Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > விஸ்வரூப தரிசனமும் மகத்துவம் நிறைந்த மார்கழி மாதமும்!

விஸ்வரூப தரிசனமும் மகத்துவம் நிறைந்த மார்கழி மாதமும்!

print

நாளை (16/12/2016 வெள்ளி) மார்கழி மாதம் துவங்குகிறது. கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் “மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று கூறியிருப்பதிலிருந்தே இம்மாதத்தின் மகத்துவத்தை உணரலாம். இது பற்றி நம் தளத்தில் பல பதிவுகள் வெளிவந்துள்ளன.

இருப்பினும் மார்கழி மாதத்திற்கே உரிய ‘விஸ்வரூப தரிசனம்’ பற்றி இந்த பதிவில் பார்ப்போம். சில ஆண்டுகளுக்கு முன்னர் நம் தளத்தில் அளித்த பதிவு தான் இது. புதிய வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக சற்று மெருகூட்டி தந்திருக்கிறோம்.

  • இந்த மாதம் முழுவதும் விடியற்காலையில் எழுந்து நீராடி, ஆலயம் சென்று இறைவனை தரிசித்து திருவெம்பாவை, திருப்பானவை படிப்பது மிகவும் விஷேஷம். அளவற்ற நற்பலன்களை தரும். மார்கழி விடியற்காலை தூங்குவதற்கு உரியது அல்ல. இறைவழிபாட்டிற்கு உரியது.

இனி பதிவுக்கு செல்வோம்…

விஸ்வரூப தரிசனம்!

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது இது. அடியேனின் தங்கை அப்போது ஸ்ரீவில்லிப்புதூரில் இருந்தார். தங்கை வீட்டிற்கு ஒரு முறை சென்றபோது ஒரு நாள் அதிகாலை ஆண்டாள் கோவிலுக்கு விஸ்வரூப தரிசனத்திற்கு சென்றிருந்தோம். அப்போது மார்கழி மாதம் என்று நினைக்கிறேன். என்னுடன் சேர்த்து ஒரு 20 அல்லது 25 பேர் விஸ்வரூப தரிசனத்திற்கு காத்திருந்தனர்.

srivilliputhur-22-copy

தரிசனத்திற்கு காத்திருந்தவர்களில் சுமார் 15 பேர் கண் பார்வையற்றவர்கள். அந்த காலை நேரத்திலும் அவர்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்திருந்தது என்னை வியக்கவைத்தது. நாங்கள் இங்கே நின்றிருக்க, எங்களுக்கு எதிர் வரிசையில் அவர்கள் நின்றிருந்தனர்.

விஸ்வரூப தரிசனம் என்றால் அதிகாலை முதல் தரிசனம் என்று பொருள். அதாவது இறைவனை அவன் திருமஞ்சனத்திற்கு முன்னர் அவனது முந்தைய தினத்தின் அலங்காரத்தில் தரிசிப்பது. (‘திருமஞ்சனம்’ என்னும் சொல், இறை உருவங்களுக்கு நடைபெறும் நீராட்டுதலைக் குறிக்கும்.)

அப்போது என் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவர் அர்ச்சகரிடம், “ஸ்வாமி… நாங்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்திருக்கிறோம் என்றால் அது யதார்த்தமானது. திரை விலக்கப்பட்டதும் எங்களால் பகவானையும் பிராட்டியாரையும் பார்க்க முடியும். ஆனால் பார்வையற்ற இவர்களும் வந்திருக்கிறார்களே…? அதுவும் இந்த காலை வேளையில்? இவர்களால் எதுவும் பார்க்க முடியாதே… அப்படியிருந்தும் வந்திருக்கிறார்களே… இதன் தாத்பரியம் என்னவோ?” என்று ஏதோ தனக்கு தோன்றியதை கேட்டுக்கொண்டிருந்தார்.

andal

அர்ச்சகர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற்பட, அவர்களுக்கு சற்று பக்கத்தில் சென்று நின்றுகொண்டேன்.

“நீங்கள் நினைப்பது தவறு. நம்மை விட பகவானை அவர்கள் அதிகம் உணரமுடியும். சாதரணமாக பக்தர்கள் சென்று ஆலயங்களில் இறைவனை பார்பதை ‘தரிசனம்’ என்கிறோம். அதாவது நாம் சென்று இறைவனை பார்ப்பது தரிசனம். ஆனால் இறைவன் நம்மை பார்ப்பது விஸ்வரூப தரிசனம். காலை முதன்முறை தனக்கு முன் இருக்கும் திரை விலக்கப்பட்டதும், தன்னை பார்க்க யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று இறைவன் பார்ப்பார். அவரது அருட்பார்வை நேரடியாக நம் மீது விழும். அது தான் விஸ்வரூப தரிசனத்திற்கு உள்ள சிறப்பு. இப்போது இந்த விஸ்வரூபத்தில் பகவானை இவர்கள் பார்க்கமுடியாவிட்டாலும் பகவான் இவர்களை பார்ப்பார் அல்லவா? இறைவனை நாம் பார்க்க முடியாவிட்டாலும் இறைவன் நம்மை பார்க்கட்டும் என்று இவர்கள் வந்திருக்கிறார்கள்!” என்றார்.

எப்பேர்ப்பட்ட தத்துவம்… எப்பேர்ப்பட்ட உண்மை….! காலங்காலமாக கோவிலுக்கு செல்பவர்களுக்கு கூட விஸ்வரூப தரிசனத்தின் பொருள் தெரியுமா என்று தெரியாது. ஆனால் பார்வையற்றவர்கள் ஒரு பேருண்மையை உணர்ந்து அவனை சேவிக்க வந்திருக்கிறார்கள் என்பதை எண்ணி உருகினேன்.

எனவே இறைவனின் அருட்பார்வை தங்கள் மீது விழவில்லையே என்று ஏங்குபவர்கள், உங்கள் பகுதியில் உள்ள தொன்மையான ஆலயத்தில் தினசரி விஸ்வரூப தரிசனத்திற்கு சென்று வாருங்கள். விரைவில் அவனது அருட்பார்வை உங்கள் மீது விழுந்து உங்கள் துன்பங்கள் யாவும் ஒரு முடிவுக்கு வரும் என்பது உறுதி.

குறிப்பு : நாளை மார்கழி துவங்குகிறது. மார்கழி மாதம் தினசரி தவறாமல் கோவிலுக்கு சென்றால் வருடம் முழுதும் கோவிலுக்கு சென்ற புண்ணியம் கிட்டும். அப்படியென்றால் மார்கழி மாதம் முழுதும் இறைவனின் விஸ்வரூப தரிசனத்தை கண்டால் அதன் பலன் என்ன என்று யூகித்துக்கொள்ளுங்கள். எனவே தான் மற்ற நாட்களில் ஆலயங்களுக்கு சென்று இறைவனை தரிசிக்க முடியாதவர்கள் மார்கழி மாதத்தை தவறவிடக்கூடாது. சாதாரண நாட்களில் கூட அனைத்து ஆலயங்களிலும் விஸ்வரூப தரிசனம் உண்டு என்றாலும் மார்கழி மாதம் காலை 5.00 – 5.30 க்குள்  விஸ்வரூப தரிசனம் கிடைக்கும். அதாவது சூரிய உதயத்திற்கு முன்பு.

கடந்த சில ஆண்டுகளாக மார்கழி முழுதும் நாமும் நண்பர் மாரீஸ் கண்ணனும் நந்தம்பாக்கம் கோதண்டராமர் கோவிலுக்கு தினசரி அதிகாலை சென்று வந்தது நினைவிருக்கலாம்.

(மாரீஸ் கண்ணன் தற்போது அலுவலகத்தில் ப்ரோமோஷன் மேல் ப்ரோமோஷன் பெற்று எங்கோ சென்றுவிட்டார்!)

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

Our A/c Details

Name : Rightmantra Soul Solutions   A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account   Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

==========================================================

Also check :

மார்கழியில் என்ன செய்யலாம் ? என்ன செய்யக்கூடாது ?

சாதனையாளர்கள் அனைவரிடமும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

அடேங்கப்பா…..மார்கழி மாசத்துக்கு இவ்வளவு சிறப்பு இருக்கா? MUST READ

மிளகளவு கைங்கரியமும் மலையளவு புண்ணியமும்! மார்கழி முதல் நாள் தரிசனம்!!

ஏற்பது இங்கே இகழ்ச்சியல்ல!

எதை தவற விட்டாலும் மார்கழியை தவற விடவேண்டாம்!

மார்கழி முதல் நாள் : பெருமாளின் விஸ்வரூப தரிசனமும் கோ-பூஜையும் காணக்கிடைத்த அனுபவம்!

==========================================================

[END]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *