சற்று பிரார்த்தனை செய்து, வணங்கிவிட்டு புகைப்படம் எடுத்தோம்..
இதை தளத்தில் உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள ஆசை. சும்மா வெறுமனே அளிக்காமல் நம்முடைய கவிதை (?!) ஒன்றையும் சேர்த்து அளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. (தளத்திற்கு வருவதால் இந்த தண்டனையை நீங்கள் அனுபவித்தே தீரவேண்டும்.)
நன்றி!
நீ சுமக்கிறாய்…
நாங்களும் சுமக்கிறோம்…
நீ சுமப்பதால்
உனக்கு கிடைப்பது
மாலையும் மரியாதையும்!
நாங்கள் சுமப்பதால்
எங்களுக்கு கிடைப்பது
பழியும் பாவமும்!!
நீ கொடுத்து வைத்தவன்;
நாங்கள் பாவப்பட்டவர்கள்!
சுமக்கவேண்டியதை சுமக்கும்
உனக்கு ஐந்தறிவாம்;
சுமக்கக் கூடாததை சுமக்கும்
எங்களுக்கு ஆறறிவாம்!
உன் ஐந்தறிவு
எங்கள் ஆறறிவை விட
பன்மடங்கு உயர்ந்தது!
ஏனெனில்…
நீ சுமப்பது இறைவனை!
நாங்கள் சுமப்பது….
எங்கள் பாவமூட்டைகளை!!
பாவமூட்டை சுமக்கும் நாங்கள்
தலைக்கனத்தோடு திரிகிறோம்!
ஆண்டவனையே சுமக்கும்
நீ அடக்கத்தோடு இருக்கிறாய்!!
மறுபடியும் சொல்கிறோம்…
உனக்கு ஐந்தறிவாம்!
எங்களுக்கு ஆறறிவாம்!!
– RMS
==================================================
பி.கு. : அப்பப்போ இந்த மாதிரி நம்மோட கிறுக்கல்கள் வரும். கண்டுக்காதீங்க!
==================================================
[END]
ஐந்தறிவும் ஆறறிவும் ???
புதுகவிதை அருமை…
தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் .
நமகிட்டவும் ஒரு கவி இருக்கார் …
எல்லாரும் படிச்சிக்கோங்க .
சுந்தர்ஜி ஒரு கவி .
-நட்புகளுடன்
மனோகர்
சுந்தர்ஜி
மஹா பெரியவா சுந்தரை கவிஞரும் ஆக்கிவிட்டார் போல் தெரிகிறது. தண்டனை அல்ல, நல்ல முதல் (க)விதை. தொடரட்டும் உமது பணி! வாழ்த்துக்கள்!
என்ன கவிஞரே………….
அருமையான கவிதை. அர்த்தமுள்ள கவிதை.
மகா பெரியவா கவிதையும் எழுது என்று சொல்லி விட்டார் . தொடரட்டும் உங்களது கவிதை முத்துக்கள்.
நன்றி
சுந்தர்ஜி ஐயா உங்கள் கவிதை மனிதர்களுக்கு ஐந்து அறிவு மிருகங்களுக்கு ஆறு அறிவு என்பதை நிருபிக்கிறது ———பாரிஸ் ஜமால், பிரான்சு தமிழ்ச் சங்கம் , பாரிஸ்
ரைட் …..
அருமை !!!
superb
சுந்தர் சார் காலை வணக்கம்
தங்களின் கிறுக்கல்கள் அருமையோ அருமை
நன்றி
Dear sundarji,
மிக அருமையான கவிதை .
சூப்பர் .
Thanks & Regards
V.HARISH
very very touching.
shashikala