Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, December 6, 2024
Please specify the group
Home > Featured > துன்பத்திலும் தொடரும் பக்தியே தூய்மையானது – Rightmantra Prayer Club

துன்பத்திலும் தொடரும் பக்தியே தூய்மையானது – Rightmantra Prayer Club

print
‘சமூக நீதிக் காவலர்’ என்கிற பட்டம் இன்று அரசியல்வாதிகளிடம் சிக்கிக்கொண்டு படாதபாடு படுவது நாம் அறிந்ததே. ஆனால் உண்மையான சமூகநீதிக் காவலர் யார் தெரியுமா? நம் தலைவர் சிவபெருமான் தான். எந்த வித ஏற்றத் தாழ்வுகளும் இன்றி அனைத்து சமுதாயத்தினருக்கும் தனது அருளை வாரி வழங்கியதில் அவருக்கு நிகர் அவரே தான்.

 திருவையாறு ஐயாறப்பர் திருக்கோவில்

திருவையாறு ஐயாறப்பர் திருக்கோவில்

அந்தணர் முதல் பானை செய்யும் குயவர் வரை, புலையர் முதல் மீன் பிடிக்கும் மீனவர் வரை அனைத்து வர்க்கத்தினரும் அவர் மீது பக்தி செலுத்தி அவரது அருளை பெற்றதோடு நாயன்மார்களாகவும் உயர்ந்து, சிவாலயங்கள் அனைத்திலும் இடம் பிடித்துவிட்டார்களே!

பக்தனை தூக்கி விடுவது மட்டுமின்றி அவனை உலகத்தோர் அனைவரும் வணங்கும் நிலைக்கு உயர்த்துவது தான் சிவபெருமானின் வழக்கம்.

DSC06202

ஆனால் அப்படி ஒரு நிலையை அடைய அந்த பக்தன் கடுமையான சோதனைகளை சந்திக்கவேண்டும். சோதனையின்றி சிவனருள் சாத்தியமேயில்லை. (சிவனருள் மட்டுமில்லை… எவரருளும் சாத்தியமில்லை என்பதே உண்மை!) 63 நாயன்மார்களின் வரலாறு உணர்த்துவது அதைத் தான்.

மீன்பிடி தொழிலை செய்து வந்த அதிபத்தர் என்பவருக்கு சிவன் அருள் செய்து அவரை நாயன்மாராக உயர்த்திய வரலாற்றை பார்ப்போம்.

முதலில் கிடைக்கும் மீன் சிவனுக்கு!

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தென் தமிழகத்தின் முக்கிய துறைமுக நகரமான நாகப்பட்டினத்தில் அதிபத்தர், என்னும் சிவபக்தர் வசித்து வந்தார். மீனவரான அவர், அந்த ஊரில் எழுந்தருளியுள்ள காயாரோகணேஸ்வரர் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். தினமும் மீன் பிடிக்கச் செல்லும் அவர், முதலில் கிடைக்கும் மீனை, கடலில் வீசி சிவனுக்கே அர்ப்பணம் செய்துவிடுவார்.

ஒருகட்டத்தில் இவரது பக்தியை சோதிக்க எண்ணிய சிவன், கடலில் ஒரு மீன் மட்டுமே கிடைக்கும்படி செய்தார். ஆனாலும், அதிபத்தர் அந்த மீனை, சிவனுக்கே படைத்தார். வறுமையில் வாடினாலும், அதிபத்தர் தனது பக்தியை சற்றும் விட்டுக்கொடுக்கவில்லை. தொடர்ந்து இதே போன்று ஒரு மீன் மட்டுமே கிடைத்து வந்தது. அதிபத்தரும் அந்த ஒரு மீனையும் சிவனுக்கே அர்ப்பணம் செய்து வந்தார். விளைவு… அவரது குடும்பம் வறுமையிலும் பசியிலும் வாடியது.

Adhibatha Nayanar

ஒரு நாள் வழக்கம்போல அதிபத்தர் மீன் பிடிக்கச் சென்ற போது, வலையில் நவரத்தினங்களால் பதிக்கப்பட்ட ஒரு தங்க மீனை கிடைக்கச் செய்தார் சிவன். எங்கே வழக்கம் போல அதிபத்தர் இதையும் கடலில் வீசிவிடுவாரோ என்று பயந்த உடனிருந்த மீனவர்கள் அதனை கடலில் போட வேண்டாமென தடுத்தனர். ஆனால், அதிபத்தர் “முதலில் கிடைக்கும் மீன், இறைவனுக்கே என்பதில் இருந்து நான் எந்த சூழ்நிலையிலும் மாறமுடியாது!” என்று கூறி அதை கடலில் வீசி விட்டார். அவரது பக்தியை மெச்சிய சிவன், அம்பிகையுடன் காட்சி கொடுத்து முக்தி கொடுத்தார். இவர் நாயன்மார்களில் ஒருவராகும் அந்தஸ்தையும் பெற்றார்.

செழிப்பிலும், செழுமையிலும் இறைவனுக்கு பக்தி செய்வதும் நேர்மையாய் இருப்பதும் ஒரு விஷயமே அல்ல. ஆனால், வறுமையிலும் சோதனையிலும் நேர்மையுடன் பக்தி செய்வதே பெரிது. அதிபத்தரின் வரலாறு உணர்த்துவது இதைத் தான்.

நாமும் எந்த சோதனை வந்தபோதும் அவன் மீது கொண்டுள்ள பக்தியும் அன்பும் மாறாதிருந்து அவன் கழல் போற்றுவோம்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமசி வாயவே…!

===============================================================

உயிர்காக்கும் உன்னத சேவை!

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : மெரினா வெங்கட்.

மெரினா கடற்கரையில் அலையில் சிக்கி மூழ்குபவர்களை காப்பாற்றும் நிஜ ஹீரோ. இதுவரை இவர் காப்பாற்றிய நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 300க்கும் மேல் இருக்கும்! தான் செய்யும் இந்த உதவிக்கு இவர் பணம் எதுவும் பெற்றுகொள்வதில்லை. சேவையாக கருதித் தான் செய்து வருகிறார்.

DSC01633 copy

இவருடனான சந்திப்பு பற்றி விரிவான பதிவு நம் தளத்தில் இடம்பெற்றுள்ளது.

மெரினாவில் இதுவரை 300 உயிர்களுக்கும் மேல் காப்பாற்றியுள்ள ஒரு நிஜ ஹீரோ!

அச்சந்திப்பின் போது வெங்கட் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரது உயிர் காக்கும் பணியில் உதவக்கூடிய வாட்டர் ஸ்கேட்டிங் போர்டுகள் நான்கு நம் தளம் சார்பாக நேற்று வாங்கித் தரப்பட்டது. இந்த பணியில் உதவிய வாசகர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

கோடை விடுமுறை நெருங்குவதையடுத்து மெரினாவில் அடுத்த சில மாதங்கள் கூட்டம் அதிகம் இருக்கும். குறிப்பாக மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் கூட்டம் அதிகம் இருக்கும். எனவே இந்த உதவி மிக மிக அவசியமாகிறது. தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடுபவர்களை இந்த ஸ்கேட்டிங் போர்டுகள் உதவியுடன் சுலபமாக காப்பாற்ற முடியும்.

கோடைக்காலங்களில் தனது பணியும் பொறுப்பும் அதிகம் என்று கூறும் வெங்கட், இந்த காலகட்டங்களில் காலை 8.00 மணிக்கு கடற்கரைக்கு சென்றால் வீடு திரும்ப இரவு 9.00 மணியாகும் என்று கூறுகிறார்.

சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள விநாயகர் கோவில் ஒன்றில் சுவாமி ஐயப்பனின் முன்பாக இது வழங்கப்பட்டது!

swami-vivekananda-quotes

நமது பிரார்த்தனை கிளப்பிற்கு இதுவரை தலைமை ஏற்றவர்களில் இவர் மிகவும் வித்தியாசமானவர் என்றால் மிகையாகாது. சுவாமி விவேகானந்தர் கேட்ட நூறு இளைஞர்களில் நிச்சயம் இவர் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை.

நமது பிரார்த்தனை கிளப் பற்றி  எடுத்துக்கூறி, இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கூறியபோது, தான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை என்று கூறி தயங்கினார். நாம் தான் எடுத்துக்கூறி, ஒப்புக்கொள்ளவைத்தோம். வரும் ஞாயிறு பிரார்த்தனை தினத்தன்று கடற்கரையில் பிரார்த்தனை செய்வதாக கூறுகிறார்.

சமுத்திர கரையில் செய்யப்படும் பிரார்த்தனை, நதிதீரத்தில் செய்யப்படும் பிரார்த்தனையைவிட ஆயிரம் மடங்கு பலன் தரவல்லது.

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

===============================================================

இந்த வாரம் கோரிக்கைகளை சமர்பிதிருக்கும் நண்பர் ராஜா, நம் தள வாசகர்களில் ஒருவர். பெங்களூரில் வசிக்கிறார். தனது நண்பர்களுக்காக ஏற்கனவே இங்கு ஒரு சில கோரிக்கைகளை அனுப்பியிருக்கிறார். நமது பணிகளில் தன்னால் இயன்றளவு அவ்ப்வப்போது உதவி வருபவர்களில் இவரும் ஒருவர். நடுக்காவேரி பிள்ளையார் கோவிலுக்கு உழவாரப்பணிக்கு செல்லும்போது தானும் வர விருப்பம் தெரிவித்திருக்கிறார். அடுத்து தனது தாயாரின் உடல்நலம் தேறவேண்டி கோரிக்கை வைத்திருக்கும் நண்பர் ஹரிஹரசுதன். நமது தளத்தின் தீவிர VOLUNTEER களில் ஒருவர். நமது தளம் சார்பாக நடக்கும் விழாவாகட்டும், நமது உழவாரப்பணியாகட்டும் அனைத்திலும் முதலில் வந்து நிற்பவர். கடந்த சில மாதங்களாக ஏனோ அடுத்தடுத்து பிரச்னைகள். கதிரவனை கண்ட பனி விரைவில் அனைத்து பிரச்சனைகளும் சோதனைகளும் தீர்ந்து விரைவில் அவர் சகஜ நிலைக்கு திரும்பவேண்டும். மூன்றாவது நடுக்காவேரியை சேர்ந்த திரு.அனந்தராமன். இவரை நாம் பார்த்ததில்லை. அறிமுகமும் இல்லை. கடந்த வாரம் ஞாயிறு மாலை திரு.கணு அவர்கள் வீட்டில் நமது பிரார்த்தனை கிளப்பின் பிரார்த்தனை நடைபெற்றபோது  பிரார்த்தனையில் கலந்துகொண்டார். திரு.கணு அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கு நாம் சில நாட்களுக்கு முன்பு தொடர்புகொண்டபோது, இவர அருகில் இருந்தார். நமது தளத்தையும் பணிகளையும் பாராட்டியவர் தனது கோரிக்கைகளையும் அது சமயம் தெரிவித்தார். இவரது கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற வேண்டும்.

===============================================================

தோழிக்கு தள்ளிபோகும் திருமணம் உடனே நடக்கவேண்டும் !

Dear sir,

This week I request you to pray for one of my close friend Suprita for her marriage proposal. She got engaged 6 months ago and due to some circumstances the marriage is dragging and she is really helpless doesn’t know what to do. She is a good girl and I request all of you to pray for her quick and smooth marriage this week.

Regards,
P.Raja

===============================================================

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள தாயார் விரைவில் நலம் பெறவேண்டும்!

Dear Anna,

My mother R.Ramamani (60) is affected by diabates (High-sugar) and has been admitted in Chinmaya Mission Hosipital, Bangalore. Recently she undergone two operations. She is very weak. I want quick and speedy recovery of her health and would like to see herself doing day-to-day works as usual. It is very painful for me to see my mother in bed.

Please pray for her this week.

My sincere thanks to all our friends and readers,

– Hariharasudhan,
Chennai

===============================================================

மகளுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கவேண்டும் !

வணக்கம் அன்பர்களே,

என் பெயர் அனந்தராமன். நடுக்காவேரி யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் மேலாளராக பணிபுரிகிறேன். திரு.கணு அவர்கள் மூலம் இந்த தளம் பற்றியும் பிரார்த்தனை கிளப் பற்றியும் அறிந்துகொண்டேன். சென்ற வாரம் கணு அவர்கள் வீட்டில் நடைபெற்ற பிரார்த்தனையிலும் கலந்துகொண்டேன்.

இந்த மன்றத்தில் என்னுடைய கோரிக்கையை சமர்பிக்க விரும்புகிறேன்.

என்னுடைய மகள் தீப லக்ஷ்மி மற்றும் கிருஷ்ண ப்ரசாத் தம்பதிகளுக்கு திருமணமாகி ஆறு வருடங்களாகியும் புத்திரபாக்கியம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு விரைவில் சந்தான பாக்கியம் கிடைக்க உங்கள் அனைவரையும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அதே போல என்னுடைய மகன்கள் இருவருக்கும் நல்லதொரு எதிர்காலம் அமையவேண்டும் என்றும் பிரார்த்திக்க வேண்டுகிறேன்.

மிக்க நன்றி,
அனந்தராமன்,
நடுக்காவேரி

===============================================================

இந்த வார பொது பிரார்த்தனை

10 வகுப்பு தேர்வை மாணவர்கள் நல்ல முறையில் எழுதவேண்டும், நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும்!

10 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கி தற்போது நடைபெற்றுவருகிறது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகிறார்கள். நம் வாசகர்கள பலரின் பிள்ளைகளும் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.

27mar_TIPAJHI-S_MA_1409850g

மக்களவை தேர்தல் பிரச்சாரம் வேறு துவங்கி நடைபெற்றுவருகிறது. இந்த காலகட்டங்களில் மாணவர்கள் தேர்வுக்கு படிக்க எந்த இடையூறும் ஏற்படக்கூடாது. கோடைக்காலம் நெருங்குவதையொட்டி, தமிழகத்தின் தலையாய பிரச்னையான மின்வெட்டு மீண்டும் தலைதூக்கியுள்ளது. இவை எதுவும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதை எந்த சூழ்நிலையிலும் பாதிக்கக்கூடாது.

மாணவர்கள் அனைவரும் தேர்வை நல்ல முறையில் எழுதவும் நல்ல மதிப்பெண்கள் பெறவும் இறைவனை பிரார்த்திப்போம். குறிப்பாக, ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் நிச்சயம் தேர்வை நல்ல முறையில் எழுதி அவர்கள் வீட்டுக்கும் பள்ளிக்கும் பெருமை தேடித்தரவேண்டும். இதுவே நமது இந்த வார பொது பிரார்த்தனை!

===============================================================

நண்பர் ராஜா அவர்களின் தோழி சுப்ரிதாவின் திருமணத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் விலகி அவருக்கு விரைவில் நல்ல முறையில் திருமணம் நடைபெறவும்,நண்பர் ஹரிஹரசுதனின் அம்மா, ரமாமணி அவர்களுக்கு ஏற்பட்டுளால் நீரிழிவு நோய் நீங்கி அவர்கள் பரிபூரண ஆரோக்கியம் பெறவும், நடுக்காவேரியை சேர்ந்த அனந்தராமன் அவர்களின் மகள் தீபலக்ஷ்மி -கிருஷ்ண பிரசாத் தம்பதியினருக்கு மழலை பாக்கியம் கிடைக்கவும், அவர் மகன்களுக்கு நல்லதொரு எதிர்காலம் அமையவும், பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் சிறப்பான முறையில் தேர்வு எழுதி நல்ல மார்க்குகளை பெறவும் இறைவனை பிரார்த்திப்போம்.

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgநமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

பிரார்த்தனை நாள் : மார்ச் 30,  2014 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

============================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131

=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : மஹாபெரியவாவின் வாக்கினாலும் காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதியின் அருளாலும் பிறந்த கணு என்கிற திரு.கணேசன் (72) அவர்கள்.

11 thoughts on “துன்பத்திலும் தொடரும் பக்தியே தூய்மையானது – Rightmantra Prayer Club

  1. சுந்தர்ஜி,

    இந்த வார பிரார்தனை கடல் அன்னையின் முன்பாக திரு வெங்கட் அவர்கள் செய்யும் பிரார்த்தனை மூலம் அனைவரும் நலம் பெறுவார்கள் என்பது உறுதி.

    இந்த வார பிரார்தனையின் மூலம்
    நண்பர் ராஜா அவர்களின் தோழி சுப்ரிதாவின் திருமணத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் விலகி அவருக்கு விரைவில் நல்ல முறையில் திருமணம் நடைபெறவும்,நண்பர் ஹரிஹரசுதனின் அம்மா, ரமாமணி அவர்களுக்கு ஏற்பட்டுளால் நீரிழிவு நோய் நீங்கி அவர்கள் பரிபூரண ஆரோக்கியம் பெறவும், நடுக்காவேரியை சேர்ந்த அனந்தராமன் அவர்களின் மகள் தீபலக்ஷ்மி -கிருஷ்ண பிரசாத் தம்பதியினருக்கு மழலை பாக்கியம் கிடைக்கவும், அவர் மகன்களுக்கு நல்லதொரு எதிர்காலம் அமையவும், பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் சிறப்பான முறையில் தேர்வு எழுதி நல்ல மார்க்குகளை பெறவும் இறைவனை பிரார்த்திப்போம்.

  2. அதிபத்த நாயனார் கதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. இந்த வார பிராத்தனைக்கு தலைமை தாங்கும் வெங்கடேஷிற்கு வாழ்த்துக்கள்.

    சுப்ரிதாவின் திருமணத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் விலகி அவருக்கு விரைவில் நல்ல முறையில் திருமணம் நடைபெறவும், ஹரிஹரசுதனின் அம்மா, ரமாமணி அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நீரிழிவு நோய் நீங்கி அவர்கள் பரிபூரண ஆரோக்கியம் பெறவும், நடுக்காவேரியை சேர்ந்த அனந்தராமன் அவர்களின் மகள் தீபலக்ஷ்மி -கிருஷ்ண பிரசாத் தம்பதியினருக்கு மழலை பாக்கியம் கிடைக்கவும், அவர் மகன்களுக்கு நல்லதொரு எதிர்காலம் அமையவும், பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் சிறப்பான முறையில் தேர்வு எழுதி நல்ல மார்க்குகளை பெறவும் இறைவனை பிரார்த்திப்போம்

    Hariharasudan, you are an ardent devotee of Ragavendra. Definitely, He will take care of your mother. We will also pray for her speedy recovery.

    Regards
    Uma

  3. 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்தரின் கதை வறுமையிலும் நாம் எடுத்துக்கொண்ட கொள்கையிலும் கடவுள் மேல் கொண்ட நம்பிக்கையிலும் மாறாமல் இருக்க வேண்டும் என்பது தான்,
    எத்தனை கஷ்டம் வந்தாலும் இறைவனை மறக்க கூடாது.
    இந்த வர பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் நம் நிஜ ஹீரோ திரு.வெங்கட் அவர்கள் செய்யும் சேவை உயிர் காக்கும் சேவை.
    அது அவருக்கு புகழையும் ஒரு நல்ல வேலையையும் அமைத்து தர வேண்டும்.
    சமூக நீதிக் காவலர் புது பட்டமா? நம் சிவபெருமானுக்கு.
    அவரும் அவர் வாகனமும் இன்னும் என்ன என்ன பட்டங்களை பெற போகிறார்களோ தெரியவில்லை.
    சமுத்திர கரையில் செய்யப்படும் பிரார்த்தனை, நதிதீரத்தில் செய்யப்படும் பிரார்த்தனையைவிட ஆயிரம் மடங்கு பலன் தரவல்லது. அதனால் இந்த வார மூன்று கோரிக்கையும் மகா பெரியவா அருளால் அபரிதமான பலன் கிடைக்கும்
    சர்வம் சிவமயம்.

  4. இந்தவார பிரார்த்தனைக்கு தலைமை மெரினா வெங்கட் அவர்கள் இளம் நிஜ ஹீரோ நல்ல தேர்வு .

    இந்த வாரம் பிரார்த்தனைக்கு வந்துள்ள அணைத்து பிரச்சனைகளும் ,நல்ல தொரு விடியல் அனைவருக்கும் கிடைக்கும் .பொது பிரார்த்தனை பத்தாம் வகுப்பு மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற பிரார்த்திப்போம் .

    மெரினா வெங்கட் ,அவருக்கு பொருத்தமான அதிபத்தர் மீன் கதை மிகவும் அருமை .

    ‘சமூக நீதிக் காவலர்’ என்கிற பட்டம் என் அப்பன் சிவனுக்கு அளித்து கௌரவம் செலுத்தி மகிழவதில் வியப்பில்லை …

    -மனோகர்

  5. ராஜா அய்யா அவர்களின் தோழி அவர்களை நம்பிகையுடன் சம்பந்தரின் திருமருகல் [ 04366 270 823 ][கும்பகோணத்திலிருந்து நாச்சியார் கோவில் நன்னிலம் வழியாக 45 கி.மீ] மாணிக்கவண்ணர் வண்டுவார்குழலி திருகோயில் “சடையா எனுமால்” பதிகத்தை 48 நாட்கள் காலை ,மாலை நெய் தீபம் ஏற்றி வைத்து வீட்டில் அம்மை அப்பன் [சிவபெருமான் சக்தி ] முன்பு படித்து வர சொல்லவும் …மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பதிகத்தை பாராயணம் செய்ய சொல்லவும் ….அசைவம் கண்டிப்பாக தவிர்த்து விடவும் ….கண்டிப்பாக ஒருமுறை திருமருகல் திருத்தலம் சென்று அங்கு ஒரு நாள் இரவு தங்கி இருந்து மாணிக்க தீர்த்தம் நீராடி ஈசனை அர்ச்சனை செய்து ,5 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு ,பின்பு அங்கு ஆலயத்தில் பிரகாரத்தில் உள்ள செட்டி பிள்ளை ,செட்டி பெண் திருமண மண்டபத்தில் இருந்து 5 முறை சம்பந்தரின் “சடையா எனுமால்” பதிகத்தை படிகவும் ..பாண்டியநாட்டு வணிகனாகிய தாமன் என்பவன் தன் மக்கள் எழுவரில் ஒருத்தியைத் தன் மருமகனுக்குக் கொடுப்பதாக வாக்களித்தான். ஆனால் வாக்களித்தடி நடக்காமல்,அவனுடைய பெணகளுக்கு பருவம் வந்த காலத்து ஒவ்வொருத்தியாகப் பிறருக்கு மணம் செய்து கொடுத்தான். அதனை உணர்ந்த ஏழாவது பெண் தாய் தந்தையர் அறியாமல் தன் மாமனோடு வெளியேறி பெரியவர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் புரிந்து கொள்ள நிச்சயித்தனர். திருமருகலையடைந்து ஒரு திருமடத்தில் அவர்கள் இருவரும் இரவு தங்கினர். அன்றிரவு அந்தச் செட்டி குமரனை வினையின் காரணமாக பாம்பு தீண்டியது. அவன் இறந்தான். திருமணம் ஆகாததால் வனிகனின் உடலைத் தீண்டமாட்டாளாய், இறைவன் மேல் தீராத பக்தி கொண்ட அந்தப் பெண் இறைவனை நோக்கி முறையிட்டுப் புலம்பினாள். சுவாமி தரிசனத்திற்காக வந்த திருஞானசம்பந்த சுவாமிகள் திரு உள்ளத்தை இவள் அழுகை ஒலி அருள் சுரக்கச் செய்தது. இளம் பெண்ணின் அழுகைக் குரலையும் அவளின் நிராதரவான நிலையையும் கண்டு இரக்கப்பட்ட திருஞானசம்பந்தர் இறைவன் மேல்

    “சடையாயெனுமால் சரண்நீ எனுமால் விடையா யெனுமால்வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவளுண் மெலிவே”

    என்று தொடங்கும் பதிகம் பாட சுற்றிலும் உள்ளோர் அதிசயிக்கும்படி வனிகன் உயிர்பெற்று எழுந்தான். பிறகு அந்த பெண்ணிற்கும் வணிகனுக்கும் இறைவன் முன்னிலையில் சம்பந்தர் மணம் நடத்தி வாழ்த்தி அருளினார். .பின்பு திருவையாறு அருகில் உள்ள “திருவேதிகுடி” சென்று மங்கையர்க்கரசி வேதபுரீஸ்வரர் வழிபட்டு [93451 04187, 98429 78302]சம்பந்தரின் பதிகத்தை வீட்டில் அமர்ந்து காலை மாலை படித்து வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.
    “திருவேதிகுடி” சம்பந்தர் பதிகம் :
    திருச்சிற்றம்பலம்

    நீறுவரி ஆடரவொ டாமைமன என்புநிரை பூண்பரிடபம்
    ஏறுவரி யாவரும் இறைஞ்சுகழல் ஆதியர் இருந்தவிடமாந்
    தாறுவிரி பூகம்மலி வாழைவிரை நாறவிணை வாளைமடுவில்
    வேறுபிரி யாதுவிளை யாடவள மாரும்வயல் வேதிகுடியே.

    சொற்பிரி விலாதமறை பாடிநட மாடுவர்தொ லானையுரிவை
    மற்புரி புயத்தினிது மேவுவரெந் நாளும்வளர் வானவர்தொழத்
    துற்பரிய நஞ்சமுத மாகமுன் அயின்றவரி யன்றதொகுசீர்
    வெற்பரையன் மங்கையொரு பங்கர்நக ரென்பர்திரு வேதிகுடியே.

    போழுமதி பூணரவு கொன்றைமலர் துன்றுசடை வென்றிபுகமேல்
    வாழுநதி தாழுமரு ளாளரிரு ளார்மிடறர் மாதரிமையோர்
    சூழுமிர வாளர்திரு மார்பில்விரி நூலர்வரி தோலருடைமேல்
    வேழவுரி போர்வையினர் மேவுபதி யென்பர்திரு வேதிகுடியே.

    காடர்கரி காலர்கனல் கையரனல் மெய்யருடல் செய்யர்செவியிற்
    தோடர்தெரி கீளர்சரி கோவணவர் ஆவணவர் தொல்லைநகர்தான்
    பாடலுடை யார்களடி யார்கள்மல ரோடுபுனல் கொண்டுபணிவார்
    வேடமொளி யானபொடி பூசியிசை மேவுதிரு வேதிகுடியே.

    சொக்கர்துணை மிக்கஎயில் உக்கற முனிந்துதொழும் மூவர்மகிழத்
    தக்கஅருள் பக்கமுற வைத்தஅர னாரினிது தங்கும்நகர்தான்
    கொக்கரவ முற்றபொழில் வெற்றிநிழல் பற்றிவரி வண்டிசைகுலா
    மிக்கமரர் மெச்சியினி தச்சமிடர் போகநல்கு வேதிகுடியே.

    செய்யதிரு மேனிமிசை வெண்பொடி யணிந்துகரு மானுரிவைபோர்த்
    தையமிடு மென்றுமட மங்கையொ டகந்திரியும் அண்ணலிடமாம்
    வையம்விலை மாறிடினு மேறுபுகழ் மிக்கிழிவி லாதவகையார்
    வெய்யமொழி தண்புலவ ருக்குரை செயாதஅவர் வேதிகுடியே.

    உன்னிஇரு போதுமடி பேணுமடி யார்தமிடர் ஒல்கஅருளித்
    துன்னியொரு நால்வருடன் ஆல்நிழலி ருந்ததுணை வன்றனிடமாங்
    கன்னியரொ டாடவர்கள் மாமணம் விரும்பியரு மங்கலம்மிக
    மின்னியலும் நுண்ணிடைநன் மங்கையரி யற்றுபதி வேதிகுடியே.

    உரக்கர நெருப்பெழ நெருக்கிவரை பற்றியவொ ருத்தன்முடிதோள்
    அரக்கனை யடர்த்தவன் இசைக்கினிது நல்கியருள் அங்கணனிடம்
    முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்தகலவை
    விரைக்குழன் மிகக்கமழ விண்ணிசை யுலாவுதிரு வேதிகுடியே.

    பூவின்மிசை அந்தணனொ டாழிபொலி அங்கையனும் நேடஎரியாய்த்
    தேவுமிவ ரல்லரினி யாவரென நின்றுதிகழ் கின்றவரிடம்
    பாவலர்கள் ஓசையியல் கேள்வியத றாதகொடை யாளர்பயில்வாம்
    மேவரிய செல்வநெடு மாடம்வளர் வீதிநிகழ் வேதிகுடியே.

    வஞ்சமணர் தேரர்மதி கேடர்தம்ம னத்தறிவி லாதவர்மொழி
    தஞ்சமென என்றுமுண ராதஅடி யார்கருது சைவனிடமாம்
    அஞ்சுபுலன் வென்றறுவ கைப்பொருள் தெரிந்தெழு இசைக்கிளவியால்
    வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவிநிகழ் கின்றதிரு வேதிகுடியே.

    கந்தமலி தண்பொழில்நன் மாடமிடை காழிவளர் ஞானமுணர்சம்
    பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி யாதிகழலே
    சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்க ளென்னநிகழ் வெய்தியிமையோர்
    அந்தவுல கெய்தியர சாளுமது வேசரதம் ஆணைநமதே.
    ………………………………………………………………………………………..

    “திருமருகல்” சம்பந்தர் பதிகம் :
    திருச்சிற்றம்பலம்

    சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
    விடையா யெனுமால் வெருவா விழுமால்
    மடையார் குவளை மலரும் மருகல்
    உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே.

    சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்
    முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
    கொந்தார் குவளை குலவும் மருகல்
    எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே.

    அறையார் கழலும் மழல்வா யரவும்
    பிறையார் சடையும் முடையாய் பெரிய
    மறையார் மருகல் மகிழ்வா யிவளை
    இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே.

    ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்
    பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
    மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
    மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே.

    துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன
    மணிநீ லகண்ட முடையாய் மருகல்
    கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
    அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே.

    பலரும் பரவப் படுவாய் சடைமேல்
    மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
    புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
    தலரும் படுமோ அடியா ளிவளே.

    வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
    எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
    மழுவா ளுடையாய் மருகல் பெருமான்
    தொழுவா ளிவளைத் துயராக் கினையே.

    இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத்
    துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
    வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்
    அலங்கல் லிவளை அலராக் கினையே.

    எரியார் சடையும் மடியும் மிருவர்
    தெரியா ததோர்தீத் திரளா யவனே
    மரியார் பிரியா மருகற் பெருமான்
    அரியாள் இவளை அயர்வாக் கினையே.

    அறிவில் சமணும் மலர்சாக் கியரும்
    நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
    மறியேந் துகையாய் மருகற் பெருமான்
    நெறியார் குழலி நிறைநீக் கினையே.

    வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
    உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்
    இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்
    வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே.

    திருச்சிற்றம்பலம்
    …………………………………………………………………………………………………..
    தேய்பிறை அஷ்டமி பைரவர் பூஜா தொடர்ந்து 8 மாதங்கள் செய்யவும் ….நன் முறையில் நல்லவருடன் திருமணம் நடை பெரும் என்பது உறுதி …

  6. ஸ்ரீவாஞ்சியம்[ 94424 03926][கும்பகோணத்திலிருந்து நன்னிலம் செல்லும் பஸ்சில் அச்சுதமங்கலம் இறங்கி, அங்கிருந்து ஒரு கி.மீ.] வாழவந்தநாயகி வாஞ்சிநாதர் திருகோயில் சென்று குப்தகங்கையில் நீராடி ,எமன் ,சுவாமி ,அம்பாள் ,பைரவர் அபிசேகம் செய்து நெய் தீபம் ஏற்றி வழிபடவும் …..பின்பு கோவில்வெண்ணி[98422 94416] [நீடாமங்கலம் அருகில் ]சவுந்தர நாயகி வெண்ணிகரும்பேஸ்வரர் திருகோயில் சென்று சுவாமி ,அம்பாள் அபிசேகம் செய்து , நெய் தீபம் ஏற்றி பின்பு ஒரு கிலோ சீனி [சர்க்கரை ],ஒரு கிலோ பால் ரவை வாங்கி கொடுத்து ஆலயத்தை சுற்றி போட்டு வரவும் …சர்க்கரை நோய் விலகும் …..
    திருச்சிற்றம்பலம்

    தலையே நீவணங்காய் – தலை
    மாலை தலைக்கணிந்து
    தலையா லேபலி தேருந் தலைவனைத்
    தலையே நீவணங்காய்.

    கண்காள் காண்மின்களோ – கடல்
    நஞ்சுண்ட கண்டன்றன்னை
    எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்
    கண்காள் காண்மின்களோ.

    செவிகாள் கேண்மின்களோ – சிவன்
    எம்மிறை செம்பவள
    எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்
    செவிகள் கேண்மின்களோ.

    மூக்கே நீமுரலாய் – முது
    காடுறை முக்கணனை
    வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
    மூக்கே நீமுரலாய்.

    வாயே வாழ்த்துகண்டாய் – மத
    யானை யுரிபோர்த்துப்
    பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை
    வாயே வாழ்த்துகண்டாய்.

    நெஞ்சே நீநினையாய் – நிமிர்
    புன்சடை நின்மலனை
    மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
    நெஞ்சே நீநினையாய்.

    கைகாள் கூப்பித்தொழீர் – கடி
    மாமலர் தூவிநின்று
    பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
    கைகாள் கூப்பித்தொழீர்.

    ஆக்கை யாற்பயனென் – அரன்
    கோயில் வலம்வந்து
    பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ்
    வாக்கை யாற்பயனென்.

    கால்க ளாற்பயனென் – கறைக்
    கண்ட னுறைகோயில்
    கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்
    கால்க ளாற்பயனென்.

    உற்றா ராருளரோ – உயிர்
    கொண்டு போம்பொழுது
    குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
    குற்றார் ஆருளரோ.

    இறுமாந் திருப்பன்கொலோ – ஈசன்
    பல்கணத் தெண்ணப்பட்டுச்
    சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்
    கிறுமாந் திருப்பன்கொலோ.

    தேடிக் கண்டுகொண்டேன் – திரு
    மாலொடு நான்முகனுந்
    தேடித் தேடொணாத் தேவனை என்னுளே
    தேடிக் கண்டுகொண்டேன்.

    திருச்சிற்றம்பலம்

    அப்பரின் பதிகம் தினமும் எப்போதும் படித்து வரவும் …நல்லது நடகும் …

    1. வழக்கம்போல, சிறப்பான பரிகாரங்களையும் பதிகங்களையும் தந்தமைக்கு நன்றி விஜய் பெரியசுவாமி அவர்களே.

      வாசக அன்பர்களே, தயை கூர்ந்து இவற்றை பயன்படுத்திக்கொண்டு இறையருள் பெறுங்கள்.

      நன்றி.

      – சுந்தர்

  7. திருவாலங்காடு என்று இரண்டு சிவதலங்கள் உள்ளன ….ஓன்று திருவள்ளூர் அருகில் உள்ளது ..இன்னொரு தலம் திருவாவடுதுறை அருகில் உள்ளது …திருவாவடுதுறை சென்று கோமுக்தீஸ்வரர், ஒப்பிலா மூலைஅம்மை வழிபட்டு ,அர்ச்சித்து அங்கு தனி சந்நிதியில் உள்ள புத்திர தியாகேசர் அர்ச்சனை செய்து வழிபடவும் …பின்னர் அருகில் உள்ள திருவாலங்காடு[9751549549] சென்று அங்குள்ள புத்திர காமேச்வர தீர்த்தத்தில் நீராடி,வடாரண்யேசுவரர்,வண்டார்குழலி அம்மன்[புதிய பிரதிஷ்டை ] ,பழைய அம்மனையும் அபிசேகம் செய்து , வழிபட்டு பின்பு வெளி பிரகாரத்தில் தனி சந்நிதியில் உள்ள புத்திர காமேஸ்வர்ரை அபிசேகம் ,அர்ச்சனை செய்து வழிபட வேண்டும் .இதனை அமாவாசையில் செய்வது சிறப்பு …அதுவும் வரக்கூடிய பங்குனி மாதம் அம்மாவாசை நாளில் நாளை [30-3-14]இங்கு தீர்த்த வாரி நடை பெரும் …அப்போது புத்திர காமேச்வர தீர்த்தத்தில் நீராடி வடாரண்யேசுவரர்,வண்டார்குழலி,புத்திர காமேஸ்வர்ரை வழிபட்டால் மலடியும் குழந்தை பெறுவாள் என்கிறது இந்த ஆலய தலபுராணம் ……
    திருவெண்காடு முக்குள தீர்த்தத்தில் நீராடி வழிபட்டு ,திருக்கருகாவூர் வழிபடுதல் கூடுதல் சிறப்பு ….[ஒரே நாளில் 4 திரு கோயில்களையும் வழிபடலாம் ]……
    பதிகம் 48 நாட்கள் படித்து வரவும் …

    கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
    பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
    பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
    வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.

    பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
    வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
    வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
    தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.

    மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதிஇரவி
    எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்
    பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
    விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.

    விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
    மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
    தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
    கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே.

    வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
    மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
    மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
    ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே.

    தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
    ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
    பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
    வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.

    சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
    அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
    மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
    முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே.

    பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
    உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
    கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
    விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.

    கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்
    ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
    வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்(று)
    உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.

    போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
    பேதையர்கள் அவர்பிறிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
    வேதியர்கள் விரும்பியசீர் வியன்திருவெண் காட்டானென்
    றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.

    தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
    விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
    பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
    மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே.

    திருச்சிற்றம்பலம்

    பதினே ழொன்றும்விழை செய்ய பாத மோலிடநன்
    மதிபோன் மமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
    கதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவ
    நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே.

    சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன்குழைகள்
    மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ
    ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
    கூவை வெறுத்தகண்க ளிச்சை கொள்ளு கின்றனவே.

    பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ
    சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து
    தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ
    கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே.

    பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக்
    கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை
    என்னார் வந்தீர விங்கு நல்க வாராயோ
    உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே.

    எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங்
    கண்ணே செங்குழுவீ யென்றன் கண்க ணாடழகே
    தண்ணே றும்வதன முத்தந் தாரா யோயிறிது
    நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ

    முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு
    வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ்
    சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள
    வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ.

    ஐயார் நல்லரையிற் பொன்வ டங்க ளாடவுழல்
    வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள்
    மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்துகொள்ள
    மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ

    பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும்
    இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா
    அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென்
    துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ.

    கள்ளார் செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண்
    கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள்
    பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன்
    தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே.

    மாண்பார் சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக்
    காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான்
    ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன்
    வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ.

    ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகலின் இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்திபிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தியாம். சந்ததி விருத்தியாம்.

  8. எமது அபராகி அமையாகி குருவுமாகி எம்மைய் அழும் சிவபெருமான் திருவடி சரணம் .
    யாம் தங்கள் பதிவுகளை படித்தேன் அருமை. யாம் தன்னலம் கருதா குருவை தேடுகிறேன் அப்படி ஒரு குரு இருப்பாரானால் எமக்கு அறிமுகம் படுத்துங்கள்.ஓம் நமசிவாய . நன்றி ….

    EMAIL ;kanna _yasanar @ yahoo .com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *