Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, July 16, 2024
Please specify the group
Home > Featured > எது உண்மையான பக்தி ? – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

எது உண்மையான பக்தி ? – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

print
வர் ஒரு பிரபல யோகி. கடை வீதியின் வழியே அவர் நடந்து செல்லும்போது, வணிகர்களை நலம் விசாரித்தபடி செல்வார்.

அவர் தங்களுக்கு மிகவும் வேண்டியவர் என்று அந்த ஊர் பெரிய மனிதர்கள் ஆளாளுக்கு சொல்லி வந்தனர். இதில், ஒரு பலகாரக் கடை வைத்திருக்கும் வணிகன் ஒரு படி மேலே சென்று, “நீங்கள் எல்லாம் என்ன … சும்மா… நான் நினைத்தால் அவரை என் வீட்டிற்க்கே விருந்து சாப்பிட வரவழைக்க முடியும்!” என்று சக வணிகர்களிடம் பெருமை பேசினான்.

DSCN1665
“அன்பே சிவம்” – நேற்று காலை காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் எடுத்த புகைப்படங்கள் இவை!

“எங்கே முடிந்தால் வரவழை பார்க்கலாம்?” என்று பதிலுக்கு அவர்கள் கூற, வணிகன் அதை ஏற்றுக்கொண்டு, அந்த யோகியை பார்க்க சென்றான்.

தன் மகனுக்கு பிறந்தநாள் வருவதாகவும் அவர்  தன்னுடைய வீட்டிற்கு விருந்து சாப்பிட  வந்தால் நன்றாக இருக்கும். என்றும் பலவாறு அவரை மன்றாடி கேட்டுக்கொள்கிறான்.

யோகியும் வருவதாக ஒப்புக்கொள்கிறார்.

யோகி, ஒரு நாள் முன்னதாக ஒரு பரதேசியை போல மாறுவேடம் பூண்டு அந்த வணிகனின் கடைக்கு செல்கிறார். கடையை நோட்டம் விடும் அவர், எவரும் எதிர்பார்க்காத தருணம் அங்கு வைக்கப்பட்டிருந்த பலகாரங்களில் ஒன்றை எடுத்து வேக வேகமாக சாப்பிட ஆரம்பித்தார். இதை பார்த்து கோபத்தின் உச்சிக்கே சென்ற வணிகன், “என்ன துணிச்சல் இருந்தா வியாபாரத்துக்கு வெச்சிருக்குற பொருளை எடுத்து சாப்பிடுவே… பரதேசி… போடா வெளியே…” என்று இன்னபிற கடுஞ்சொல் கூறி அடித்து விரட்டி விடுகிறான்.

DSCN1661

அடுத்த நாள், யோகி தாம் ஒப்புக்கொண்டபடி, தனது சிஷ்யர்கள் புடை சூழ அந்த வணிகனின் வீட்டுக்கு விஜயம் செய்கிறார். ஒரே தடபுடல் விருந்து. வணிகர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பலர் வந்திருந்து அந்த யோகியுடன் விருந்தை சாப்பிடுகின்றனர்.

“இந்த வணிகர் தான் எவ்வளவு பரந்த உள்ளம் படைத்த நல்லவர். இல்லையெனில் சந்நியாசி ஒருவரை அழைத்து இப்படி வயிறார விருந்து கொடுப்பாரா?” என்று வந்தவர்கள் பேசிக்கொள்ள, அவர்களை நோக்கிய யோகி, “நான் பிரபலம் என்பதால் லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து, ஊரறிய விருந்து வைக்கும் இந்த நல்லவர்  பசியோடிருக்கும் ஒரு ஏழை பிச்சைக்காரனுக்கு ஒரு சிறிய பலகாரத்தை கொடுக்க மனமில்லாமல் நேற்று அடித்து விரட்டிவிட்டுவிட்டார் தெரியுமா?” என்றார்.

அதை கேட்கும் வணிகன் தனது தவறுக்கு வெட்கி தலை குனிகிறான்.

பக்தியும் இத்தகையது தான். ஏழை எளியோரிடத்தில் நாம் காட்டும் பரிவே உண்மையான பக்தி. வீண் பெருமைக்கும், புகழுக்கும், சுயநலத்துக்கும் செய்யப்படுவது என்றுமே பக்தி ஆகாது.

===================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : போரூர் இராமநாதீஸ்வரர் கோவிலில் பூஜை மற்றும் உற்சவங்களின் போது நாதஸ்வரம் இசைக்கும் நாதஸ்வர கலைஞர் திரு.துரை.

Nadhaswara Vidhwanமார்கழி மாதம் அதிகாலைகளில் தினசரி நாம் இராமநாதீஸ்வரர் கோவிலுக்கு சென்ற போது தினசரி இவரை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. நாம் சென்றதே 4.15 AM. ஆனால் இவர் அதற்கும் முன்பே வந்து தயாராக அமர்ந்திருப்பார். இத்தனைக்கும் இவர் வீடு அமைந்திருப்பது தி.நகர்.

இறைவனுக்கு அபிஷேகங்கள் நடக்கும்போது தவிலைஒருவர் வாசிக்க இவர் நாதஸ்வரம் வாசிப்பார். நாதஸ்வர இசையில் மெய்மறந்து இறைவன் அபிஷேகங்களை ஏற்றுக்கொள்ளும் நேரத்தில் நமது கோரிக்கைகளை நைச்சியமாக அவனிடம் தெரிவிப்பது நம் வழக்கம். (இதுவும் ஒரு டெக்னிக் !!)

இவரது மேளத்தை கேட்டுக்கொண்டே இறைவனின் அபிஷேகத்தை பார்த்தது மறக்க முடியாத ஒரு அனுபவம். ஏதோ ஒரு காரணத்தால் ஒரு நாள் மேளத்தை துவக்க தாமதமாகிவிட்டது. எங்களால் அபிஷேகத்தில் ஒன்றவே முடியவில்லை. நமக்கே இப்படியென்றால் இறைவனுக்கு ?

இறை வழிபாட்டில் நாதஸ்வரம் & தவில் அந்தளவு முக்கியமான ஒரு வாத்தியம்.

திரு.துரை அவர்களது பாட்டனார் காலம் முதல் பரம்பரை பரம்பரையாக இந்த தொழிலை செய்து வருகின்றனர். ஆனால் தம்மோடு இது முடிவு பெற்றுவிடும் என்றும் தமது வாரிசுகளுக்கு இதை கற்றுத் தரவில்லை என்றும் கூறினார். (காரணத்தை சென்ற பதிவில் நாம் கூறியிருப்போம்.)

DSC06465
இராமநாதீஸ்வரர் கோவிலில் ஒரு மார்கழி அதிகாலையில்…

தி.நகர் சிவா விஷ்ணு கோவிலில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமது தெய்வீகத் தொண்டை துவக்கியவர் தற்போது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புதியவர்களுக்கு இதை கற்றுத் தருகிறார். இந்த கலையை அழியாமல் பாதுகாக்க, இலவசமாக கூட கற்றுத் தர தயாராக இருப்பதாக கூறுகிறார்.

ஒரு சில திருமணங்களில், பெண் வீட்டாரால் தமக்கு கூலி கொடுக்க இயலாமல் போகும்போது தாம் அவர்களிடம் கூலியை கேட்டு நிர்பந்திப்பதில்லை என்றும் ஒரு சில திருமணங்களில் தாம் கூலி எதுவும் பெற்றுக்கொள்ளாமல் வாசித்த அனுபவம் உண்டு என்றும் கூறினார்.

திரு.துரை அவர்களிடம் நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அநேகமாக நமது பிரார்த்தனை நேரத்தில் இவர் கோவிலில் மேளத்தில் தான் இருப்பார் என்றபடியால், மேளத்தை இசைத்துக்கொண்டே பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார்.

திரு.துரை அவர்களுக்கு நம் மனமார்ந்த நன்றி.

===================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு வந்திருக்கும் கோரிக்கைகள் இரண்டுமே கடன் சுமை மற்றும் பொருளாதார நெருக்கடி சம்பந்தப்பட்டவை. கடன் படுவதிலும் ஒரு அர்த்தம் இருக்கவேண்டும். சிக்கனமாக வாழத் தெரியாமல் ஊதாரித் தனமாக செலவு செய்துவிட்டு கடனை ஏற்படுத்திக்கொண்டு தவிப்பவர்கள் ஒரு வகை. சகோதர சகோதரிகளின் திருமணம், பெற்றோர்களின் மருத்துவம் அல்லது எதிர்பாராத உடல்நிலை பாதிப்பு அல்லது மற்றவர்களின் சூழ்ச்சி இவற்றால் கடன் சுமை ஏற்பட்டு அவதிப்படுகின்றவர்கள் மற்றொரு வகை. முதல் வகையினருக்கு அவ்வளவு சீக்கிரம் அதிலிருந்து மீள வழி கிடைக்காது. ஆனால் இரண்டாம் வகையினருக்கு நிச்சயம் வழி உண்டு. அவர்கள் கஷ்டங்கள் படிப்படியாக குறைந்து விரைவில் நல்ல நிலைமையை அடைவார்கள்.

வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் பெருக, திருமகள் என்றும் கிரகத்தில் நிலைத்திருக்க நாம் சில டிப்ஸ்களை கீழ்கண்ட பதிவில் கூறியிருக்கிறோம்.

உங்கள் இல்லங்களில் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ என்றும் தழைத்தோங்க சில எளிய வழிகள்!

இயன்றவற்றை அனைவரும் பின்பற்று திருமகளின் அருளை பெற வாழ்த்துகிறோம்.

Sambirani2அடுத்து மிக முக்கியமான ஒரு குறிப்பு

தற்போதெல்லாம் வீட்டில் சாம்பிராணி போடும் வழக்கமே குறைந்துவிட்டது. வாரம் ஒருமுறையாவது வீட்டில் சாம்பிராணி போடும் வழக்கம் வேண்டும். அடுப்புக்கரியை வாங்கிவந்து அவற்றை தீ கங்குளாக செய்து அதன் மீது நல்ல உயர் ரக சாம்பிராணி தூளை போட்டு புகை ஏற்படுத்தவேண்டும். இப்படி செய்வது அந்த கிரகத்தில் இருக்கும் துஷ்ட தேவதைகளை, தரித்திரத்தை, விரட்டிவிடும். செய்து பாருங்கள்… கை மேல் பலன் தெரியும்.

===================================================================

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

கழுத்தை நெரிக்கும் கடன் சுமை & எதிர்காலம் குறித்த அச்சம்

Dear Wishers

I am eldest of five from family. Due to responsibilities to performace sisters/brother marriage (father expired during 2nd sister’s marriage), i had to incurr heavy debts which is aggrevating for the past 10 years.

Though myself and my brother working in a very reputed organisation and getting good salary, all the money go to the borrowers for paying huge interest. To pay interest taking fresh loans.

All the bank loans exhausted and not able to get any more.  I had sold my house also and pledged all the jewels of my wife and other relatives.  And many of my relatives are helping in time also. But all these things are not meeting the requirements.

I have lost respct among the society as well friends’ circles. Every day we are passing thru with fear. Not able to prioritise the payments. We both have two daughters and afraid of future.

We are strong devotees of Maha Periyava and our kula deivam Swaminathaswamy at Swamimalai. Request the wishers to pray for us and get rid of this very huge debts and have peaceful life.

I have already cross 54 and brother is at his 50. Thanking you knowing this noble site for the betterment of humans.

Maha periyavalukkum Gurunathaswamykkum saranam

reg
Periyava bakthan
KK,
Mumbai

===================================================================

சொத்துக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் வாடுகிறோம்!

அனைவருக்கும் வணக்கம்.

நாங்கள் அனைத்து சொத்துக்களையும் இழந்து தற்போது மிகவும் சிரமத்தில் இருக்கிறோம். மேலும் எங்களுக்கு அதிகமாக கடன் சுமை உள்ளது. அதனால் சீக்கிரம் இந்த கஷ்டத்தில் இருந்து விடுபட்டு தொழில் நல்ல படியாக நடக்க வேண்டும் என்று இறைவனிடம் கூட்டுப் பிரார்த்தனை செய்யுமாறு மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மிகவும் நன்றி.
– சாந்தி, சென்னை

===================================================================

இந்த வார பொது பிரார்த்தனை :

தெய்வீகக் கலைகள் அழியாமல் காப்பாற்றப்படவேண்டும்!

NathaswaramThavulதெய்வீகக் கலையான நாதஸ்வரம், தவில், வீணை, உள்ளிட்டவைகள் அழிந்து வருகின்றன. சமூக மாற்றங்கள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், பெருகி வரும் விலை வாசி மற்றும் திருமண சந்தையின் எதிர்பார்ப்புக்கள் பல பழமையும் தெய்வீகமும் வாய்ந்த தொழில்களை நசுக்கி வருகிறது.

நாம் முன்னரே கூறியது போல, நாதஸ்வரம், தவில், உள்ளிட்ட மங்கள வாத்தியங்களை இசைக்க எதிர்காலத்தில் ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். மனிதர்களுக்கு பதில் மின்சார கருவிகளே அதை வாசிக்கும். அப்படி ஒரு சூழல் ஏற்படக்கூடாது. இந்த தெய்வீகக் கலை அழியாமல் காப்பாற்றப்படவேண்டும். போற்றப்படவேண்டும். அதை கற்க பலர் முன்வரவேண்டும். அவர்களுக்கு நல்ல ஊதியமும் இதர வசதி வாய்ப்புக்களும் செய்து தரப்படவேண்டும். மங்கள இசை எங்கும் பொங்கிப் பெருக வேண்டும்.

===================================================================

குடும்ப பொறுப்பை தலையில் சுமந்து, சகோதர சகோதரிகளுக்கு திருமணம் உள்ளிட்டவைகளை செய்து அதனால் கடனில் சிக்கித் தவிக்கும் மும்பையை சேர்ந்த வாசகர் திரு.கே.கே. அவர்களுக்கும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வாசகி சாந்தி அவர்களுக்கும் கடன் சுமை தீர்ந்து, பொருளாதார பிரச்னைகள் அகன்று, அவர்கள் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பொங்கிப் பெருகி அவர்கள் கிரகத்தில் திருமகள் என்றும் நிலைத்திருப்பாளாக.  நோயற்றவாழ்வும் குறைவற்ற செல்வமும் அவர்கள் பெற இறைவனை பிரார்த்திப்போம். அதே போன்று அழிந்து வரும் நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட பாரம்பரிய தெய்வீகக் கலைகள் போற்றப்படவேண்டும். அழியாமல் பாதுக்கப்படவேண்டும். அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கு அனைத்து விதமான சௌகரியங்களும் சலுகைகளும் தரப்படவேண்டும்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : பிப்ரவரி 23,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை சொல்லை பிரார்த்தித்துவிட்டு கூடவேஇங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : திருச்சியை சேர்ந்த THRIVE EDUCATIONAL SOCIETY  எஸ்.ரகுராமன் & பி.பிரகாஷ்.

[END]

10 thoughts on “எது உண்மையான பக்தி ? – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்

 1. மும்பையை சேர்ந்த வாசகர் திரு.கே.கே. அவர்களுக்கும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வாசகி சாந்தி அவர்களுக்கும் கடன் சுமை தீர்ந்து, பொருளாதார பிரச்னைகள் அகன்று, அவர்கள் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பொங்கிப் பெருகி அவர்கள் கிரகத்தில் திருமகள் என்றும் நிலைத்திருக்கவும், அழிந்து வரும் நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட பாரம்பரிய தெய்வீகக் கலைகள் . அழியாமல் பாதுக்கப்படவும்
  பிராத்திப்போம்

  நாதஸ்வர கலைஞர் திரு.துரை. அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  கடன் தொல்லையிலிருந்து விடுபட அங்காரகன் ஸ்லோகம்

  மங்ளோ பூமிபுத்ரஸ்ச ருணஹர்த்தா தனப்ரத:
  ஸ்திராஸனோ மஹாய: ஸ்ர்வகர்ம விரோதக:
  அங்காரக மஹாபாக பகவன் பக்தவத்ஸல
  த்வாம் நமாமி மமாஸேஷம் ருணமாஸு வினாஸய

  செல்வம் பெருக ஸ்வர்ணாகர்ஷண பைரவர் மந்திரம்

  ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ண பைரவாய
  ஹூம்பட் ஸ்வாஹா
  ஓம் நமோ பகவதே சுவர்ணாகர்ஷண பைரவாய
  தன தான்ய வ்ருத்தி கராய சீக்ரம் ஸ்வர்ணம்
  தேஹி தேஹி வச்யம் குரு ஸ்வாஹா.

  நன்றி
  உமா

 2. \\\பசியோடிருக்கும் ஒரு ஏழை பிச்சைக்காரனுக்கு ஒரு சிறிய பலகாரத்தை கொடுக்க மனமில்லாமல் நேற்று அடித்து விரட்டிவிட்டுவிட்டார் தெரியுமா?” \\\

  எளிமையான விளக்கத்துடன் ஆழமன கருத்துள்ள கதை அருமை .

  பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

  பிரார்த்தனை கோரிக்கைகள் அனைத்தும் சிவன் அருளால் நல்லபடியாக முடிவிற்கு வரும் .

  -மனோகர்

 3. திரு.கே.கே. அவர்களுக்கும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வாசகி சாந்தி அவர்களுக்கும் கடன் சுமை தீர்ந்து, பொருளாதார பிரச்னைகள் அகன்று, அவர்கள் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பொங்கிப் பெருகவும் ……அழிந்து வரும் பாரம்பாரிய கலைகள் அழியாமல் பாதுக்கப்படவும் பிராத்திப்போம்…. நன்றி தனலட்சுமி ……

 4. சுந்தர்ஜி
  என் சிறிய வயதில் கடன் பிரச்னையால் என் தந்தை கஷ்டப்பட்டு அதனால் நானும் பல விதத்தில் மன உளைச்சலினால் அவதிப்பட்டு இருக்கிறேன். அதனால் என் மேற்படிப்பு வீண்போனது மட்டுமல்லாமல் வாழ்க்கையும் வீணானது. ஒரு வேளை உணவு இல்லாமல் கூட சமாளித்து விடலாம். கடன் தொல்லை சமாளிக்க முடியாது. மேற்கண்ட வாசகர் கே.கே மற்றும் வாசகி சாந்தி அவர்களுக்கு கடன் பிரச்னை தீர நாம் மனமுருக பிரார்த்திப்போம். மேலும் நாதஸ்வர கலைனர் திரு துரை அவர்களை நம் தளத்திற்கு வரவேற்று அவரைப்போன்ற கலைனர் மற்றும் கலைகள் வளரவும் பிரார்த்திப்போம். நன்றி

 5. விருத்தாசலம்[திருமுதுகுன்றம்]பெரியநாயகி உடனுறை பழமலைநாதர் திருகோயில்:
  சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பதிகங்கள் பாடி 12000 பொற்காசுகள் பெற்றார். பொற்காசுகளை எடுத்துக் கொண்டு திருவாரூர் செல்வது சிரமமாக இருக்கும் என்று எண்ணி, சிவபெருமானிடம் இந்த பொற்காசுகள் தனக்கு திருவாரூரில் கிடைக்கும் படி அருள் செய்ய வேண்டும் என்று முறையிட்டார். பழமலைநாதரும் பொற்காசுகளை ஆலயத்திற்கு அருகில் ஓடும் மணிமுத்தா நதியில் வீசிவிட்டு, திருவாரூரில் கமலாலய குளத்தில் பெற்றுக் கொள்ளும் படி அருள் செய்தார். இத்தலத்து ஈசனுகு நெய் தீபம் 5 ……மேலும் தொடர்ந்து 48 நாட்கள் காலை ,மாலை தீபம் வைத்து ,இத்தலத்து சுந்தரர் பதிகம் பாடி வர வேண்டும் ….பொன், பொருள் உண்டாகும்….
  திருச்சிற்றம்பலம்

  மெய்யைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பி
  வேதம்நான் கும்விரித் தோதியோர் நம்பி
  கையில்ஓர் வெண்மழு ஏந்தியோர் நம்பி
  கண்ணு மூன்றுடை யாயொரு நம்பி
  செய்ய நம்பிசிறு செஞ்சடை நம்பி
  திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால்
  எய்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி
  எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.

  திங்கள் நம்பிமுடி மேல்அடி யார் பால்
  சிறந்த நம்பிபிறந் தஉயிர்க் கெல்லாம்
  அங்கண் நம்பியருள் மால்விசும் பாளும்
  அமரர் நம்பிகும ரன்முதல் தேவர்
  தங்கள் நம்பிதவத் துக்கொரு நம்பி
  தாதை என்றுன் சரண்பணிந் தேத்தும்
  எங்கள் நம்பிஎன்னை ஆளுடை நம்பி
  எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.

  வருந்த அன்றுமத யானை உரித்த
  வழக்கு நம்பிமுழக் குங்கடல் நஞ்சம்
  அருந்தும் நம்பிஅம ரர்க்கமு தீந்த
  அருளென் நம்பிபொரு ளால்வரு நட்டம்
  புரிந்த நம்பிபுரி நூலுடை நம்பி
  பொழுதும் விண்ணும்முழு தும்பல வாகி
  இருந்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி
  எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.

  ஊறு நம்பிஅமு தாஉயிர்க் கெல்லாம்
  உரிய நம்பிதெரி யம்மறை அங்கம்
  கூறு நம்பிமுனி வர்க்கருங் கூற்றைக்
  குமைத்த நம்பிகுமை யாப்புலன் ஐந்தும்
  சீறு நம்பிதிரு வெள்ளடை நம்பி
  செங்கண்வெள் ளைச்செழுங் கோட்டெரு தென்றும்
  ஏறு நம்பிஎன்னை ஆளுடை நம்பி
  எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.

  குற்ற நம்பிகுறு கார்எயில் மூன்றைக்
  குலைத்த நம்பிசிலை யாவரை கையிற்
  பற்று நம்பிபர மானந்த வெள்ளம்
  பணிக்கும் நம்பிஎனப் பாடுத லல்லால்
  மற்று நம்பிஉனக் கென்செய வல்லேன்
  மதியி லேன்படு வெந்துயர் எல்லாம்
  எற்று நம்பிஎன்னை ஆளுடை நம்பி
  எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.

  அரித்த நம்பிஅடி கைதொழு வார்நோய்
  ஆண்ட நம்பிமுன்னை ஈண்டுல கங்கள்
  தெரித்த நம்பிஒரு சேவுடை நம்பி
  சில்பலிக் கென்றகந் தோறுமெய் வேடம்
  தரித்த நம்பிசம யங்களின் நம்பி
  தக்கன்றன் வேள்விபுக் கன்றிமை யோரை
  இரித்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி
  எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.

  பின்னை நம்பும்புயத் தான்நெடு மாலும்
  பிரமனும் என்றிவர் நாடியுங் காணா
  உன்னை நம்பிஒரு வர்க்கெய்த லாமே
  உலகு நம்பிஉரை செய்யும தல்லால்
  முன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி
  முழுதிவை இத்தனை யுந்தொகுத் தாண்ட
  தென்னை நம்பிஎம் பிரானாய நம்பி
  எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.

  சொல்லை நம்பிபொரு ளாய்நின்ற நம்பி
  தோற்றம் ஈறுமுத லாகிய நம்பி
  வல்லை நம்பிஅடி யார்க்கருள் செய்ய
  வருந்தி நம்பிஉனக் காட்செய கில்லார்
  அல்லல் நம்பிபடு கின்றதென் நாடி
  அணங்கொரு பாகம்வைத் தெண்கணம் போற்ற
  இல்ல நம்பியிடு பிச்சைகொள் நம்பி
  எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.

  காண்டு நம்பிகழற் சேவடி என்றும்
  கலந்துனைக் காதலித் தாட்செய்கிற் பாரை
  ஆண்டு நம்பியவர் முன்கதி சேர
  அருளும் நம்பிகுரு மாப்பிறை பாம்பைத்
  தீண்டுநம் பிசென்னி யிற்கன்னி தங்கத்
  திருத்து நம்பிபொய்ச் சமண்பொரு ளாகி
  ஈண்டு நம்பிஇமை யோர்தொழு நம்பி
  எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.

  கரக்கும் நம்பிகசி யாதவர் தம்மை
  கசிந்தவர்க் கிம்மையோ டம்மையில் இன்பம்
  பெருக்கும் நம்பி பெரு கக்கருத்தா.

  1. இரு அன்பர்களுக்கும் மிகச் சிறப்பான பரிகாரங்களை கூறியமைக்கு நன்றி விஜய் பெரியசுவாமி அவர்களே. தொடரட்டும் உங்கள தொண்டு.
   – சுந்தர்

 6. கும்பகோணத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருச்சேறை என்னும் இடத்தில் அமைந்துள்ளது சார பரமேஸ்வரர் ஆலயம். வறுமையை நீக்கி செம்மையான வாழ்வளிக்கும் இறைவன், கடன் நிவர்த்தீஸ்வரர் ( ரிண விமோசன லிங்கேஸ்வரர் ) என்று அழைக்கப்படுகிறார்.11 வாரம் திங்கட்கிழமைகளில் அர்ச்சனை செய்து 11 ஆவது வாரம் அபிஷேகத்தில் கலந்து கொண்டால் மக்கட்பேறு, பொருள், கல்வி உள்ளிட்ட யாவும் கிட்டும் என்பது திண்ணம்…

  விரித்தபல் கதிர்கொள் சூலம்
  வெடிபடு தமரு கங்கை
  தரித்ததோர் கோல காலப்
  பயிரவ னாகி வேழம்
  உரித்துமை யஞ்சக் கண்டு
  ஒண்டிரு மணிவாய் விள்ளச்
  சிரித்தருள் செய்தார் சேறைச்
  செந்நெறிச் செல்வ னாரே[திருச்சேறை சிவபெருமானே பைரவர் கோலத்தில் காட்சியளிப்பதாய் கூறும் தேவாரப் பாடலாகும்].

  1. Nandri Thiru Vijay Periya Swamy avargale. Appadiye seigirom.
   Thanks Thiru Vijay Periya Swamy sir. Will do accordingly.

   reg
   KK, Navi Mumbai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *