Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 8, 2024
Please specify the group
Home > Featured > என்ன குழியில விழுந்துட்டீங்களா? எப்படி தப்பிக்கிறதுன்னு தெரியலியா?? MONDAY MORNING SPL

என்ன குழியில விழுந்துட்டீங்களா? எப்படி தப்பிக்கிறதுன்னு தெரியலியா?? MONDAY MORNING SPL

print
ரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது.

அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை. காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது.

அந்த கிணறு எப்படியும் மூடப்படவேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண் வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான்.

அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.

ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது.

ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது. இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது.

கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது. விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.

வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மை படுகுழியில் தள்ளி குப்பைகளையும் மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும். ஆனால் நாம் தான் இந்த கழுதை போல தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும். நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்க்களாக்கிக் கொள்ளவேண்டும்.

எத்தனை பெரிய குழியில் நீங்கள் விழுந்தாலும் “இத்தோடு நம் கதை முடிந்தது” என்று கருதாமல் விடாமுயற்சி என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம்.

“நீங்கள் எதுக்குள்ளே விழுந்தா என்ன, உங்க மேல எது விழுந்தா என்ன? எல்லாத்தையும் உதறிட்டு, YOU PROCEED BUDDY!” இதுவே வெற்றிக்கான சூத்திரம்!

இந்த தளம் உருவாகி இறைவனின் கருணையினாலும் உங்கள் ஆதரவினாலும் இன்று வெற்றிநடைப் போட்டுக்கொண்டிருக்கும் கதையும் இத்தகையது தான் என்பது உங்களுக்கு தெரியுமா?

16 thoughts on “என்ன குழியில விழுந்துட்டீங்களா? எப்படி தப்பிக்கிறதுன்னு தெரியலியா?? MONDAY MORNING SPL

  1. Monday Morning article gets better every single week!!
    What a brilliant start to the week ahead!!
    Monday morning article’s are setting a NEW TREND…
    Another valuable lesson learnt!!
    GOD has BLESSED US because we keep getting such Inspiring articles!!
    TO get inspired is great, BUT TO INSPIRE OTHERS IS GREATER AND NOBLE!!
    March on Sundar Anna!!!
    Regards
    R.HariHaraSudan.
    “HE WHO KNOWS THE SELF KNOWS ALL”.

  2. இனிய காலை வணக்கம் சார்

    உண்மைதான் சார் எவ்வளவு பிரச்சினை வந்தலும் இந்த கழுதை மாதிரி உதறிவிட்டு மண்ணை கீழே தள்ளி ஜெயத்து நிற்க வேண்டும் சார்..

    நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்க்களாக்கிக் கொள்ளவேண்டும். அருமையான வாசகம் சார்..

    மிகவும் அருமையான பதிவு சார்

    நன்றி நன்றி

  3. இனிய காலை வணக்கம் சார் ,

    மிக மிக அருமையான பதிவு . தடை கற்களை படி கற்களாக மாற்றி வெற்றி நடை போட வேண்டும் .

    நன்றி நன்றி .

  4. சுந்தர்ஜி,
    கதைக்கும் படத்திற்கும் அத்தனை பொருத்தம் சார். அதிலும் இக்கதைக்கு நம் தளம் உருவானதிற்கும் சம்பந்தம் இருக்கிறது என்று சொன்னீர்கள். எனக்கு அந்த கழுதையை நீங்களாகவும் விவசாயியை கடவுளாகவும் நினைத்து பார்க்க தோன்றியது. சிரிப்பை வரவழைத்தாலும் அதில் உங்கள் ஆரம்ப கால கஷ்டங்கள் தெரிந்தது.
    மேலும் ” நீங்கள் எதுக்குள்ளே விழுந்தா என்ன, உங்க மேல எது விழுந்தா என்ன? எல்லாத்தையும் உதறிட்டு, YOU PROCEED BUDDY! –
    உண்மையான சூத்திரம். சிரிப்புடன் சிந்திக்க வைத்த பதிவு. இந்த நாளின், வாரத்தின் தொடக்கத்தில் எனக்கு ஒரு நல்ல சிந்தனை. நன்றி

    1. இந்த கதைக்கு பொருத்தமான படத்தை தேடும்போது, உண்மையில் வெளிநாட்டில் ஒரு கழுதை கிணற்றுக்குள் விழுந்து தீயணைப்பு துறையினர் அதை காப்பாற்றிய செய்தி+படம் கிடைத்து. அந்த படம் நம் கதைக்கு பொருத்தமாக இருக்கவே அப்படியே அதை பதிவில் பயன்படுத்திவிட்டேன்.

      -சுந்தர்

      1. போட்டோ கண்டுபிடிக்க உங்களுக்கா கஷ்டம் …:)

  5. பெரிய கடப்பாறையால் ஒரு பாறையை உடைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதுற்கு எவ்வளவு நேரமாகும்?
    அதே பாறையை ஒரு சின்ன முள்ளால் கீறி உடைப்பதென்றால் எத்தனை நாளாகும்? முள்ளால் பாறையை தகர்ப்பதா? இது எப்படி முடியும்? என்று முணங்குகிறீர்களா? முள்ளைவிட மென்மையான, அப்போது தான் உருவாகக் கூடிய மென்மையான செடியின் வேர் எத்தனையோ பெரிய பெரிய பாறாங்கற்களைத் துளைத்து அதன் மீது முறைத்து நிற்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவை அப்படித் திகைத்து நின்றிருந்தால் வேரூன்றியிருக்க முடியுமா? வெளியே இருக்கும் சூழ் நிலை எதுவென்றே தெரியாத நிலையில் விதையில் இருந்து முளைக்கும் வேர், எவ்வளவு தைரியமாக கடினமான பாறையை எதிர்கொண்டு விடாமுயற்சியால் துளைத்து வளர்கிறது என்பதை கொஞ்சம் யோசித்துபாருங்கள். தன்னம்பிக்கையின் பலம் தெரியும்.
    உங்கள் ஆழ்மனம் ஆற்றல்மிக்கதாக இருந்தால், தன்னம்பிக்கையும் நிலையானதாக இருக்கும். ஆழ்மனதின் ஆற்றல் குறையாமல் இருக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி, உங்கள் மனதில் ஒரு போதும் எதிர்மறை சந்தேகம் எட்டிப்பார்க்க அனுமதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் .வெற்றி நிச்சயம் .
    தடைகற்களை படிக்கல்லாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றிபெறுவோம் .
    MONDAY MORNING SPL .very simpley சூப்பர்.
    -மனோகர்

  6. சுந்தர்ஜி,

    கதையாக இருந்தாலும் கருத்து மிகவும் அருமை. கருத்து படம் அருமை. உங்கள் தேடல் பல சமயங்களில் என்னை வியப்பிலாழ்த்துகிறது.

    இந்த தளம் உருவாகி இறைவனின் கருணையினாலும் உங்கள் இன்று வெற்றிநடைப் போட்டு ஆண்டு விழாவை எதிர் பார்த்து கொண்டிருக்கும் உங்களை பார்க்கும் போது படையப்பா பாட்டுத்தான் நினைவுக்கு வருகின்றது.

    வெற்றி நடை போட்டு சிகரத்தில் ஏறு …………………….

    நன்றி.

  7. டியர் சார்
    படிகட்டும் கல் தான் , கடவுளும் கல் தான்.ஆனால் அதிக உளி பட்டு கல்
    கடவுள் ஆகியது. குறைவான உளி பட்டு கல் படிகட்டு ஆகியது.

  8. எத்தனை பெரிய குழியில் நீங்கள் விழுந்தாலும் “இத்தோடு நம் கதை முடிந்தது” என்று கருதாமல் விடாமுயற்சி என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம்.

    “நீங்கள் எதுக்குள்ளே விழுந்தா என்ன, உங்க மேல எது விழுந்தா என்ன? எல்லாத்தையும் உதறிட்டு, YOU PROCEED BUDDY!” இதுவே வெற்றிக்கான சூத்திரம்!

    வெற்றிக்காக நாம் பயன்படுத்தும் சூத்திரம்
    அதுவே பின்னாளில் சொல்லட்டும் நம் சரித்திரம்

    இந்த தளம் உருவாகி இறைவனின் கருணையினாலும் உங்கள் விடா முயற்சியினாலும் தடை கற்களை படிகற்களாக மாற்றி வெற்றி நடை போட்டுகொண்டிருக்கிறீர்கள்.

    மிகவும் அருமை.

  9. விழுறது எழுறதும் தான் வாழ்கை
    எப்போ விழுவோம் நு நம்மக்கு தெரியாது
    எப்படியாவது எந்திரிக்கணும் மனசு இருந்த மத்ததெல்லாம் கூடி வரும்

  10. சுந்தர் சார்,

    இந்த பதிவு சிறிது கூட சிரிப்பதற்கு இடம் கொடுக்கவில்லை. சிந்திக்கவும் மற்றும் மனதை உறுதி செய்யவும் தான் இடம் கொடுகிறது.

    சார் உங்களின் உண்மையான உழைப்பு தான் இந்த rightmantra.com -ன் முதலாம் ஆண்டின் வெற்றியை நோக்கி செல்கிறது. அதன் பலனே இதன் வாசகர்கள் மற்றும் வாசகர்களாக இருந்து மாறிய உங்களின் நண்பர்கள்.

    இந்த தலைப்பு பதிவை படிப்பவர்களுக்கு நிச்சயம் தலை எழுத்தை மாற்றகுடியது.

    நன்றியுடன் அருண்.

  11. ///ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது. இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது.

    கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது. விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது ..///

    தன்னம்பிக்கை ,விடா முயற்ச்சிக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு ….Monday காலை சிறப்பு பதிவை மாலையில்தான் பார்க்க முடிந்தது ..

  12. கழுதையின் தன்னம்பிக்கை வாழ்க்கையில்,ஏமாற்றமடைந்தோர்,மற்றும் குழப்பத்தில் உள்ள மனதிற்கு அருமருந்து..

  13. அற்புதம் 🙂 🙂 அருமையான கதை!! இதை மிக விரைவில் பெரிய தலைவர்கள் மேடையில் கூறுவதை காணலாம் 😉 😉

  14. தன்னம்பிக்கையோடும் திடமான மன உறுதியோடும் சிந்தித்து செய்யப்படும் எந்த ஒரு காரியமும் அதன் இலக்கை அடையாமல் இருந்ததில்லை !!!

    வாழ்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகம் இது!!!

    குழிக்குள் விழுந்த பந்து அக்குளிக்குள் நீரை நிரப்பிய உடன் மிதந்து மேலே வருவது போல நாம் வாழ்க்கையில் மேலே வர பழக வேண்டும் !!!

    நம்மீது எறியப்படும் ஒவ்வொரு கல்லையும் கடவுள் எனும் சிற்பி நம்மை செதுக்குவதுபோன்ற உணர்வுடன் அணுகி பொறுமையுடன் கடமையே கண்ணாக இருப்போமேயானால் நாம் நினைத்த காரியம் வெல்வது நிச்சயம் !!!

    வாழ்க வளமுடன் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *