அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நம் தளத்தில் சிறப்பு பதிவுகள் இடம் பெறும்.
நன்றி!
=======================================================================
எல்லா நட்சத்திரங்களும் சிறப்பு மிக்கவைதான் என்றாலும், குறிப்பிட்ட தமிழ் மாதத்தில் வரும் சில நட்சத்திரங்கள் இன்னும் விசேஷமானவை. வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், தைப்பூசம், மாசி மகம் இப்படி. இந்த வரிசையில் பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பானது.
அப்படி என்ன சிறப்பு இந்த நாளுக்கு உள்ளது?
சந்திரன் பவுர்ணமி நாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான். ஆனால், பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் இருப்பதால், உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து, ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று, முழு கலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்குவான். அந்த பூரண பவுர்ணமி நிலாவில் களங்கத்தைக் காண முடியாது. களங்கமில்லாத சந்திர ஒளி உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி தரும். பல நற்பலன்களை கொடுக்கும். எனவே, இந்த நாள் கூடுதல் பலன்களை தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது.
தெய்வமணம் கமழும் எண்ணற்ற திருநாட்களுள் பங்குனி உத்திரத்திரு நாளும் ஒன்று. இத்திருநாளை தெய்வீகத்திருமண நாளாகவே இந்து சமயம் போற்றி கொண்டாடுகிறது. பங்குனி மாதம் பவுர்ணமி திதியோடு உத்திரம்நட்சத்திரமும் சேர்ந்து வரும் திருநாளான பங்குனி உத்திரம் திருநாளில் தான் அநேகர தெய்வீக திருமணங்கள் நடந்தேறியுளளன. இந்நாளை கல்யாண விரதம் என்றும் அழைப்பர்.
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் பவுர்ணமி வரும் நாளில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. சந்திரன் உத்திர நட்சத்திரத்தில் இருப்பதால் இவ்விழாவிற்கு இப்பெயர் ஏற்பட்டது. இந்நாளை கல்யாண விரதம் என்றும் அழைப்பார்கள். இந்நாளில் குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது; காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது; மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது; ராமர் சீதையை மணந்தது; லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது; இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது; திருப்பரங்குன்றத்தில் முருகன் – தெய்வானை திருமணம் நடந்தது; ஆண்டாள் – ரங்கமன்னார் திருமணம் நடந்தது; அர்ச்சுனன் பிறந்தது ஆகிய அனைத்தும் நடந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான். சமஸ்கிருதத்தில் பங்குனி மாதத்திற்கு பல்குணன் என்று பெயரும் உண்டு.
இந்த பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார். சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார். ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயிர்பித்த நாளும் இதுதான். மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள். இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் நாமும் இறைவனை பிரார்த்தித்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம்.
சுருங்கக் கூறின்…. பங்குனி உத்திரத் திருநாளில்….
* முருகன் – தெய்வயானை திருமணம்
* ஸ்ரீராமர் – சீதை திருமணம்
* சுந்தரேஸ்வரர் – மீனாட்சி திருமணம்
* ஆண்டாள் – ரங்கமன்னார் திருமணம்
* ரதிக்காக மன்மதனை சிவபெருமான் எழுப்பித் தந்த நாள்
* அர்ஜூனன் அவதார நாள்
* சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் பிறந்தநாள்
ஆகியவை நடந்துள்ளன.
பங்குனி உத்திரம் நாளன்று என்ன செய்யவேண்டும்?
காலை சற்று சீக்கிரம் எழுந்து அத்யாவசிய பணிகள் முடிந்து குலதெய்வம் கோயிலுக்கு சென்ற வாருங்கள் நஞ்சென வந்த துன்பங்கள் பஞ்சென பறந்திடும். புண்ணியம் வேண்டுமா? கல்யாணவிரதம் எனும் பங்குனி உத்திரத்தன்று விரதமிருந்து வழிபடலாம். நாளை முருகன்கோயில், சிவன் கோயில்களுக்கு அனைவரும் சென்றுவரவேண்டும்.
பங்குனி உத்திர நாளில் சிவனை கல்யாணசுந்தர மூர்த்தியாக நினைத்து விரதம் இருக்க வேண்டும். இந்த விரதம் இருந்துதான் தேவர்களின் தலைவன் இந்திரன் இந்திராணியையும், மகாலட்சுமி மகாவிஷ்ணுவையும் மணந்தனர். பிரம்மா தன் நாவில் சரஸ்வதி இருக்கும் வாய்ப்பை பெற்றதும், சந்திரன் 27 கன்னிகளை மனைவியாக அடைந்ததும் இந்த விரதத்தை கடைபிடித்து தான். காளையர்களும் இந்த விரதத்தை கடைபிடித்து தங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை அடையலாம்.
நல்ல மணவாழ்க்கை வேண்டுவோர் இந்நாளில் சிவபார்வதியை வேண்டி விரதம் மேற்கொள்ளவேண்டும். ஓம் சிவாயநம, ஓம் பராசக்திநம என்ற நாமத்தை 108 முறை ஜெபிக்கவேண்டும். மதியம் ஒருவேளை உணவு உண்ணலாம். இயலாதவர்கள் காலை, இரவு பால் பழம் சாப்பிடலாம். இவ்விரதத்தினை முருகப்பெருமானை வேண்டியும் மேற்கொள்ளலாம். மாலை கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும்.
பங்குனி உத்திரத்தன்று விரதம் இருந்து வழிபடுவது நல்லது. இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்வது மிகவும் விசேஷம் என்று கூறப்பட்டுள்ளது. ஜாதகத்தில் பல்வேறு தோஷங்கள் ஏற்பட்டு திருமண தடை ஏற்படுபவர்கள், குறிப்பாக செவ்வாய் தோஷம் காரணமாக தொடர்ந்து கல்யாண தடங்கலை சந்திப்பவர்கள் பங்குனி உத்திரத்தன்று முருகப் பெருமானை மனதார வணங்கி வழிபட்டால் எல்லா தடைகள், தடங்கல்கள், இடையூறுகளும் நீங்கி சுபயோக சுபவாழ்வு அமையும் என்பது ஐதீகம். முருகனை வழிபட்டு சகல நலன்களும் பெறுவோமாக.
(நன்றி : தினமலர்.காம், மாலைமலர்.காம், தினகரன்.காம்)
===================================================
பங்குனி உத்திரம் குறித்து தெரியாத வாசக அன்பர்கள் இது பற்றி கடைசி நேரத்தில் தெரிந்துகொண்டதால் எங்களால் எதுவும் செய்ய இயலவில்லை என்று வருந்தவேண்டாம். நேரமின்மையால் இது குறித்த பதிவை முன்கூட்டியே அளிக்க முடியவில்லை. அனைவரும் மன்னிக்கவேண்டும்.
மாசிமகம், பங்குனி உத்திரம் போன்ற முக்கிய நாட்கள் வரும் காலகட்டங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த ஆண்டு, முன்கூட்டியே திட்டமிட்டு முழுமையான மனதிருப்தியுடன் விரும்பும் கோவிலுக்கு தகுந்த முன்னேற்பாடுடன் சென்று வரலாம் அல்லது விரும்பும் படி முழுமையான விரதம் இருக்கலாம்.
பங்குனி உத்திரத்தன்று விரதமிருக்க இயலாதவர்கள் காலையோ அல்லது மாலையோ சிவாலயங்கள் அல்லது முருகனின் ஆலயங்களுக்கு சென்று அர்ச்சனை செய்து விளக்கேற்றி வழிபடவும். இது போன்ற விசேட நாட்களில் அசைவ உணவு தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம்.
கூடுமானவரை இது போன்ற விசேட நாட்களை பற்றிய பதிவுகளை இரண்டு அல்லது மூன்று நாட்கள் முன்னரே அளிக்க முயற்சிக்கிறோம்.
நன்றி!
===================================================
சுந்தர் சார்,
பங்குனி உத்திரம் பற்றிய பதிவு அருமை.
நல வாழ்த்துக்கள்.
நன்றி.
சுந்தர்ஜி, படங்கள் மற்றும் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. விரைவில் நல்ல மனையாள் அமைய வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு நன்றிகள் பல….
இது வரை தெரியாத பல செய்திகள் …நன்றி சுந்தர்
Adiyen starum Uthiram than…
Anal Chitirai Madham…:(
பங்குனி உத்திரம் பற்றி தெய்விக படங்களுடன் நல்ல விளக்கம். நன்றி.
I thought ‘Panduni Uthiram’ is only special for Murugar. From your post only came to know many other good things about the day. Thank you very much for sharing. I was searching for Murugar temple, but after reading this I went to Thiruvanmiyur ‘Marundeeswarar’ temple.
Thank you Ji!
பங்குனி உத்திரம் மிக சிறப்பான ஒரு நாள் அணைத்து கடவுள்களும் மகிழும் நாள்
இந்த பதிவை பார்த்தவுடன் எப்படியாவது அலுவலகத்திலிருந்து சீக்கிரம் கிளம்பி முருகன் கோவிலுக்கு சென்று விட வேண்டும் என்று முடிவி செய்து விட்டேன். நேற்று தினமலர் நாளிதழில் எங்கள் வீட்டுக்கு அருகில் (3km) ரத்தினகிரி முருகன் கோவிலை பற்றி (http://temple.dinamalar.com/en/new_en.php?id=772) ஒரு கட்டுரை படித்தேன். உடனே அந்த கோவிலுக்கு செல்ல முடிவெடுத்து விட்டேன். மாலை 7.30 க்கு அந்த கோவிலுக்கு சென்றால் அப்படி ஒரு கூட்டம். மலை மீது ஏறி முருகனை தரிசித்து விட்டு, அன்னதானம் சாப்பிட்டு விட்டு, ஒரு சிறிய தொகை அன்னதானத்திற்கு வழங்கிவிட்டு வந்தேன்.
மன நிறைவாக இருந்தது.
இரண்டு வருடங்களாக இந்த ஏரியாவில் இருந்தாலும் இந்த கோவிலை பற்றி கேள்விபட்டது கூட கிடையாது. உங்கள் பதிவை படித்தவுடன் இந்த கோவில் பற்றி தகவல் பேப்பர் மூலமாக தெரிய வந்தது. எல்லாம் அவன் செயல். நன்றி.
மிக்க மகிழ்ச்சி சக்திவேல்!
பதிவை படித்துவிட்டு எவரேனும் பாராட்டும்போது கிடைக்கும் மகிழ்ச்சியைவிட, இப்படி ஒருவர் ‘இன்ன கோவிலுக்கு சென்றேன்’ சொல்லும்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. காரணம்… நான் வாசகர்களிடம் எதிர்பார்ப்பது அதைத் தான். நல்ல செயல்களுக்கு கூடுமானவரை கருவியாக இருப்பதே என் கடமை.
மற்றபடி நண்பர்களே… நண்பர் சக்திவேலுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் இறையருளால் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.
– சுந்தர்
அரிய செய்தியை அளித்தமைக்கு மிக்க நன்றி !!!
Here, near my house we have a Lions Club, where there was pooja for ayyappa, Murugan, Shivan, and Vishnu.
I went in the morning, and helped them to clean all the flowers, Tulsi etc. we had vilakku poojai with ayyappa sahsranamavali. God made me to give flowers to the people who were doing pooja.
Annadanam was for all and specially mentally retarded children were felicitated. Helped to serve food for them. By divine grace “Panguni Uhtiram” day was a very fruitful day for me.
shashi
நீங்கள் கொண்டாடியது தான் உண்மையான தைப்பூசம். நிச்சயம் இறைவன் மனம் குளிர்ந்திருக்கும்.
வளர்க உங்கள் தொண்டு.
– சுந்தர்
Nasmaskarams
I also collevtively join this club for all in good health and wealth.
Krishnamurthy
நல்லதொரு பதிவை அளித்தமைக்கு நன்றி .
பங்குனி உத்திர நாளில் சிவனையும் வழிபட்டு விரதம் இருந்து நஞ்சநென வந்த துன்பம் பஞ்சென பறக்க வைத்து புண்ணியம் தேடுவோம்.
எல்லா படங்களும் அருமை.
கண்டிப்பா நாளை ஏதேனும் ஒரு கோவிலுக்கு செல்லவேண்டும்.
பங்குனி உத்திரம் அன்று முழு நாள் விரதம் இருந்தோம். அன்று இரவு திருநீர்மலையில் கல்யாண உற்சவம் கண்டுகளித்தோம். மிகவும் அற்புதமாக இருந்தது. உற்சவம் முடிய 11 மணி ஆகி விட்டது. மறக்க முடியாத நாள் ஆக அமைந்தது
பதிவு மிக அருமை. photos are excellent .
சபரி ஐய்யப்பன் பிறந்த நாள் மார்கழி உத்திரம் .
நன்றி
உமா
This year, Panguni uththiram falls on 3.4.2015. I hereby request your goodself to publish an article about Panguni Uthiram before 2 days to enable our readers to act accordingly. Thanks in advance.
Regards
Uma Venkat