எப்படி வாழவேண்டும் என்பதற்கு வழிகாட்டும் அருமையான காணொளி இது. (வீடியோவின் நீளம் சுமார் 3 நிமிடம் தான்). இந்த வீடியோவை பார்த்து கண்கலங்காதவர்களே இருக்க முடியாது. நம் முகநூலில் நண்பர் கிரிதரன் இதை சமீபத்தில் நமக்கு பகிர்ந்திருந்தார்.
எந்த ஒரு மனிதன் சுயநலம் இல்லாமல் பிறருக்கு உதவி செய்து வாழ்கிறானோ அந்த வாழ்க்கை தான் உயர்வான வாழ்க்கை. அதைத்தான் ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடிக்க வேண்டும்
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். (குறள் 214)
பிறருக்கு உதவ, நீங்கள் லட்சாதிபதியாகவோ கோடீஸ்வரனாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. இதயத்தின் ஓரத்தில் ஒரு துளி ஈரம் இருந்தால் போதும்… இந்த சமுதாயத்தில் மிகப் பெரிய மாற்றத்திற்கான வித்தை உங்களால் ஊன்ற முடியும்.
தயவு செய்து அடுத்தவர்களுக்கு இயன்றபோதெல்லாம் உதவுங்கள். நீங்கள் உதவினால், உங்களுக்கு இறைவனும் இறங்கிவந்து உதவுவான். அடுத்தவர்களுக்கு உதவி செய்து அவர்களை மகிழ்வித்து, அதனால் இன்பம் காணுங்கள். அந்த இன்பம்தான்- மகிழ்ச்சிதான் உண்மையானது, பரிசுத்தமானது. அது தான், என்றும் நிரந்தரமானது.
இந்த காணொளியை பாருங்கள். இந்த இளைஞனை போன்றவர்கள் நிச்சயம் இறைவனை தேடி போகவேண்டியதில்லை. இவர்கள் இருக்கும் இடமே இறைவன் இருக்கும் இடமாகும். இந்த காணொளியை ஒலியோடும் பார்க்கலாம். ஒலியில்லாமலும் பார்க்கலாம். எனவே உங்கள் அலுவலகத்தில் பார்க்கவேண்டியிருந்தால் கவலைவேண்டாம். (ஒலியோடு பார்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.!)
காணொளியை பார்த்த பின்னர் உங்கள் நண்பர்களிடம், உறவுகளிடம், சுற்றத்திடம் பகிருங்கள். நம்மை சுற்றிலும் ஒரு அழகான உலகை படைக்க நம்மால் செய்யக்கூடிய சிறு முயற்சி இது!
(இந்த வீடியோ மொழிகளை கடந்தது என்றாலும் மறக்காமல் கீழே இடம்பெறும் ஆங்கில சப்-டைட்டில்களையும் பாருங்கள்.)
WHY I SHOULD DO GOOD TO OTHERS?
அன்பெனும் மொழியாக ஆலய மணியாக
ஊர்வாழ உழைப்பவன் சிரஞ்சீவி
தென்பாங்கு காற்றாக
திருச்சபை பாட்டாக
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
வான் வழங்கும் உயர்ந்த நெறியில்
பால் மணக்கும் குறளின் வழியில்
நதிபோலவே நடக்கின்றவன்
நிலவாகவே தேய்கின்றவன்
எந்நாளும் பூமியில் சிரஞ்சீவி
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
அன்பெனும் மொழியாக ஆலய மணியாக
ஊர்வாழ உழைப்பவன் சிரஞ்சீவி
தென்பாங்கு காற்றாக
திருச்சபை பாட்டாக
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
வாய் மணக்க சிரிக்கும் மனிதன்
தாய் நிலத்தை உயர்த்தும் தலைவன்
அறிவானவன்
படைக்கின்றவன்
பெரியோர்களை துதிக்கின்றவன்
எந்நாளும் பூமியில் சிரஞ்சீவி
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
அன்பெனும் மொழியாக ஆலய மணியாக
ஊர்வாழ உழைப்பவன் சிரஞ்சீவி
தென்பாங்கு காற்றாக
திருச்சபை பாட்டாக
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
எந்நாளும் வாழ்பவன் சிரஞ்சீவி
(மேற்கூறிய காணொளிக்கு பொருத்தமான வரிகள் இதுவாகத்தான் இருக்க முடியும்! சரி தானே?)
[END]
”தயவு செய்து அடுத்தவர்களுக்கு இயன்றபோதெல்லாம் உதவுங்கள். நீங்கள் உதவினால், உங்களுக்கு இறைவனும் இறங்கிவந்து உதவுவான். அடுத்தவர்களுக்கு உதவி செய்து அவர்களை மகிழ்வித்து, அதனால் இன்பம் காணுங்கள். அந்த இன்பம்தான்- மகிழ்ச்சிதான் உண்மையானது, பரிசுத்தமானது. அது தான், என்றும் நிரந்தரமானது.”
‘
” நல்லாறு எனினும் கொளல் தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று ”
பொருள் : ஒருவன் பல வகையிலும் முயற்சி செய்து சேர்த்த பொருள் முழுவதும் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்
தங்கள் பதிவிற்கு நன்றி
Regards
Uma
//”தயவு செய்து அடுத்தவர்களுக்கு இயன்றபோதெல்லாம் உதவுங்கள். நீங்கள் உதவினால், உங்களுக்கு இறைவனும் இறங்கிவந்து உதவுவான். அடுத்தவர்களுக்கு உதவி செய்து அவர்களை மகிழ்வித்து, அதனால் இன்பம் காணுங்கள். அந்த இன்பம்தான்- மகிழ்ச்சிதான் உண்மையானது, பரிசுத்தமானது. அது தான், என்றும் நிரந்தரமானது.”//
always help others!!! some times if you are in difficult situations that HELP WILL COME BACK TO YOU ALWAYS!!!
ப்ளீஸ் விசிட்
http://www.sgf21.org
http://www.ihelpyouhelp.org
வணக்கு சார்
Nice vedio sir, உதவி செய்வதை இதைவிட தெளிவாக சொல்ல முடியாது. இந்த artical படித்தவர்ளுக்கு ,அடுத்தவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும்.
வணக்கம் சுந்தர்
நம் ஒருவற்கு உதவி செய்தோம் அந்த உதுவிக்கான நன்றி , உதுவி அவரிடம் இருந்து வரும் என்று எதிர்ப்பாக கூடாது ….சில்ல சமயம் நமிடம் உதுவி பெற்றவரோ நமக்கு துரோகம் அல்லது அல்ச்சயம் செய்யலாம் ஆனால் ஆனால் இயற்கை நம் செய்த உதுவி இக்அனா பலன் கண்டிப்பாக கிடைக்கும்……
எல்லருடிமும் அன்பும் , உதுவியும் செய்யங்கள் ….
வாழ்க வையகம் வாழ்க நலமுடன்
வாழ்க அறமுடன்..வளர்க அருளுடன்..
வாழ்க வளர்க உங்கள் பணி.. வளர்க உங்கள் தொண்டு…
Excellent Video. I really thank to Mr.Sundar sir. Everyone should be watch this.
எப்படி வாழவேண்டும் என்பதற்கு வழிகாட்டும் அருமையான காணொளி இது.என்றால் மிகையாகாது ..
could not find the video link ??
https://www.youtube.com/watch?v=r2RIbHV1ce8
மனிதநேயத்திற்கு நல்ல எடுத்துகாட்டு