Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, March 2, 2024
Please specify the group
Home > Featured > புண்ணியம் நல்கும் ஜடாயு மோட்சம் உணர்த்தும் நீதி! – Rightmantra Prayer Club

புண்ணியம் நல்கும் ஜடாயு மோட்சம் உணர்த்தும் நீதி! – Rightmantra Prayer Club

print
ராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு இலங்கைக்கு போகும் வழியில் கழுகுகளின் அரசனான ஜடாயு எதிரே வந்தது. சீதையை விட்டுவிடுமாறு கேட்டுக்கொண்டும் இராவணன் சம்மதிக்காததால் ஜடாயுவிற்கும் இராவணனுக்கும் நடந்த போரில் இராவணன் ஜடாயுவின் இறக்கைகளை வெட்டி வீழ்த்தினான்.

Jadayu Ravanan Warதன்னைக் காப்பாற்ற வந்த ஜடாயு குரூரமாகத் தாக்கப்பட்டு கீழே வீழ்வதை வேதனையுடன் பார்த்தாள் சீதை. வேறு வழி எதுவும் தெரியவில்லை. உயரத்திலிருந்தபடியே தழுதழுக்கக் கேட்டுக் கொண்டாள்: “ஐயா, என் பொருட்டுத் தாங்கள் சிறிது காலம் உயிர் பிழைத்திருக்க வேண்டும். என் நாயகன் என்னைத் தேடி இப்பக்கம் வருவாரானால், அவரிடம் என்னுடைய நிலைமையைத் தாங்கள் சொல்ல வேண்டும். என்னைக் கடத்தியவன் யார், எங்கே கடத்திச் செல்கிறான் என்பதையெல்லாம் தெரிவிக்க வேண்டும்…” ஜடாயு வலியும் வேதனையும் தாங்கவியலா உபாதையில், மௌனமாகத் தலையசைத்தார். விமானம் இலங்கையை நோக்கி சீறிப் பாய்ந்தது.

எதிர்பார்த்தபடியே சீதையைத் தேடி, வருத்தம் தோய்ந்த முகத்துடன், லட்சுமணன் உடன்வர நடை தளர்ந்து வந்து கொண்டிருந்தான், ராமன். சற்றுத் தொலைவில் ஜடாயு ஈனஸ்வரத்தில் முனகியபடி, மூச்சு வாங்க, குற்றுயிரும் குலையுயிருமாகத் தரையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அவரிடம் ஓடோடி வந்தான். சீதை கேட்டுக்கொண்டபடியே ராமன் வந்ததும் அதுவரை தன் உயிர் தன்னை விட்டு நீங்காதிருக்கும் அதிசயத்தையும் எண்ணி வியந்தார், ஜடாயு.

அருகே வந்த ராமனிடம் விவரத்தைச் சொன்னார். ராவணன், சீதையைக் கடத்திச் செல்வதையும் உடனே பின்தொடர்ந்தால், அவன் இலங்கைக்குச் செல்லுமுன்னரேகூட அவனை எதிர்த்து, மாய்த்து, சீதையை மீட்டு விடலாம் என்று யோசனையும் சொன்னார்.

IMG_0896

பிறகு, தன் பெரும் பொறுப்பு நிறைவேறிய மகிழ்ச்சியில் தன் உயிரை நீத்தார். அதற்கு முன், “ராமா, நீதான் மஹாவிஷ்ணு. எனக்குத் தெரியும். எங்களுக்கெல்லாம் ஆறுதல் அளிக்கவும் ஆத்ம துணையாக இருப்பதற்குமே மானுடனாக இறங்கி வந்திருக்கும் பரம்பொருள் நீ. ஐயனே, நீ பரமபதத்தில் இருக்கும் கோலத்தை எனக்குக்காட்டுவாயா? ராமனாகப் பார்த்த எனக்கு உன்னை அந்த நாராயணனாகவே பார்க்க வேண்டும் போலிருக்கிறது, செய்வாயா?” என்று இரந்து கேட்டார். உடனே அங்கே ஒரு பேரொளி தோன்றியது.

“இதோ, இதோ என் நாராயணன். அமர்ந்த அழகுத் திருக்கோலம். சங்கு-சக்ரதாரியாய் பூரண ஒளிவீசும் தேஜோமயமாய் காட்சி தருகிறான். ஐயனே, என்னப் பேறு நான் பெற்றேன்! ராகவா, நீ விரைவிலேயே சீதையை மீட்பாய். வெற்றி பெறுவாய். உன்னை இப்போதே, இந்த கோலத்திலேயே விஜயராகவனாக, சீதா சமேதனாக தரிசித்துவிட்டேன். சரணம் நாராயணா… சரணம்..”

ஜடாயுவின் மூச்சு அடங்கியபோது ராமனின் கண்களிலிருந்து நீர் பெருகி ஜடாயுவின் உடலைக் குளிப்பாட்டியது.

jatayu-lakshman-rama copy

“என் தந்தைக்கு ஒப்பான இந்தப் பெரியவருக்கு நான் நீத்தார் கடன் நிறைவேற்றுகிறேன்” என்று உளமாற கூறிய ராமன், உடனே அங்கேயே தன் அம்பால் பூமியில் ஒரு குழியை உண்டாக்க, உள்ளிருந்து கங்கை பீறிட்டாள். ஜடாயு என்ற அந்தப் புள்ளினத்துக்காகத் தோண்டிய குழி அது. அதுவே ‘திருப்புட்குழி’ (காஞ்சிபுரம் அருகே) என்னும் திருத்தலமானது.

(திரு.பிரபுசங்கர் எழுதிய 108 திவ்ய தேச உலா புத்தகத்திலிருந்து…)

ஜடாயு மோட்சம் படிப்பது மிகவும் புண்ணியம் தரக்கூடியது. எனவே தான் இங்கு தருகிறோம்.

தன்னை விட பல மடங்கு இராவணன் பலசாலி என்று ஜடாயுவுக்கு தெரியும். இருப்பினும் ஏன் எதிர்த்து போரிட்டார்? நம் பலம் எத்தனை சிறியதாக இருந்தால் என்ன? அநீதியை எதிர்த்து போரிட வேண்டும் என்று  உணர்த்த.

இந்த வாழ்க்கை நிலையற்றது. போகும் உயிர் பகவத் சேவை செய்யும்போதும், அவன் திருவடிகளை துதிக்கும்போதும், அவன் அடியார்களுக்கு தொண்டு செய்யும்போதும் போகவேண்டும் என்பதே நம் சங்கல்பமாக இருக்கவேண்டும்.

திருப்புட்குழியில் மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள்பாலிக்கும் காட்சியை இன்று சென்றாலும் காணலாம்.

===============================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : திருநீர்மலை கோவில் அர்ச்சகர் திரு.ராஜூ பட்டர்.

கடந்த மாதம் உழவாரப்பணிக்காக அனுமதி பெற திருநீர்மலை கோவிலுக்கு சென்றபோது தான் ராஜூ பட்டர் அவர்களை சந்தித்தோம். அவரது பாட்டனார் காலத்திலிருந்து பரம்பரை பரம்பரையாக திருநீர்மலையில் எழுந்தருளியிருக்கும் நீர்வண்ணப்பெருமாளுக்கு சேவை செய்து வருகிறார்கள்.

ராஜூ பட்டர் வேதம் படித்தவர். ஆகம, வைணவ பூஜா விதிகளையும் முறைப்படி கற்றவர்.

DSC00905

இப்போதெல்லாம் சாஸ்திரம் படித்து பகவத் சேவையில் ஈடுபடவேண்டிய இளைஞர்கள் எல்லாரும் B.E., B.TECH, MBBS என்று போகும் சூழ்நிலையில், இவர் அரங்கனுக்கு தொண்டு செய்யும் பாதையை தேர்ந்தெடுத்து அதை குறைவற செய்து வருகிறார். இவரைப் போன்றவர்களை பார்ப்பதே அபூர்வம்.

இன்றும் உற்சவ மற்றும் விஷேட நாட்களின் போதும், பாரிமுனைக்கு சென்று இவரே பலவித புஷ்பங்களை தன் கைப்பட வாங்கி வந்து பூஜைக்கும் அர்ச்சனைக்கும் உபயோகிக்கிறார்.

நமக்கு உழவாரப்பணிக்கு அனுமதி பெற்று தந்தது மட்டுமல்லாமல், கடந்த ஞாயிறு நாம் உழவாரப்பணி செய்த அன்று, தனது முறை இல்லாவிட்டாலும், நமக்காக வந்திருந்து ஏற்பாடுகளில் நமக்கு உதவியாக இருந்தார். மடப்பள்ளியில் நமக்கு மதிய உணவு (புளி சாதம், தயிர் சாதம்) ஏற்பாடு செய்து தந்தார். பணி முடித்த களைப்பில் இருந்த அன்பர்கள் தேவார்மிதமாக அதை புசித்தனர்.

 நண்பர் மாரீஸ் கண்ணன் கௌரவிக்கப்படுகிறார்

நண்பர் மாரீஸ் கண்ணன் கௌரவிக்கப்படுகிறார்

நமது உழவாரப்பணிகள் அனைத்திலும் தவறாமல் கலந்து கொள்பவர்களை ஒவ்வொரு முறையும் கௌரவித்து வருகிறோம். சென்ற முறை நண்பர் மனோகரன் கௌரவிக்கப்பட்டார். இந்த முறை, நண்பர் மாரீஸ்கண்ணன் கௌரவிக்கப்பட்டார். (இது வரை நம் தளம் சார்பாக நடைபெற்ற அனைத்து உழவாரப்பணிகளிலும் பங்கேற்றவர் இவர்.)

கோவிலின் அர்ச்சகர் திரு.ராஜூ பட்டர் அவர்கள் மூலம் அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு, நமது தளத்தின் சார்பாக பரிசு வழங்கப்பட்டது.

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது, மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். பிரார்த்தனை நேரத்தில் அரங்கனின் சன்னதியிலேயே பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார். அவருக்கு நம் நன்றி.

  இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

===============================================================

இரண்டரை வயது குழந்தைக்கு சர்க்கரை நோய்!

அனைவருக்கும் வணக்கம்.

என்னுடைய மகள் பால திரிபுர சுந்தரி. (வயது இரண்டரை). அவளுக்கு குழந்தைகளை தாக்கும் TYPE 1 DAIBETES இருக்கிறது. ஆகவே, ஒரு நாளைக்கு நான்கு முறை அந்த குழந்தைக்கு இன்சுலின் இன்ஜெக்ஷன் போடவேண்டியிருக்கிறது. ஐந்து முறை ரத்த பரிசோதனை செய்யவேண்டியிருக்கிறது. சிறு குழந்தைக்கு இத்தனை கடுமையான சிகிச்சை அவசியமா என்று உங்களுக்கு தோன்றலாம். வேறு வழியில்லை. அவள் உயிர் வாழ வேண்டும் என்றால் இது அவசியம். இத்தனை சிறு வயதில் என் குழந்தைக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை என்று நித்தம் நித்தம் நான் துடித்துக்கொண்டிருக்கிறேன். ஒரே தீர்வு இந்த பிரார்த்தனை கிளப்பில் மனு செய்து பிரார்த்தனை சமர்ப்பிப்பது தான் என்று முடிவு செய்திருக்கிறேன்.

ரைட்மந்த்ரா ஆசிரியர் சுந்தர் அவர்களையும், நல்லதை நாடும் வாசகர்களும், ஒருவருக்கொருவர் விஞ்சிய பிரார்த்தனை பதிவு சிறப்பு விருந்தனர்களையும் பார்க்கும்போது என் குழந்தை நிச்சயம் உங்கள் பிரார்த்தனையால் காப்பாற்றப்படுவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

நான் வசிப்பது கனடா. எனவே தமிழ்நாடு வரும்போது தான் பரிகாரம் செய்ய முடியும். மேலும் இங்கிருந்தே செய்யக்கூடியவை ஏதேனும் இருந்தாலும் தெரியப்படுத்தவும். அதுவரை செய்துகொண்டிருப்பேன்.

நன்றி.
சுபா,
கனடா
===============================================================

அடிக்கடி வீடு மாறுவதிலிருந்து விடுதலை பெறவேண்டும்; சொந்தமாக ஒரு வீடு அமையவேண்டும்!

அனைவருக்கும் என் வணக்கம்.

இந்த தளத்தை பற்றி பூண்டி ஊன்ரீஸ்வரர் கோவிலுக்கு சென்ற போது தெரிந்துகொண்டேன். நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.

என் பெயர் சாந்தா (58). என் கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஒய்வுபெற்றுவிட்டார். எனக்கு திருமணம் ஆகி குழந்தைகள் வளர்ந்து ஆளானது வரை இது வரை பல முறை வீடு மாற்றிவிட்டோம். (சொந்த வீடு கட்டும் பாக்கியம் இதுவரை கிடைக்கவில்லை.) எந்த வீட்டிலும் 2 ஆண்டுகளுக்கு மேல் நாங்கள் விரும்பினாலும் இருக்க முடியாது. ஏதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டு வீடு மாறிக்கொண்டே இருக்கிறோம். இதுவரை இந்த 30 ஆண்டுகளில் 20 க்கும் மேல் வீடு மாறிவிட்டோம். இது மிகவும் கஷ்டமாக உள்ளது. இப்படி அடிக்கடி வீடு மாறுவதால் பொருட்கள் தொலைந்து போகின்றன. ரேஷன் கார்டு, வங்கி பாஸ் புக், இப்படி அனைத்திலும் அட்ரஸ் மாற்றுவது பெரும் பாடாக இருக்கிறது. மேலும் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீடு மாறும்போது அட்வான்ஸ் தொகையும் அதிகமாக கொடுக்கவேண்டியிருக்கிறது. அது எல்லாவற்றையும் விட கஷ்டமாக உள்ளது.

எங்களுக்கு நிரந்தரமாக ஒரு நல்ல வீடு அமையவும், சொந்த வீடு கட்டும் பாக்கியம் கிட்டவும் பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

– சாந்தா,
ரெட் ஹில்ஸ்,
சென்னை.

===============================================================

இந்த வார பொது பிரார்த்தனை

கோடை மழை வேண்டும்!

கோடை காலம் துவங்கவிருக்கிறது. ஏற்கனவே மின்சார பற்றாக்குறையால் தமிழ்நாடு தவித்துவருகிறது. இந்நிலையில் கோடை வேறு அச்சுறுத்துகிறது. கோடை தன் கடமையை செய்தாலும் அவ்வப்போது வருண பகவானும் கொஞ்சம் கண் திறந்து பார்க்கவேண்டும்.

Drought Tamilnadu

மேலும் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்துவிட்டதால் ஆறுகள், கண்மாய்கள், ஏரிகள் அனைத்தும் வறண்டுவிட்டன. பெரும் குடிநீர் பஞ்சத்தை மாநில சந்திக்கும் அபாயம் இருக்கிறது. எல்லோராலும் கேன் வாட்டர் வாங்க முடியாது. கோடை மழையை நம்பி பல உயிர்கள் வாழ்கின்றன. இந்த கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம், வெப்பத்தை குறைத்து கோடை மழை பொழியவேண்டும்.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு (குறள் 20)

மதுரையை கண்ணகி எரித்தபோது, இன்னின்னாரை நீக்கி சுடுக என்று (பசு, ஏழை எளியவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் ஆகியோரை) அக்னி பகவானுக்கு உத்தரவிட்டாளாம். அது போல, ஏழை எளியவர்களுக்கும், விலங்குகள் மற்றும் பறவையினங்களுக்கும், வயலில் வேலை செய்யும் விவசாயிகளுக்கும், மற்றும் அத்தியாவசிய தொழில் செய்யும் தபால் ஊழியர், கேஸ் சிலிண்டர் டெலிவர் செய்பவர், கூலி தொழிலாளிகள் ஆகியோருக்கு இந்த கோடை வெயிலால் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதே நம் பிரார்த்தனை.

===============================================================

சுபா அவர்களின் குழந்தை பால திரிபுர சுந்தரிக்கு ஏற்பட்டுள்ள TYPE 1 DIABETES நோய் நீங்கி அக்குழந்தை சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வளரவும், திருமதி.சாந்தா அவர்களுக்கு அடிக்கடி வீடு மாறுவதிலிருந்து விடுதலை கிடைத்து விரைவில் அவர்கள் சொந்த வீடு வாங்கி கிரகப் பிரவேசம் காணவும், கோடை மழை பொழிந்து அனைத்து உயிர்களும் இன்புறவும், விவசாயிகளும், இதர தொழிலாளர்களும் கோடையின் கொடுமையிலிருந்து தப்பிக்கவும் திருவருளை வேண்டுவோம். .

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : ஏப்ரல் 6,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : மெரினா கடற்கரையில் அலையில் சிக்கி மூழ்குபவர்களை காப்பாற்றும் நிஜ ஹீரோ மெரினா வெங்கட்.

12 thoughts on “புண்ணியம் நல்கும் ஜடாயு மோட்சம் உணர்த்தும் நீதி! – Rightmantra Prayer Club

 1. வணக்கம் சார் ,
  ஜடாயு மோட்சம் படிப்பது மிகுந்த புண்ணியத்தை தரும் .
  ராமாயண கதையில் ராமன் கைகளாலே தன தந்தைக்கு ஒப்பாக நினைத்து தன இறுதி கடன் காரியங்களை பெற்று கொண்ட பாக்கியசாலி தான் ஜடாயு.
  ஜடாயுவின் சிறகு வெட்டப்பட்ட படமும், ஜடாயுவை ராமன் கட்டிக்கொண்டு சோகம் ததும்பும் முகத்துடன் இருக்கும் படமும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது.
  இந்த வார பிரார்த்தனை தலைவர் திரு.ராஜு பட்டர் வேதம் தெரிந்தவர். உழவாரப்பணியின் போது அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரார்த்தனைக்கு மிகவும் பொருத்தமான் நபர்.
  சுபா அவர்களின் குழந்தை பால திரிபுர சுந்தரிக்கு ஏற்பட்டுள்ள TYPE 1 DIABETES நோய் நீங்கி அக்குழந்தை சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வளரவும், திருமதி.சாந்தா அவர்களுக்கு அடிக்கடி வீடு மாறுவதிலிருந்து விடுதலை கிடைத்து விரைவில் அவர்கள் சொந்த வீடு வாங்கி கிரகப் பிரவேசம் காணவும், கோடை மழை பொழிந்து அனைத்து உயிர்களும் இன்புறவும், விவசாயிகளும், இதர தொழிலாளர்களும் கோடையின் கொடுமையிலிருந்து தப்பிக்கவும் எல்லாம் வல்ல மகா பெரியவாவின் பாதங்களை வேண்டி கேட்டுகொள்கிறோம்.

 2. ஜடாயு கதை மிக அருமை. photos are excellent

  இந்த வார பிராத்தனைக்கு தலைமை தாங்கும் திரு ராஜு பட்டர் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்

  இந்த வார பிராத்தனைக்கு கோரிக்கை வைத்திருக்கும் அனைவருக்கும் பிராத்திப்போம்

  நன்றி
  உமா

 3. திருப்புட்குழியில் ஜடாயுவிற்கு ஆலயம் அமைத்துள்ளது என்பது படிக்கும் போதே தரிசிக்க பேராவல் கொண்டுள்ளேன் .

  இந்த வாரம் பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்துள்ள அனைவருடைய பிரச்சனையும் விரைவில் தீர்ந்துவிடும் .

  எல்லாரும் எல்லாவளமும் பெறவாழ்த்துக்கள் …

  -மனோகர்

 4. சர்க்கரை கட்டியே என்று குழந்தைகளை கொஞ்சுவார்கள். ஆனால் கடவுள் ஏன் இந்த பிஞ்சு குழந்தையை சோதனை செய்ய வேண்டும். கவலை வேண்டாம் சகோதரி விரைவில் எல்லாம் வல்ல இறைவன் அருளால் குணம் அடையும்.

  சகோதரி சாந்தா அவர்களே கவலை வேண்டாம் (நானும் இதே மாதிரி அனுபவித்து வருகிறேன். (மும்பையில்) கடவுள் நமக்கு சொந்த நிலம் அளிப்பார்.

  வருண பகவன் அருளால் மழை நன்றாக பொழிந்து வெப்ப தணிக்கை குறைய வேண்டுகிறேன்

 5. குழந்தை பாலதிரிபுரசுந்தரிக்கு கூடிய விரைவில் எல்லாம் வல்ல பரம் பொருளின் கருணையினால் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட
  மனமுருகி பிரார்த்தனை செய்கிறோம்.

 6. சுபா அவர்களின் குழந்தை பால திரிபுர சுந்தரிக்கு ஏற்பட்டுள்ள டிபே 1 DIABETES நோய் நீங்கி அக்குழந்தை சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வளரவும், திருமதி.சாந்தா அவர்களுக்கு அடிக்கடி வீடு மாறுவதிலிருந்து விடுதலை கிடைத்து விரைவில் அவர்கள் சொந்த வீடு வாங்கவும், கோடை மழை பொழிந்து, கோடை வெப்பம் தனியவும் எல்லாம் வல்ல மகா பெரியவாவை வணங்கி மனம் உருகி பிரார்த்தனை செய்வோம்.

 7. தீராத உடல் உபாதைகளைத் தீர்க்கும் காழிப்பிள்ளையார் திருஞானச்சம்பந்தரின் திருநீற்றுப்பதிகம் பாராயணம் செய்தால் குழந்தை பாலதிரிபுர சுந்தரியின் துயரும் அவர்தம் பெற்றோரின் வேதனையும் தீர ஆலவாயண்ணல் அருள் புரிவார்.

  திருநீற்றுப்பதிகம்
  திருச்சிற்றம்பலம்

  மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
  சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
  தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
  செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.

  வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
  போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
  ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
  சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.

  முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
  சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
  பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
  சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.

  காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
  பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
  மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
  சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே.

  பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
  பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
  ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
  தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே.

  அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
  வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
  பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
  திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே.

  எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
  பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
  துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
  அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே.

  இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
  பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
  தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
  அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே.

  மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
  மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
  ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
  ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே.

  குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட
  கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
  எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
  அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே.

  ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்
  போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
  தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
  சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

  திருச்சிற்றம்பலம்
  சொந்த வீடு வாங்க விரும்பும் சகோதரி சாந்தா அவர்களின் வேண்டுதலை திருப்புகலூர் பெருமான் நிறைவேற்றி வைப்பார் எனும் நம்பிக்கையுடன் கோடைமழையை வேண்டிக்கொண்டும் பிரார்த்திக்கிறேன்.

 8. சுபா மேடம்,நீங்க கோயில்வெண்ணி [ 98422 94416நீடாமங்கலம் அருகில் ]சென்று சவுந்தர நாயகி உடனுறை வெண்ணிகரும்பேஸ்வரர் அபிசேகம் ,அர்ச்சனை பண்ணி பின்பு சர்க்கரை[சீனி ]யையும், பால் ரவையையும் சம அளவில் கலந்து பிரகாரத்தை வலம் வந்து தூவி வாருங்கள் சர்க்கரை நோய் குணமாகும் ….. நீங்க குழந்தைய கூட்டி வந்து,திருவாஞ்சியம்[9442403926,9360602973,ஸ்ரீவாஞ்சியம்-
  திருவாஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. கும்பகோணத்திற்கு தென்கிழக்கே திருவாரூர் செல்லும் வழியில் 24 கி.மீ. தொலைவில் உள்ளது. குடவாசலிலிருந்து நன்னிலம் செல்லும் பேருந்து இத்தலம் வழியே செல்கிறது.] வாழவந்தநாயகி ஸ்ரீ வாஞ்சிநாதர் திருகோயில் சென்று ,குப்த கங்கை தீர்த்தம் நீராடி முறைப்படி முதலில் இங்கு எமன் சந்நிதியில் அபிசேகம் செய்து ,நெய் தீபம் ஏற்றி விட்டு ,பின்பு வாஞ்சிநாதர் ,வாழவந்தநாயகிக்கு அபிசேகம் ,அர்ச்சனை செய்து விட்டு சுவாமி கருவறை தீபத்தில் நெய் சேருங்கள் .அதன் பின்பு யோக பைரவர் அபிசேகம் ,அர்ச்சனை ,நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.ஆயுள் விருத்தி ஹோமம் பண்ணுங்கள் … கும்பகோணம் அருகில் உள்ள வலங்கைமான் பாடை கட்டி மாரியம்மன் திருகோயில்[04374264575] சென்று அர்ச்சனை,அபிசேகம் செய்து விட்டு, பின்பு உங்கள் குழந்தை நல்ல முறையில் குணமாகிய உடன் மீண்டும் வலங்கைமான் வந்து “பாடை காவடி “குழந்தையை வைத்து எடுபதாக நேர்ந்து கொள்ளுங்கள். …ஒருமுறை திருச்சி சமயபுரம் அருகில் உள்ள திருபட்டூர் பிரம்மபுரிஸ்வரர் திருகோயில் சென்று அங்கு இரவு 8 மணிக்கு நடை பெரும் அர்த்தஜாம பூசையில் கலந்து ,பின்பு அங்குள்ள கால பைரவர் சந்நிதியில் தரப்படும் விபூதி வாங்கி வந்து தினமும் குழந்தைக்கு இட்டு வாருங்கள் .காலபைரவர் உங்கள் குழந்தையை காத்திடுவார் …..இவையெல்லாம் செய்வதற்கு முன்பு உங்கள் குலதெய்வம் கோயில் சென்று அங்குள்ள முறைப்படி பொங்கல் இட்டு வழிபடுங்கள் .அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.தினமும் பின்வரும் துதிகள் படித்து வாருங்கள் …
  நீண்ட ஆயுள் தரும் மரண பயம் நீக்கும் ஸ்ரீ ருத்ரம்

  ” நம்ஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய
  மஹாதேவாய த்ரயம்பகாய – த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி
  காலாய காலாக்னீ ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்சயாய
  ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நமஹ ”
  ……………………………………………………………………………………………………

  மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம்

  ” த்ரயம்பகம் யஜாமஹே ஸூகந்திம் புஷ்டிவர்த்தனம்
  உர்வாருஹ மிவ பந்தனாத் ம்ருத்யோர் முஷீயமா ம்ருதாத் ”
  ……………………………………………………………………………………………………….
  ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்:

  ஸ்ரீ ஈச்வர உவாச:-

  வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்
  விபக்ஷக்ஷய தீக்ஷ¢தம்!
  நிநாத த்ரஸ்த விச்வாண்டம்
  விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!!

  ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்
  ஸபலௌகம் திதே: ஸ¤தம்!
  நகாக்ரை: சகலீசக்ரே
  யஸ்தம் வீரம் நமாம்யஹம்!!

  பதா வஷ்டப்த பாதாளம்
  மூர்த்தா விஷ்ட த்ரிவிஷ்டபம்!
  புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம்
  மஹா விஷ்ணும் நமாம்யஹம்!!

  ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர
  ஜ்வலநாதீன் யநுக்ரமாத்!
  ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
  தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்!!

  ஸர்வேந்த்ரியை ரபி விநா
  ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா!
  யோ ஜாநாதி யோ நமாம்யாத்யம்
  தமஹம் ஸர்வதோமுகம்!

  நரவத் ஸிம்ஹவச்சைவ
  யஸ்ய ரூபம் மஹாத்மன:!
  மஸா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்
  தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்!!

  யந்நாம ஸ்மரணாத் பீதா:
  பூத வேதாள ராக்ஷஸா:!
  ரோகாத்யாஸ்ச ப்ரணச்யந்தி
  பீஷணம் தம் நமாம்யஹம்!!

  ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய
  ஸகலம் பத்ர மச்னுதே!
  ச்¡¢யா ச பத்ரயா ஜுஷ்ட:
  யஸ்தம் பத்ரம் நமாம்யஹம்!!

  ஸாக்ஷ¡த் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்
  ம்ருத்யும் சத்ரு கணான்விதம்!
  பக்தாநாம் நாசயேத் யஸ்து
  ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்!!

  நமஸ்காராத்மகம் யஸ்மை
  விதாய ஆத்ம நிவேதனம்!
  த்யக்தது: கோகிலாந் காமாந்
  அச்நந்தம் தம் நமாம்யஹம்!!

  தாஸபூதா: ஸ்வத: ஸர்வே
  ஹ்யாத்மான: பரமாத்மன:!
  அதோஹமபி தே தாஸ:
  இதிமத்வா நமாம்யஹம்!!

  சமங்கரேணா தராத் ப்ரோக்தம்
  பதாநாம் தத்வ நிர்ணயம்!
  த்ரிஸந்த்யம்ய: படேத் தஸ்ய
  ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே!!
  …………………………………………………………………………………………………….

  திருச்சிற்றம்பலம்

  பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப்
  பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னி
  இருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல்
  எழுந்தருளி இருந்தானை எண்டோ ள் வீசி
  அருந்திறன்மா நடமாடும் அம்மான் றன்னை
  அங்கனகச் சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த்
  திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானைச்
  செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

  துங்கநகத் தாலன்றித் தொலையா வென்றித்
  தொகுதிறலவ் விரணியனை ஆகங் கீண்ட
  அங்கனகத் திருமாலும் அயனுந் தேடும்
  ஆரழலை அனங்கனுடல் பொடியாய் வீழ்ந்து
  மங்கநகத் தான்வல்ல மருந்து தன்னை
  வண்கயிலை மாமலைமேல் மன்னி நின்ற
  செங்கனகத் திரள்தோளெஞ் செல்வன் றன்னைச்
  செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

  உருகுமனத் தடியவர்கட் கூறுந் தேனை
  உம்பர்மணி முடிக்கணியை உண்மை நின்ற
  பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னைப்
  பேணியஅந் தணர்க்குமறைப் பொருளைப் பின்னும்
  முருகுவிரி நறுமலர்மே லயற்கும் மாற்கும்
  முழுமுதலை மெய்த்தவத்தோர் துணையை வாய்த்த
  திருகுகுழல் உமைநங்கை பங்கன் றன்னைச்
  செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

  கந்தமலர்க் கொன்றையணி சடையான் றன்னைக்
  கதிர்விடுமா மணிபிறங்கு கனகச் சோதிச்
  சந்தமலர்த் தெரிவையொரு பாகத் தானைச்
  சராசரநற் றாயானை நாயேன் முன்னைப்
  பந்தமறுத் தாளாக்கிப் பணிகொண் டாங்கே
  பன்னியநூற் றமிழ்மாலை பாடு வித்தென்
  சிந்தைமயக் கறுத்ததிரு வருளி னானைச்
  செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

  நஞ்சடைந்த கண்டத்து நாதன் றன்னை
  நளிர்மலர்ப்பூங் கணைவேளை நாச மாக
  வெஞ்சினத்தீ விழித்ததொரு நயனத் தானை
  வியன்கெடில வீரட்டம் மேவி னானை
  மஞ்சடுத்த நீள்சோலை மாட வீதி
  மதிலாரூ ரிடங்கொண்ட மைந்தன் றன்னைச்
  செஞ்சினத்த திரிசூலப் படையான் றன்னைச்
  செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

  கன்னியையங் கொருசடையிற் கரந்தான் றன்னைக்
  கடவூரில் வீரட்டங் கருதி னானைப்
  பொன்னிசூழ் ஐயாற்றெம் புனிதன் றன்னைப்
  பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தி னானைப்
  பன்னியநான் மறைவிரிக்கும் பண்பன் றன்னைப்
  பரிந்திமையோர் தொழுதேத்திப் பரனே யென்று
  சென்னிமிசைக் கொண்டணிசே வடியி னானைச்
  செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

  எத்திக்கு மாய்நின்ற இறைவன் றன்னை
  ஏகம்பம் மேயானை இல்லாத் தெய்வம்
  பொத்தித்தம் மயிர்பறிக்குஞ் சமணர் பொய்யிற்
  புக்கழுந்தி வீழாமே போத வாங்கிப்
  பத்திக்கே வழிகாட்டிப் பாவந் தீர்த்துப்
  பண்டைவினைப் பயமான எல்லாம் போக்கித்
  தித்தித்தென் மனத்துள்ளே ஊறுந் தேனைச்
  செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

  கல்லாதார் மனத்தணுகாக் கடவுள் தன்னைக்
  கற்றார்கள் உற்றோருங் காத லானைப்
  பொல்லாத நெறியுகந்தார் புரங்கள் மூன்றும்
  பொன்றிவிழ அன்றுபொரு சரந்தொட் டானை
  நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க
  நிறைதவத்தை அடியேற்கு நிறைவித் தென்றுஞ்
  செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைச்
  செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

  அரியபெரும் பொருளாகி நின்றான் றன்னை
  அலைகடலில் ஆலால மமுது செய்த
  கரியதொரு கண்டத்துச் செங்க ணேற்றுக்
  கதிர்விடுமா மணிபிறங்கு காட்சி யானை
  உரியபல தொழிற்செய்யு மடியார் தங்கட்
  குலகமெலாம் முழுதளிக்கும் உலப்பி லானைத்
  தெரிவையொரு பாகத்துச் சேர்த்தி னானைச்
  செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே.

  போரரவம் மால்விடையொன் றூர்தி யானைப்
  புறம்பயமும் புகலூரும் மன்னி னானை
  நீரரவச் செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்
  நீங்காமை வைத்தானை நிமலன் றன்னைப்
  பேரரவப் புட்பகத்தே ருடைய வென்றிப்
  பிறங்கொளிவா ளரக்கன்முடி யிடியச் செற்ற
  சீரரவக் கழலானைச் செல்வன் றன்னைச்
  செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. [திருநாவுக்கரசு சுவாமிகள்]
  …………………………………………………………………………………………….
  ஆதி சங்கரர் அருளிய “கால பைரவாஷ்டகம்”

  தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்
  வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .
  நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்
  காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

  பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
  நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் .
  காலகாலமம்புஜாக்ஷமக்ஷஷுஉலமக்ஷரம்
  காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

  ஷூலடம்கபாஷதண்டபாணிமாதிகாரணம்
  ஷ்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் .
  பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்
  காஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே ..

  புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்தசாருவிக்ரஹம்
  பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் .
  வினிக்வணன்மனோக்யஹேம கிங்கிணீலஸத்கடிம்
  காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

  தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கனாஷனம்
  கர்மபாஷமோசகம் ஸுஷர்மதாயகம் விபும் .
  ஸ்வர்ணவர்ணஷேஷ்ஹபாஷஷோபிதாம் கமண்டலம்
  காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

  ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம்
  நித்யமத்விதியமிஷ்டதைவதம் நிரம்ஜனம் .
  ம்ரு‍த்யுதர்பனாஷனம் கராலதம்ஷ்ட்ரமோக்ஷணம்
  காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

  அட்டஹாஸபின்னபத்மஜாண்டகோஷஸம்ததிம்
  த்ரு‍ஷ்டிபாத்தனஷ்டபாபஜாலமுக்ரஷாஸனம் .
  அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகாதரம்
  காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

  பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம்
  காஷிவாஸலோகபுண்யபாபஷோதகம் விபும் .
  நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
  காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..

  பல ச்ருதி ..
  காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம்
  க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் .
  ஷோகமோஹதைன்யலோபகோபதாபனாஷனம்
  ப்ரயான்தி காலபைரவாம்க்ரிஸன்னிதிம் நரா த்ருவம்

  இதி ஸ்ரீமத் சங்கராசார்ய விரசிதம்
  ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..
  ……………………………………………………………………………………………………….
  தினமும் படித்து வாருங்கள் …தினமும் உங்கள் முன்னோர்களை நினைத்து காகத்திற்குநீங்கள் சாப்பிடும் முன் சோரிடுங்கள்…கூடவே கந்தர் சஷ்டி கவசம் ,சுந்தர காண்டம் தினமும் ஒரு சர்கம் படித்து வருதல் நலம் .

  “வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
  எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
  ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
  சந்தவெண் பொடியணி சங்கரனே
  இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
  அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே.”

  1. விஜய் சார் உங்களுக்கும், பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற ராஜூ பட்டர் அவர்களுக்கும், குழந்தைக்காக
   பிரார்த்தனை செய்தவர்களுக்கும் மிக்க நன்றி.விஜய் சார் உங்களுடைய பதிலை பார்த்து மிகவும் மனது நிறைவாக இருந்தது.கண்டிப்பாக நாங்கள் தமிழ்நாடு வரும்போது நீங்கள் கூறிய பரிகாரங்களை கண்டிப்பாக பின்பற்றுகிறோம்.மீண்டும் உங்களுக்கும் சுந்தர் அண்ணாவுக்கும் அனைவருக்கும் நன்றிகள்.
   சுபா

 9. சாந்தா மேடம் ,தினமும் இப்பதிகம் படித்து வாருங்கள் …. திருச்சிற்றம்பலம்

  அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
  அன்புடைய மாமனும் மாமி யும்நீ
  ஒப்புடைய மாதரு மொண்பொரு ளும்நீ
  ஒருகுலமுஞ் சுற்றமும் ஓரூ ரும்நீ
  துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
  துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
  இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ
  இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.

  வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
  வெய்ய வினைப்பகையும் பைய நையும்
  எம்பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
  எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்
  அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
  அனலாடி ஆனஞ்சும் ஆட்டு கந்த
  செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்
  செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.

  ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
  அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
  ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
  உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே
  பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
  பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
  காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
  காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.

  நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தி
  நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற
  சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற
  சொலற்கரிய சூழலாய் இதுவுன் றன்மை
  நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள்
  நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற
  கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்
  கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே.

  திருக்கோயி லில்லாத திருவி லூருந்
  திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
  பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்
  பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும்
  விருப்போடு வெண்சங்க மூதா வூரும்
  விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
  அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும்
  அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே.

  திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகிற்
  தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
  ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
  உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
  அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்
  அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்
  பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப்
  பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே.

  நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்
  நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்
  மன்னானாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்
  மறைநான்கு மானாயா றங்க மானாய்
  பொன்னானாய் மணியானாய் போக மானாய்
  பூமிமேற் புகழ்தக்க பொருளே உன்னை
  என்னானாய் என்னானாய் என்னி னல்லால்
  ஏழையேன் என்சொல்லி ஏத்து கேனே.

  அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்
  அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்
  எத்தனையும் அரியைநீ எளியை யானாய்
  எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்
  பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
  பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தா யன்றே
  இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
  எம்பெருமான் றிருக்கருணை இருந்த வாறே.

  குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்
  குற்றமே பெரிதுடையேன் கோல மாய
  நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன்
  நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற
  விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தே னல்லேன்
  வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்
  இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்
  என்செய்வான் தோன்றினேன் ஏழை யேனே.

  சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தத்து
  தரணியொடு வானாளத் தருவ ரேனும்
  மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
  மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
  அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
  ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங்
  கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
  அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவு ளாரே.
  ……………………………………………………………………………………………………
  ஒருமுறை சென்னை அருகில் உள்ள சிறுவாபுரி[9444280595, 94441 71529] பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சென்று கந்தனை வழிபடுங்கள் ..ஆலயத்தில் தினமும் நடைபெறும் அபிஷேகத்தில் 48 நாட்கள் கொண்ட ஒரு மண்டலம் வரை நெல்லி முள்ளி பொடி சேர்ப்பித்தால் நலம் பெறலாம். இதற்காக தினமும் ஒவ்வொருவரும் ஆலயத்திற்கு வரவேண்டியதில்லை. 48 நாட்களுக்கான பொடியை ஆலய சிவாச்சாரியாரிடம் கொடுத்து தினமும் அபிஷேகத்தில் சேர்க்க வழி செய்யலாம்.பூமி சம்பந்தமான அனைத்து கோரிக்கைகள் நிறைவேறவும், வீடு இல்லாதவர்களுக்கு புதிய வீடு அமையவும்,
  சிறுவாபுரி சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.தினமும் சிறுவாபுரி திருப்புகழ் பாடி வரவும் …
  “அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
  அண்டர்மன மகிழ்மீற அருளாலே
  அந்தரியொ (டு) உடனாடு சங்கரனு மகிழ்கூர
  ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக
  மண்டலமும் முனிவோரும் எண்திசையில் உளபேரும்
  மஞ்சினும் அயனாரும் எதிர்காண
  மங்கையுடன் அரிதானும் இன்பமுற மகிழ்கூற
  மைந்துமயிலுடனாடி வரவேணும்
  புண்டரிக விழியாள! அண்டர்மகள் மணவாள!
  புந்திநிறை அறிவாள! உயர்தோளா
  பொங்குடலுடன் நாகம் விண்டுவரை இகல்சாடு
  பொன்பரவு கதிர்வீசு வடிவேலா
  தண்தரண மணிமார்ப! செம்பொன் எழில் செறிரூப!
  தண்தமிழின் மிகுநேய முருகேசா
  சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
  தண்சிறுவை தனில்மேவு பெருமாளே”

  இத்திருப்புகழினை மனமுருகிப் பாராயணம் செய்து புதிய சொந்தவீடு வேண்டுவோர் பலருக்குத் தவறாமல் முருகன் வரம் அளித்துள்ளான்.
  ……………………………………………………………………………………………………

  திருப்புகலூர் சூளிகாம்பாள் உடனுறை அக்னிபுரீஸ்வரர் திருகோயில் [ 94435 88339இத்தல இறைவனை “வாஸ்துநாதர்’ என்றும் அழைக்கின்றனர்]அப்பர் சுவாமிகள் முக்தி அடைந்த தலம்.சுந்தரருக்குச் செங்கல்லைப் பொன்னாக்கி அருள் புரிந்த தலம். இங்கு சென்று முறைப்படி வழிபட சொந்த வீடு அமையும் …கடலூர் அருகில் உள்ள ஸ்ரீ முஷ்ணம் வாரக சுவாமி வழிபாடும் சொந்த வீடு அமைய உதவும் ….
  ……………………………………………………………………………………………………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *