Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > விரும்பிய வேலை கிடைக்க, மழலை வரம் கிட்ட, வாஸ்து தோஷம் நீங்க, மாதவிடாய்க் கோளாறுகள் நீங்க – பரிகாரம்… பரிகாரம்!

விரும்பிய வேலை கிடைக்க, மழலை வரம் கிட்ட, வாஸ்து தோஷம் நீங்க, மாதவிடாய்க் கோளாறுகள் நீங்க – பரிகாரம்… பரிகாரம்!

print
பாரம்பரியமிக்க ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. சக்தி உண்டு. அந்தந்த கோவிலின் வரலாற்றுடன் தொடர்புடையவர்கள் – மற்றவர்கள் நன்மைக்காக – குறிப்பிட்ட கோரிக்கைகளை வரமாக பெறும்போது அது பரிகாரத் தலமாகிறது. அந்த வகையில் பிரசித்தி பெற்று விளங்கும் சில பரிகாரத் தலங்களை பார்ப்போம்.

மழையின் காரணமாக வீட்டில் பிராட்பேண்ட் இணைப்பு பழுதடைந்துள்ளது. புகார் அளித்துள்ளேன். எனவே முன்னெப்போதோ தயார் செய்த இந்த பதிவை STANDBY பதிவாக அளிக்கிறேன்.

நம்பிக்கையுடன் பரிகாரம் செய்யுங்கள். நல்லருள் பெறுங்கள். நாளை சந்திப்போம்.

* அரியக்குடி தென் திருவேங்கடமுடையானுக்கும் தாயாருக்கும் 12 வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்து வழிபட்டால் விரும்பிய வேலை கிடைக்கும்.

* திருநாங்கூர் திருப்பதிகளுள் ஒன்றான திருக்காவளம்பாடி ராஜகோபால சுவாமிக்கு அவலும் வெண்ணெயும் நிவேதித்தால் மழலை வரம் கிட்டும்.

* திருக்கோலக்காவில் அருளும் தொனிப்ரதாம்பாளுக்கு வாக்வாதினி அர்ச்சனை செய்து, அம்பிகைக்கு அபிஷேகித்த தேனை உண்ணச் செய்தால் சரியாகப் பேச வராத குழந்தைகள் நன்கு பேசும்.

* செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள சிராத்த சம்ரட்சணப்பெருமாளை தொடர்ந்து அமாவாசையில் தரிசித்தால் பித்ரு தோஷங்களும் பித்ரு சாபங்களும் விலகும்.

* திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் உள்ள வானமாமலைப்பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணெயை சரும நோய் உள்ளவர்கள் தடவி வர அந்த நோய் நீங்கும்.

* கடும் ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் அருளும் ஐராவதேஸ்வரருக்கு மிளகு அரைத்துத்  தடவி வெந்நீரால் அபிஷேகம் செய்து அர்ச்சிக்க, காய்ச்சல் விலகிவிடும்.

* சிறுநீரக நோய்கள் நீங்க லால்குடிக்கு அருகே உள்ள ஊட்டத்தூரில் அருளும் பஞ்சநதக் கல்லால் செய்யப்பட்ட நடராஜப்பெருமானை தரிசித்து, வெட்டிவேர் மாலை சாத்தி தினமும் வெட்டிவேர் போட்ட நீரை அருந்தலாம்.

* திருக்காரவாசல் கண்ணாயிரமுடையாருக்கு மூலிகைத் தைல அபிஷேகம் செய்து, அத்திப்பழத்தை நிவேதித்து பிரசாதமாகப்பெற்று 48 நாட்கள் தைலத்தை தலையில் தேய்த்தும் தேனில் ஊறிய அத்திப்பழத்தை உண்டும் வந்தால் கண் நோய்கள் தீரும்.

* திருநீலக்குடி மனோக்ஞநாத சுவாமிக்கு அர்ச்சனை செய்து நீல நிற பட்டுத்துணியையும் எள்ளையும் தானமளித்தால் மரண பயம்  விலகும்.

* சென்னை-மயிலாப்பூர் கோலவிழியம்மன் ஆலயம் அருகில் உள்ள வாலீஸ்வரரை வணங்கினால் எதிரிகள் தொல்லை விலகும்.

* திருநெல்வேலி மாவட்டம், கோடகநல்லூர் ப்ருஹன்மாதவனுக்கு அர்ச்சனை செய்தால் கனவில் பாம்பு வந்து தொல்லை தராது. இது  ஒரு சர்ப்பதோஷ பரிகாரத் தலம்.

* வைத்தீஸ்வரன் கோயில் வைத்யநாதரையும் தையல்நாயகியையும் வழிபட்டு, ஆட்டு வாகனத்தில் ஆரோகணித்திருக்கும் அங்காரகனுக்கு அர்ச்சனை செய்ய, செவ்வாய் தோஷம் நீங்கும்.

* திருச்சி கன்டோன்மென்ட் லாசன்ஸ் சாலையில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் உள்ள நாகதேவதைகளுக்கு பூஜை செய்து பிரசாதமாகத் தரப்படும் பால் பாயசத்தை உண்டு, மஞ்சளை தினமும் அணிந்து கொள்ள, திருமணத் தடை, புத்திரபாக்கியத் தடை நீங்குகின்றன.

* திருவிற்குடி கங்களாஞ்சேரி வீரட்டேஸ்வரரையும் அம்பிகையையும் தரிசித்து ஆலயத்திலிருந்து கல் எடுத்து வந்து வீட்டில் வைத்தால் வாஸ்து தோஷம் நீங்கும்.

* லால்குடி திருமங்கலம் சாமவேதீஸ்வரர் ஆலய சனிபகவானை தரிசித்து அர்ச்சனை செய்தால் இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம்.

* திருச்சி-துடையூர் கடம்பவன விஷமங்களேஸ்வரர் திருக்கோயில் அருகிலுள்ள வாதக்கல் முனி சமாதியை வழிபட்டால் அனைத்து வகை வாத நோய்களும் நீங்கும்.

* கலைகளில் சிறந்து விளங்க ஊத்துக்காடு காளிங்கநர்த்தனருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

* எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேற நாச்சியார்கோயில் கல் கருடனுக்கு அர்ச்சனை செய்து அமிர்தகலசம் எனும் நைவேத்தியத்தைப் படைக்க வேண்டும்.

* மாதவிடாய்க் கோளாறுகள் நீங்க பெட்டவாய்த்தலை (திருச்சி) மத்யார்ஜுனர் ஆலய பூவாய் சித்தர் சந்நதியில் சீட்டெழுதிக் கட்டினால் நிவாரணம் பெறலாம்.

* சாக்கோட்டை சிவபுரத்தில் உள்ள சிவகுருநாதசுவாமி ஆலயத்தில் பைரவமூர்த்திக்கு வடைமாலை சாத்தி வழிபட, வழக்குகளில்  வெற்றி பெறலாம்.

நன்றி : ந.பரணிகுமார்| DINAKARAN.COM

20 thoughts on “விரும்பிய வேலை கிடைக்க, மழலை வரம் கிட்ட, வாஸ்து தோஷம் நீங்க, மாதவிடாய்க் கோளாறுகள் நீங்க – பரிகாரம்… பரிகாரம்!

  1. நல்ல பதிவு . எங்கு பார்த்தாலும் ஏவல் பில்லி சூன்யம், வைப்பு கண்மறைப்பு என்ற வார்த்தை களாகவே விழுகிறது அதற்க்கு ஒரு பதிவு போடுங்களேன் . நிறைய கோவில்களிலே இது போல பிரச்னைகளோட மக்களை பார்க்கிறேன்.

  2. அண்ணா , மூதாதையர் வணங்கிய குறும் தேவதைகளை சில உறவினர்கள் ஏவலுக்கு பயன்படுத்தி பொறாமையால் சொந்த உறவுகளை சிதைகிறார்கள். இவ்வாறு பாதிப்படைந்து வாழ வழி தெரியாமல் உள்ளவர்களுள் நானும் ஒருவன் . 12 வயதில் இருந்து வழி தெரியாமல் 14 வருடங்களாக வலியோடு ஓடுகிறேன். தங்களால் கூடியமட்டும் விரைவில் அதைப்பற்றி பதிவு போடவும். “கன்னியாகுமரி மாவட்டம்” கோயில்களில் இப்ப்ரசினைக்காக பிரார்திப்பவர்கள் அதிகம்.

    இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் எந்த தேவதையை ஏவுகிரார்களோ அவைகளே ” என் பிள்ளையை என்னை ஏவி அழிக்கிறான் என்று கதறுகின்றன”. ஏன் இப்படி ஒரு வரம் (சாபம் ) கடவுள் இந்த தேவதைகளுக்கு கொடுத்தார் என்று புரியவில்லை.

    1. 64 நாயன்மார்களில் ஒருவரான நந்தனாரின் வாழ்வில் நடைபெற்றது இது.

      ஒரு சமயம் தங்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்று கருதி கிராமத்து தேவதைகளை வைத்து நந்தனாரை (திருநாளை போவார்) ஊர்மக்கள் மிரட்டும்போது அவர் கூறியது : “எல்லோரும் நம் சிவபெருமானை வணங்குங்கள். அவன் நம்மை நிச்சயம் காப்பான். அவனை விட பெரிய தெய்வம் வேறில்லை. அவன் இருக்க நாம் ஏன் கவலைப்படவேண்டும்?”

      அருகிலுள்ள தொன்மையான சிவாலயம் ஏதாவது ஒன்றுக்கு செல்லுங்கள். உங்கள் பெயரிலும் உங்கள் குடும்பத்தினர் பெயரிலும் உடனடியாக அர்ச்சனை செய்யுங்கள்.

      அவனிடம் உங்கள் பிரார்த்தனையை சொல்லுங்கள். மற்றதை நந்தி பகவான் பார்த்துக்கொள்வார்.

      உடனடியாக இதை செய்யவும்.

      ஏதோ சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது.

      – சுந்தர்

      1. நன்றி அண்ணா,

        நானும் சிவபெருமானிடம் தான் முறையிடுகிறேன்.ஒவ்வொரு ப்ரதொஷமும் தவறாமல் சுசீந்தரம் தாணுமாலய பெருமானின் ஆசி பெற்று வருகிறேன்.(என் அறிவுக்கு கடந்த 6 மதத்திற்கு முன்னர் தான் இது எட்டியது), தாங்களும் அதையே கூறியதால் கூடிய சீக்கிரம் விடியல் வரும் என்று நம்புகிறேன்.

        1. செய்வினை அகல கோயில் வழிபாடு:
          திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்லும் வழியில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சிறுவாச்சூர் என்ற ஊர். (சென்னையிலி ருந்து திருச்சிக்கு செல்லும்போது பெரம்பலூரைத் தாண்டி உள்ளது ) சாலைக்கு மேற்கே பிரசித்தி பெற்ற காளி கோயில் அமைந்துள்ளது. ஊர் பெயரையும் இணைத்து சிறுவாச்சூர் மதுர காளியம்மன் என்று அழைக்கப்படுகிறது. ஊரின் மேற்கு கடைசியில் உள்ள கோயிலுக்கு நடந்தே செல்லலாம[04328-225333/ 04328-291375]

          கண்ணகி மதுரையை விட்டு வெளியேறி சிறுவாச்சூர் என்ற இந்த இடம் வரும் போது இருட்டி விடுகிறது. அப்போது அங்கிருந்த கோயிலில் தங்க இடம் கேட்கிறாள். உள்ளேயிருந்த செல்லியம்மன் என்னும் தெய்வம், தன்னால் வரம் பெற்ற தீய மந்திரவாதி ஒருவன் தன்னை மந்திரத்தால் கட்டி போட்டு இருப்பதாக கூறியது. அன்றிரவு செல்லியம்மனோடு தங்கும் காளி வழக்கப்படி மந்திர வேலைகள் செய்ய வந்த மந்திரவாதியை ஆவேசம் கொண்டு அழித்தாள்.

          விடிந்ததும் செல்லியம்மன் நீயே இங்கிரு என்று காளியிடம் சொல்லிவிட்டு, மேற்கில் அருகிலுள்ள பெரியசாமி மலைக்கு சென்றுவிடுகிறது. சிறுவாச்சூரில் அமைதியாக (மதுரமாக) அமர்ந்ததால் மதுரகாளி என்று அழைக்கப் படுகிறாள். வெளியே சென்ற செல்லியம்மன் கோயிலில் எப்போதும் முதல் மரியாதை தனக்கு தரப்பட வேண்டும் என்றபடியினால், தீபாராதனை காட்டும் போது, செல்லியம்மன் இருக்கும் மேற்கு திசை நோக்கி முதலில் காட்டுகிறார்கள்.வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வந்த காளி, திங்கட் கிழமைதான் பக்தர்களுக்கு காட்சி தந்தாள். எனவே திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு கிழமைகளில் மட்டும் கோயில் திறந்து இருக்கும். ஆதி சங்கரர் வழிபட்டது.பிரம்மேந்திர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் இங்குள்ளது.இந்த கோயிலில் இருக்கும் கிணற்று நீரில் குளித்துவிட்டு, அங்கேயே மாவு இடித்து மாவிளக்கு, நெய்விளக்கு போடுவது சிறப்பு. கோயில் வளாகத்திலேயே மாவிடிக்க உரல்களும், உலக்கைகளும் இருக்கின்றன. முடியாதவர்களுக்கு மாவு இடித்துத் தர அங்கேயே கூலிக்கு ஆட்கள் இருக்கிறார்கள்.கோயில் வளாகத்தில் குளித்துவிட்டு துணிகளை மாற்ற வெளிப்புற மண்டபங்கள் உள்ளன.செல்லியம்மனை மந்திரத்தால் கட்டிப் போட்ட மந்திரவாதி பில்லி, சூன்யம் போன்ற வித்தைகள் தெரிந்தவன். அவனை காளி அழித்த இடம் என்பதால் இங்கு வந்து சென்றால் பில்லி, சூன்யம் சம்பந்தப்பட்ட துன்பங்கள் நீங்கும் என்று நம்புகிறார்கள்.
          …………..சிவ.அ.விஜய் பெரியசுவாமி,கல்பாக்கம்‎

    2. நீங்க சிறுவாச்சூர் மதுர
      காளியம்மன்
      கும்பிடுங்க
      திருச்சி
      பக்கம் இருக்கு

  3. சுந்தர் சார் ,

    அருமையான பதிவு. தங்களது ரைட் மந்த்ரா வெப்சைட் – ஐ கடந்த ஒரு மாதமாக படித்து வருகிறேன். முந்தைய பதிவுகளையும் படித்து வருகிறேன். ஆன்மீக செய்திகள், விளக்கங்கள் , நீட்சி கதைகள், நம்பிக்கை கட்டுரைகள் ,வழிபாட்டு முறைகள், பரிகாரங்கள், ஸ்லோகங்கள், திருமுறைகள் என அனைத்தும் அடங்கிய ஒரு மிக பெரிய பொக்கிஷம் ரைட் மந்த்ரா . தங்களது இந்த சேவை மென் மேலும் தொடர இறைவனை பிராத்திக்கிறேன்.

    ஒரு சிறிய வேண்டுகோள் ,

    தங்களது இன்றைய பரிஹாரம் பதிவு அருமை. இருப்பினும் இன்றைய சூழ்நிலையில் குறிப்பிட்டுள்ள திருத்தலங்ளுக்கே சென்று குறிப்பிட்டுள்ள நாட்களில் அல்லது வாரங்களுக்கு வழிபாடு செய்வது சிறிது சிரமம் . எனவே விரும்பிய வேலை கிடைக்க, திருமண தடை நீங்க, சர்ப்ப தோஷம் நீங்க, நோய் நீங்க , மழலை வரம் கிட்ட, வாஸ்து தோஷம் நீங்க, இது போன்ற மிக மிக அவசியமான பிராத்தனைகளுக்கு எளிமையான பரிகாரங்கள் , ஸ்லோகங்கள், திருமுறை பாடல்கள் பற்றி ஒரு பதிவை தருமாறு வேண்டுகிறேன்.

    நன்றி

    1. தங்களின் பாராட்டுக்கு நன்றி. எல்லாப் புகழும் இறைவனுக்கே.

      நீங்கள் சொல்வது யதார்த்தம் தான். ஆனால பாரம்பரியமிக்க கோவில்களில் நம் கால்கள் ஒரு முறையாவது படவேண்டும். அதனால் கிடைக்கும் நன்மைகள் அளப்பரியது. இப்படி ஏதேனும் சோதனைகள் தந்தாலாவது நாம் அங்கு செல்லமாட்டோமா என்று தான் இறைவன் கருதுகிறான். எனவே ஆண்டுக்கு ஒரு முறையாவது பாரம்பரியம் மிக்க பரிகாரத் தலங்களுக்கு குடும்பத்தினருடன் செல்வோம்.

      மற்றபடி நீங்கள் கேட்டுள்ள எளிய பரிகாரங்களை (என் சிற்றறிவுக்கு எட்டியவரையில்) விரைவில் சொல்கிறேன்.

      நன்றி.

      – சுந்தர்

  4. கூன் பாண்டியன்… நெடுமாற பாண்டியன் என்பதுதான் அவன் பெயர் என்றாலும், கூன் விழுந்தவன் என்ற காரணத்தால் ‘கூன் பாண்டியன்’ என்ற பெயர் அவனுக்கு நிலைபெற்று விட்டது. கூன் பாண்டியன் சமண சமயத்தை தழுவி இருந்தான். அதனால் சைவ சமயத்தை எதிர்த்து வந்தான். ஒரு முறை கூன் பாண்டியன் ஆட்சி செய்த மதுரைக்கு திருஞானசம்பந்தர் வந்து தங்கியிருந்தார்.அப்போது சமணர்கள், சம்பந்தர் தங்கியிருந்த மடத்தை தீயிட்டு கொளுத்தினர். சம்பந்தர், ‘அந்தத் தீ அரசனையே சாரட்டும்’ என்று கூறி ‘செய்யனே திருஆலவாய் மேவிய…’ என்ற பதிகத்தை பாடினார். (பில்லி, சூனியம், செய்வினை ஆகியவற்றால் துன்புறுவோர் இந்த பதிகத்தை பாடி, ஈசனை தொழுதால் தீவினைகள் அண்டாது. மேலும் செய்தவருக்கே அந்த தீவினைகள் செய்து சேரும்). உடனடியாக தீயின் வெப்பம், கூன் பாண்டியனை வெப்ப நோயாகத் தாக்கியது. அதைத் தாங்க முடியாமல் அவன் தவித்தான்.

    அவனைச் சார்ந்திருந்த சமண சமயத் துறவிகளால் அந்த நோயை சரி செய்ய முடியவில்லை. கூன் பாண்டியனின் மனைவி மங்கையர்கரசி, சிறந்த சிவ பக்தையாவார். அவரது வேண்டுதலால் சம்பந்தர், ‘மந்திரமாவது நீறு…’ என்ற பதிகம் பாடி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மடப்பள்ளி சாம்பலை மன்னனுக்கு பூசினார். மறுநொடியே பாண்டியனின் நோய் நீங்கியது. இதையடுத்து மன்னன் மனம் சைவ சமயத்தை நாடிச் சென்றது.
    திருச்சிற்றம்பலம்

    செய்ய னேதிரு ஆலவாய் மேவிய
    ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்
    பொய்ய ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பைய வேசென்று பாண்டியற் காகவே.

    சித்த னேதிரு ஆலவாய் மேவிய
    அத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
    எத்த ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பத்தி மன்தென்னன் பாண்டியற் காகவே.

    தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச்
    சொக்க னேயஞ்ச லென்றருள் செய்யெனை
    எக்க ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பக்க மேசென்று பாண்டியற் காகவே.

    சிட்ட னேதிரு ஆலவாய் மேவிய
    அட்ட மூர்த்திய னேயஞ்ச லென்றருள்
    துட்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பட்டி மன்தென்னன் பாண்டியற் காகவே.

    நண்ண லார்புரம் மூன்றெரி ஆலவாய்
    அண்ண லேயஞ்ச லென்றருள் செய்யெனை
    எண்ணி லாவம ணர்கொளு வுஞ்சுடர்
    பண்ணி யல்தமிழ்ப் பாண்டியற் காகவே.

    தஞ்ச மென்றுன் சரண்புகுந் தேனையும்
    அஞ்ச லென்றருள் ஆலவா யண்ணலே
    வஞ்சஞ் செய்தம ணர்கொளு வுஞ்சுடர்
    பஞ்ச வன்தென்னன் பாண்டியற் காகவே.

    செங்கண் வெள்விடை யாய்திரு ஆலவாய்
    அங்க ணாவஞ்ச லென்றருள் செய்யெனைக்
    கங்கு லார்அமண் கையரிடுங் கனல்
    பங்க மில்தென்னன் பாண்டியற் காகவே.

    தூர்த்தன் வீரந் தொலைத்தருள் ஆலவாய்
    ஆத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
    ஏத்தி லாஅம ணர்கொளு வுஞ்சுடர்
    பார்த்தி வன்தென்னன் பாண்டியற் காகவே.

    தாவி னான்அயன் தானறி யாவகை
    மேவி னாய்திரு ஆலவா யாயருள்
    தூவி லாஅம ணர்கொளு வுஞ்சுடர்
    பாவி னான்தென்னன் பாண்டியற் காகவே.

    எண்டி சைக்கெழில் ஆலவாய் மேவிய
    அண்ட னேயஞ்ச லென்றருள் செய்யெனைக்
    குண்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர்
    பண்டி மன்தென்னன் பாண்டியற் காகவே.

    அப்பன் ஆலவா யாதி யருளினால்
    வெப்பந் தென்னவன் மேலுற மேதினிக்
    கொப்ப ஞானசம் பந்தன் உரைபத்துஞ்
    செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே.
    (பில்லி, சூனியம், செய்வினை ஆகியவற்றால் துன்புறுவோர் இந்த பதிகத்தை பாடி, ஈசனை தொழுதால் தீவினைகள் அண்டாது. மேலும் செய்தவருக்கே அந்த தீவினைகள் செய்து சேரும்). …………..சிவ.அ.விஜய் பெரியசுவாமி,கல்பாக்கம்‎

    1. வாவ் நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருக்காங்க போலே . பெரிய சாமீ அய்யாவுக்கு நன்றி . மேலும் திருபுவனம், அய்யாவாடி போன்ற ஸ்தலங்களும் இதற்கானவையே .

  5. பதிவு நன்றாக உள்ளது. தற்போது மக்களுக்கு மிகவும் வேண்டிய விபரங்களை கொடுத்துள்ளிர்கள்.
    நானும் தேவதை வைத்து ஏவல் செய்வது பற்றி கேள்விபட்டுள்ளேன். தேவதை என்பது அன்புக்கு கட்டுப்பட்ட தெய்வமா? அதனால் ஒருவர் அதை வசியபடுதினால் ஒரே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கூட தொல்லை கொடுக்குமா? இப்படி பரிகாரம் கேட்பவர்களுக்கு பெரியசாமி சார் அவர்கள் 2 தகவல் சொல்கிறார்
    எல்லோரும் நல்ல இருக்கணும் என்ற எண்ணம் ஏவல் செய்பவர்களுக்கு இருக்காதா?
    நிச்சயம் நம் குலதெய்வம் நம் தலை காக்கும்.
    குலதெய்வம் கோவிலுக்கும் போய் வர சொல்லுக்கள்.

  6. கும்பாபிஷேகம்:

    இன்னம்பூர் எழுத்தறிநாதர் திருக்கோவில்[96558 64958] & பூவரசன்குப்பம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில்[94439 59995]கும்பாபிஷேகம்:

    இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே.
    -திருநாவுக்கரசர்

    இன்னல் களைவன் இன்னம்ப் ரான்ற னிணையடியே
    -திருஞானசம்பந்தர்

    திரு இன்னம்பூர்

    எழுத்தறிநாதர்,அட்சரபுரீஸ்வரர், ஐராவதேஸ்வரர்

    சௌந்தரநாயகி, நித்யகல்யாணி,

    சுகுந்தகுந்தலாம், பூம்கொம்புநாயகி,

    இன்ன நம்பு ஊர்- சூரியன் வழிபட்ட ஸ்தலம்.
    இத்தல கோயிலின் விமானம் கஜபிருஷ்ட விமானமாகும். குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம் செய்து வைக்ககூடிய சிறப்பான ஸ்தலமாகும்.பள்ளி குழந்தைகள் இங்கு வந்து அர்ச்சனை செய்து கொள்ளலாம். இங்கு நெல்லில் எழுத பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு செம்பருத்தி பூவை தட்டில் பரப்பி எழுத பயிற்சி தரப்படுகிறது. பேச்சுத்திறமை இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது. இதனால் அறிவுக் கூர்மை பெறும். முற்காலத்தில் ஆதி சைவ அநதணராகிய சுதன்மன் என்பார். இப்பெருமானை பூசித்து கோயில் நிர்வாகத்தையும் வரவு செலவு செய்து வந்தார். வருடக் கணக்கை மன்னனிடம் அளிக்க மன்னனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையறிந்த நேர்மைமிக்க சுதன்மன் மனங்கலங்கி யீசனை வணங்கி முறையிட்டார்.மறுநாள் சுதன்வடிவில் அரசனிடம் சென்ற இறைவன் கோயில் கணக்கை குற்றமின்றி எடுத்துரைக்க சந்தேகம் நீங்கி மன்னன் மகிழ்ந்தான் சுதன்மன் கனவில் தோன்றிய இறைவன் நிகழ்ந்ததை எடுத்துரைக்க சுதன்மன் பரவசமாகி இறைவனை வணங்கிப் போற்றினார். இதனாலேயே அப்பர் பெருமானும் எழுதுங்கீழ்கணக்கு இன்னபூர் ஈசனே என்று போற்றிப்பாடுயுள்ளார். சூரியன் மேலும் ஆற்றல் பெற வேண்டி எழுத்தறிநாதரை வணங்கி அருள் பெற்றார். இன்றும் ஒவ்வொறு வருடமும் ஆவணி மாதம் 31ம் தேதியும், புரட்டாசி மாம்1,2ம் தேதியும் பங்குனி மாதம் 13,14,15 தேதிகளில் சூரியஒளியானது இறைவனின் திருமேனியில் படுவது சூரிய பூஜையாகும். சூரியன் வழிபடுவதற்காகவே இங்கு நந்திதேவர் விலகி அமைந்துள்ளார்.
    இக்கோயிலின் நடராஜப்பெருமான் விரிந்த சடாமுடியில் இடப்பக்கம் கங்காதேவியும், வலப்பக்கம் நாகமும் உள்ளது. இந்தநடராஜரை இவ்வூர் மக்கள் பெரியவர் என்றே அழைக்கின்றனர். சஷ்டியப்தபூர்த்தி (60 வது பிறந்த நாள்) பீமாசாந்தி (70 வது பிறந்த நாள்) ஹோமம் செய்து இக்கோயிலில் அருள்பெருவது மிகவும் விசேஷமாகும்.

    கும்பகோணம் சுவாமிமலை சாலையில்ப் பேருந்து சாலையில் புளியஞ்சேரிக்கு வடக்கே 2.கி.மீ தொலைவில் உள்ளது இன்னபூர் .
    ……………………………………………………………………………………………………..

    ஒரு தடவை சப்தரிஷிகள் இரண்யவத்தைக் காண விரும்பினர். அத்ரி, பரத்வாஜர், வசிஷ்டர், ஜமதக்னி, கௌதமர், காச்யபர், கௌசிகர் ஆகியவர்களே அந்த ஏழு ரிஷிகள்.அவர்களுக்காக திருமால் காட்சி கொடுத்த இடம் தான் பூவரசன்குப்பம். மற்ற இடங்களில் பயங்கரமான உருவில் காட்சியளிக்கும் நரசிம்மர் இங்கே தம்பதியர் போலவே காட்சியளிக்கிறார். தாயாரின் ஒரு கண் நரசிம்மரைப் பார்த்துக் கொண்டிருக்க, மற்றோர் கண் நம்மை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

    பல்லவ மன்னனை பிரம்மஹத்தி தோஷம் பிடிக்க, உடல் வேதனையால் துடிக்க, மன்னனின் கெட்ட காலம் ஆரம்பித்தது. மன்னன் பைத்தியம் பிடித்தவன் போலானான்.நாட்டை விட்டே வெளியேறினான் அவன். ஒரு நாள்… தென்பெண்ணையாற்றின் வடகரையில் ஒரு பூவரச மரத்தடியில் களைப்புடன் விதியை நொந்தபடி படுத்திருந்தான் மன்னன். திடீரென்று விழித்தபோது, அவன் மேல் ஒரு பூவரச இலை விழுந்திருந்தது. அந்த இலையின் அதிர்வைக்கூட அவனால் தாங்க முடியவில்லை. அந்த இலையை நகர்த்த எண்ணி அதைக் கையில் எடுத்தான். அதில் லட்சுமி நரசிம்மர் உருவம் தெரிந்தது. பூவரச இலையில் பூத்த முறுவலுடன் நரசிம்மர் அன்னையுடன் சேர்ந்து இருப்பதைக் கண்டான்.கைகள் கூப்பின. கண்ணீர் பெருகியது. அப்போது வானிலிருந்து ஒரு அசரீரி கேட்டது. `மன்னா, கோயில் கட்டுவதாக நினைத்தாலே கோடி புண்ணியம் உண்டாகும். நீ எத்தனை கோயில்களை இடித்திருக்கிறாய். அதற்குப் பிராயச்சித்தம் செய்தே ஆக வேண்டும்.இந்தப் பூவரச மரத்தடியிலேயே லட்சுமி நரசிம்மருக்கு கோவில் எழுப்பு. அதுவே பூவரசமங்கலம் எனப் பெயர் பெறும். இந்தக் கோயில் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உன் மனத்தில் எழுந்த மறுகணமே உனக்கு விடிவு காலம் பிறக்கும்’ என்றது.
    மன்னன் கோயில் கட்ட நினைத்த மறுகணமே அவன் உடலில் தெம்பு வந்தது.உடனே கோயில் கட்டும் வேலையில் ஈடுபட்டான். மனம் மாறவே மதமும் மாறியது. மன்னன் மறுபடியும் மாமன்னன் ஆனான். பூவரச மங்கலத்தில் லட்சுமி நரசிம்மப் பெருமாளின் அருளாட்சி தொடங்கியது.கருவறையில் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்தவல்லித் தாயாரை) அனைத்துக்கொண்டிருக்கிறார். வலது கை அருள் காட்டுகிறது.இடது காலை மடக்கி வைத்து அதில் லட்சுமியை அமர்த்தியுள்ளார். நரசிம்மருடைய மடியில் பெருமிதத்துடன் தாயார் அமர்ந்திருக்கிறார். வலக்கரம் அன்புக்கரமாக அண்ணலைத் தழுவிக் கொண்டிருக்கிறது. ஒரு கண் அண்ணலை நோக்குகின்றது.மற்றொரு கண் பக்தர்களை நோக்கியுள்ளது. சித்திரை மாதம் நடக்கும் நரசிம்ம ஜெயந்தியன்று சகஸ்ர கலக திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும். லட்சுமி நரசிம்மரை வேண்டினால் கடன் தீரும், பொருள் குவியும், சுவாதி நட்சத்திரத்தன்று விசேஷ வழிபாடுகள் உண்டு.விழுப்புரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ளது இந்த கோயில். விழுப்புரம் பண்ருட்டி சாலையில் கள்ளிப் பட்டியில் இறங்கினால் இத்தலம் மூன்று கி.மீ., விழுப்புரம் புதுச்சேரி சாலையில் சிறுவந்தாடில் இறங்கினால் இத்தலம் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

  7. அய்யாவாடி , திருபுவனம் ரெண்டும் கும்பகோணம் பக்கம் 6-7 கி மீ தூரம் . ப்ரத்யங்கிர கோயில் .நாம் தவறு ஏதும் செய்யாத மனுஷாளா இருக்கணும்

  8. இந்த தீவினை அகல நண்பர் ஒருத்தர் தன் சொந்த செலவில யாஹம் நடத்திக்கிட்டு வர்றார்( நள்ளாறு) . போய் கலந்துக்கலாம் , நம்மால் இயன்ற சாமான் (நெய், சமித்து ) வாங்கி கொடுக்கரதுன்னாலும் கொடுக்கலாம் .

  9. பில்லி, சூனியம், ஏவல் தீர மற்றும் இழந்த பதவியை பெற கும்பகோணம்- மயிலாடுத்துறை சாலையில் 9 கி.மீ தொலைவில் உள்ள திருபுவனம் கோவிலுக்கு செல்ல வேண்டும்.இந்த சிவாலயத்தில் உள்ள மூலவரான நடுக்கம் தீர்த்த நாதரை வணங்கினால் பில்லி, சூனியம், ஏவல் பிரச்சனைகள் தீரும். ஸ்ரீ சரபேஸ்வரரை ஞாயிறு மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் வழிபடுவது மிகவும் நல்லது.

  10. பயனுள்ள தகவல்கள் – மிக்க நன்றி !!!

    மனமுருக வழிபடுவோம் – மனக்குறைகள் நீங்கி பயன் பெறுவோம் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *