாகிவிடும். மேலும் இறப்பு நடந்த வீட்டுக்கு சென்று நம் வீடு திரும்பினால் உடனே குளிக்கவேண்டும்.

ஆளே போய்ட்டார்… இனி நாம போய் என்ன போகாட்டி என்ன என்றெல்லாம் சிந்தனை எழுந்தது.

ஆனால், மனசாட்சி உறுத்தியது. அவர் உயிருடன் இருந்தபோது எந்தளவு நாம் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். அவர் இறப்புக்கு செல்ல இப்படி யோசிக்கிறோமே… சே… இது தவறில்லையா? பரவாயில்லை… போவோம்… என்று முடிவு செய்து, அலுவலகம் முடிந்தவுடன் ஒரு மாலை வாங்கிக்கொண்டு அசோக் நகரில் இருக்கும் அவரது வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது குடும்பத்தாரிடம் ஆறுதல் கூறினோம்.

அவர் இருக்கும்போது அவரால் ஆதாயம் பெற்ற பலர் அவர் இறந்த பின்பு அவரை கண்டுகொள்ளவேயில்லை என்பதை நாம் கேள்விப்பட்டபோது மனம் மிகவும் கனத்தது.

சுமார் அரைமணி நேரம் அங்கு இருந்து விட்டு பின்னர் வீட்டுக்கு திரும்பினோம்.

வீட்டுக்கு திரும்பும்போது மணி என்ன தெரியுமா? 8.00 PM தான்.

நாம் சாதாரணமாக எங்கும் போகாமல் வீட்டிற்கு நேரடியாக வந்தாலே அப்படி இப்படி என்று 8.15 pm – 8.30 pm ஆகிவிடும். ஆனால், அன்று போகலாமா வேண்டாமா என்ற ஊசலாட்டத்தில் போகலாம் என்று முடிவு செய்து நண்பரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வீடு திரும்பினால் எப்போது வீட்டிற்கு திரும்பும் நேரத்தைவிட சீக்கிரமே திரும்பியிருந்தது ஆச்சரியமாக இருந்தது.

இன்னும் கூட நம்மால் அதை நம்பமுடியவில்லை.

அப்போது தான் காலத்தின் சூட்சுமத்தை உணர்ந்தோம்.

தர்ம நியாயங்களுக்கு உட்பட்டு நாம் நடந்துகொள்ளும்போது காலம் நமக்கு அழகாக மோல்ட் ஆகிவிடுகிறது.

இது போல பல முறை நடந்திருக்கிறது.

நல்லவற்றுக்கு நேரத்தை நீங்கள் ஒதுக்கினால் நேரம் உங்களுக்கு மிக அழகாக கட்டுப்படும்.

அதே நேரம், பயனற்ற விஷயங்களில் நீங்கள் ஈடுபட்டு நேரத்தை விரயம் செய்தால் அவசியமான விஷயங்களுக்கு உங்களுக்கு எப்போதுமே நேரம் இருக்காது. இது முற்றிலும் உண்மை.

சில நாட்களுக்கு முன்னர் கூட ஒரு விஷயம் நடந்தது.

ஒவ்வொரு வருடமும் ராமநவமி அன்று ஸ்ரீராமனை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த ஆண்டு திருநின்றவூர் சென்று ஏரி காத்த ராமரை தரிசிக்கவேண்டும் என்று நினைத்திருந்தோம். ஆனால், ஒரு மகானுபாவர் நம்மை மிகவும் சங்கடப்படுத்திவிட்டபடியால் பதிவுகளை கூட சரியாக எழுதமுடியவில்லை. எழுத்துப் பணியில் உள்ளவர்களுக்கு அதற்குரிய ‘மூட்’ மிகவும் முக்கியம். அடியேன் பொது வாழ்வில் இருப்பதால் பலவிதமான மான அவமானங்களை சந்திக்க வேண்டி உள்ளது. ஈகோ மற்றும் பொறாமையின் காரணமாக நம்மை அவமதிப்பவர்கள் தற்போது அதிகரித்து வருகிறார்கள். ‘சர்வம் கிருஷ்ணார்ப்பணம்’ என்று பழகிவிட்டதால் இவை நம்மை பெரிதாக பாதிப்பதில்லை. அன்றைய பிரச்னைகளை கவலைகளை அன்றோடு தொலைத்துவிட்டு அடுத்த நாள் ஒரு புது மனிதனாக எழுவது தான் நமது வழக்கம்.

ஸ்ரீராமநவமியன்று மேற்கூறிய பிரச்சனை ஒன்றால் நமது பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட, சகஜ நிலைக்கு வர மாலை 6 மணியாகிவிட்டது. அதற்கு மேல் பிரார்த்தனை பதிவை எழுத ஆரம்பித்தோம். நிறைவு செய்ய இயலவில்லை. 7.30 pm ஆகும்போது தான் நினைவுக்கு வந்தது ராமநவமி தரிசனத்துக்கு செல்லவேண்டும் என்பது. இதுவரை தரிசனம் தவறியதில்லையே.

இரவு 8.00 மணிக்கு மேல் எந்த ஆலயத்திற்கு செல்வது? போகலாமா வேண்டாமா? முந்தைய தினம் வேறு மயிலை சென்று கிட்டத்தட்ட 5 மணிநேரத்துக்கு மேல் செலவிட்டோம். எனவே இன்றும் போகவேண்டுமா என்று தோன்றியது.

உண்மையில் உடலும் மனமும் சோர்வாக இருந்தது. மணி எட்டாகிவிட்டதே… இனியும் போகவேண்டுமா? போகலாமா வேண்டாமா போகலாமா வேண்டாமா.. இப்படி இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்தோம். நாம் போகவில்லை என்றால் யாரும் கேட்கப்போவதில்லை. ஆனாலும் நம்மை பொருத்தவரை நாமாக ஏற்படுத்திக்கொண்ட கமிட்மெண்ட்கள் தானே நம்மை இந்தளவு உயர்த்தியிருக்கிறது. ஒரு நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு அலுவலகத்திலிருந்து புறப்பட்டோம்.

அப்போது கூட ராம தரிசனம் செய்யலாமா வேண்டாமா என்று ஒரு மனப்போராட்டம். யாரோ நம்மை செலுத்தியது போல இருந்தது. நம்மையுமறியாமல் நந்தம்பாக்கம் நோக்கி பயணமானோம்.

DSC03773-2
நந்தம்பக்கம் கோதண்ட ராமர் ஆலயம் – அனுமந்த வாகனத்தில் ராமர்

நாம் சென்ற நேரம் எப்படியும் 8.30 இருக்கும். அங்கே … வாவ்… அனுமந்த வாகனத்தில் ராமர் புறப்பாடுக்கு தயாராகிக்கொண்டிருந்தார். இப்படி ஒரு தரிசனம், கவரேஜ் இதுவரை நமக்கு கிடைத்ததில்லை. அப்படி ஒரு தரிசனம். கவரேஜ். நமது காமிராவுக்கு நல்ல தீனி.

உடற்சோர்வு, மனச்சோர்வு அனைத்தும் பஞ்சாய் பறந்துவிட்டது.

It’s not any miracle. just the power of our mind to indulge us in good things.

பொதுவாக நாம் வீட்டுக்கு செல்லும்போது எனர்ஜி அனைத்து போய் உடல்சோர்வாக இருக்கும். ஆனால், அன்று நாம் வீட்டுக்கு திரும்பும்போது எப்படியும் இரவு 10.30 இருக்கும். ஆனால், காலையில் ப்ரெஷ்ஷாக எழுந்தது போலிருந்து உடலும் மனமும்.

இதெல்லாம் நீங்கள் புரிந்துகொள்ள நாம் அளிக்கும் ஒரு சிறுசிறு உதாரணங்கள் தான். சற்று சிந்தித்தால் காலம் உங்களுக்கு மோல்ட் ஆன பல விஷயங்கள் உங்கள் வாழ்க்கையிலேயே கூட நடந்திருக்கும்.

ஆலய தரிசனம், திருத்தல யாத்திரை, தர்ம நியாயங்களுக்கு உட்பட்ட செயல்கள், அறப்பணிகள், ஒப்புரவு, பரோபகாரம் இது போன்ற நல்ல விஷயங்களில் ஈடுபட்டால் நேரம் ஒருவருக்கு தாமாகவே அதிகம் கிடைக்கும். செலவிடப்படும் நேரமும் பயனுள்ளதாகவே அமையும். அவர்களுக்கு நல்ல விஷயங்களுக்கு செலவு செய்ய நேரம் மிகுதியாக கிடைக்கும்.

Time stays

கடந்த காலங்களில் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்துகொண்டே அத்தனை விஷயங்களும் நம்மால் செய்ய முடிந்தமைக்கு இது தான் காரணம். (உழவாரப்பணி, பிரார்த்தனை பதிவு, ஆலய தரிசனம் etc.etc.,). இப்போது நினைத்தால் கூட ‘எப்படி இது சாத்தியமாயிற்று?’ என்று பிரமிப்பாக உள்ளது.

அதே நேரம் ‘நேரமில்லை’ என்று கூறி ஒரு நல்ல விஷயத்தை நீங்கள் புறக்கணித்து, அதற்கு SUBSTITUTE ஆக நீங்கள் செலவு செய்யும் நேரமானது நேரவிரயமாகத் தான் கழியுமே தவிர, அதனால் உங்களுக்கு பொருளோ, புண்ணியமோ, பயனோ துளியும் கிடைக்காது.

ஏன் தெரியுமா?

நல்ல விஷயங்களில் நாம் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளத் தான் இறைவன் நேரம் என்ற ஒன்றையே தந்திருக்கிறான். சுயநலத்தை பிரதானமாக கொண்டு பொருளீட்டி, உண்டு, உறங்கி, உடல் வளர்க்க அல்ல.

அப்படி செய்பவர்கள் – எங்கெல்லாம் ஒருவர் நேரத்தை (மருத்துவமனை, வழக்காடு மன்றம் இப்படி) செலவழிக்கக்கூடதோ அங்கெல்லாம் செலவழிப்பார்கள்.

எனவே பயனுள்ள நல்ல விஷயங்களில் நாம் நம்மை ஈடுபடுத்திக்கொள்வோம். காலம் நமக்கு சேவகம் செய்யும்.

At the end of your day, இறைவன் உங்களை மதிப்பிடப்போவது உங்கள் நேரத்தை நீங்கள் எப்படி பயன்படுத்தி அதை மதிப்புள்ளதாக ஆக்கியிருக்கிறீர்கள் என்பதை வைத்து தான்.

எனவே நல்ல விஷயங்களுக்கு நேரத்தை பயன்படுத்தி நமது நேரத்தின் மதிப்பை கூட்டுவோம்.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல் (குறள் 33)

* ஸ்ரீராமநவமி தரிசன அனுபவம் விரிவான பதிவாக பிரத்யேக புகைப்படங்களுடன் பின்னர் வரும்!

==========================================================

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர்ந்திட உங்கள் பங்களிப்பு அவசியம் தேவை….

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

==========================================================

Also check :

கபாலீஸ்வரருடன் ஒரு பொன்மாலைப் பொழுது!

கடவுளின் குரலை சிறிது நேரம் கேட்கலாமா? 

ஆன்லைனிலும் அமேசானிலும் ‘கிடைக்காத’ ஒன்று !

நாலு பேருக்கு நல்லது செய்வதால் நமக்கு என்ன கிடைக்கப்போகிறது?

நெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட பயன்படுத்தவேண்டாமே – MUST READ

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? 

உங்கள் நேரத்தை நீங்கள் எப்படி செலவழிக்கிறீர்கள்? ஆளுமை முன்னேற்றத் தொடர் – Episode 2

==========================================================

[END]

8 thoughts on “எதுக்குமே டயம் இல்லை சார்… என்ன பண்றது?

  1. Dear SundarJi,

    Eye opener article for me.. thanks for sharing this very impressive useful time management article.

    Need to adopt many good things from this..

    Thanks,
    Rgds,
    Ramesh

  2. டியர் சுந்தர்ஜி அவர்களுக்கு வணக்கம் .”காலம் கண் போன்றது கடமை கண் போன்றது “என மிகச் சிறப்பாக ( TIME MANAGEMENT )சொல்லிய விதம் மிக அருமை .நல்ல விசயங்களில் நம்மை ஈடுபடுத்தி கொள்வதால் எல்லாம் வசப்படும் . நான் இதை சில மாதங்களுக்கு முன்பே நடைமுறைபடுத்தி விட்டேன் .நல்லவர்கள் சொல்லும் அனுபவ உண்மைகளை நம்மோடு இணைத்து கொண்டால் எல்லாம் இனிதாகும் .

  3. மிக அருமையான பதிவு. புகைப்படங்களும் அருமை. தாங்கள் பதிவில் தந்துள்ள அனைத்து தகவல்களும் முத்துக்கள்.

    நன்றி சுந்தர்ஜி.

  4. எல்லோருக்கும் உபயோகமுள்ள அருமையான பதிவு,
    நேரத்தை பற்றிய பதிவு சரியான நேரத்தில் நம் வாசகர்களுக்கு கிடைத்துள்ளது.
    நன்றி

  5. உண்மை உண்மை நான் சொல்ல நினைத்த கருத்துக்களை நமது வாசக அன்பர்களே இங்கு சொல்லிவிட்டார்கள்.

    நம் தளத்தை பார்க்க ஆரம்பித்த பிறகு தான் நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடுகிறேன். இது மறுக்க முடியாத உண்மை. இதன் மூலம் பல ஆண்டுகள் நான் ஒத்திப்போட்டு வந்த விஷயங்கள் சிலவற்றை கடந்த ஆண்டுகளில் என்னால் செய்ய முடிந்தது.

    பொருள் பொதிந்த பதிவுக்கு பொருத்தமான படங்கள், மேற்கோள்கள் என பதிவு மிளிர்கிறது.

    நன்றி நன்றி நன்றி.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  6. Superb sir. U once again proved from ur own life on an important aspect in life. We get more confident when a fellow traveller achieve results. We can’t just be inspired thro quotes. U set an important example for live and let live, on a systematic way. I will surely implement the concepts more deeply. Thanks for the article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *