Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, March 19, 2024
Please specify the group
Home > Featured > உங்களை நம்பி, உங்களுக்காக ஒரு விழா!

உங்களை நம்பி, உங்களுக்காக ஒரு விழா!

print
ற்று திரும்பிப் பார்த்தால் ஒரே மலைப்பாகவும் வியப்பாகவும் இருக்கிறது. சென்ற ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது இந்த தளத்தை துவக்கியபோது அடுத்த ஆண்டு இப்படி ஒரு விழா எடுத்து ஆண்டு நிறைவை கொண்டாடப்போகிறோம் என்று கனவிலும் கருதவில்லை. எனக்கிருந்த ஒரே நம்பிக்கை என் உழைப்பு மீதும் இறைவன் மீதும் தான். அவனுக்காக அவன் விருப்பப்படி பணி செய்ய களமிறங்கியிருக்கிறோம், அவன் நிச்சயம் நாம் போகும் பாதையை பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் தான் உங்களை போன்ற நல்லுள்ளங்களின் ஆதரவு சாத்தியமாயிற்று.

ஆரம்பத்தில் இந்த தளத்திற்கு கிடைக்கக் கூடிய வரவேற்பு மற்றும் ஆதரவு குறித்து எனக்கு எதிர்பார்ப்புக்கள் இருந்தது உண்மை. நான் நினைத்தது நடக்காதபோது துவண்டுபோனதும் உண்மை. நான் ஒன்றும் ஞானி அல்லவே. அன்றாட வாழ்க்கையில் தினம் தினம் பாடம் கற்றுக்கொள்ளும் ஒரு சராசரி மனிதன்… அவ்வளவே!! இருப்பினும் தரமான புத்தகங்கள், நீதி நூல்கள், நல்லோர் சந்திப்பு, ஆலய  தரிசனம் என பயணம் விரிவடைந்துகொண்டே செல்ல செல்ல நாளடைவில் பலன் கருதாது உழைக்கக்கூடிய பக்குவத்தை இறைவன் எனக்கு தந்துவிட்டான்.

நமது உழவாரப்பணி குழு – பேரம்பாக்கம் நரசிம்மர் கோவிலில் சென்ற முறை பணி செய்த பொது எடுத்தது!

“கடமையை செய்… பலனை எதிர்பார்க்காதே” என்று கீதையில் கண்ணன் கூறியது ஏன் ?

“கடமையை செய்… பலனை எதிர்பார்க்காதே” என்று கீதையில் கண்ணன் கூறியது ஏன் தெரியுமா? பலன் கருதாது உழைக்கும்போது கிடைக்கக்கூடிய  மன அமைதியே தனி. ஆகையால் தான் கீதையில் கண்ணன், “கடமையை செய்… பலனை எதிர்பார்க்காதே…” என்று சொன்னான். அவன் அப்படி சொன்னதன் பொருள் என்ன தெரியுமா? “கடமையை செய்யுங்கள்… பலன் வந்தால் தான் வரும்… இல்லையென்றால் இல்லை” என்பது அல்ல.  “கடமையை செய்யுங்கள்… பலன் நீங்கள் எதிர்பார்க்காவிட்டாலும் நிச்சயம் வரும்” என்பது தான்.

அப்படி என்றால் “கடமையை செய்… பலனை எதிர்பார் என்று கூறியிருக்கலாமே… ஏன் எதிர்பார்க்காதே… என்று கூறினான்?” என்று நீங்கள் கேட்கலாம்.

ஒரு செயலில் ஈடுபடும்போது, நமக்கு உரிய பலன் கிடைப்பதற்கு சிறிது தாமதம் ஏற்படலாம். ஏனெனில் ஆரம்பத்தில் HARD WORK செய்யும் பலர், காலப்போக்கில் தங்கள் உழைப்பில் கிடைத்த அனுபவத்தில் கொண்டு SMART WORK செய்வார்கள். அவர்கள் ஸ்மார்ட் வொர்க் எனப்படும் இந்த சாதுரிய உழைப்பை கொடுக்கும்போது தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும். இந்த பக்குவம் ஒருவருக்கு கிடைக்க அவரவர் மனநிலை மற்றும் சூழ்நிலைப்படி சற்று முன்னர் பின்னர் ஆகலாம்.

திருக்கோவிலுக்கு தீப எண்ணை வழங்கப்படுகிறது

இந்த TRANSITION PERIOD ல் ஏற்படும் கால தாமதத்தால் நாம் துவண்டுவிட, நமது ஆர்வம் குறைய வாய்ப்பிருக்கிறது. அது நமது வேகத்தை குறைத்துவிடும். ஆகவே தான் “கடமையை செய்… பலனை நான் பார்த்துக்கொள்கிறேன்!” என்று கூறுகிறான் இறைவன்.

இறைவனின் அருங்குணங்களுள் ஒன்று அவனது டைமிங். எப்போ… யாருக்கு… என்ன செய்யவேண்டும்.. என்ன பொறுப்பை கொடுக்கவேண்டும்… என்ன பரிசை கொடுக்கவேண்டும் என்று அவனுக்கு தெரியும். அவன் போடும் கணக்குகளின் சூட்சுமத்தை அவன் ஒருவன் மட்டுமே அறிவான். அவன் நடத்தும் நாடகங்களின் காரண காரியங்களையும் அவன் ஒருவன் மட்டுமே அறிவான். இந்த அற்ப மானிட அறிவை கொண்டு நாம் அதை புரிந்துகொள்ளவே முடியாது.

இந்த ஆண்டு விழாவை நான் ஏற்பாடு செய்ததற்கு காரணம் என்ன தெரியுமா?

ஒன்று இந்த ஒருவருடம் இந்த தளம் மூலம் நம்மை ஒரு குடும்பமாக்கி நம்மையெல்லாம் இணைத்திருக்கும் இறைவனுக்கு நன்றி செலுத்த இது ஒரு வாய்ப்பு.

இரண்டு, நான் நேரில் சந்தித்து பேசிப் பழகி பரவசப்பட்டு வரும் நல்லோர்களையும் சான்றோர்களையும் நீங்கள் நேரில் சந்திக்க வேண்டும் என்கிற அவா.

மூன்று, வெவ்வேறு இடங்களில் இருக்கும் நம் குடும்பத்தினர் அனைவரும் ஒருங்கே சந்தித்து ஒரு ஆத்மானுபவத்தில் திளைக்க ஒரு வாய்ப்பு.

நான்கு, நாடு இன்று மறந்து வரும் ஒப்பற்ற சுதந்திர போராட்ட தியாகிகளையும் பக்தி வளர்த்த சான்றோர்களையும் நினைவு கூர்ந்து அவர்களை கௌரவிப்பது.

ஐந்து, தன்னாலமற்ற சமூக சேவையில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு கௌரவிப்பது.

மப்பேடு சின்கீஸ்வரர் கோவில் கோபுரத்தின் அழகிய தோற்றம்

நான் அடிக்கடி கூறுவது போல இந்த உலகமே சுயநலம் சார்ந்து தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. பரபரப்பான இந்த உலகில் தன்னலம் கருதாது பிறர் நலம் விழையும் நல்லவர்களை பார்ப்பதே இப்போதெல்லாம் அரிதாகிவிட்டது…! இவர்களை கௌரவிப்பது… அந்த இறைவனையே கௌரவிப்பதற்கு ஒப்பானது.

RIGHTMANTRA என்கிற ஒரு அற்புதமான PLATFORM வைத்திருக்கும் நாம், நம்மை சுற்றி தன்னலம் கருதாது உழைக்கும் உத்தமர்களை அடையாளம் கண்டு அவர்களை மேன்மேலும் ஊக்குவிக்கவேண்டியது நமது கடமை. நாம் அளிக்கும் இந்த ஊக்கம் அவர்கள் மேலும் தன்னலம் கருதாது உழைப்பதற்கு ஒரு உந்துதலாய் இருக்கும். அதுமட்டுமல்ல மேலும் பலரை இவ்வாறு செய்ய தூண்டும்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்குபெறும் ஒவ்வொருவரையும் சம்பந்தப்பட்ட குருமார்கள் தங்கள் பிரதிநிதிகளாக நம்மை ஆசீர்வதிக்க அனுப்புகிறார்கள் என்பதே உண்மை. திருவள்ளுவரின் பிரதிநிதியாக திரு.சி.இராஜேந்திரன், சுவாமி விவேகானந்தரின் பிரதிநிதியாக திரு.ஜெ.பி., ஸ்ரீ ராகவேந்திரரின் பிரதிநிதியாக திரு.அம்மன் சத்தியநாதன், மஹா பெரியவா அவர்களின் பிரதிநிதியாக திரு.பி.சுவாமிநாதன். என்ன…. நான் சொல்வது சரிதானே? இல்லை என்றால் எளியோன் என்னால் இவர்களை எல்லாம் ஒரே குடையில் திரட்ட முடியுமா?

திரு.சி.ராஜேந்திரன் I.R.S., அவர்களை அவரது இல்லத்தில் சமீபத்தில் சந்தித்தபோது – படத்தில் இருப்பவர் நம் குழு நண்பர் மோகன்

இத்தனை சிறப்பு பெற்ற சான்றோர் பங்கேற்கும் இந்தா விழா எப்படி நடத்தப்படவேண்டும்? சற்று யோசித்து பாருங்கள். எனவே அதற்குரிய ஏற்பாடுகளை  செய்துவருகிறேன்.

மேலும் இந்த விழாவில் பல மகத்தான பணிகள் மேற்கொள்ளப்படுவதை அழைப்பிதழை பார்த்து புரிந்துகொண்டிருப்பீர்கள்.

மண்டப வாடகை, மேடை அமைப்பு, சவுண்ட் சர்வீஸ், வீடியோ கவேரேஜ், சிறப்பு விருந்தினர்களுக்கு பரிசு, விருது, அவர்களுக்கு பரிசு, வருபவர்கள் பசியாற ஏதாவது உணவு, அப்படி இப்படி என்று ஒரு திருமணம் நடத்துவது போன்று பல செலவுகள் இதில் வந்துவிட்டது. எனவே தான் சற்று பதட்டமாக இருக்கிறேன்.

இந்த விழாவில் இத்தனை தைரியமாக நான் இறங்கினேன் என்றால் காரணம், ஏதாவது ஒரு அவரசரம் என்றால் நீங்கள் கைகொடுக்க நீங்கள் இருக்கிறீர்கள் என்கிற நம்பிக்கை தான். போதுமான அளவு பணம் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்கிற அச்சத்தில் விழாவில் நான் முதலில் செய்ய நினைத்த பல நல்ல விஷயங்களை டிராப் செய்துவிட்டேன். மிகவும் அத்தியாவசியாமனவை மட்டுமே இப்போது செய்யப்படுகிறது. இப்படி ஒரு விழா நடத்தியதில் ஒரு அர்த்தம் இருக்கவேண்டும் என்று கருதியே பேபின்னமருதஹள்ளி  கிராமத்திற்கு குழந்தைகள் படிக்க எமர்ஜன்சி (சோலார்) விளக்குகள் வாங்கித் தருவதாக கூறியிருக்கிறோம்.

உங்கள் பங்களிப்பு தேவை

இப்படி ஒரு மேன்மை பெற்ற விழாவில் உங்கள் பலரின் பங்களிப்பு இருந்தால் தான் விழாவை சிறப்பாக நடத்த இயலும். எனவே நமது இந்த ஆண்டுவிழா சிறக்க உங்கள் உதவியை உரிமையுடன் எதிர்பார்க்கிறேன். சிறு துளி பெரு வெள்ளம். எனவே ஆண்டு விழா பணிகளில் உதவிட விரும்புகிறவர்கள் நம்மை மின்னஞ்சல் மூலமோ அல்லது அலைபேசி மூலமே தொடர்புகொள்ளவும். விழாவுக்கு இன்னும் 6 நாட்களே எஞ்சியிருக்கும் சூழலில் பல ஏற்பாடுகளை செய்யவேண்டியுள்ளது.

ஒருவேளை விழாவுக்கான செலவினங்கள் போக பணம் ஏதாவது மிகுதியிருந்தால் அதை நமது வழக்கமான அறப்பணிகள், அன்னதானம், உழவாரப்பணி, பசு தீவனம் உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்திக்கொள்வோம் என்பதை சொல்லவேண்டுமா என்ன?

சுந்தர்: 9840169215 | email : simplesundar@gmail.com, rightmantra@gmail.com

(குறுந்தகவல் (SMS) எப்போது வேண்டுமானால் நீங்கள் அனுப்பலாம். அலைபேசியில் பேச விரும்புகிறவர்கள் மட்டும் மாலை 7 மணிக்கு மேல் தொடர்புகொள்ளவும்.)

[END]

18 thoughts on “உங்களை நம்பி, உங்களுக்காக ஒரு விழா!

  1. சுந்தர் ஜி,

    நல்ல பணிகளை நீங்கள் தொடர்ந்து செய்ய எங்காளால் முடிந்த பொருள் உதவி நிச்சயம் உண்டு. இதை நாங்கள் உரிமையோடு எங்கள் பங்களிப்பை தருவோம். நேரில் வர இயலாதவர்கள் எப்படி அனுப்புவது தெரிவிக்கவும். உங்கள் பணி தொடர மற்றும் விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    1. மிக்க நன்றி ரபீக் அவர்களே.

      பதிவில் குறிப்பிட்டுள்ளபடி எனக்கு மின்னஞ்சல் அனுப்பினாலோ அல்லது SMS அனுப்பினாலோ என்னுடைய அக்கவுண்ட் விபரத்தை அனுப்புவேன். அதில் அவர்கள் செலுத்தலாம். அது இயலாதவர்கள் எனக்கு மணியார்டர் அனுபலாம். முகவரியை கேட்டால் அனுப்புகிறேன்.

      – சுந்தர்

  2. விழா பணிகள் தொடரட்டும். எல்லோரும் கண்டிப்பாக அவரவர் முடிந்த உதவிகளை செய்வார்கள். விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்

  3. டியர் பிரதர்
    என்னால் முடிந்த சிரியபொருள் உதவி நிச்சயம்.உங்கள் அக்கவுண்ட்
    எனக்கு இ-மெயில் அனுபவும். உங்கள் பணி தொடர மற்றும் விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  4. சுந்தர்ஜி

    தனி ஒருவராக அதுவும் அனுதினமும் அலுவலகம் சென்று வந்து தனிப்பட்ட பிரச்னைகளொடு ரைட் மந்திரா தளத்திற்கு நீங்கள் வழங்கும் தன்னலமற்ற சேவைக்கு, உழைப்புக்கு எத்தனை உதவி செய்தாலும் தகும். முதலில் தங்களுக்கு தான் விருது வழங்க வேண்டும். நாங்கள் எல்லாம் ஓரளவு மன நிம்மதியுடன் தற்சமயம்(முன்பு உள்ளதைவிட) வாழ்கிறோம் என்றால் அதற்கு காரணம் தங்களின் ரைட் மந்திரா தான்.

    எங்களுக்கு ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா அவர்களின் பரிபூரண அருளையும், பல நல்ல உள்ளங்களின் ஆசிகளையும் பெற்று தந்த நம் தளத்திற்கு எத்தனை செய்தாலும் அது அவர்களின் அருளமதிற்கு ஈடாகாது.

    அனைவரும் கண்டிப்பாக அவரவர் பங்களிப்பை கொடுத்து இந்த மகத்தான விழா சிறக்க உதவுவோம். உங்களுக்காக செய்யும் இந்த உதவி இறைவனுக்காகவும் , அவரது அடியார்க்காகவும்தான் என்பதால் இதை செய்ய அனைவர்க்கும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.
    நன்றி

  5. உண்மையில் இதை நினைக்கும் போது வியப்பாக தான் இருக்கிறது ஒரு வருடம் சென்றதும் தெரியவில்லை அதுவும் நம் தளம் இப்படி ஒரு வளர்ச்சி ,வளர்ச்சி மட்டும் இல்லாமல் நிறைய பெரிய மனிதர்களின் அறிமுகம் ,இன்னும் வளர வாழ்த்துக்கள்

  6. சிறு துளி பெரு வெள்ளம்….
    என்னால் முடிந்த சிறு உதவியை கண்டிப்பாக செய்கிறேன் சுந்தர் சார் ..நேரில் வரும்போது கொடுத்தால் போதுமா? அல்லது இப்போதே மணி ஆர்டர் செய்ய வேண்டுமா?

  7. சென்ற ஆண்டு இந்த தளத்தை தொடங்கும்போது இருந்த நிலைமையும் இப்பொழுது உள்ள நிலைமையும் நீங்களே தெளிவாக குறிப்பிட்டு உள்ளீர்கள், அதற்கு காரணம் அந்த ஆண்டவன்.
    .
    அந்த ஆண்டவன் கருணையாலும் எங்களைபோல் உள்ள நல்ல நண்பர்களாலும் இந்த விழ சிறப்பாக நடிபெரும் என்பதில் ஐயமில்லை.
    .
    மாரீஸ் கண்ணன்

  8. மேன் மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள் சுந்தர் சார்.

  9. எனக்கிருந்த ஒரே நம்பிக்கை என் உழைப்பு மீதும் இறைவன் மீதும் தான்.

    – மிக்க நன்றி சுந்தர்ஜி.

    என்னால் முடிந்த உதவி நிச்சயம்

  10. உங்களை நம்பி, உங்களுக்காக ஒரு விழா!
    தலைப்பில் எங்களுக்கான பொறுப்பினை எடுத்துக்காட்டி உற்சாகத்தினை வழங்கி,எங்களையும் உடன் அழைத்து நமது குடும்ப விழா சிறப்பாக அமையும் .
    “நமக்கு அம்மை .அப்பன்,மகன்களின் ஆசி நமக்கு அதிகம் உள்ளது” .
    உங்களுக்கு ஆதரவாக நாங்கள் உள்ளோம் .
    வீட்டுக்கு ஒரு வாசகர் என்றால்,நமது தளத்தின் வரவிற்கு குறைவேது .
    தாங்கள் பணிகளுக்கு நடுவில் தளம் நடத்துவது நாங்கள் அனைவரும் அறிவோம் .
    அந்த ஆண்டவன் கருணையாலும் எங்களைபோல் உள்ள நல்ல நண்பர்களாலும் இந்த விழ சிறப்பாக நடைபெரும் என்பதில் ஐயமில்லை.

    நமது குடும்ப விழாசிறக்க அனைவரும், “சிறு தொகை பங்களிப்பு” அளித்து விழாவினை சிறப்பிப்போம் .

    வாய்ப்பினை வழங்கியமைக்கு நன்றி .

    -மனோகர்

  11. நம்முடைய right mantra முதலாம் ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாட என் வாழ்த்துக்கள்….

    வருகிற இரண்டாம் ஆண்டு நம் தளம் மற்றும் நம் நண்பர்கள் அனைவரும் தன்னலம் அற்ற சமூக சேவையில் இன்னும் நிறைய சாதனைகள் செய்ய வேண்டும் மற்றும் நம் தளம் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கேட்டு கொள்கிறேன்…

    விஜய் SJEC

  12. காரிருளை விரட்டி கதிர் ஒளி பரப்ப உதிக்கும் ஆதவன் போல ஆதவனின் கதிரொளி கண்டு மலரும் தாமரை போல தளிர் பரப்பி விழுது விட்டு நீடுடி வாழும் ஆலமரம் போல எங்களின் மனங்களை குளிர்வித்து அறிவு ஒளி பரப்பி எங்களது நிகழ் கால எதிர் கால நினைவுகளை எங்களின் மனங்களில் குறைவின்றி குறையின்றி தர பாடுபடும் தங்களுக்கு பல சிறப்புகளும் பாராட்டுகளும் பெற்று எந்த ஒரு குறையும் இன்றி இந்த மகத்தான விழா நடக்க வாழ்த்துக்கள்.

    இந்த தளம் எங்களது தளம் .கண்டிப்பாக அவரவர் முடிந்த உதவிகளை செய்வார்கள்.

    நன்றி.

  13. சுந்தர் சார்,
    நிச்சயம் நமது பங்களிப்பு உண்டு.
    நன்றியுடன் அருண்

  14. டியர் சுந்தர் சார், நாளை அல்லது நாளை மறு நாள் உங்களை கண்டிப்பாக தொடர்பு கொள்கிறேன். நல்ல செயல்களுக்கு ஆதரவு எந்த வகையிலாவது கண்டிப்பாக வந்து சேரும்.நன்றியுடன் மோகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *