Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > நன்றி மறவா நல்லவர் ‘நடிகர் திலகம்’, மகா பெரியவாவை சந்தித்த அந்த தருணம்…

நன்றி மறவா நல்லவர் ‘நடிகர் திலகம்’, மகா பெரியவாவை சந்தித்த அந்த தருணம்…

print
சினிமாவில் நடிக்க வந்த கணேசனுக்கு ஏ.வி.எம் ஸ்டூடியோவில் மேக்கப் டெஸ்ட் எடுத்தார்கள். இந்த சமயத்தில் படத்தை முதலில் இயக்குவதாக இருந்த ஏ.எஸ். சாமிக்குப் பதிலாக கிருஷ்ணன் பஞ்சுவை படத்தின் இயக்குநராக நியமித்திருந்தார்கள். அதேபோல் திருவாரூர் தங்கராசுக்குப் பதிலாக ‘பராசக்தி’ படத்திற்கு மு.க வசனம் எழுதும்படி ஆகியது. கணேசனை மேக்கப் டெஸ்ட் முடிந்ததும் ‘சக்சஸ்’ என்ற ஆங்கில வார்த்தையைச் சொல்ல சொன்னார்கள். கணேசனும் ‘சக்சஸ்’ என்று சொன்னார்.

Sivaji Ganesan‘சக்சஸ்’ என்று கூறியது ‘சத்தத்’ போல் கேட்பதாகவும், மீன் மாதிரி வாயத் திறக்கிறான் என்றும் சவுண்ட் என்ஜினியர்கள் கேலியும் கிண்டலும் செய்தனர்.

ஆயிரக்கணக்கான கலைஞர்களை தமிழ் சினிமாவிற்கு உருவாக்கித் தந்த ஏ.வி.எம் செட்டியாரோ ‘ஏம்பா இந்தப் புது பையனப் போட்டு விஷப் பரீட்சை செய்றீங்க. கே.ஆர். ராமசாமி அல்லது டி.ஆர். மகாலிங்கம் போன்றவர்களை நடிக்கச் சொல்லி படத்தை முடியுங்க’ என்று சொல்லியிருக்கிறார். மற்றவர்களும் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

இவ்வளவு தூரம் கணேசனை பலர் அவமானம் செய்தும் ‘கணேசனை வைத்துப் படத்தை எடுக்காதீர்கள்’ என்று பி.ஏ. பெருமாளிடம் பலர் கூறியும் அதையெல்லாம் மீறி “என்ன ஆனாலும் சரி… கணேசனை வைத்துதான் இந்தப் படத்தை எடுப்பேன்” என்று ஒற்றைக் காலில் நின்றார் நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ. பெருமாள் அவரது மன உறுதியும் கணேசன் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையும்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற மகத்தான நடிகர் தமிழ்த் திரையுலகிற்குக் கிடைப்பதற்கு காரணமாக இருந்தது.

ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது மட்டுமின்றி அதை குழி தோண்டி புதைத்துவிடும் வழக்கமுள்ள திரையுலகில் சிவாஜி அவர்கள் நன்றி மறவா நல்லவர். நடிகர் திலகம் தான் வாழும் வரை ஆண்டு தோறும் பொங்கல் திருநாளில், வேலூரில் உள்ள திரு.பி.ஏ.பெருமாள் அவர்களின் இல்லத்துக்கு தனது மனைவி கமலா மற்றும் குழந்தைகளுடன் வந்து சீர்வரிசை அளித்து ஆசி பெற்று செல்வது வழக்கம்.

சிவாஜி கணேசன் மறைவை அடுத்து அவரது மகன்கள் ராம்குமார், பிரபு ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் வேலூருக்கு பொங்கல் அன்று வந்து சீர்வரிசை அளித்து ஆசி பெற்று செல்கின்றனர். கடந்த ஆண்டும் பொங்கலையொட்டி, நடிகர் பிரபு, அவரது மனைவி புனிதா, நடிகர் விக்ரம் பிரபு ஆகியோர் காட்பாடி காந்திநகர் கிழக்கு பகுதியில் உள்ள பெருமாள் முதலியார் வீட்டுக்கு வந்தனர். அவர்களை பெருமாள் முதலியார் மனைவி மீனாட்சியம்மாள் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.

பிரபு குடும்பத்தினர் அளித்த சீர்வரிசையை பெற்றுகொண்ட மீனாட்சியம்மாள் அவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி ஆசி அளித்தார். அவர்கள் வீட்டில் சிறிது நேரம் தங்கி காலை சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு பிரபு குடும்பத்தினர் புறப்பட்டு சென்றனர்.

நடிகர் சிவாஜி, பெருமாள் முதலியார் இருவரும் இவர்களை விட்டு பிரிந்து சென்ற பின்னரும் இரு குடும்பத்தினரின் நட்பும் இன்று வரை தொடர்ந்து நீடித்து வருவது நட்பின் அடையாளத்தை காட்டுகிறது.

சிவாஜி மாபெரும் கலைஞர். மனிதருள் மாணிக்கம். சத்தமின்றி பல அறப்பணிகளை செய்தவர். சூது வாது அறியாதவர். ஆகவே தான் அவரால் அரசியலில் வெற்றி பெறமுடியவில்லை.

அக்டோபர் 1 – இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  பிறந்தநாள்.

சிவாஜி அவர்களை பற்றி நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி பரமாச்சாரியார் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?

பால்ஹனுமானில் படித்த சுவாரஸ்யமான ஒரு நிகழ்வை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறோம்.

வாழ்க சிவாஜி அவர்களின் புகழ். ஓங்குக நல்லோர் பெருமை.

==============================================================

கணேசன் தந்த கஜேந்திரர்கள்!

திருவருட்செல்வர் ‘  படத்தில் அப்பராக வேடம் போடுவதற்கு தனக்கு இன்ஸ்பிரேஷன் (Inspiration ) காஞ்சி சங்கராச்சாரியாரானபரமாச்சாரியாள்‘  தான் என்று நடிகர் திலகம் சிவாஜி ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.

திருவருட்செல்வர் ‘  படத்தில் அப்பராக வேடம் போடுவதற்கு தனக்கு இன்ஸ்பிரேஷன் (Inspiration ) காஞ்சி சங்கராச்சாரியாரானபரமாச்சாரியாள்‘  தான் என்று நடிகர் திலகம் சிவாஜி ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.
அதுபற்றி அவர் தனது “எனது சுயசரிதை” புத்தகத்தில் மேலும் கூறுகிறார்….

‘எனக்கு ‘காஞ்சி பரமாச்சாரியாள்‘  மீது மதிப்பும்,  பக்தியும் உண்டு.   அதற்கு ஒரு காரணம் உண்டு.  அது ஒரு முக்கியமான சம்பவம்.  ஒரு நாள், காஞ்சி முனிவர் பரமாச்சாரியாள் அவர்கள் என்னைக் கூப்பிட்டு அனுப்பியதாக,  சங்கர மடத்திலிருந்து செய்தி வந்தது.  அவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்தார்.  அந்தமடம்,  கற்பகாம்பாள் கல்யாண மடத்திற்குப் பக்கத்தில்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

Maha Periyavaநான், எனது தாயார்,  எனது தந்தையார்,  எனது மனைவி நான்கு பேரும் சென்றோம்.  சென்றவுடன் எங்களை உள்ளே ஒரு அறையில் உட்கார வைத்தார்கள்.  நாங்கள் ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்திருந்தோம்.  காஞ்சி முனிவர் அங்கே மக்களுக்கு உபன்யாசம் செய்து கொண்டிருந்தார்.  அப்போது திடீரென லைட்டெல்லாம்  அணைந்துவிட்டது.  அவர் கையில் ஒரு சிறிய குத்து விளக்கை எடுத்துக்கொண்டு,  மெதுவாகப் பார்த்துக் கொண்டே வந்தார்.  மெல்லக் கீழே உட்கார்ந்து,  கையைப் புருவத்தின் மேல் வைத்து எங்களைப் பார்த்தார்.  ‘நீதானே சிவாஜி கணேசன்?‘ என்றார்.  ‘ஆமாங்கய்யா!  நான்தான்‘, என்று காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன்.  என் மனைவியும், பெற்றோர்களும் அவரை வணங்கினார்கள்.

அப்போது அவர்,  “உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம்.  திருப்பதி சென்றிருந்தேன்.  அங்கு ஒரு யானை எனக்கு மாலை போட்டது.  யானை நன்றாக இருக்கிறதே  யாருடையது?  என்றேன்.  ‘சிவாஜி கொடுத்தது‘  என்றார்கள்.  திருச்சி சென்றிருந்தேன்.  அங்கு திருவானைக்கா கோவிலுக்குப் போனேன்.  அங்கும் யானை மாலை போட்டது.  யானை அழகாக இருக்கிறது.  யானை யாருடையது?  என்றேன்.  ‘சிவாஜி கணேசன் கொடுத்தது‘ என்றார்கள்.  தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் சென்றிருந்தேன்.  அங்கேயும் யானையை விட்டு மாலை போட்டார்கள்.  ‘இது யாருடையது ?’  என்றேன்.    ‘சிவாஜி கணேசன்  கொடுத்தது‘ என்றார்கள்.  நாட்டில் பணக்காரர்கள் பல பேர் இருக்கிறார்கள்.  அவர்கள் பப்ளிசிடிக்காக  சில சமயம் கோயில்களுக்குப் பணம் தான் நன்கொடையாகக் கொடுப்பார்கள்”.

IMG_1664

“ஆனால்,  யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும்.  அந்த மனசு உனக்கிருக்கிறது.  ஆகையால் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.  அவர்களுக்காக நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்”  என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார்.  அப்போது என் மனம் எப்படியிருந்திருக்கும் ?  எத்தனை அனுக்கிரஹம்!   எண்ணிப் பாருங்கள்.”

ஒரு வேளை,  இந்தச் சம்பவம் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கலாம்.  பரமாச்சாரியாளை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன்.   எனவே, அது ‘அப்பராக’ பிரதிபலித்திருக்கலாம்.

நன்றி: balhanuman.wordpress.com

==============================================================

* படத்தில் நீங்கள் பார்க்கும் யானையின் பெயர் சாந்தி. சிவாஜி கணேசன் அவர்கள் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலுக்கு கொடுத்தது. 2007 ஆம் ஆண்டு என் தங்கைக்கு திருமணமான புதிதில் எங்கள் சொந்த ஊரான திருவானைக்காவல் சென்றிருந்தோம். அப்போது எடுத்த படம். புகைப்படத்தில் இருப்பது தங்கையும் தங்கை கணவரும். எப்பொழுதோ எடுத்த படம் இப்போது உபயோகமாய் இருப்பது மகிழ்ச்சி. இந்த ஒரு படம் தான் என்னிடம் இருக்கிறது. வேறு படங்கள் இல்லை. நீங்கள் கஜ தரிசனம் செய்யவேண்டும் என்று தான் இந்த படத்தை அளிக்கிறேன். நன்றி.

==============================================================

[END]

 

10 thoughts on “நன்றி மறவா நல்லவர் ‘நடிகர் திலகம்’, மகா பெரியவாவை சந்தித்த அந்த தருணம்…

  1. “திருவருட்செல்வர் ” படத்தில் அப்பராக வேடம் அணியவில்லை அப்பராக வாழ்ந்தார் என்று சொல்வேண்டும் …இன்றும் திருவருட்செல்வர் படம் பார்க்கும் பொது மனம் நெகிழும் …அதிலும் குறிப்பாக திருஞானசம்பந்தர் பல்லக்கை துகிவந்தபிறகு இருவரும் கட்டி தலிவி ” திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ” என்று சொல்லம்பொது கண்ணிர் தானாக வரும் … வீரபாண்டிய கட்டபொம்பன் , பாரதியார் , கப்பால் ஒட்டிய தமிழன் .., இப்படி எதொனிய படித்தில் வாழ்ந்தார் …….

    திருச்சிற்றம்பலம்

  2. வணக்கம்………..

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றிய கட்டுரை அருமை………அவரது நடிப்பு திறமை, கடின உழைப்பு, நேரம் தவறாமை, ஈகை குணம் ஆகியவை உலகறிந்த விடயம்………..ஆனால் அவரது நன்றி மறவாத நற்குணத்தை பற்றி இன்று தெரிந்துகொண்டோம்……. அத்துடன் நம் குருநாதருடன் அவரின் சந்திப்பை பற்றி அறிந்து மகிழ்ந்தோம்……….உலகம் உள்ளளவும் நம் குருநாதரின் புகழும் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் புகழும் வாழும்………..

  3. நான் மகிழ்ச்சி அடையும் மிக முக்கியமான விஷயம் நடிகர் திலகம் வாழ்ந்த காலத்தில் நானும் இருந்தேன் என சொல்லி கொள்வதில் ஒரு பெருமிதம்.

    சங்கர நாராயணன்
    Myriad Wealth Consultants
    http://www.myriadwealth.in

  4. நடிகர் திலகம் விபூதி தரித்து காட்சி தரும் படம் சூப்பர்.

    நடிகர் திலகம் சிவாஜி அவர்களை நினைவில் வைத்திருந்து பொன்னான ஒரு பதிவை அளித்தமைக்கு நன்றி.

    ஒரு நடிகரால் படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வர முடியவில்லை என்றால் அந்த நடிகன் நடிப்பதையே விட்டுவிடவேண்டும் என்று சிவாஜி கணேசன் அவர்கள் கூறியதாக படித்திருக்கிறேன். ரஜினி அவர்களும் படப்பிடிப்பில் தனது நேரந்தவறாமைக்கு இதையே காரணமாக பல முறை கூறியிருக்கிறார்.

    தாமரை வெங்கட் அவர்கள் கூறியது போல பல நற்குணங்களுக்கு அவர் சொந்தக்காரர்.

    நடமாடும் தெய்வமாக திகழ்ந்த மகா பெரியவாவின் ஆசி அவருக்கு கிடைத்திருப்பதிளிருந்தே தெரிகிறது அவர் எவ்வளவு பெரிய புண்ணியாத்மா என்று.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  5. “சிவாஜி மாபெரும் கலைஞர். மனிதருள் மாணிக்கம். சத்தமின்றி பல அறப்பணிகளை செய்தவர். சூது வாது அறியாதவர். ஆகவே தான் அவரால் அரசியலில் வெற்றி பெறமுடியவில்லை” — நச்

  6. Padhivu migavum arumai.

    Amaidhiyaga palla thondugalai seidhu irukirar nadigar thilagam.

    ரேகர்ட்ஸ்

    Harish V

  7. நடிகர் திலகம் பற்றிய பதிவு மிக அருமை. அவர் மகா பெரியவருடன் நடத்திய conversation மிக நன்றாக உள்ளது. சிவாஜி அவர்கள் எவ்வளவு பெரிய மா மனிதர். நான் சிவாஜியின் ரசிகை என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமை படுகிறேன். தான் ஏறி வந்த ஏணியை மறக்காமல் திரு பெருமாள் அவர்களுக்கு வருடா வருடம் செய்யும் சீர்வரிசையை அவர் காலத்திற்கு பிறகும் அவர்கள் குடும்பம் பின் பற்றுவதை நினைத்து பார்கையில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. சிவாஜி அவர்கள் தனது பெற்றோகளுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அவரின் உயர்ந்த தயாள , punctuality குணத்தை பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளது. வாழ்க அவரது புகழ் . இந்த வையகம் உள்ளவரை அவரது புகழ் நிலைத்திருக்கும்.

    நன்றி
    உமா

  8. கஜ தரிசனம் அருமை சார். சிவாஜி சார் சிவாஜி சார் தான் .

    நன்றி.

    தங்கள்

    சோ. ரவிச்சந்திரன்.
    9480553409,
    கார்வார், கர்நாடகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *