Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, December 8, 2024
Please specify the group
Home > Featured > இனி கும்பகோணம் மகாமகம் செல்பவர்கள் கவனத்திற்கு…

இனி கும்பகோணம் மகாமகம் செல்பவர்கள் கவனத்திற்கு…

print
ந்த ஆண்டு மகாமகம் நமக்கு மறக்க முடியாத பசுமையான பல நினைவுகளை தந்துள்ளது. முதல் முறை நண்பர்களுடன் சென்று (Feb 19) நீராடியது. அடுத்த முறை (March 1) பெற்றோருடன். மாசி மாதம் முழுதும் (மார்ச் 13 வரை) மகாமக புனித நீராடலாம் என்பதால் இனி மகாமகம் செல்பவர்கள் கவனத்திற்கு விஷயங்களை சொல்ல கடமைபட்டிருக்கிறோம்.

Mahamagam 1
கும்பேஸ்வரர் கோவில் முகப்பில் கஜ தரிசனம்!

* முறைப்படி மகாமகம் நீராடவேண்டும் என்றால் இரண்டு நாட்கள் அங்கு இருக்கவேண்டும். மகாமகக் குளம் என்பது திருக்குளம் அல்ல. அமுதம் சிந்திய புனித பூமி. அதுவே பல புனித தலங்களுக்கு சமமானது. எனவே எடுத்தவுடன் ஏதோ நீர்நிலையில் நீராடுவது போல குளத்தில் இறங்குவது கூடாது. முதலில் பஞ்சகுரோசத் தலங்கள் என்று சொல்லப்படும் திருவிடைமருதூர், திருநாகேசுவரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் ஆகிய தலங்களை தரிசித்துவிட்டு பின்னர் ராமசாமி திருக்கோவில், சக்கரபாணி, சாரங்கபாணி, உள்ளிட்ட வைணவ தலங்களை தரிசித்துவிட்டு பின்னரே மகாமகக் குளத்தில் ஸ்நானம் செய்யவேண்டும்.

Mahamagam 4
மகாமகக் குளத்தருகே கோ தரிசனமும் கோபுர தரிசனமும்!

* ஆனால் ஒரே நாள் பயணம் என திட்டமிடுபவர்கள் என்ன செய்யலாம் என்றால் காலை கும்பகோணம் நகரில் உள்ள முக்கியத் தலங்களை தரிசித்து விட்டு (எந்தெந்த தலங்களை தரிசிக்க முடியும் என்பதை கீழே விளக்கியிருக்கிறோம்) மதியம் நீராடுவது வைத்துக் கொண்டால் சுலபமாக இருக்கும். அது தான் முறையும் கூட.

* காலை குடந்தை சென்று இறங்கியவுடன் குளித்து முடித்து சுத்தமாகி நேரத்தை வீணடிக்காது உடனே கோவில்களை தரிசிக்க செல்லவேண்டும்.

* நாம் இரண்டாம் முறை சென்றது (01/03/2016) வேலை நாள் என்பதால் கூட்டம் குறைவு. ஆனால் கடந்த ஞாயிறு மட்டும் 5 லட்சம் பேருக்கு மேல் வந்ததாக தெரிகிறது. இந்த வார இறுதியும் நல்ல கூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.

Mahamagam 2
மங்களாம்பிகை சமேத கும்பேஸ்வரர் கோவில் ராஜகோபுரம்!

* முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் மாலை 6.00 மணிக்கு மகாமகக் குளம் உட்பட அனைத்து தீர்த்தங்களும் அடைக்கப்பட்டு விடுகின்றன. பொதுமக்கள் அதற்கு மேல் நீராட அனுமதிக்கப்படுவதில்லை. நீராடுபவர்கள் plan accordingly.

* ஆலயம் செல்லும்போது காலணிகளை நீங்கள் தங்குமிடத்திலேயே விட்டுவிட்டு (வயதானோர் விதிவிலக்கு) செல்வது நல்லது. காரணம் கும்பகோணம் மண்ணை மிதிப்பது அந்த மண்ணில் உங்கள் காலடி தடங்கள் படுவது மிகவும் நல்லது. (* வாழ்நாளில் ஒரு முறையேனும் சிதம்பரம் மண்ணை மிதித்தவர்களுக்கும் குடந்தை மண்ணை மிதித்தவர்களுக்கும் மேலோகத்தில் சிறப்பு சலுகை உண்டு!)

Mahamagam 6
மார்ச் 1 காலை மகாமகக் குளத்தில் காணப்பட்ட கூட்டம்….

* காலை 11.00 மணிக்கு மேல் வெயிலில் வெறுங்காலுடன் நடக்கமுடியாது என்பதால் காலை 6.00 – 11.00 க்குள் கும்பகோணத்தின் பிரதான கோவில்களை தரிசித்துவிடவேண்டும். ஆங்காங்கு ஆட்டோ அமர்த்திக்கொள்ளுங்கள். நான்கு பேர் ஏறினால் கூட கட்டணம் ரூ.50/- தான். கும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், நாகேஸ்வரர், சாரங்கபாணி, சக்கரபாணி, ராமஸ்வாமி உள்ளிட்ட தலங்களை காலை 11.00 க்குள் தரிசிக்க முடியும். (கூட்டமிருந்தால் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ரூ.30/- பெற்று செல்லலாம்.)

Mahamagam 8

* மதியம் திரும்ப அறைக்கு வந்து மதிய உணவை முடித்து ஓய்வெடுத்துகொள்ளுங்கள். (ஓய்வெடுக்கும்போது பாயிலோ, படுக்கையிலோ படுக்காமல், வஸ்திரத்தின் மீதோ மடி துணி மீது படுக்கவும்).

* பிற்பகல் 3.00 மணிக்கு மேல், வெயில் தாழ்ந்தவுடன் காலணி இன்றி மகாமகக் குளம், பொற்றாமரை குளம், காவிரி ஸ்நானம் ஆகியவற்றில் ஸ்நானம் செய்துவிட்டு முடித்து பின்னர் அங்கேயே உடை மாற்றி (உடை மாற்றும் அறைகள் ஆங்காங்கே உண்டு) கும்பேஸ்வரரையும் சாரங்கபாணி / சக்கரபாணியை தரிசிக்கவும். ஈரத் துணியுடன் ஆலயம் செல்வதை தவிர்க்கவும். அத்துடன் மகாமக தரிசனத்தை நிறைவு செய்யலாம். இன்றைய அவசர சூழலில் இப்படித் தான் செய்ய முடிகிறது.

* மீண்டும் நினைவூட்டுகிறோம் மாலை 6.00 மணிக்கு மேல் அனைத்து குளங்களும் நீர்நிலைகளும் அடைக்கப்பட்டுவிடும் என்பதால் நன்கு திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

Mahamagam 5
அன்று மாலை…!

* பிப்ரவரி 17 – 20 வரை நீராடியவர்களே அந்த FESTIVAL Atmosphere ஐ உணர்ந்து மகிழ்ந்து நீராடியிருப்பார்கள் என்பது உறுதி. காரணம் அதற்கு பின்னர் நாளுக்கு நாள் பெருகி வந்த கூட்டத்தை மனதில் கொண்டு எந்த வித அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கை காரணமாக ஸ்நானம் செய்யும் முறைகளிலும் குளத்திலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி விட்டார்கள். மகாமகத்துக்கு (Feb 22) முந்தைய நாள் குளத்தில் தீர்த்தங்களை உணர்த்தும் பெயர்ப் பலகைகளை அப்புறப்படுத்திவிட்டார்கள். 21 மற்றும் 22 கட்டுக்கடங்காத கூட்டம் என்பதால் பின்னர் நீராடிய எவராலும் அனுபவித்து மகிழ்ந்து நீராட முடியவில்லை. Anyway Mahamagam is Mahamagam. We have to wait for another 12 years.

சந்தேகங்களுக்கு நம்மை தொடர்புகொள்ளலாம்… நன்றி!

– Rightmantra Sundar | E : editor@rightmantra.com | M : 9840169215

**************************************************************

  • குடந்தை மகான் கோவிந்த தீட்சிதர் குறித்து மேலும் எழுதும்படி சில வாசகர்கள் கோரிக்கைவிடுத்திருக்கிறார்கள். சிறப்பு ஓவியத்துடன் அப்பதிவு தயாராகி வருகிறது. விரைவில் அளிக்கப்படும்.
  • மகா சிவராத்திரி நெருங்குவதையொட்டி தொடர் பதிவுகள் அளிக்கப்படும். தளத்திற்கு விடுமுறை கிடையாது.

**************************************************************

மகாமகம் குறித்து மகா பெரியவா…

“நம்முடைய இந்து சமயத்துக்கு தலைவர்கள் எல்லாம் மிகக்குறைவு. நதிகள், புண்ணிய ஷேத்திரங்கள், பகவான் இவர்கள் தாம் தலைவர்களாயிருந்து எல்லா மக்களையும் அழைத்துச் செல்லுகிறார்கள். திருப்பதி வேங்கடாசலபதி ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்களை தம் வசம் இழுத்து பக்தி மார்க்கத்தை வளர்த்துக் கொள்கிறார்.

Maha periyava mahamagam

கும்பமேளா போன்ற புண்ணிய தீர்த்த காலங்களில் புண்ணிய தீர்த்தமே லட்சக்கணக்கான ஜனங்களையும் இழுத்து ஹிந்து மதத்தை மறுமலர்ச்சியுடன் வளர்த்துக் கொண்டு வருகிறது. இந்து மதத்துக்கு தலைவர்களைக் காட்டிலும், தெய்வீகமான உள்ள புண்ணிய தீர்த்தங்களும், பகவானுமே தான், பெரிய தலைவர்களாயிருந்து எல்லா மக்களையும் நல்வழிப்படுத்துவது கண்கூடாக உள்ளது. அப்படிப்பட்ட மகாமகப் புண்ணிய ஷேத்திரம் கும்பகோணம். அனைவரும் புண்ணிய ஸ்நானம் செய்து தங்கள் உடல் அழுக்கைப் போக்குவதோடு உள்ளத்தில் தூய்மையும், புனிதத்தையும் பெற வேண்டும் உள்ளத்தின் அழுக்கைப் போக்கிக் கொள்ளுவதுதான் ஸ்நானத்தினுடைய முக்கிய விசேஷம்.

அந்த வகையில் மகாகமக புண்ணிய காலத்தில் ஸ்நானம் செய்வதால் எல்லா விதமான பாவங்களையும் நீக்கும். தேசம், காலம், சத்பாத்திரம் எல்லாம் எங்கே ஒன்றாக கூடுகிறதோ அங்கே தானம் ஸ்நானம் எல்லாம் விசேஷமாகச் சொல்ப்பட்டிருக்கிறது.”

**************************************************************

Rightmantra needs your support!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Motivation, Self-development and True values without any commercial interest. Join our ‘Voluntary Subscription’ scheme to run this website without break. Donate us liberally. Your contribution really makes a big difference.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135  | Account type : Current Account  | Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

========================================================

Also check :

மகாமகம் 2016 : அமுதக் கடலில் சில மணித்துளிகள்! ஒரு மகா அனுபவம்!!

மகாமகம் 2016 – கும்பகோணம் மகாமக குளத்தில் எப்போது நீராடலாம்?

2015 ஆம் ஆண்டு மாசிமக தீர்த்தவாரி கவரேஜ் !

சுடரொளி பரந்தன சூழ்திசை எல்லாம் – மாசிமக தீர்த்தவாரி 2015 @ சென்னை மெரீனா!

2014 ஆம் ஆண்டு மாசிமக தீர்த்தவாரி கவரேஜ் !

ஒரே இடத்தில் அனைத்து தெய்வங்களும் எழுந்தருளிய மாசிமக தீர்த்தவாரி – Excl. Coverage!

2013 ஆம் ஆண்டு மாசிமக தீர்த்தவாரி கவரேஜ் !

மெரினாவில் 26 உற்சவ மூர்த்திகள் எழுந்தருளிய மாசி மக தீர்த்தவாரி!

========================================================

[END]

One thought on “இனி கும்பகோணம் மகாமகம் செல்பவர்கள் கவனத்திற்கு…

  1. Excellent and Useful Info about Mahamaham. I will tell to my friends and relatives and neighbours circles who are planning to go to Mahamaham.

    Thank You for Your Useful Information.

    S.Narayanan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *