அவர் வரைவதை ஆர்வமுடனும் வியப்புடனும் மாணவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். தங்கள் ஆசிரியரின் திறமையை எண்ணி வியந்தனர்.
வரைந்து முடித்த பின்னர், “நாம வரைஞ்சவுடனே கொஞ்சம் தூரத்துல நின்னு நாம வரைஞ்சதை பார்க்கணும். அப்படி பார்த்தா ஏதாவது குறை இருந்தா தெரியும். டச் பண்ணனுன்ம்னா பண்ணிக்கலாம்!” என்று கூறியபடி அப்படியே பின்னால் நகர்ந்தார். அப்படியே பின்னால் நகர்ந்துகொண்டே சென்றவரை திரும்பி பார்த்த ஒரு மாணவன்… திடுக்கிட்டான்.
காரணம் பின்னால் நகர்ந்தபடி சென்ற ஆசிரியர் அந்த மலையின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தார். இன்னும் ஒரு இன்ச் அவர் நகர்ந்தால் கூட கீழே பல நூறு அடி ஆழம் கொண்ட பள்ளத் தாக்கில் விழவேண்டியிருக்கும். விழுந்தால் நிச்சயம் மரணம் தான்.
“சார்… பின்னாலே நகராதீங்க… ஆபத்து!!!” என்று கூக்குரல் இட்டு, சத்தம் போட்டு அவரை எச்சரிக்கலாம் என்றால் அதிர்ச்சியில் அவர் பின்னால் திரும்பி கீழே பார்த்தாலோ அல்லது நகர்ந்தாலோ விழுந்துவிடும் ஆபத்து இருக்கிறது.
ஆபத்திலிருக்கும் தன் ஆசிரியரை உடனே காப்பாற்றவேண்டிய நிர்பந்தம் மாணவனுக்கு ஏற்பட்டது. சமயோசிதமாக சிந்தித்த அந்த மாணவன், தன் ஆசிரியர் ஓவியம் வரைய பயன்படுத்திய அந்த வண்ணங்கள் கொண்ட தட்டை எடுத்து சட்டென்று யாரும் எதிர் பாராத வண்ணம் ஓவியத்தின் மீது வீசினான்.
ஓவியத்தில் இவன் வீசிய மை தெரிக்கவே, ஓவியம் முழுதும் பாழாய் போனது.
பல மணிநேரம் பாடுபட்டு தான் வரைந்த ஓவியம் பாழாய்ப் போனதை பார்த்த ஆசிரியர் திடுக்கிட்டார். “டேய்… என்ன காரியம் செஞ்சே…??” என்று கூறியபடி அந்த மாணவனை முன்னோக்கி பாய்ந்தவர் அவனை நையப்புடைக்கிறார். சக மாணவர்களும் அவன் செயலை கடுமையாக கண்டித்தனர்.
“இவனுக்கு ஓவியத்தை பார்த்து பொறாமை… அதான் இப்படி பண்ணிட்டான்…. படுபாவி…” என்று ஆளாளுக்கு அவனை பதம்பார்த்தனர்.
மாணவன் அனைத்தையும் அமைதியாக ஏற்றுக்கொண்டான். சற்று நேரம் கழித்து தனது ஆசிரியரை நோக்கி… “மாஸ்டர்…. அங்கே பாருங்க… நீங்க நின்னுக்கிட்டுருந்த இடத்தை… ஒரு இன்ச் நீங்க பின்னாடி நகர்ந்திருந்தா கூட உங்க உயிருக்கே ஆபத்தா அது முடிஞ்சிருக்கும். உங்களை காப்பாற்ற வேற வழி தெரியலே.. அதான் இப்படி செஞ்சேன்…” என்று மாணவன் கூற ஆசிரியர் அப்போது தான் தான் நின்றுகொண்டிருந்த இடத்தை பார்க்கிறார்.
அவருக்கு திடுக்கிடுகிறது. மாணவன் சொல்வது போல, ஒரு துளி மேலும் நகர்ந்திருந்தால் கூட தன் உயிருக்கே ஆபத்தாய் முடிந்திருக்கும் என்று உணர்ந்துகொள்கிறார்.
சமயோசிதமாக செயல்பட்டு தனது உயிரை காக்கவே மாணவன் அப்படி நடந்துகொண்டான் என்பதை புரிந்துகொள்ளும் ஆசிரியர், “ப்ளீஸ் ஃபர்கிவ் மீ மை டியர் பாய்… YOU SAVED MY LIFE” என்று அவனை கட்டி அணைத்துக்கொள்கிறார். சக மாணவர்களும் அவனை தவறாக புரிந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்டு அவனது சமயோசித அறிவை பாராட்டுகின்றனர்.
======================================================
மேலே சொன்ன கதை ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடப்பது தான். என் வாழ்க்கையிலும் அப்படி நடந்தது. அல்லும் பகலும் தூக்கம் தொலைத்து உருவாக்கிய என்னுடைய பல ஆண்டுகால உழைப்பு ஒன்றை இறுதியில் இறைவன் பயனற்று போகுமாறு செய்துவிட்டான். இறைவன் மீது கடும் கோபம் கொண்டு இந்த ஆசிரியர் போலவே அவனை கடிந்துகொண்டேன். தூற்றினேன். “என் உழைப்பை இப்படி குப்பையில் வீசிவிட்டாயே இறைவா?” என்று கண்ணீர் வடித்தேன். ஆனால் பின்னர் தான் புரிந்துகொண்டேன்… ஒரு மிகப் பெரிய சரிவில் விழ இருந்த என்னை காப்பாற்ற வேண்டியே இறைவன் அப்படி செய்தான் என்று.
நல்லோர் உள்ளம் குளிர, பெற்றோர் கண்டு மகிழ நான் ஒரு புதிய வரலாறு நான் படைக்கவேண்டும்…. இந்த வையம் சிறக்க என் வாழ்வும் எழுத்தும் பயன்படவேண்டும் என்றே இறைவன் அப்படி செய்தான் என்று இப்போது புரிகிறது.
http://rightmantra.com/?p=6926 என்ற இந்த நமது சமீபத்திய மஹாளய ஸ்பெஷல் பதிவில் குருமூர்த்தி, ஹரிதாஸ் என இரண்டு வாசக அன்பர்கள் அளித்திருக்கும் பின்னூட்டத்தை பாருங்கள். உங்களுக்கே புரியும். கமெண்ட் பகுதிக்கே இவர்கள் புதியவர்கள்.
எனக்கு அப்படி ஒரு சோதனையை தந்து இறைவன் என்னை தடுத்தாட்கொள்ளவில்லை என்றால் இன்று ரைட்மந்த்ரா இல்லை. உழவாரப் பணி இல்லை. நாம் செய்யும் அறப்பணிகள் இல்லை. மஹாளய ஸ்பெஷலும் இல்லை. ஆண்டுவிழாவும் இல்லை. நல்லோரின் சந்திப்பும் இல்லை. குருமார்களின் ஆசியும் இல்லை.
எல்லாம் நன்மைக்கே..!
=====================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
=====================================
[END]
MONDAY MORNING SPL திருப்பங்களுடன் அருமையான பதிவு .
-பாராட்டுக்களுடன் .
மனோகர்
ஒரு நல்ல கதையுடன் இன்றைய வாரம் ஆரம்பித்து இருக்கிறது.
ஆசிரியர் உயிரை காப்பாற்ற மாணவன் அவர் ஓவியத்தை அழித்தாலும் அதுவும் நன்மைகே.
அதுபோல் கடந்த காலத்தை நினைத்து பார்க்காமல் உங்களால் இருக்க முடியவில்லை போலும். எல்லாம் நன்மைக்கே.உங்கள் வாழ்வும் எழுத்தும் சிறக்க வாழ்த்துக்கள்.
சுந்தர் சார் வணக்கம்
/////அல்லும் பகலும் தூக்கம் தொலைத்து உருவாக்கிய என்னுடைய பல ஆண்டுகால உழைப்பு ஒன்றை இறுதியில் இறைவன் பயனற்று போகுமாறு செய்துவிட்டான். இறைவன் மீது கடும் கோபம் கொண்டு இந்த ஆசிரியர் போலவே அவனை கடிந்துகொண்டேன்.////
நமக்கு ஏறுபடும் பிரச்சினை ஆண்டவனிடம் மட்டுமே தான் கடும் கோபம் கொள்ள முடியம் சார் நீங்க சொலவதுதான் காரணம் இன்றி காரியம் இல்லை சார் ஒன்று விட்டாலும் உங்களை Rightmantra.com மூலம் ஆண்டவன் எங்களக்கு மிக பெரிய பரிசு சார்
அதற்கு தகுந்த பலன் உங்கள் மூலம் எங்களக்கு கிடைத்து இருக்கு சார் ஆண்டவன் உங்களை மென் மேலும் சிறப்பு அடைய செய்ய இனிய நல வாழ்த்துக்கள் சார்
நன்றி அருமையான பதிவு
ஒரு சரித்திரம் படைக்க, சில சங்கடங்களை இறைவனே தந்து நம் அறிவுக்கு சூடேற்றுவார் ……..என்பது என் தாழ்மையான கருத்து. சரித்திரம் உணர்த்தும் ரைட் மந்த்ராவுக்கு சல்யூட்!!!.
எது nadanthatho adhu nantragave nadanthathu . எல்லாம் நன்மைக்கே நேர் பட யோசிப்போம் , நேர் பட நடப்போம் நல்லதே நடக்கும்
ஒரு சிறு தூண்டுதல் இறைவனை நோக்கிய பயணத்தை ஆரம்பித்து வைக்கிறது… வாழ்வின் நிலையாமை பற்றிய சிறு எண்ணம் நான் யார் என்று நினைக்க வைக்கிறது ….
வாசித்த கவிதை வரிகள்:
வீழ்கின்றபோதெல்லாம்
எழுவதைப்பற்றியே யோசிப்போம்
ஒருநாள் தோல்விகள் வீழ்ந்துவிடும்..!
மிகவும் அருமையான கதை . monday மோர்னிங் ஸ்பெஷல் 12 முதல் இன்றைய 51 வது ஸ்பெஷல் வரை எவ்வளவு அறிவு பூர்வமான , ஆழமான கதைகளை ரைட் மந்த்ரா வாசகர்களுக்காக பதிவு செய்திருக்கிறீர்கள்.
//எனக்கு அப்படி ஒரு சோதனையை தந்து இறைவன் என்னை தடுத்தாட்கொள்ளவில்லை என்றால் இன்று ரைட்மந்த்ரா இல்லை. உழவாரப் பணி இல்லை. நாம் செய்யும் அறப்பணிகள் இல்லை. மஹாளய ஸ்பெஷலும் இல்லை. ஆண்டுவிழாவும் இல்லை. நல்லோரின் சந்திப்பும் இல்லை. குருமார்களின் ஆசியும் இல்லை.// –
உங்களை இறைவன் தடுத்தாட்கொள்ளவில்லை என்றால் ரைட் மந்த்ரா என்ற அறிய பொக்கிஷம் நமக்கு கிடைத்து இருக்காது . நாமும் தாங்கள் அடிக்கடி மேற்கோள் காட்டுவது போல் ‘தேடிச் சோறு தினம் தின்று’ என்ற கதையாக வாழ்கையை ஒட்டிக்கொண்டிருப்போம். நமக்கும் உழவார பணி செய்யும் பாக்கியம் கிடைத்திருக்காது. ஒரு ஆன்மிக தேடல் மூலம் தங்கள் தளத்தை இறைவன் எங்களுக்கு காண்பித்து இருக்கிறார், நாம் தளத்திற்கு வந்து 9 மாதங்களில் எவ்வளவோ ஆன்மிகம் மற்றும் பல அறிவு சார்ந்த கதைகளை படித்து மற்றவர்களிடமும் பகிர்ந்திருக்கிறோம்.
தங்கள் தளம் மேலும் மேலும் முன்னேற்றம் அடைய எமது வாழ்த்துக்கள். .
நன்றி
உமா